Search
  • Follow NativePlanet
Share
» »நினைத்தாலே இனிக்கும் திருநெல்வேலியில் ஒரு இன்பச்சுற்றுலா

நினைத்தாலே இனிக்கும் திருநெல்வேலியில் ஒரு இன்பச்சுற்றுலா

திருநெல்வேலி தாமிரபரணி ஆற்றின் மேற்கு கரையில் அமைந்திருக்கும் அழகிய நகரம். மண்மணம் மாறாமல் பாசமுள்ள மக்களையும், பசுமையான வயல்களையும் கொண்டு இன்றும் தன் உண்மையான அடையாளத்தை தக்கவைத்திருக்கும் இந்நகரம் சுற்றுலாப்பயணிகளின் நாவிற்கும் மனதிற்கும் விருந்துபடைக்க எப்பொதும் தவறுவதில்லை.

குற்றாலம்:

புகைப்படம்: C/N N/G

தமிழ்நாட்டின் மிகப்பிரபலாமான அருவியான குற்றாலம் திருநெல்வேலி நகரில் இருந்து 60கி.மீ தொலைவில் அமைந்திருக்கிறது. மழைகாலங்களில் இங்கு இருக்கும் அருவிகளில் நீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. மருத்துவ குணம் நிறைந்த மூலிகைகள் நிறைந்தத அகஸ்தியர்மலையில் இருந்து உற்பத்தி ஆவதால் இங்கு குளித்தால் நோய்கள் தீரும் என்பது இங்கு வருவபர்களின் நம்பிக்கை. பேரருவி, சிற்றருவி, ஐந்தருவி போன்றவை குற்றாலத்தில் இருக்கும் பிரபலமான அருவிகள் ஆகும். இங்கிருக்கு திருக்குற்றாலனாதர் கோயிலில் சுவாமி தரிசனம் செய்யவும் ஏராளமான சுற்றுலாப்பயணிகள் வருகின்றனர். ஜூன் முதல் அக்டோபர் வரை இங்கு செல்ல ஏற்ற நேரம் ஆகும்.
எப்படி அடையலாம்? தூத்துக்குடி விமான நிலையத்தில் இருந்து குற்றாலம் 90கி.மீ தொலைவில் அமைந்திருக்கிறது. திருநெல்வேலி, தென்காசி வரி ரயிலில் வந்து அங்கிருந்து பேருந்து, கார் மூலம் இவ்விடத்தை அடையலாம்.

நெல்லையப்பர் கோயில்:

புகைப்படம்: arunpnair

நெல்லையின் அடையாளங்களில் ஒன்றாக திகழ்வது திருநெல்வேலியின் முக்கிய பகுதியில் அமைந்திருக்கும் நெல்லியப்பர் திருக்கோயில் ஆகும். நின்றசீர் நெடுமாறன் என்னும் அரசனால் 7ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டதாகும். அற்புதமான கலையம்சங்களுடன் கட்டப்பட்டுள்ள இக்கோயிலின் மணிமண்டபத்தில் இருக்கும் 'இசைத்தூண்கள்' இயக்கப்படுகையில் வெவ்வேறு வகையான இசைகளை எழுப்பகூடியவை. இங்கு நவராத்திரி, ஐப்பசி மாதத்தில்(Oct 15 - Nov 15) நடக்கும் திருக்கல்யாண விழாவும் நெல்லையப்பர் கோயிலின் முக்கிய விழாக்கள் ஆகும். திருநெல்வேலி நகர மையத்தில் இருந்து வெறும் 1கி.மீ தொலைவில் இக்கோயில் உள்ளது.

இருட்டுக்கடை ஹல்வா :

புகைப்படம்: Lavanya Kumara Krishnan

திருநெல்வேலி நகரத்தின் சாகாவரம் பெற்ற அடையாளங்களில் முக்கியமானது இருட்டுக்கடை ஹல்வா. நெல்லையப்பர் கோயிலை ஒட்டியே அமைந்திருக்கும் இருட்டுக்கடையில் செய்யப்படும் ஹல்வா உலகப்புகழ் பெற்றதாகும். தாமிரபரணி ஆற்றின் தண்ணீரும் ஒரு வகை சாம்பா நெல்லுமே இதன் தனித்துவமான சுவையின் காரணங்களாக சொல்லபடுகிறது. மாலை நேரத்திற்கு பிறகே இங்கு வழக்கமாக விற்பனை துவங்குகிறது. திருநெல்வேலி வரும் எவரும் இங்கு வராமல் போவதில்லை என்று சொல்லும் அளவு இந்த ஹல்வாவின் சுவை அனைவரையும் சுண்டி இழுக்கிறது.

களக்காடு முண்டந்துறை புலிகள் சரணாலயம்:

புகைப்படம்: drcaesarphotography

உலகில் உள்ள முக்கியமான 18 பல்லுயிர் வாழும் இடங்களில் ஒன்றாக வரையறுக்கப்பட்டிருக்கும் களக்காடு முண்டந்துறை புலிகள் சரணாலயம் திருநெல்வேலியில் இருந்து 40கி.மீ தொலைவில் உள்ளது. மிகவும் பாதுகாக்கப்படும் இடமான இங்கு பல்வேறு வகையான தாவர வகைகளும், விலங்குகளும் காணக்கிடைக்கின்றன.

புகைப்படம்: Nara Simhan

புலிகள், மான்கள், பல வகையான அணில்கள், ராஜ நாகம் போன்றாவை வாழ்கின்றன. வன உயிரியல் புகைப்படம் எடுப்பதற்கும், டிரெக்கிங் செல்வதற்கும் மிகச்சிறந்த இடமாக ஆர்வலர்களால் இது பார்க்கப்படுகிறது. இதனுள் செல்வதற்கு முன் வனத்துறையிடம் முறையான அனுமதி பெறுவது கட்டாயம்.

மணிமுத்தாறு அருவி & பாபநாசம் அணை :

A Sweet trip to Triunelveli

புகைப்படம்: Sunciti _ Sundaram's

திருநெல்வேலி மாவட்டத்தின் தவிர்க்க முடியாத மற்றொரு இடம் மாஞ்சோலை காடுகளின் மேல் அமைந்திருக்கும் மணிமுத்தாறு அருவி மற்றும் பாபநாசம் அணையாகும். மட்டற்ற அருவிகளை காட்டிலும் மிகவும் சுத்தமான சுற்றுப்புறம் உள்ள மணிமுத்தாறு அணையில் கண் கொஞ்சும் இயற்கை காட்சிகளை பார்த்தபடி அருவியில் குளிப்பது அலாதியான அனுபவம். பாபநாசம் அணையில் சுகமாக படகு சவாரி செய்யலாம்.

குடும்பத்துடன் சுற்றுலாச்செல்ல அருமையான இடமான திருநெல்வேலிக்கு நிச்சயம் ஒரு முறைவாவது சென்று வர வேண்டும். இங்கிருந்து கன்னியாகுமரி பக்கம் என்பதால் அப்படியே அங்கும் ஒருமுறை சென்று வரலாம்.

    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X