உலகம் அழியும் நாள்: பத்மநாபசுவாமி கோயிலின் கடைசி அறையில் புதைந்துள்ள மர்மங்கள்
தேடு
 
தேடு
 

விசாகப்பட்டினத்தின் அழகுகள்

Written by: Udhaya
Updated: Wednesday, February 15, 2017, 13:16 [IST]
Share this on your social network:
   Facebook Twitter Google+ Pin it  Comments


என்னங்க எல்லாரும் சிங்கம் 3 படம் பாத்துட்டீங்களா. ஹரி இயக்கத்துல சூர்யா நடிச்ச சி 3 அல்லது சிங்கம் 3 படம் வெற்றிகரமாக ஓடிக்கிட்டு இருக்கு. நீங்க படத்த நல்லா உத்து கவனிச்சிங்கன்னா அழகான ரம்மியமான சூழல்கள்ல ஹரியும் - பிரியனும் காட்சிகள அமைச்சிருப்பாங்க.. அதுல விசாகாவோட அழகுகள ரசிச்சிருக்கலாம் நீங்க... படம் போற ஸ்பீடுக்கு அனுஷ்காவையே பாக்ல இதுல விசாகாவ எங்க பாக்குறதுனு ஃபீல் பண்றீங்களா அப்போ இத படிச்சி தெரிஞ்சிக்கோங்க

வைசாக் என்று அழைக்கப்படும் விசாகப்பட்டணம் கிழக்கு கடற்கரையில் அமைந்துள்ள ஒரு துறைமுக நகரமாகும். அடிப்படையில் ஒரு தொழில் நகரமான இந்த விசாகப்பட்டணம் தனது ரம்மியமான கடற்கரைகள், எழில் கொஞ்சும் மலைகள், பசுமையான இயற்கைக்காட்சிகள் போன்றவற்றின் மூலம் ஒரு பிரபலமான சுற்றுலாத்தலமாகவும் மாறியிருக்கிறது.

சக்தியை குறிக்கும் விசாகா எனும் கடவுளின் பெயரால் இந்த விசாகப்பட்டணம் நகரம் அழைக்கப்படுகிறது. கிழக்குத்தொடர்ச்சி மலைகளின் மீது பொதிந்துள்ள இந்நகரம் தனது கிழக்குப்பகுதி வங்காள விரிகுடாக்கடலை நோக்கியவாறு அமைந்திருக்கும் அற்புதமான இயற்கை அமைப்பையும் கொண்டிருக்கிறது.

தனது ரம்மியமான கடற்கரை மற்றும் எழில் அம்சங்கள் காரணமாக இது 'கிழக்குக்கடற்கரையின் கோவா' என்ற சிறப்புப்பெயருடன் அழைக்கப்படுகிறது. 'விதியின் நகரம்' என்ற மற்றோரு சிறப்புப்பெயரும் இதற்குண்டு.


வரலாறு என்ன சொல்கிறது?

ஆதியில் இந்த விசாகப்பட்டணம் விசாக வர்மா எனும் மன்னரால் 2000 வருடங்கள் ஆளப்பட்டதாக புராணங்கள் சொல்கின்றன. ராமாயணம் மற்றும் மஹாபாரதம் போன்ற பெருங்காவியங்களிலும் இந்த விசாகப்பட்டிணம் பற்றிய குறிப்புகள் இடம் பெற்றுள்ளன.

இந்நகரம் கி.மு 260ம் ஆண்டுகளில் அசோகப்பேரரசரால் ஆளப்பட்டு கலிங்க வம்சத்தின் ஆளுகைக்குள் இருந்திருக்கிறது. பின்னர் உத்கல வம்சத்தினரின் ஆட்சியில் கி.பி 1600ம் ஆண்டு வரை இருந்துள்ளது.

அவர்களுக்கும் பிறகு ஆந்திர வெங்கி அரசர்களின் வசம் வந்து பின்னர் பல்லவ சாம்ராஜ்யத்தின் ஒரு அங்கமாகவும் இது திகழ்ந்திருக்கிறது. 15 மற்றும் 16 ம் நூற்றாண்டுகளில் முகலாயப்பேரரசின் அங்கமாக இது நிஜாம் மன்னர்கள் மூலம் ஆளப்பட்டது.

இறுதியில் காலனிய வரலாற்றின் துவக்கமாக 18 ம் நூற்றாண்டில் ஃபிரெஞ்சுக்காரர்களின் ஆக்கிரமிப்புக்கு விசாகப்பட்டிணம் உட்பட்டது. ஆனால், 1804ம் ஆண்டு விசாப்பட்டிணம் துறைமுகத்திற்கு அருகே நடந்த ஒரு போரில் வென்று ஆங்கிலேயர்கள் இந்நகரை ஃபிரெஞ்சுக்காரர்களிடமிருந்து பறித்துக்கொண்டனர்.

அப்போதிலிருந்து கிழக்கிந்திய கம்பெனியின் இந்திய செயல்பாடுகளுக்கு இந்த விசாகப்பட்டிணம் துறைமுகம் ஒரு முக்கிய கேந்திரமாகவே இருந்துள்ளது. பின்னர் நேரடி ஆங்கிலேய ஆட்சிக்காலத்தில் விசாகப்பட்டணம் நகரம் மெட்ராஸ் பிரெசிடென்சியின் அங்கமாகவும் இருந்திருக்கிறது.

இறுதியாக, இந்தியா சுதந்திரம் பெற்றபிறகு இந்த விசாகப்பட்டணம் மாவட்டம் இந்தியாவிலேயே மிகப்பெரிய மாவட்டமாக உருவெடுத்தது. நிர்வாக வசதி கருதி அது பின்னர் ஸ்ரீகுளம், விஜயநகரம் மற்றும் விசாகபட்டிணம் எனும் மூன்று மாவட்டங்களாக பிரிக்கப்பட்டது.

இயற்கை அழகு ததும்பும் சொர்க்க நகரம்

 

சுற்றுலாப்பயணிகளின் சொர்க்கபுரி என்று சொல்லக்கூடிய அளவுக்கு தன்னுள்ளே பல எழில் அம்சங்களை இந்த விசாகப்பட்டணம் நகரம் கொண்டுள்ளது. அதுமட்டுமல்லாமல் பலவிதமான பொழுதுபோக்கு அம்சங்கள் இங்கு பயணிகளுக்காக காத்திருக்கின்றன.


PC: Sanjeev Gumaste

 

கம்பலகொண்டா


மாநில வனத்துறையால் பரமாரிக்கப்படும் இந்த கம்பலகொண்டா பகுதி 1970ம் ஆண்டிலிருந்து ஒரு காட்டுயிர் சரணாலயமாக விளங்கி வருகிறது. இங்குள்ள கம்பலகொண்டா எனும் மலையின் பெயரிலேயே இந்த சரணாலயம் அழைக்கப்படுகிறது.

71 ச.கி.மீ பரப்பளவில் பரந்துள்ள பசுமை மாறாக்காடுகளை இது உள்ளடக்கியுள்ளது. பலவிதமான தாவர வகைகள் மற்றும் உயிரினங்கள் இந்த வனப்பகுதியில் காணப்படுகின்றன.

PC: Adityamadhav83

 

இயற்கையின் செல்லக்குழந்தை வைசாக்

இயற்கையின் செல்லக்குழந்தை வைசாக்

PC: Jungpionier

 

கைலாசகிரி

 

கைலாசகிரி என்றழைக்கப்படும் இந்த மலைப்பகுதி மிக அற்புதமான இயற்கை அழகுடன் சுற்றுலாப்பயணிகளை வரவேற்கிறது. இதன் இடப்புறத்தில் ராமகிருஷ்ணா பீச் மற்றும் ரிஷிகொண்டா பீச் என்ற இரண்டு கடற்கரைகளும் வலப்புறத்தில் ஒரு மலையும் சூழ்ந்துள்ளன.

மாலை நேரத்தில் இந்த மலையின் உச்சியிலிருந்து வைசாக் நகரத்தை ரசிக்கும் அனுபவம் பரவசமூட்டக்கூடிய ஒன்றாகும். குழந்தைகளுக்கான ஒரு குட்டி ரயில் மற்றும் ஒரு பிரம்மாண்ட தாவரக்கடிகாரம் போன்றவை இந்த மலைஸ்தலத்திலுள்ள இதர விசேஷ அம்சங்களாகும்.

PC: Anurag

 

ரிஷிகொண்டா பீச்

 

விசாகப்பட்டணம் நகரத்தில் உள்ள ஒரு அழகான கடற்கரையாக இந்த ரிஷிகொண்டா பீச் புகழ் பெற்றுள்ளது. தங்கநிற மணற்பரப்போடு நீண்டு பரந்து காட்சியளிக்கும் இந்த கடற்கரை பயணிகளிடையே பிரசித்தமாக அறியப்படுகிறது.

நீர்ச்சறுக்கு மற்றும் காற்றுச்சறுக்கு போன்ற நீர் விளையாட்டுகளில் இந்த கடற்கரையில் ஈடுபடலாம். நீச்சலுக்கு ஏற்ற பாதுகாப்பான கடற்கரையாகவும் இது அமைந்துள்ளது. கடற்கரையை சுற்றியுள்ள பகுதியில் ஏராளமான மரங்கள் மற்றும் பல்வேறு உயிரினங்கள் காணப்படுவதால் இந்த கடற்கரைப்பகுதி இயற்கை ஆர்வலர்களுக்கு பிடித்த ஸ்தலமாகவும் விளங்குகிறது.

PC: aptdc.in

 

பிம்லி பீச்

 

பீமுனிப்பட்டணம் எனும் கடற்கரையே பிம்லி பீச் எனும் பெயரால் அழைக்கப்படுகிறது. பாண்டவ சகோதரர்களில் ஒருவரான பீமனின் பெயரே இந்த கடற்கரைக்கு வைக்கப்பட்டுள்ளது.

கொஸ்தனி ஆறு வங்காள விரிகுடாவுடன் கலக்கும் இடத்தில் இந்த கடற்கரை அமைந்துள்ளது. பிம்லி - விசாகப்பட்டிணம் பீச் சாலையை ஒட்டியே இந்த கடற்கரையும் நீள்கிறது. அமைதி தவழும் இந்த கடற்கரைப்பகுதி பாதுகாப்பான நீச்சலுக்கும் ஏற்றதாகும்.

PC: aptdc.in

 

ராமகிருஷ்ணா பீச்

 

இந்தியாவின் கிழக்குக்கடற்கரையில் அமைந்திருக்கும் இந்த ராமகிருஷ்ணா பீச் விசாகப்பட்டணம் நகரத்தின் முக்கியமான கடற்கரைகளுள் ஒன்றாகும். வங்காளவிரிகுடாவை ஒட்டியுள்ள கடற்கரையான இது ரம்மியமான சூரிய உதயம் மற்றும் சிவந்த அடிவானத்துடன் காட்சியளிக்கும் அஸ்தமனம் ஆகியவற்றுக்கு புகழ் பெற்று விளங்குகிறது. இதன் சகோதர கடற்கரையான ‘லாசன் பே' எனும் கடற்கரையும் அற்புதமான எழிற்சூழல் மற்றும் இயற்கைக்காட்சிகளுடன் வீற்றுள்ளது.

PC: Anirudh Emani

 

போர் நினைவுச் சின்னம்


வைசாக் நகரத்திலுள்ள இந்த ‘வார் மெமோரியல்' எனும் நினைவுச்சின்னமானது ‘விக்டரி அட் சீ' (கடலில் கிடைத்த வெற்றி) என்றும் அழைக்கப்படுகிறது. 1971ம் ஆண்டில் நிகழ்ந்த இந்திய-பாகிஸ்தானியப் போரில் பங்கேற்ற வீரர்கள் மற்றும் வெற்றியின் ஞாபகார்த்தமாக இது உருவாக்கப்பட்டுள்ளது.


Pc: Rima_B

 

ஐஎன்எஸ் குர்சுரா


1996ம் ஆண்டில் இந்திய கப்பற்படைப்பிரிவின் மூலம் இது நிர்மாணிக்கப்பட்டது. இந்த ஸ்தலத்தில் பல ஏவுகணைகளும், வெடிகுண்டுகளும், கவச டாங்கியும், போர்விமானமும் வைக்கப்பட்டுள்ளன.

ஒரு பெரிய கான்கிரிட் சுவரினால் இந்த மெமோரியல் வளாகம் சூழப்பட்டுள்ளது. இதன் உள்ளே இந்தியா கேட் பகுதியில் உள்ள அமர் ஜவான் ஜோதியைப்போன்ற ஒரு அழகிய கோபுரத்தூண் அமைக்கப்பட்டுள்ளது.

wikipedia

 

யாராடா பீச்

 

வைசாக் நகரத்துக்கு வெகு அருகிலேயே இந்த யரடா பீச் அமைந்துள்ளதால் உள்ளூர் மக்கள் மற்றும் பயணிகள் விருப்பத்துடன் விஜயம் செய்யும் கடற்கரையாக இது திகழ்கிறது.

மூன்று புறம் பசுமையான மலைகளாலும் ஒரு புறம் வங்காள விரிகுடாவாலும் இந்த கடற்கரை சூழப்பட்டிருக்கிறது. சுற்றிலும் காட்சியளிக்கும் இயற்கை எழிலுக்கு நடுவே, மென்மையான தங்கநிற மணற்பரப்போடு வீற்றிருக்கும் இந்த கடற்கரையின் வசீகரிக்கும் வனப்பு யாரையும் உடனே கவர்ந்துவிடக்கூடியது.

சூரிய உதயத்தின் அழகையும் இந்த கடற்கரையில் நன்றாக பார்த்து ரசிக்கலாம். சுருக்கமான ஒரு ஓய்வுப்பயணத்துக்கு ஏற்ற அமைதிக்கடற்கரையாக இந்த யரடா பீச் விளங்குகிறது. வெகு சுத்தமாக பராமரிக்கப்படும் சூழலையும் இது கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

PC: ASIM CHAUDHURI

 

ஆந்திர மாநிலத்தின் அழகுகள்

ஆந்திர மாநிலத்தின் அழகுகள்

 

ஆந்திர மாநிலத்தின் அழகுகள்

Adityamadhav83 -

 

ஆந்திர மாநிலத்தின் அழகுகள்

ஆந்திர மாநிலத்தின் அழகுகள்

Marcus334

 

 

ஆந்திர மாநிலத்தின் அழகுகள்

ஆந்திர மாநிலத்தின் அழகுகள்

Abdulkaleem

 

 

ஆந்திர மாநிலத்தின் அழகுகள்

 

Pravinjha

 

ஆந்திர மாநிலத்தின் அழகுகள்

 

Nikhilb239

 

விசாகாவ பாத்துருக்கீங்களா?

 

ஆந்திர மாநிலத்தின் அழகுகள்

Pratapkagitha

 

விசாகாவ பாத்துருக்கீங்களா?

 

ஆந்திர மாநிலத்தின் அழகுகள்

Pratapkagitha

 

விசாகாவ பாத்துருக்கீங்களா?

 

MyVijayawada

 

 

ஆந்திர மாநிலத்தின் அழகுகள்


.
Jpullokaran

 

 

விசாகாவ பாத்துருக்கீங்களா?

 

ஆந்திர மாநிலத்தின் அழகுகள்

IM3847

 

 

விசாகாவ பாத்துருக்கீங்களா?

 

ஆந்திர மாநிலத்தின் அழகுகள்

Adityamadhav83

 

ஆந்திர மாநிலத்தின் அழகுகள்

 Gpics

 

விசாகாவ பாத்துருக்கீங்களா?

 

ஆந்திர மாநிலத்தின் அழகுகள்

Pulkit sinha

 

விசாகாவ பாத்துருக்கீங்களா?

 

ஆந்திர மாநிலத்தின் அழகுகள்

Amit Chattopadhyay

 

ஆந்திர மாநிலத்தின் அழகுகள்

விசாகாவ பாத்துருக்கீங்களா?

 

ஆந்திர மாநிலத்தின் அழகுகள்

Amit Chattopadhyay

 

விசாகாவ பாத்துருக்கீங்களா?

 

ஆந்திர மாநிலத்தின் அழகுகள்


Amit Chattopadhyay

 

விசாகாவ பாத்துருக்கீங்களா?

 

ஆந்திர மாநிலத்தின் அழகுகள்

Ravikiran Rao

 

விசாகாவ பாத்துருக்கீங்களா?

 

ஆந்திர மாநிலத்தின் அழகுகள்


pallavi_damera

 

English summary

A tour to Durai singam fort in vizag

Do you hear about the singam fort in vizag
Please Wait while comments are loading...