Search
  • Follow NativePlanet
Share
» »ராகு-கேது தோஷத்தில் இருந்து நிவர்த்தி தரும் கோயில் எது தெரியுமா?

ராகு-கேது தோஷத்தில் இருந்து நிவர்த்தி தரும் கோயில் எது தெரியுமா?

By Naveen

நம்முடைய வாழ்க்கையில் திருமணம். தொழில் உள்ளிட்ட பல முக்கிய விஷயங்களை தீர்மானிக்கும் விஷயமாக இருக்கும் ராகு-கேது தோஷத்தில் இருந்து நிவர்த்தி தரும் காலஹஸ்தி என்னும் திருக்காளத்தி காளத்தியப்பர் கோயில் பற்றிய தகவல்களை தெரிந்துகொள்ளலாம் வாருங்கள்.

திருக்காளத்தி காளத்தியப்பர் கோயில்

திருக்காளத்தி காளத்தியப்பர் கோயில்

காளஹச்தி கோயில் எனப்படும் திருக்காளத்தி காளத்தியப்பர் கோயில் ஆந்திரா மாநிலத்தில் உள்ள சித்தூர் மாவட்டத்தில் ஸ்ரீகாளஹச்தி என்ற ஊரில் அமைந்திருக்கிறது.

ராகு-கேது ஷேத்திரம் என்றும் தக்ஷின காசி என்றும் இக்கோயில் விளிக்கப்படுகிறது.

திருக்காளத்தி காளத்தியப்பர் கோயில்

திருக்காளத்தி காளத்தியப்பர் கோயில்

பஞ்சபூத ஸ்தலங்களில் வாயுவுக்கான கோயிலாக காளஹச்தி கோயில் இருக்கிறது. இங்கே சிவபெருமான் காளஹச்தீஸ்வரராக எழுந்தருளியிருக்கிறார்.

திருப்பதியில் இருந்து 36கி.மீ தொலைவில் இருக்கும் இந்த கோயிலின் உட்பிரகாரம் 5ஆம் நூற்றாண்டிலும், வெளிப்பிரகாரம் 12ஆம் நூற்றாண்டிலும் கட்டப்பட்டதாக சொல்லப்படுகிறது.

கண்ணப்ப நாயனார்:

கண்ணப்ப நாயனார்:

சைவ மதத்தின் திருக்கடவுளான சிவபெருமான் மீது பெரும்பிரியம் கொண்டிருந்த வேடனான கண்ணப்பன் என்பவர் தினமும் தான் வேட்டையாடிய விலங்குகளையே இங்கே காளஹச்தீஸ்வரருக்கு படைத்து வழிபட்டு வந்திருக்கிறார்.

எம்பெருமானுக்கு புலால் படைக்கப்படுவது கண்டு கோபம் கொண்ட காளஹச்தீஸ்வரருக்கு பூசை செய்து வழிபடும் சிவ கோசரியார் என்ற அந்தணர் சிவபெருமானிடம் வேண்டி முறையிடுகிறார்.

கண்ணப்ப நாயனார்:

கண்ணப்ப நாயனார்:

சிவ கோசரியார் கனவில் தோன்றிய சிவபெருமான் கண்ணப்பன் என்மீது கொண்ட அதீத பக்தியின் வெளிப்பாடாகவே தனக்குத் தெரிந்த வகையில் எனக்கு சேவை செய்கிறான். என் மீது கொண்ட அவனது பக்தியை உமக்கு உணர்த்துகிறேன் என்று சொல்லி மறைகிறார்.

அடுத்த நாள் கண்ணப்பன் சிவனுக்கு பூசை செய்வதைசிவ கோசரியார் மறைந்திருந்து காண்கிறார். அப்போது லிங்கத்தின் கண்ணில் இருந்து ரத்தம் வடிகிறது சற்றும் யோசிக்காத கண்ணப்பன் அம்பு கொண்டு தன்னுடைய ஒரு கண்ணை தோண்டியெடுத்து லிங்கத்தின் கண் மேல் வைக்கிறார்.

கண்ணப்ப நாயனார்:

கண்ணப்ப நாயனார்:

ஒரு கண்ணில் ரத்தம் நின்று கொஞ்ச நேரத்தில் லிங்கத்தின் மறு கண்ணிலும் ரத்தம் வரவே சற்றும் யோசிக்காத கண்ணப்பன் ரத்தம் வரும் இடத்தை அடையாளம் காண தன் ஒரு காலை லிங்கத்தில் ரத்தம் வரும் இடத்தில் வைத்தபடியே அம்பினால் தன்னுடைய மற்றொரு கண்ணையும் எடுக்க எத்தனித்த நேரத்தில் சிவபெருமான் தோன்றி 'நில்லு கண்ணப்பா' என்று மும்முறை கூறி தடுத்தி நிறுத்தி அவருக்கு முக்தி வழங்கியதாக புராணங்கள் கூறுகின்றன.

இந்த நிகழ்வு நடந்த இடம் தான் இப்போதிருக்கும் காளஹச்தி கோயில் என்று சொல்லப்படுகிறது.

கோயில் வரலாறு:

கோயில் வரலாறு:

வாயு பகவானுக்கென்று இந்தியாவில் இருக்கும் ஒரே கோயிலான இதனை கட்டியவர் தமிழர் பெருமையான தஞ்சை பெரிய கோயிலை கட்டிய ராஜராஜ சோழனின் மகனான ராஜேந்திர சோழன் ஆவார். சோழர்கள் மட்டுமில்லாமல் விஜயநகர பேரரசை சேர்ந்த மன்னர்களும் இக்கோயிலுக்கு பெருமளவில் கொடைகள் அளித்திருக்கின்றனர்.

கடவுளர்கள்:

கடவுளர்கள்:

இக்கோயிலின் மூலவராக சிவபெருமான் காளஹச்தீஸ்வரராக மேற்கு நோக்கியபடி பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். இவருடன் உமையாளாக பார்வதி தேவி ஞான பிரசுனாம்பிகையாக காட்சிதருகிறார்.

தட்சிணாமூர்த்தி, வெங்கடாசலபதி, விநாயகர், நடராஜர், சுப்பிரமணியர், சூரியன் மற்றும் நாயன்மார்கள் சந்நிதிகள் இக்கோயிலில் இருக்கின்றன.

கோயில் திருவிழாக்கள்:

கோயில் திருவிழாக்கள்:

மற்ற பெரிய சிவன் கோயில்களில் இருப்பது போன்றே இங்கும் மகாசிவராத்திரி தான் மிகமுக்கிய விழாவாக கொண்டாடப்படுகிறது. மகாசிவராத்திரியின் போது லட்சக்கணக்கான பக்தர்கள் இக்கோயிலுக்கு வருகை தருகின்றனர்.

மகாசிவராத்திரி விழாவின் போதே பிரம்மோற்சவ விழாவும் 13நாட்களுக்கு கொண்டாடப்படுகிறது. இவ்விழாவின் போது சிவனும் பார்வதியும் கோயில் வீதிகளில் தேரில் பவனி வருகின்றனர்.

தோஷ நிவர்த்தி:

தோஷ நிவர்த்தி:

ராகு-கேது தோஷத்தினால் அவதிப்படுபவர்கள் இக்கோயிலுக்கு வந்து தோஷ நிவர்த்தி பூஜை செய்தால் திருமணம் போன்ற விஷயங்கள் கை கூடும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

அதுமட்டுமில்லாமல் சர்ப்ப தோஷத்தால் பீடிக்கப்பட்டாவர்களும் இக்கோயிலுக்கு வந்து தோஷ நிவர்த்தி பூசை மேற்கொள்கின்றனர்.

பயண வழிகாட்டி:

பயண வழிகாட்டி:

காளஹச்தி கோயிலை பற்றிய மேலும் பல பயனுள்ள பயண தகவல்களையும் தமிழில் இருக்கும் ஒரே முழுமையான பயண இணையதளமான தமிழ் நேடிவ் பிளானட்டில் அறிந்துகொள்ளுங்கள்.

காளஹச்தி ஹோட்டல்கள்

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X