Search
  • Follow NativePlanet
Share
» »சென்னை - கோகர்னா : மூன்று நாட்களுக்கு ஓர் உல்லாசப் பயணம்!

சென்னை - கோகர்னா : மூன்று நாட்களுக்கு ஓர் உல்லாசப் பயணம்!

சென்னையிலிருந்து கோகர்னா வரையுள்ள குறிப்பிட்ட இடங்களை மூன்றே நாள்களில் கண்டுகளிக்கலாம்.

By Udhaya

சென்னையிலிருந்து நாம் கர்நாடக மாநிலம் கோகர்னாவுக்கு பயணம் செய்ய முதலில் தெளிவான திட்டமிடல் அவசியம். ஏனெனில் சுற்றுலாத்தளங்களுக்கு இடைப்பட்ட பயணம் ஏறக்குறைய ஒரு நாள் எடுக்கும். எனவே மூன்று நாள்களை மிகவும் கட்டுப்பாட்டுடன் நாம் செலவழிக்கவேண்டும்.

உங்களது பணம் மற்றும் நேர மேலாண்மை குறித்து நீங்களே திட்டமிட்டுக்கொள்ளுங்கள். நாங்கள் கொடுக்கும் தகவல்கள் ஒரு சராசரியான நபர் சென்னை முதல் கோகர்னா வரை மூன்று நாள்களில் பயணம் மேற்கொண்டால் அதற்கேற்றவாறு நேரமேலாண்மையையும் நிதி மேலாண்மையும் ஆகும்.

உங்கள் வசதிக்கேற்ப பணம் மற்றும் நேரத்தை செலவிடுங்கள். சரி சென்னையிலிருந்து மதிய உணவை முடித்துக்கொண்டு 2 மணிக்கெல்லாம் நாம் கிளம்புகிறோம்.

2 மணி நேரத்தில் காஞ்சிபுரத்தை வந்தடையலாம். அங்கு நாம் காணவேண்டிய கோவில்கள் பல உள்ளன. சரி வாங்க பயணத்தைத் தொடரலாம்.

முதல் நாள்

முதல் நாள்

இரண்டு மணி நேர பயணத்துக்கு பிறகு காஞ்சிபுரம் வந்தடைந்துள்ளோம். காஞ்சி பட்டுக்கு மட்டுமல்லாமல், கோவில்களுக்கும் பெயர் போன இடம்.

 கைலாசநாதர் கோயில்

கைலாசநாதர் கோயில்

கைலாசனாத் கோயில் என்றும் அழைக்கப்படும், கைலாசநாதர் கோயில் தான் இந்நகரில் உள்ள மிகப் புராதனமான கோயிலாகும். இது, சிவ பெருமானுக்காக, பல்லவ மன்னரான நரசிம்மப்பல்லவரால், எட்டாம் நூற்றாண்டில் எழுப்பப்பட்ட கோயிலாகும். வருடந்தோறும் சிவபக்தர்கள் இக்கோயிலுக்கு வந்த வண்ணம் உள்ளனர்.

PC:Aaroo4

வரதராஜ பெருமாள் கோயில், காஞ்சிபுரம்

வரதராஜ பெருமாள் கோயில், காஞ்சிபுரம்

பெருமாள் கோயில் என்றும் அழைக்கப்பெறும் இக்கோயில், மஹா விஷ்ணுவின் பக்தர்கள் அனைவரும் கட்டாயம் தரிசிக்க வேண்டிய ஒரு கோயிலாகும்.

வருடத்திற்கொரு முறை இங்கு நடைபெறும் திருவிழாவால், இக்கோயில் உள்ளூர்வாசிகள் மற்றும் வெளிநாட்டுப் பயணிகளிடயே மிகவும் பிரபலமாக உள்ளது.

இத்திருவிழாவின் ஆரம்ப அறிகுறியாக, பெரிய குடைகளைத் தூக்கிச் செல்லும் வழக்கம் உள்ளது. மே மற்றும் ஜூன் மாதங்களில், இங்கு "ப்ரம்மோத்சவம்" என்னும் மற்றொரு பெரிய விழாவும் நடைபெறுகின்றது.

PC: Ssriram mt

ஏகாம்பரேஸ்வரர் கோயில், காஞ்சிபுரம்

ஏகாம்பரேஸ்வரர் கோயில், காஞ்சிபுரம்

600 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட இக்கோயில், காஞ்சிபுரத்தின் வடக்குப் பகுதியில் அமைந்துள்ளது. இக்கோயில், சிவபெருமானுக்கான முக்கியமான ஐந்து பஞ்சபூத கோயில்களுள், பஞ்ச பூதங்களுள் ஒன்றான நிலத்தைக் குறிக்கும் பஞ்ச பூத ஸ்தலமாகும்.

இக்கோயிலின் வட்டக் கோபுரம் 59 அடி உயரத்தில் அமைந்து, இந்தியாவின் இத்தகைய உயரமான கட்டுமானங்களுள் ஒன்றாக விளங்குகிறது. முன்னொரு காலத்தில் சிவபெருமானின் துணைவியாகக் கருதப்படும் பார்வதி தேவி, இங்கு இன்றும் காணப்படும் ஒரு மிகப் பழமையான மாமரத்தின் கீழ் அமர்ந்து, தவம் செய்ததாகக் கூறப்படுகிறது.

Pc: Ssriram mt

பயணம்

பயணம்

காஞ்சிபுரத்திலிருந்து வேலூர் செல்ல 1மணி 40 நிமிடங்கள் ஆகும். மாலை வேளைகளில் அழகாக இருக்கும் கோவில்களை நடை சாற்றும் முன்பாக கண்டுவிட்டால் நாம் வேலூர் நோக்கி பயணிக்கலாம். மூன்று கோவில்களுக்கும் செல்வதென்பது சற்று கடினமானதுதான். எனவே முடிந்தவரை ஏதேனும் ஒரு கோவிலை விரைவில் பார்த்துவிட்டு கிளம்புவது நல்லது.

வேலூர் கோட்டை, வேலூர்

வேலூர் கோட்டை, வேலூர்

இந்த கோட்டையின் வெளிச்சுவரானது பிரம்மாண்ட கிரானைட் பாறை கட்டமைக்கப்பட்டிருப்பதோடு அதனை ஒட்டியே அகலமான அகழி ஒன்றும் காணப்படுகிறது. சூர்யகுண்டம் நீர்த்தேக்கத்திலிருந்து இந்த அகழிக்கு நீர் கொண்டு வரப்படுகிறது.

திப்பு மஹால் எனும் பிரசித்தமான அரண்மனை இந்த கோட்டைக்குள் அமைந்துள்ளது. திப்பு சுல்தான் மன்னர் தனது குடும்பத்தாருடன் இந்த அரண்மனையில் வசித்ததாக சொல்லப்படுகிறது

PC: Samuel rajkumar

மாநில அரசு அருங்காட்சியகம், வேலூர்

மாநில அரசு அருங்காட்சியகம், வேலூர்

1985ம் ஆண்டில் இது பொது மக்களுக்காக திறக்கப்பட்டிருக்கிறது. இந்த அருங்காட்சியகத்தில் எட்டு காட்சிக்கூடங்கள் அமைந்துள்ளன. மாவட்ட வரலாறு, வரலாற்றுக்காலத்திற்கு முந்தைய காலம், ஓவியக்கலை, விலங்கியல், கற்சிற்பங்கள், நாணயச்சேகரிப்புகள், செப்புப்பொருட்கள் மற்றும் மானுடவியல் போன்ற எட்டு தனிப்பிரிவுகளுக்கான காட்சிக்கூடங்கள் இது கொண்டுள்ளது.

Pc: vellore.tn.nic.in

ஜலகண்டேஷ்வரர் கோயில், வேலூர்

ஜலகண்டேஷ்வரர் கோயில், வேலூர்

ஜலகண்டேஷ்வரர் கோயில் வேலூர் கோட்டை வளாகத்திற்குள்ளேயே அமைந்துள்ளது. இக்கோயிலில் சிவபெருமான ஜலகண்டேஷ்வரர் எனும் பெயருடன் காட்சியளிக்கின்றார்.

இரண்டு கூடங்களையும் ஒரு கருவறையையும் அதைச்சுற்றி மூடிய பிரகாரப்பாதையையும் இக்கோயில் கொண்டுள்ளது. இவை தவிர சிறு சன்னதிகளும் இக்கோயிலில் நிறைய உள்ளன.

விஜயநகர அரசின் பிற்காலத்தில் இக்கோயில் கட்டப்பட்டிருக்கலாம் என்று சொல்லப்படுகிறது. நீருக்குள் வீற்றிருக்கும் சிவபெருமானுக்கான இந்த ஜலகண்டேஷ்வரர் கோயில் பிரம்மாண்ட மரக்கதவுகளைக்கொண்ட ஒரு உயரமான கோபுரத்துடன் காட்சியளிக்கிறது.

வேலூர் - ஆம்பூர்

வேலூர் - ஆம்பூர்

ஆம்பூரில் நீங்கள் மெய்மறந்து சாப்பிடும் வகையில் மிக ருசியான பிரியாணி கிடைக்கும். 40 நிமிடத் தொலைவில் உள்ள ஆம்பூருக்கு செல்வோம்.

ஆம்பூர்

ஆம்பூர்


ஆம்பூரை அடைவதற்குள் இரவு 9 மணி ஆகிவிடும் எனவே உங்களுக்கு பிரியாணி உண்ண அதிக ஆர்வம் இருந்தால் மட்டும் உண்ணுங்கள். உடல் நலத்தையும் பார்க்கவேண்டியது அவசியமானது. அல்லது நாளை பெங்களூருவில் கூட இதுபோன்ற பிரியாணியை சாப்பிடலாம்.

வேலூர் மாவட்டத்தில் இஸ்லாமிய சகோதரர்கள் அதிகம் வசிக்கும் பகுதியான ஆம்பூர் பிரியாணிக்கு பெயர்போன இடமாகும். ஆற்காடு நவாப்பிற்காக அவரது அரண்மனையில் முதன்முதலில் தயாரிக்கப்பட்டதாம். ஆம்பூர் பிரியாணி இப்போது வீட்டிலேயே சமைத்து பலராலும் விரும்பி சாப்பிடப்படும் உணவாக உள்ளது.

Pc: Ambernectar 13

 ஆம்பூர் - ஓசூர்

ஆம்பூர் - ஓசூர்

ஆம்பூரிலிருந்து ஒசூர் செல்ல 7 லிருந்து 8 மணி நேரங்கள் ஆகலாம். இந்த பயணத்தை இரவில் வைத்ததற்கான காரணமும் இதுதான். நமக்கு பொழுது ஓசூரில் விடியும்.

ஓசூர்

ஓசூர்

பெங்களூரிலிருந்து 40 கி.மீ. தொலைவில், தமிழ்நாட்டின் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் அமைந்திருக்கிறது ஓசூர் நகரம். இந்த ஓசூர் நகரம் பரபரப்புகளுக்கு பெயர்போன தொழிற்சாலை நகரமாக இருந்தாலும், ஆண்டு முழுவதும் இனிமையான வானிலையை பெற்றிருக்கிறது. இதன் அருமையான வானிலையின் காரணமாக இது குட்டி இங்கிலாந்து என்று அழைக்கப்படுகின்றது. மேலும் மோட்டார் வாகன தொழிற்சாலைகளின் முக்கிய மையமாக திகழ்ந்து வரும் ஓசூர் நகரத்துக்கு கன்னட மொழியில் 'புதிய வசிப்பிடம்' என்று பொருள்.

PC: Surya Prakash.S.A.

ரோஜாக்களின் நகரம்

ரோஜாக்களின் நகரம்


தொழில்நகரமாக மாத்திரம் இல்லாமல், இப்போது உலகின் முன்னணி ரோஜா ஏற்றுமதி நகரமாகவும் ஓசூர் மாறி வருகின்றது. சிங்கப்பூர், ஜப்பான், சவுதி அரேபியா, ஐரோப்பா மற்றும் பிற தென் கிழக்கு ஆசிய நாடுகளுக்கு 80 லட்சம் ரோஜா தண்டுகள் இங்கிருந்து ஏற்றுமதி ஆகின்றன.

இது அந்நிய செலவானி வணிகத்தில் ஏறத்தாழ 150 கோடி ரூபாய் மதிப்பு உடையது, அதாவது நாட்டின் ஒட்டுமொத்த வெளிநாட்டு வருமானத்தில் இது 30 % என்பது வியக்கத்தக்கது.

Pc: Pirate_renee

பெங்களூரு பயணம்

பெங்களூரு பயணம்

ஒசூரிலிருந்து பெங்களூரு பேருந்து நெரிசலைப் பொறுத்து 1 லிருந்து 1.30 மணி நேரங்கள் எடுக்கும். மதிய உணவுக்கு பெங்களூரு வந்துவிட்டால் அருமையான உணவுகள் உங்களை வரவேற்கும். பெங்களூருவில் சுற்றிபார்க்க நிறைய இடம் இருக்கின்றது. இன்று முழுவதும் இங்கேயே கழிக்கலாம்.

சிட்டி மால்

சிட்டி மால்

பெங்களூரு நகரின் மையத்தில் அமைந்திருக்கும் UB City Mall நவீன பெங்களூருவின் தவிர்க்கமுடியாத அடையாளம். தொழிலதிபர் விஜய் மல்லையாவிற்கு சொந்தமான இந்த வணிக வளாகம் ஆடம்பர வாழ்கையின் உச்சம் எனலாம். சர்வதேச பிராண்ட் கடைகள் மற்றும் உணவகங்கள், பப்புகள் இங்கே இருக்கின்றன.


PC: Ramesh NG

சிவாஜி நகர், பெங்களூரு

சிவாஜி நகர், பெங்களூரு

பெங்களூருவில் மாலை நேரத்தில் மிகசுவையான உணவுகள் கிடைக்கும் இடமென்றால் அது சிவாஜி நகர் தான். இஸ்லாமியர்கள் அதிகம் வசிக்கும் இந்த பகுதியில் எங்கு பார்த்தாலும் கையேந்தி பவன்களும், ஹோட்டல்களும் இருக்கின்றன. ஷவர்மா, கபாப், பீப் சில்லி, பரோட்டா போன்றவை உணவுப்பிரியர்களை சுண்டியிழுக்கின்றன.

PC: Abhinay Omkar

கோரமங்களா

கோரமங்களா

பெங்களூருவின் மிக யூத்தான பகுதி என்றால் சந்தேகமே இல்லாமல் அது கோரமங்களா தான். St. ஜான்ஸ், ஜோதி நிவாஸ் போன்ற பெங்களூருவின் மிகமுக்கியமான கல்லூரிகள் இங்கே அமைந்திருக்கின்றன. அதோடு 'Start-up' என்னும் புதிய தொழில்முனைவோருக்கான தலைநகரமாகவும் கோரமங்களா இருக்கிறது.


Pc: Ashwin Kumar

கப்பன் பார்க்

கப்பன் பார்க்

பெங்களூருவுக்கு 'கார்டன் சிட்டி' என்ற பெயருண்டு. கிட்டத்தட்ட ஒவ்வொரு வீதியிலும் தவறாமல் ஒரு பூங்கா இருப்பதே இதற்கு காரணமாகும். பெங்களூரு நகரில் மையத்தில் இருக்கும் கப்பன் பார்க் நூற்றாண்டுகள் பழமையானதாகும். பெங்களூருவில் இருக்கும் மிகப்பெரிய பூங்காக்களில் இதுவும் ஒன்றாகும்.


PC: John Hoey

பிரிகேட் ரோடு:

பிரிகேட் ரோடு:

சென்னைக்கு தி.நகர் இருப்பது போல பெங்களூருவின் ஷாப்பிங் மையம் தான் இந்த பிரிகேட் ரோடு ஆகும். மகாத்மா காந்தி சாலையை ஒட்டி அமைந்துள்ள இந்த பிரிகேட் ரோட்டில் அனைத்து முன்னணி பிராண்டட் கடைகளும் இருக்கின்றன.

PC: Gopal Vijayaraghavan

காளை கோயில்

காளை கோயில்

பெங்களூரின் தென்பகுதியில் உள்ள பசவனகுடியில் அமைந்துள்ள என். ஆர் காலனியில் இந்த காளை கோயில் அல்லது தோட் பசவன குடி இருக்கிறது. கடவுள் அந்தஸ்து கொண்ட நந்திக்காக இந்த கோயில் உருவாக்கப்பட்டுள்ளது.

PC: Sarvagnya

பயணம்

பயணம்

பெங்களூருவிலேயே ஒரு விடுதியில் அறை எடுத்துத் தங்கிக்கொள்ளலாம். அதிகாலையிலேயே கிளம்பி மைசூரை அடையலாம்.

பெங்களூருவிலிருந்து பண்பாட்டுத் தலைநகரான மைசூருக்கு செல்லலாம். 3 லிருந்து 3.30 மணி நேரங்களில் நாம் மைசூரை அடையலாம்.

மைசூர் – பண்பாட்டுத் தலைநகரம்

மைசூர் – பண்பாட்டுத் தலைநகரம்

சந்தன மரத்தின் நறுமணமும், ரோஜா மலரின் வாசனையும் இன்ன பிற சுகந்தங்களுடம் எப்போதும் தவழும் மைசூர் நகரத்துக்கு சந்தனமர நகரம் என்ற பெயரும் உண்டு. தந்த நகரம் என்றும் அரண்மனை நகரம் என்றும் கூட இது உள்ளூர் மக்களால் பெருமையுடன் அழைக்கப்படுகிறது. யோகா கலைக்கு பிரபலமான மையமாக திகழும் மைசூர் யோகா நகரம் என்றும் கூட அழைக்கப்படுகிறது. இங்கு வழங்கப்படும் அஷ்டாங்க யோக பயிற்சிகள் இந்தியா மற்றும் வெளி நாடுகளிலிருந்தும் கூட ஆர்வலர்களை அதிக அளவில் ஈர்க்கிறது.

Pc: Jainakshaya

கரஞ்சி லேக், மைசூர்

கரஞ்சி லேக், மைசூர்

கரஞ்சி லேக் 90 ஏக்ரா பரப்பளவில் அமைந்துள்ள மைசூர் மிருகக்காட்சி சாலையின் கட்டுப்பாட்டில் உள்ளது. அதோடு கரஞ்சி லேக் 55 ஏக்ரா அளவிற்கு பரந்து கிடப்பதால் மிருகக்காட்சி சாலையின் முக்கால்வாசி இடம் ஏரி நீரால் சூழப்பட்டுள்ளது. இங்கு வரும் பயணிகள் ஏரியில் படகுப் பயணம் செய்து மகிழலாம்.

லலிதா மஹால், மைசூர்

லலிதா மஹால், மைசூர்

இந்த மாளிகையின் அரச பரம்பரை வரலாற்றுக்கேற்ப அதிலுள்ள இப்போதைய ஐந்து நட்சத்திர ஹோட்டல் விருந்தினர்களை பாரம்பரிய பாணியில் உபசரித்து சேவைகளை வழங்குகிறது.இந்த மாளிகை ஒரு ஹோட்டலாக மாற்றப்பட்ட போதிலும் பழைய அரண்மனை தோற்றத்தில் எந்த மாறுதலும் செய்யப்பட வில்லை என்பது குறிப்பிடத் தக்கது.

PC: Ezhuttukari

ரயில் மியூசியம், மைசூர்

ரயில் மியூசியம், மைசூர்

ஸ்ரீ ரங்கா மர்கீ எனும் இடத்தில் மைசூர் மஹாராஜா பயன்படுத்திய ரயில் கோச்சுகளையும் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட முதல் நீராவி இன்ஜினையும் பார்க்கலாம். குழந்தைகள் பிரயாணம் செய்து மகிழும்படி ஒரு குட்டி ரயிலும் இந்த மியூசியத்துக்கு உள்ளேயே இயக்கப்படுகிறது.

மங்களூருவுக்கு பயணம்

மங்களூருவுக்கு பயணம்

மதிய உணவை முடித்துக்கொண்டு 12 மணிக்கெல்லாம் கிளம்பிவிடவேண்டியதுதான்.
மைசூருவிலிருந்து மங்களூரு 6 மணி நேரத் தொலைவில் அமைந்துள்ளது.
எனவே மாலையில் மங்களூருவின் கடற்கரைகளில் கொண்டாடலாம்.

மங்களூரு

மங்களூரு


மங்களூரின் ஒப்பிட முடியாத இயற்கை வனப்பு ஒரு விசேஷ கீர்த்தியை அதற்கு தந்திருக்கிறது. நேத்ரவதி மற்றும் குர்புரா என்ற இரு ஆறுகளின் முகத்துவார நீர்த்தேக்கங்களை ஒட்டி 132.45 சதுர கி.மீ பரப்பளவுக்கு மங்களூர் நகரம் அமைந்திருக்கிறது.

அரபிக் கடலின் மாசற்ற பொன் நிற கடற்கரைகள் காற்றில் அசையும் பனை மரங்களோடு இங்கு காட்சியளிக்கிறது. அவற்றுக்கு பின்னே பசுமையான் மலைகளும் சிவப்பு ஓடுகள் வேயப்பட்ட பாரம்பரிய வீடுகளும் அழகுற காட்சியளிக்கின்றன. சுமார் 6 லட்சம் மக்கள் இங்கு வசிக்கின்றனர்.

மங்களூரு தண்ணீர் பவி

மங்களூரு தண்ணீர் பவி


கர்நாடக மாநிலம் மங்களூருவில் அமைந்துள்ள இந்த இடம் தண்ணீர் பவி என்று அழைக்கப்படுகிறது. புதுமணத்தம்பதிகள், காதலர்கள் இங்கு சென்று புதுவருட கொண்டாட்டத்தை மகிழலாம். ஏனென்றால் இங்கு கூட்டநெரிசல் என்பதே கிடையாது. அதிக அளவில் மக்கள் நெரிசல் மிக்க இடங்களில் உங்கள் கொண்டாட்டம் தடைபடலாம். அதுபோன்று கருதுபவர்கள் இந்த கடற்கரையில் உங்கள் துணையுடன் கொண்டாடலாம்.

PC: Harshith

நாள் மூன்று

நாள் மூன்று

மங்களூருவிலிருந்து கோகர்னா 4 முதல் 4.30 மணி நேரத்தில் அடையமுடியும் தொலைவில் அமைந்துள்ளது. கோகர்னாவில் விடுதி எடுத்து தங்கி இந்த ஒரு நாள் முழுக்க மகிழ்ச்சியாக என்ஜாய் பண்ணலாம்.

கோகர்னா

கோகர்னா

கர்நாடக மாநிலத்தின் உத்தரகன்னட மாவட்டத்தில் அமைந்திருக்கும் இந்த கோகர்ணா நகரம் ஒரு முக்கிய ஆன்மீக யாத்ரீக ஸ்தலமாகவும், இங்குள்ள அழகிய கடற்கரைகளுக்காக ஒரு உல்லாச சுற்றுலா மையமாகவும் பிரசித்தி பெற்றுள்ளது. இது அகனாஷினி மற்றும் கங்காவலி என்ற இரண்டு ஆறுகள் ஒன்று சேருமிடத்தில் அமைந்துள்ளது. இந்த ஆறுகள் சேருமிடம் ஒரு பசுவின் காதைப்போல் காணப்படுவதாலேயே இந்த நகருக்கு ‘கோகர்ணா' என்ற பெயர் வந்துள்ளது

அருகிலுள்ள சுற்றுலாத் தளங்கள்

அருகிலுள்ள சுற்றுலாத் தளங்கள்

கோகர்னாவில் மகிழ்ச்சியாக சுற்றுலா செய்ய என்னென்ன இடங்கள் இருக்கின்றன. எங்கெல்லாம் செல்லலாம் என்பதை அறிய இதை கிளிக் செய்யுங்கள்

தொடர்ந்து இணைந்திருங்கள். நன்றி!

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X