Search
  • Follow NativePlanet
Share
» »விசாகப்பட்டினத்திற்கு என்றும் நினைவில் நீங்காத பயணம் ஒன்று செல்வோம் வாருங்கள்

விசாகப்பட்டினத்திற்கு என்றும் நினைவில் நீங்காத பயணம் ஒன்று செல்வோம் வாருங்கள்

'இந்தியாவின் கிழக்கு கடற்கரையின் ஆபரணம்' என்ற சிறப்புக்குரிய நகரம் ஆந்திர பிரதேச மாநிலத்தின் மிகப்பெரிய நகரமான விசாகப்பட்டினம் தான். துறைமுகம், இரும்புத் தொழில்சாலைகள், தகவல் தொழில்நுட்பத்துறை மையங்கள் என பரபரப்பான வர்த்தக மற்றும் தொழில் நகரமாக திகழ்கிறது.

அதேசமயம் இங்கு அற்புதமான காட்சிகள் காணக்கிடைக்கும் கடற்கரைகள், லட்சம் ஆண்டுகளுக்கு முன்பு மனிதன் வாழ்ந்த குகைகள், பள்ளத்தாக்குகள், வன விலங்கு பூங்காக்கள் என மனம் கவரும் ஏராளமான சுற்றுலாத்தலங்களும் உள்ளன. வாருங்கள் விசாகப்பட்டினத்திற்கு என்றும் நினைவில் நீங்காத பயணம் ஒன்றை மேற்கொள்வோம்.

ஹோட்டல் மற்றும் விமான கட்டணங்களில் 50% வரை தள்ளுபடி பெற்றிடுங்கள்

ராமகிருஷ்ணா மிஷன் பீச்:

ராமகிருஷ்ணா மிஷன் பீச்:

ராமகிருஷ்ணா மிஷன் பீச் அல்லது RK பீச் என அழைக்கப்படும் இந்த கடற்க்கரை தான் விசாகப்பட்டினத்தில் இருக்கும் மிகப்பிரபலமான கடற்க்கரை ஆகும். ராமகிருஷ்ணர் மடம் இந்த கடற்கரைக்கு பக்கத்தில் இருப்பதினாலேயே இந்த பெயர் பெற்றிருக்கிறது.

Photo:Adityamadhav83

ராமகிருஷ்ணா மிஷன் பீச்:

ராமகிருஷ்ணா மிஷன் பீச்:

இந்த கடற்கரையில் நாம் நீச்சலடிக்கலாம், சூரியக்குளியல் போடலாம், பீச் வாலிபால் விளையாடலாம் மற்றும் மாலை வேளைகளில் சூரியன் அஸ்தமிக்கும் நேரத்தில் அந்திவானில் நிகழும் வர்ணஜாலங்களை கண்டு மனம் குளிரலாம்.

Photo:Srichakra Pranav

ராமகிருஷ்ணா மிஷன் பீச்:

ராமகிருஷ்ணா மிஷன் பீச்:

இந்த பீச்சில் இருக்கும் முக்கிய ஈர்ப்புகளில் ஒன்று இந்திய கடற்ப்படையின் நீர்மூழ்கி கப்பல் அருங்காட்சியகம் ஆகும். இந்த அருங்காட்சியகத்தில் இந்திய கடற்ப்படையில் முதன்முதலில் சேர்க்கப்பட்ட கல்வாரி வகை நீர்மூழ்கி கப்பல் ஒன்று காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது. நீர்மூழ்கி கப்பல் ஒன்றுனுள் சென்று பார்க்கவேண்டும் என ஆசைப்படுபவர்கள் நிச்சயம் இங்கு சென்று வரவேண்டும்.

Photo:Kishor gandham

ராமகிருஷ்ணா மிஷன் பீச்:

ராமகிருஷ்ணா மிஷன் பீச்:

கடற்கரையை ஒட்டியுள்ள பீச் ரோடு.

Photo:Adityamadhav83

யாராதா பீச்:

யாராதா பீச்:

விசாகப்பட்டினம் நகரில் இருந்து 15 கி.மீ தொலைவில் பேரழகும், அமைதியும் நிறைந்து காட்சி தருகிறது யாராதா கடற்க்கரை. நகரத்தின் இரைச்சலில் இருந்து தப்பித்து அமைதியாக பொழுதை கழிக்க விரும்புகிறவர்கள் இங்கு தாரளமாக வரலாம். கடற்கரையை ஒட்டியே தென்னந்தொப்புகள் இருப்பது இவ்விடத்திற்கு மேலும் அழகூட்டுகிறது.

Photo:Rajib Ghosh

யாராதா பீச்:

யாராதா பீச்:

யாராதா கடற்கரையில் அலைகள் கரையை முத்திமிடுகின்றன.

Photo:ASIM CHAUDHURI

பொர்ரா குகைகள்:

பொர்ரா குகைகள்:

பொர்ரா என்றால் தெலுங்கில் 'நிலத்தினுள் குடையப்பட்டவை' என்று அர்த்தமாம். அரக்கு பள்ளத்தாக்கில் உள்ள ஆனந்தகிரி மலையில் கடல்மட்டத்தில் இருந்து தோராயமாக 2000 அடி உயரத்தில் அமைந்திருக்கின்றன.

Photo:Rajib Ghosh

பொர்ரா குகைகள்:

பொர்ரா குகைகள்:

சுண்ணாம்புக் கல்லினால் ஆன இந்த குகைகள் 80 அடி ஆழம் உடையதாக இருக்கின்றன. இவையே இந்தியாவில் இருக்கும் மிக ஆழமான குகைகளாகவும் அறியப்படுகின்றன.

Photo:Raj

பொர்ரா குகைகள்:

பொர்ரா குகைகள்:

இந்த குகைகளை சுற்றிப்பார்க்க விரும்புகிறவர்களுக்கு ஆந்திர அரசின் சுற்றுலாத்துறையே அனைத்து ஏற்பாடுகளையும் செய்து தருகிறது. இயற்கை வளம் நிறைந்த மலையில் அரக்கு பள்ளத்தாக்கினுள் அமைந்திருப்பதால் அம்மலைகளில் இருக்கும் விதவிதமான வன தாவரங்கள் மற்றும் விலங்குகளையும் நாம் பார்க்கலாம்.

Photo:Raj

பொர்ரா குகைகள்:

பொர்ரா குகைகள்:

மேலும் சுற்றுலாப் பயணிகளை கவரும் வண்ணம் இந்த குகைகளினுள் வண்ண வண்ண ஒளி விளக்குகளால் வர்ணஜாலம் நிகழ்த்தப்படுகிறது. அரக்கு பள்ளத்தாக்கிற்கு சென்று விட்டு அப்படியே இந்த குகைகளையும் மறக்காமல் சென்று பார்த்து வாருங்கள்.

Photo:Mydhili Bayyapunedi

பொர்ரா குகைகள்:

பொர்ரா குகைகள்:

எப்படி அடையலாம்?:

விசாகப்பட்டினம் நகரில் இருந்து 92 கி.மீ தொலைவில் இருக்கும் இந்த பொர்ரா குகைகளை மூன்று மணிநேர பயணத்தில் அடையலாம். விமானம் மூலமாக வர நினைப்பவர்கள் விசாகப்பட்டினத்தில் இருந்து 12 கி.மீ தொலைவில் இருக்கும் சர்வதேச விமானநிலையத்தை அடைந்து அங்கிருந்து 76 கி.மீ தொலைவில் இருக்கும் இந்த பொர்ரா குகைகளை வாடகை டாக்சி மூலம் சுலபமாக அடையலாம்.

Photo:thotfulspot

கம்பலகொண்டா வனவிலங்கு சரணாலயம்:

கம்பலகொண்டா வனவிலங்கு சரணாலயம்:

விசாகப்பட்டினம் நகரத்தில் இருந்து வெறும் 25 கி.மீ தொலைவிலேயே அமைந்திருக்கும் அற்புதமான இயற்க்கை எழில் கொஞ்சும் இடம் தான் கம்பலகொண்டா வனவிலங்கு சரணாலயம்.

Photo:Adityamadhav83

கம்பலகொண்டா வனவிலங்கு சரணாலயம்:

கம்பலகொண்டா வனவிலங்கு சரணாலயம்:

வறட்சி காலத்திலும் பசுமையாக காட்சியளிக்கும் தாவரங்களை உடைய இந்த சரணாலயத்தினுள் பலவகை விலங்குகள் வாழ்கின்றன. இந்திய சிறுத்தைகளின் பூர்வீக இடமாக இந்த சாரணாலயம் திகழ்கிறது. இது தவிர இந்திய ராஜ நாகங்கள், புள்ளி மான்கள், மயில்கள் போன்றவையும் ஏராளமான எண்ணிக்கையில் வாழ்கின்றன.

Photo:Adityamadhav83

சிம்ஹச்சலம் நரசிம்மர் கோயில்:

சிம்ஹச்சலம் நரசிம்மர் கோயில்:

விசாகப்பட்டினம் நகரில் இருக்கும் மிக முக்கியமான ஆன்மீக ஸ்தலங்களுள் சிம்ஹச்சலம் நரசிம்மர் கோயிலும் ஒன்றாகும். விஷ்ணு பகவானின் பத்து அவதாரங்களுள் ஒன்றான நரசிம்ம அவதாரம் இக்கோயிலின் மூலவராக உள்ளார்.

Photo:Adityamadhav83

சிம்ஹச்சலம் நரசிம்மர் கோயில்:

சிம்ஹச்சலம் நரசிம்மர் கோயில்:

இக்கோயிலின் கற்பகிரகம் மற்றும் விமானம் கலிங்க கட்டிடக்கலையை சார்ந்து அமைந்திருக்கின்றன. வாருடத்தின் எல்லா நாட்களுமே சந்தன வார்ப்பிலேயே காட்சியளிக்கும் நரசிம்மர் வருடத்தில் வெறும் 12 மணி நேரங்கள் மட்டுமே சந்தன வார்ப்பில் இல்லாமல் 'நிஜரூப தரிசனம்' தருகிறார்.

Photo:Sureshiras

சிம்ஹச்சலம் நரசிம்மர் கோயில்:

சிம்ஹச்சலம் நரசிம்மர் கோயில்:

இக்கோயிலின் சுவர்களில் அற்புதமான கலைநயமிக்க விஷ்ணுவின் தச அவதார சிறப்பங்களை கண்டு ரசிக்கலாம். அதேபோல இக்கோயிலின் புனித குளமான புஷ்கரணியில் நீராடலாம்.

Photo:Adityamadhav83

சிம்ஹச்சலம் நரசிம்மர் கோயில்:

சிம்ஹச்சலம் நரசிம்மர் கோயில்:


இயற்கை அழகும், ஆன்மீக சூழலும் நிறைந்த இந்த சிம்ஹச்சலம் நரசிம்மர் கோயிலுக்கு கண்டிப்பாக சென்று வாருங்கள். விசாகப்பட்டினம் நகரில் இருந்து 20 கி.மீ தொலைவில் இக்கோயில் அமைந்திருக்கிறது.

Photo:Anirudh Emani

சிம்ஹச்சலம் நரசிம்மர் கோயில்:

சிம்ஹச்சலம் நரசிம்மர் கோயில்:

சிம்ஹச்சலம் நரசிம்மர் கோயில்குளம்.

Photo:Santoshvatrapu

அரக்கு பள்ளத்தாக்கு:

அரக்கு பள்ளத்தாக்கு:

இன்னும் அதிகம் பிரபலமாகாத அதேசமயம் அற்புதமான இயற்கை காட்சிகளை கொண்டுள்ள இடம் ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்திற்கு அருகில் அமைந்திருக்கும் அரக்கு பள்ளத்தாக்கு ஆகும்.

Photo:Adityamadhav83

அரக்கு பள்ளத்தாக்கு:

அரக்கு பள்ளத்தாக்கு:

அரக்கு பள்ளத்தாக்கில் தான் முதல் முறையாக பழங்குடிகளால் விளைவிக்கப்பட்ட பூச்சிகொல்லிகளும், உரங்களும் சேர்க்காத
கரிம(Organic) காப்பி கொட்டை கிடைக்கிறது. உடலுக்கு எவ்வித கெடுதலும் தராத அதிசுவையான இந்த ஆர்கானிக் காபியை சுவைப்பதற்காகவே இங்கு செல்வோரும் உண்டு.

Photo:Adityamadhav83

அரக்கு பள்ளத்தாக்கு:

அரக்கு பள்ளத்தாக்கு:

விசாகப்பட்டினத்தில் இருந்து அரக்கு பள்ளத்தாக்கை சாலை மார்கமாகவும், ரயில் மூலமும் அடையலாம். கொத்தவலசா - கிரந்துள் மார்கத்தில் உள்ள அரக்கு ரயில் நிறுத்தத்தில் இறங்க வேண்டும். விசாகப்பட்டினத்தில் இறுதி 142 கி.மீ தொலைவில் இருக்கும் அரக்கு பள்ளத்தாக்கை அடைய மூன்று மணிநேர சாலைப்பயணம் மேற்கொள்ள வேண்டும்.

Photo:Adityamadhav83

பவிகொண்டா புத்த விகாரம்:

பவிகொண்டா புத்த விகாரம்:

விசாகப்பட்டினம் நகரத்திற்கும் பண்டையகால கலிங்க தேசத்திற்கும் பலவகையிலும் தொடர்புகள் இருந்துள்ளன. அவற்றுள் முக்கியமானது புத்த மதம் சார்ந்த தொடர்புகள் ஆகும். அசோக மன்னரின் ஆளுகைக்குள் கலிங்க தேசம் வந்த பிறகு அங்கு புத்தமதம் வேகமாக பரவ ஆரம்பிக்கவே விசாகபட்டினம் நகரத்திலும் அது பரவி இருக்கிறது.

Photo:Bornav

பவிகொண்டா புத்த விகாரம்:

பவிகொண்டா புத்த விகாரம்:

இதன் காரணமாக இன்றும் விசாகபட்டினத்தில் புத்த மத துறவிகள் வாழ்ந்த அடையாளங்களை பார்க்கலாம். அப்படிப்பட்ட ஓரிடம் தான் பவிகொண்டா. கி.மூ 3ஆம் நூற்றாண்டில் செங்கற்க்களால் கட்டப்பட்ட ச்துபிகள், புத்த விகாரங்கள் இருந்ததற்கான எச்சங்கள் போன்றவை இன்றும் இருக்கின்றன.

Photo:Adityamadhav83

பவிகொண்டா புத்த விகாரம்:

பவிகொண்டா புத்த விகாரம்:

விசாகப்பட்டினம் நகரை சுற்றிலும் இது போன்று 17 இடங்கள் இருக்கின்றன . வரலாறு சார்ந்த விஷயங்களில் ஆர்வம் உள்ளவர்கள் நிச்சயம் இங்கு வர வேண்டும்.

Photo:Adityamadhav83

விசாகப்பட்டினத்தை எப்படி அடைவது?

விசாகப்பட்டினத்தை எப்படி அடைவது?

தங்க நாற்க்கர சாலையில் தேசிய நெடுஞ்சாலை 5இல் இந்தியாவின் முக்கிய நகரங்களுடன் இணைக்கப்பட்டிருக்கிறது
விசாகப்பட்டினம் நகரம். வைசாக் நகரை எப்படி அடைவது என்பது பற்றிய மேலதிக தகவல்களை இங்கே அறிந்து கொள்ளுங்கள்.

தொழில் நகரமான விசாகப்பட்டினம் நகரில் அனைத்து தரப்பு மக்களுக்கும் ஏற்ற விலையில் ஹோட்டல்கள் கிடைக்கின்றன.
விசாகப்பட்டினத்தில் இருக்கும் ஹோட்டல்கள் பற்றிய விவரங்களை இங்கே அறிந்து கொள்ளுங்கள்.

Photo:Sankara Subramanian

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X