Search
  • Follow NativePlanet
Share
» »மசினகுடி - தீண்டா இயற்கை பேரழகு

மசினகுடி - தீண்டா இயற்கை பேரழகு

By Super Admin

மசினகுடி, மேற்கு தொடர்ச்சி மலையில் அமைந்திருக்கும் மிக அழகான, மனிதனால் இன்னமும் சற்றும் மாசுபடுத்தப்படாத இடங்களில் ஒன்றாக திகழ்கிறது மசினகுடி. முதுமலை தேசிய பூங்காவிற்கு அருகில் அமைந்திருக்கும் இந்த ஊரானது வார இறுதி விடுமுறைகளை களித்திட அற்புதமான இடங்களில் ஒன்றாக இருக்கிறது.

மகாபலிபுரத்தில் அதைப் பற்றி ஏன் நாம் தெரிந்துகொள்ளவேண்டும் என்று தெரியுமா?மகாபலிபுரத்தில் அதைப் பற்றி ஏன் நாம் தெரிந்துகொள்ளவேண்டும் என்று தெரியுமா?

மசினகுடி - தீண்டா இயற்கை பேரழகு

Navaneeth KN

தொடர் ஆக்கிரமிப்பால் பசுமை மறைந்து கான்கிரீட் காடாக மாறி வரும் ஊட்டி வார இறுதி நாட்களிலும், கோடை காலத்திலும் மக்கள் கூட்டத்தால் நிரம்பி வழிவதால் மாசற்ற இயற்கையை ரசிக்க விரும்புகிறவர்கள் ஊட்டியில் இருந்து 30 கி.மீ தொலைவில் இருக்கும் இந்த மசினகுடிக்கு செல்லவேண்டும்.

மசினகுடி - தீண்டா இயற்கை பேரழகு

Ashish Sinha

மசினகுடியில் தெப்பக்காடு யானைகள் முகாம், சபாரி, தேயிலைத் தோட்டங்கள், கோபாலசுவாமி பெட்டா கோயில், கல்லிகுடர் ரப்பர் தோட்டங்கள், முதுமலை வனவிலங்கு சரணாலயம், பறவைகள் சரணாலயம் போன்ற இடங்களுக்கு சென்று சுற்றிப்பார்க்கலாம்.

சபாரி :

மசினகுடி - தீண்டா இயற்கை பேரழகு

Anuradha

மசினகுடியில் இருக்கும் வனப்பகுதியில் அதிகாலை 6:30 - 8.30 வரையும், மாலை 3 - 6 வரையும் சபாரி செய்யலாம். இந்த சபாரி பயணத்தின் போது புள்ளிமான்கள், சிங்கவால் குரங்குகள், பலவகையான பறவைகள் போன்றவற்றை கண்டு மகிழலாம். இங்கே ஜீப்,கார் போன்ற வாகனங்களில் செல்வதை காட்டிலும் யானையின் மீது அமர்ந்து வன உயிரினங்களை கண்டு மகிழலாம்.

தெப்பக்காடு யானை முகாம் :

மசினகுடி - தீண்டா இயற்கை பேரழகு

1972 ஆம் ஆண்டு நிறுவப்பட்ட தெப்பக்காடு யானை முகாம், நிலத்தில் வாழும் மிகப்பெரிய உயிரினத்தை கட்டுப்படுத்தப்பட்ட சூழலில் பார்வையாளர்கள் காண உதவுகின்றது. இந்த வளாகத்தின் உள்ளே தினந்தோறும் ஒரு ஜோடி யானைகள் விநாயகருக்கு பூஜை செய்கின்றன. காலையிலும், மாலையிலும் தெப்பக்காடு யானை முகாமில் யானை சவாரிகள் அனுமதிக்கப்படுகின்றன. மாலை நேரங்களில் யானைகள் உணவு அருந்தும் நேரத்தில் அவற்றை பார்வையிட பார்வையாளர்கள் அனுமதிக்கப்படுகின்றார்கள்.

பெண்கள் தனியாக பயணம் செய்ய சில டிப்ஸ்பெண்கள் தனியாக பயணம் செய்ய சில டிப்ஸ்

மசினகுடியை எப்படி அடைவது ? :

மசினகுடி - தீண்டா இயற்கை பேரழகு

Rocky Barua

மசினகுடியை விமானம் மூலமாக சென்றடைய நினைப்பவர்கள் கி.மீ 123 தொலைவில் இருக்கும் கோயம்பத்தூர் விமான நிலையத்தை அடைந்து அங்கிருந்து கார் மூலமாக சென்றடையலாம். சாலை முலமாக செல்ல நினைப்பவர்கள் கோயம்பத்தூரில் இருந்து ஊட்டியின் மலையின் அடிவாரமான மேட்டுப்பாளையத்தை அடைந்து அங்கிருந்து 81கி.மீ தொலைவில் இருக்கும் மசினகுடியை அடையலாம்.

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X