Search
  • Follow NativePlanet
Share
» »பெங்களூருவின் அட்டகாசமான புகைப்படங்கள் - ஒரு சிறப்பு பார்வை

பெங்களூருவின் அட்டகாசமான புகைப்படங்கள் - ஒரு சிறப்பு பார்வை

By Naveen

20-27 வயது வரையிலான இளமை பருவத்தின் போது இந்தியாவில் வாழ மிகச்சிறந்த நகரம் என்றால் அது சந்தேகமே இல்லாமல் பெங்களூர் தான். திரும்பும் பக்கம் எல்லாம் வானுயர நிற்கும் தகவல்தொழில்நுட்ப நிறுவனங்கள், பன்னாட்டு உணவகங்கள், மலைக்கவைக்கும் ஷாப்பிங் மால்கள், உலகத்தரமான கல்வி நிறுவனங்கள், நவநாகரீகத்தின் உச்சத்தில் இருக்கும் யுவன்-யுவதிகள், எங்கும் பசுமை நிறைந்திருக்க எப்போதும் சில்லென இருக்கும் தட்பவெட்பம் ஆகியவை நிறைந்த பெங்களூர் வாழ்வதற்கு அற்புதமான ஓரிடமாகும்.

இளமையில் நண்பர்களுடன் இருந்து ஒரு கொண்டாட்டமான வாழ்கையை வாழ பெங்களூரை விட சிறப்பான நகரம் வேறெதுவுமே இல்லை எனலாம். ஒரு பக்கம் நவீன யுகத்தின் பிறப்பிடமாக இருந்தாலும் மறுபக்கம் தனது பழமையான தனித்தன்மையை இழக்காமல் வைத்திருப்பதும் பெங்களூருவின் சிறப்பம்சங்களில் ஒன்றாகும்.

அப்படிப்பட்ட இந்நகரின் சில அற்புதமான புகைப்படங்களின் தொகுப்பை காணலாம் வாருங்கள்.

பெங்களூரு!!

பெங்களூரு!!

பெங்களுருவில் சி.வி.ராமன் நகரில் அமைந்திருக்கும் Yahoo நிறுவனத்தின் இந்திய அலுவலகம்.

Eirik Refsdal

பெங்களூரு!!

பெங்களூரு!!

பெங்களூருக்கு கல்லூரி நாட்களில் சுற்றுலா வரும் அனைவரும் தவறாமல் செல்லும் இடமான Wonderlaa தீம் பார்க்.

Natesh Ramasamy

பெங்களூரு!!

பெங்களூரு!!

17ஆம் நூற்றாண்டில் பெங்களூருவின் அரசராக இருந்த ஹைதர் அலி என்பவரின் உத்தரவின் பேரில் உருவாக்கப்பட்டது தான் இன்றும் பெங்களூருவின் முக்கிய சுற்றுலாத்தலங்களில் ஒன்றாக இருக்கும் 'லால் பாக்' பூங்காவில் ஒரு அதிகாலை நேரம்.

Vinoth Chandar

பெங்களூரு!!

பெங்களூரு!!

ரம்ஜான் பண்டிகையின் போது மிகப்பரபரப்பாக இருக்கும் ஒரு உணவுக்கடை !!

Abhinay Omkar

பெங்களூரு!!

பெங்களூரு!!

விஷ்வா சாந்தி ஆஸ்ரமத்தில் இருக்கும் ஸ்ரீ மஹா விஷ்ணு சந்நிதி.

Keith Cuddeback

பெங்களூரு!!

பெங்களூரு!!

பெங்களூருவின் முக்கியமான ஏரிகளில் ஒன்றான உல்சூர் ஏரி !!

Swaminathan

பெங்களூரு!!

பெங்களூரு!!

பெங்களூருவில் பன்னாட்டு தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் அமைந்திருக்கும் பாகமனே தொழில் பூங்கா.

Vivek Thakyal

பெங்களூரு!!

பெங்களூரு!!

பெங்களூரு அரண்மனை !!

Asif Musthafa

பெங்களூரு!!

பெங்களூரு!!

வார சந்தையில் தானியங்கள், வாசனைப் பொருட்கள் போன்றவற்றை விற்பனைக்காக பரப்பி வைத்திருக்கும் பெண் .

Vanila Balaji

பெங்களூரு!!

பெங்களூரு!!

பெங்களூருவில் கப்பன் பார்க் மற்றும் கர்நாடக உயர்நீதி மன்றத்திற்கு அருகில் அமைந்திருக்கும் கர்நாடக அரசின் தலைமை செயலகமான 'விதான சௌதானா'.

Patrik M. Loeff

பெங்களூரு!!

பெங்களூரு!!

பெங்களூருவின் புகழ்பெற்ற சாலைகளில் ஒன்றான M.G road.

Praveen

பெங்களூரு!!

பெங்களூரு!!

பெங்களூருவில் இருந்து 60 கி.மீ தொலைவில் இருக்கும் நந்தி மலை.

இந்த இடம் பெங்களூவிற்கு அருகில் இருக்கும் மிகச்சிறந்த வாரவிடுமுறை வாசஸ்தலம் ஆகும்.

Prabhu B Doss

பெங்களூரு!!

பெங்களூரு!!

கப்பன் பார்க் பக்கத்தில் இருக்கும் பெங்களூரு மத்திய நூலகம்.

raghavvidya

பெங்களூரு!!

பெங்களூரு!!

எப்போதும் பரபரப்பாக இருக்கும் பிரிகேட் சாலை.

Ryan

பெங்களூரு!!

பெங்களூரு!!

தகவல் தொழில்நுட்ப வளர்ச்சியின் விளைவு இது தான்.

Swaminathan

பெங்களூரு!!

பெங்களூரு!!

லால் பாக் பூங்காவில் ஒவ்வொரு வருடமும் இந்த கண்ணாடி மாளிகையின் உள்ளே தான் வருடாந்திர மலர் கண்காட்சி நடக்கிறது.

Ajith Kumar

பெங்களூரு!!

பெங்களூரு!!

ஓரினச்செயற்கையை ஆதரித்து பெங்களூருவில் சில வருடங்களுக்கு முன்பு நடைபெற்ற போராட்டத்தின் ஒரு காட்சி.

Nick Johnson

பெங்களூரு!!

பெங்களூரு!!

பெங்களூருவில் வெளிநாட்டு இசைக்குழுவை சேர்ந்த இசைக்கலைஞர்கள் கலந்துகொள்ளும் நிகழ்ச்சிகள் அடிக்கடி நடைபெறுவதை நாம் காணலாம்.

Saad Faruque

பெங்களூரு!!

பெங்களூரு!!

UB City!! பெங்களூருவின் ஆடம்பர வாழ்கையின் அடையாளம் தான் இந்த இடம் ஆகும். விஜய் மல்லையாவிற்கு சொந்தமான ஷாப்பிங் வளாகத்தில் இருக்கும் கடைகள் மற்றும் ஹோட்டல்களில் கிடைக்கும் பொருட்களின் விலை ஒரு சராசரி குடும்பஸ்தரின் மாத வருவாயை விட அதிகமானதாகும்.

Patrik M. Loeff

பெங்களூரு!!

பெங்களூரு!!

இரவு நேரத்தில் UB City!!

Ming-yen Hsu

பெங்களூரு!!

பெங்களூரு!!

பெங்களூருவில் இருக்கும் பூங்காக்களில் மிகச்சிறந்தது என்றால் அது சந்தேகமே இல்லாமல் கப்பன் பூங்கா தான்.

Anshu

பெங்களூரு!!

பெங்களூரு!!

பெங்களூரு நகரை பற்றிய முழுமையான தகவல்களையும், அங்கிருக்கும் ஹோட்டல்கள் பற்றிய விவரங்களையும் தமிழ் பயண வழிகாட்டியில் தெரிந்துகொள்ளுங்கள்.

Tahir Hashmi

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X