Search
  • Follow NativePlanet
Share
» »ஏலகிரிக்கு ஒரு சிற்றுலா!!!

ஏலகிரிக்கு ஒரு சிற்றுலா!!!

By

தமிழகத்தின் பிற மலைவாசஸ்தலங்களான ஊட்டி, கோடைக்கானல் அளவுக்கு ஏலகிரி இன்னும் வளர்ச்சி அடையவில்லை. எனினும் சமீபகாலமாக ஏலகிரி மாவட்ட நிர்வாகம் பாராகிளைடிங், டிரெக்கிங் உள்ளிட்ட சாகச பொழுதுபோக்கு அம்சங்களை பயணிகளுக்கு வழங்கி வருவது ஏலகிரியை பிரபலமான சுற்றுலாத் தலமாக மாற்றி வருகிறது.

இதைத்தவிர ஏலகிரிக்கு வந்து சேர்ந்தவுடன் முதலில் ஒருவர் கவனத்தைக் கவருவது அதன் அமைதியான சூழலும் கிராமிய மணம் கமழும் அழகும் தான்.

மலையேற்றம்

மலையேற்றம்

ஏலகிரியில் அடர்ந்த காடுகள் வழியே அழகான இடங்களுக்கும், நீர்வீழ்ச்சிகளுக்கும், சிகரங்களுக்கும், பள்ளத்தாக்கை கண்டு ரசிக்கும் இடங்களுக்கும் அழைத்துச் செல்லும் 7 பாதைகள் உள்ளன. இவற்றில் நீளமான பாதை புங்கனூர் ஏரியிலிருந்து நிலாவூர் ஜலகம்பாறை செல்லும் 14 கி.மீ. தூரமுள்ள பாதையாகும். அதேபோல புங்கனூர் ஏரியிலிருந்து சுவாமி மலைக்கு செல்லும் மற்றொரு அழகான 6 கி.மீ. தூரமுள்ள பாதையும் இங்கு உள்ளது. இது பலராலும் விரும்பப்படுவதோடு இந்தப் பாதை அழைத்துச் செல்லும் குன்றிலிருந்து மலையின் மொத்தத் தோற்றமும் காணக்கிடைக்கிறது.

நிலாவூர் ஏரி, ஏலகிரி

நிலாவூர் ஏரி, ஏலகிரி

நிலாவூர் ஏரி ஏலகிரியில் படகுப் பயண விரும்பிகள் அடிக்கடி வந்து செல்லும், சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் மற்றொரு இடமாகும். இது நிலாவூர் கிராமத்தில் அமைந்துள்ளது. இது ஒரு சிறிய ஏரி கிட்டத்தட்ட கரைகளில் தோட்டங்களுடன் கூடிய குளம் போன்றது. ஆனால் அந்தப் படகுப்பயணம் செய்யும் ஏகாந்த அனுபவத்தை நீங்கள் ஏலகிரி செல்லும்போது அனுபவிக்கத் தவறாதீர்கள்.

படம் : Sayowais

சாகசம்

சாகசம்

சாகச விளையாட்டுகளில் ஈடுபடும் சுற்றுலாப் பயணிகள்.

படம் : McKay Savage

தொலைநோக்கி இல்லம்

தொலைநோக்கி இல்லம்

பொன்னேரியில் இருந்து ஏலகிரி செல்லும் வழியில் மலைப்பாதையின் நுழைவாயிலில், 13-வது வளைவுக்கு சற்று முன்பாக 1002 மீட்டர் உயரத்தில் தொலைநோக்கி இல்லம் அமைந்துள்ளது.இந்த தொலைநோக்கி சமவெளிகளின் அழகிய தோற்றத்தைக் காட்டுகிறது. பயணிகள் பள்ளத்தாக்கின் அழகு, செங்குத்தான சரிவுகள், ஜோலார்பேட்டை சமவெளி மற்றும் வாணியம்பாடி ஆகியவற்றைக் காண வகை செய்கிறது.

படம் : Akarsh Simha

டிரெக்கிங்

டிரெக்கிங்

டிரெக்கிங் செல்லும் சுற்றுலாப் பயணிகள்.

படம் : Praveen Selvam

ஜலகம்பாறை அருவி

ஜலகம்பாறை அருவி

ஏலகிரியில் உள்ள ஜலகம்பாறை அருவி.

படம் : Ashwin Kumar

படிக்கட்டுகள்

படிக்கட்டுகள்

ஜலகம்பாறை அருவிக்கு அழைத்துச் செல்லும் படிக்கட்டுகள்.

படம் : Ashwin Kumar

கோடை விழா

கோடை விழா

கோடை விழா எல்லா ஆண்டும் மே மற்றும் ஜூன் மாதங்களில் கொண்டாடப்படுகிறது மூன்று நாட்கள் நடைபெறும் இந்த விழா ஏலகிரியில் வசிக்கும் பழங்குடி மக்களின் கலாச்சாரத்தையும் , பழக்கவழக்கங்களையும் காட்சிப்படுத்த நடத்தப்படுகிறது. இது சுற்றுலாப் பயணிகளை அதிகளவில் ஈர்க்கும் இடமாக மாறியுள்ளது. இங்குள்ள மக்கள் , மற்றும் அருகிலுள்ள ஊர்களில் இருந்து வருபவர்கள், சுற்றுலாப் பயணிகள் ஆகியோர் இந்த சமயத்தில் அதிகளவில் இங்கு வந்து குவிகிறார்கள். அமைச்சர்கள் அரசு அதிகாரிகள், பஞ்சாயத்து தலைவர்கள் மற்றும் உள்ளூர் பெரியவர்கள் போன்றோர் அழைக்கப்படுகின்றனர். சாதாரணமாக அமைதியாகக் காணப்படும் இந்த இடம் இந்த நாட்களில் மட்டும் கொண்டாட்டங்களால் சத்தம் நிறைந்து காணப்படும்.

படம் : Ashwin Kumar

புங்கனூர் ஏரி

புங்கனூர் ஏரி

புங்கனூர் ஏரி, ஏலகிரி சுற்றுலாத் தலத்தை மேலும் அழகுபடுத்தவும் , சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கவும் செயற்கையாக அமைக்கப்பட்ட ஏரி. இந்த ஏரியில் படகு சவாரி மற்றும் படகு ஓட்டிச்செல்லும் வசதி உள்ளதால் இது சுற்றுலாப் பயணிகளுக்கு ஓய்வடுத்தவாறே மலைகளின் கண்கவர் அழகை ரசிக்கும் மகிழ்ச்சியான அனுபவத்தை தருகிறது.

படம் : cprogrammer

கொண்டை ஊசி வளைவுகள்

கொண்டை ஊசி வளைவுகள்

ஏலகிரி செல்லும் வழியில் மொத்தம் 14 கொண்டை ஊசி வளைவுகள் உள்ளன.

படம் : Ashwin Kumar

குரங்குகள்

குரங்குகள்

டிரெக்கிங் செல்லும் வழியில் நீங்கள் எண்ணற்ற குரங்குகளை காணலாம்.

படம் : Nagesh Jayaraman

இயற்கைப் பூங்கா

இயற்கைப் பூங்கா

புங்கனூர் ஏரி அருகே 12 ஏக்கர் பரப்பளவில் இந்த இயற்கைப் பூங்கா அமைந்துள்ளது. இந்தப் பூங்காவில் செயற்கை நீர்வீழ்ச்சி ஒன்றும் உள்ளது. இங்கு குளிக்கும் வசதியும் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இங்கு குழந்தைகளுக்கான பூங்கா, இசை நீருற்று , நீர்வாழ் உயிரினங்களின் கண்காட்சி, தோட்டம், மூங்கில் வீடு , கண்ணாடி வீடு ஆகியன உள்ளன.

படம் : Nagesh Jayaraman

செயற்கை நீரூற்று

செயற்கை நீரூற்று

இயற்கைப் பூங்காவில் உள்ள செயற்கை நீரூற்று.

படம் : Aravindan Premkumar

வேலவன் கோயில்

வேலவன் கோயில்

வேலவன் கோயில் ஏலகிரி மலையில் உள்ள உயமான சிகரங்களுள் ஒன்றில் அமைந்துள்ளது.

படம் : cprogrammer

சூரிய அஸ்த்தமன காட்சி

சூரிய அஸ்த்தமன காட்சி

சூரிய அஸ்த்தமனத்தின் போது புங்கனூர் ஏரி.

படம்:GoDakshin

ஏலகிரியை எப்போது மற்றும் எப்படி அடைவது?

ஏலகிரியை எப்போது மற்றும் எப்படி அடைவது?

எப்படி அடைவது?

எப்போது பயணிக்கலாம்?

படம் : Ashwin Kumar

Read more about: ஏலகிரி
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X