Search
  • Follow NativePlanet
Share
» »சிவ பெருமான் வசிப்பதாக சொல்லப்படும் இடத்திற்கு ஒரு சுவாரஸ்ய பயணம்

சிவ பெருமான் வசிப்பதாக சொல்லப்படும் இடத்திற்கு ஒரு சுவாரஸ்ய பயணம்

By Super Admin

அறிவுக்கு புலப்படாத ஆதியும் அந்தமும் கொண்ட ஆன்மிகம் தழைத்தோங்கிய திருநாடு இந்திய தேசமாகும். இம்மண்ணில் தான் இன்று உலகுக்கே வழிகாட்டும் உன்னத வாழ்க்கை நெறிகள் பிறந்திருக்கின்றன. இவற்றை எல்லாம் படைத்த முனிவர்களும் ரிஷிகளும் கண்ணுக்கு புலப்படாத வகையில் ஆன்மீக திருத்தலங்களில் இன்றும் தவத்தில் ஈடுபட்டிருக்கிறார்கள் என்ற நம்பிக்கை பரவலாக இருக்கிறது. அதிலும் குறிப்பாக இமய மலைத்தொடரில் ஏராளமான ரிஷிகள் மற்றும் முனிவர்கள் வாழ்ந்துவருவதாக நம்பப்படுகிறது.

ஹிந்து மதத்தில் கடவுளாக பாவிக்கப்படும் சிவனும் உண்மையில் முனிவருள் தோன்றிய முதலாமவனாக ஆதி முனிவராகவே இருக்கிறார். அவர் தவத்தில் ஈடுபட்டிருக்கும் இடமாக சொல்லப்படும் அமர்நாத் குகைக்கு பயணிக்கலாம் வாருங்கள்.

அமர்நாத் குகை :

அமர்நாத் குகை :

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் அதன் தலைநகரான ஸ்ரீ நகரில் இருந்து 141 கி.மீ தொலைவில் கடல் மட்டத்தில் இருந்து கிட்டத்தட்ட 12,000 அடி உயரத்தில் அமைந்திருக்கிறது 'அமர்நாத் குகை'. இது ஹிந்து மதத்தை பின்பற்றுபவர்களின் மிக முக்கிய ஆன்மீக யாத்ரீக ஸ்தலங்களில் ஒன்றாக திகழ்கிறது.

Photo:Gktambe

அமர்நாத் குகை :

அமர்நாத் குகை :

கடல் மட்டத்தில் இருந்து வெகு உயர்வான இடத்தில் அமைந்திருப்பதால் வருடத்தின் பல மாதங்கள் பனியால் மூடப்பட்டிருக்கிறது இக்குகை. பனிப்பொழிவு குறைவாக இருக்கும் ஜூலை - ஆகஸ்ட் மாதங்களில் 45 நாட்கள் இந்த குகையினுள்ளே இயற்கையாக உருவாகும் பனியால் ஆன லிங்கத்தை தரிசிக்க ஏராளமான பக்தர்கள் கடும் பயணம் மேற்கொண்டு இங்கே வருகின்றனர்.

Photo:Hardik Buddhabhatti

அமர்நாத் குகை :

அமர்நாத் குகை :

இந்த குகையில் வைத்து தான் பார்வதி தேவிக்கு பரம ரகசியத்தை சிவ பெருமான் கூறியதாக நம்பப்படுகிறது. மேலும் நிலவின் சுழற்சிக்கு ஏற்ப இந்த லிங்கமானது உருகி வளர்வதாகவும் கூறப்படுகிறது. அதாவது முழுநிலவு நாளின் போது முழுமையான லிங்கமாகவும் பின் அமாவாசை நாளின் போது மொத்தமாக உருகி விடுவதாகவும் சொல்லப்படுகிறது.

Photo:Gktambe

அமர்நாத் குகை :

அமர்நாத் குகை :

கி.மு 300 ஆம் ஆண்டிலேயே காஷ்மீரை ஆண்ட ஆர்யராஜன் என்ற அரசன் இந்த குகைக்கு வந்து சிவ லிங்கத்தை வழிபட்டதாக வரலாற்று குறிப்புகள் இருக்கின்றன. பதினோராம் நூற்றாண்டில் எழுதப்பட்ட 'ராஜதரஞ்சைனி' என்ற சம்ஸ்கிருத நூலில் அந்த காலட்டத்தில் காஷ்மீரின் அரசியாக திகழ்ந்த சூரியமதி என்பவரால் இக்கோயிலுக்கு திரிசூலம், விலைமதிப்பு மிக்க கற்கள் மற்றும் ஆபரணங்களை கொடையாக வழங்கியதாக சொல்லப்படுகிறது.

Photo:Hardik Buddhabhatti

அமர்நாத் குகை :

அமர்நாத் குகை :

இந்த வருடத்திற்கான அமர்நாத் யாத்திரை ஜூலை 2 ஆம் தேதி துவங்கி ஆகஸ்ட் 29 ஆம் தேதி வரை நடக்கிறது. ஒவ்வொரு ஆண்டும் இந்த அமர்நாத் லிங்கத்தை தரிசிக்க வருபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. கடந்த இரண்டு ஆண்டுகளில் மட்டும் ஏழு லட்சத்திற்கும் அதிகமான பக்தர்கள் அமர்நாத் பனி லிங்கத்தை தரிசித்துள்ளனர்.

Photo:Nittin sain

அமர்நாத் குகை :

அமர்நாத் குகை :

இந்த அமர்நாத் குகையை காஷ்மீர் தலைநகர் ஸ்ரீநகரில் இருந்தோ அல்லது பாஹல்கம் என்ற இடத்தில் இருந்தோ துவங்கி ஐந்து நாட்கள் நடை பயணத்தில் சென்றடையலாம். வழியெங்கும் பக்தர்களின் வசதிக்காக தங்கும் கூடாரங்கள் மற்றும் அன்னதான மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

Photo:Hardik Buddhabhatti

அமர்நாத் குகை :

அமர்நாத் குகை :

இந்த யாத்திரை நெடுகிலும் அடிப்படைவாதத்தின் கோரப்பிடியில் சிக்கியிருக்கும் காஷ்மீரின் அற்புதமான இயற்கை பேரழகை கண்டு ரசிக்கலாம். வெறுமனே ஆன்மீக பயணமாக மட்டுமில்லாது மனதுக்கும், உடலுக்கும் புத்துணர்ச்சி தரும் பயணமாகவும் இது இருக்கும்.

புகைப்படம் :Nitin Badhwar

அமர்நாத் குகை :

அமர்நாத் குகை :

பெஹல்காம் முகாமில் இருந்து 30 கி.மீ கடுமையான மலைப்பாதையில் நாம் பயணம் மேற்கொள்ளவேண்டியிருக்கும். கடல் மட்டத்தில் இருந்து பன்னிரண்டாயிரம் உயரத்தில் இருப்பதால் ஆக்சிஜன் அளவு இங்கே குறைவாகவே இருக்கிறது.

புகைப்படம் : Nitin Badhwar

அமர்நாத் குகை :

அமர்நாத் குகை :

இதனால் இந்த வழியாக பயணம் மேற்கொள்ளும் முன்பாக யாத்ரீகர்கள் கடுமையான மருத்துவ பரிசோதனைக்கு பிறகே அனுமதிக்கப்படுகின்றனர். சுவாசப்பிரச்சனை அல்லது மூட்டு வலி போன்ற உபாதைகள் கொண்டிருப்பவர்கள் இந்த பயணத்தை தவிர்ப்பதே நல்லது.

புகைப்படம்: sandeepachetan.com travel

அமர்நாத் குகை :

அமர்நாத் குகை :

இங்கு நிலவும் கடுமையான சூழலோடு இந்த பயணத்தை மேலும் கடினமாக ஆக்குவது இங்கு நிலவும் தீவிரவாத அச்சுறுத்தல் தான். எப்போது வேண்டுமானாலும் அடிப்படைவாதத்தை வலியுறுத்தும் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தக்கூடும் என்பதால் வழி நெடுகிலும் இந்திய ராணுவத்தினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

புகைப்படம் :PROsandeepachetan.com travel photography

அமர்நாத் குகை :

அமர்நாத் குகை :

இங்கு உலவும் ஒரு பிரபல நாட்டுப்புறக் கூற்றின் படி, சிவபெருமானின் துணைவியான பார்வதி தேவி, தன்னிடம் வெகு காலமாக, சொல்லாமல் மறைத்து வரும் மரணமில்லாமையின் ரகசியத்தைக் கூறும்படி, சிவனிடம் மன்றாடியதாகவும், அவர் பார்வதியை இமய மலையில், ஒரு ஆளரவமற்ற இடத்திற்கு அழைத்துச் சென்று, யாரும் கேட்டு விடாதபடி அந்த ரகசியத்தை பகிர்ந்து கொண்டார் என்றும் கூறப்படுகிறது.

போட்டோ:Akshey25

அமர்நாத் குகை :

அமர்நாத் குகை :

அவ்வாறு இமயமலைக்கு செல்லும்போது, சிவன் தன் தலையில் வீற்றிருக்கும் சந்திர பிறையை சந்தன்வாரியிலும், தன் வாகனமாகிய காளையை பஹல்கத்திலும், அதன் பின் தன் மகன், யானைமுகத்தோனாகிய கணேசரை மஹாகுணாஸ் மலையிலும், தன் சர்ப்பத்தை, ஷேஷ்நாக்கிலும், ஐம்பூதங்களை பஞ்சதரணியிலும், விட்டு விட்டு, பார்வதியை மட்டும் ஒரு குகைக்குள் அழைத்துச் சென்று இந்த பிரணவத்தின் ரகசியத்தை உரைத்ததாக கூறப்படுகிறது.

போட்டோ:sandeepachetan.com travel

அமர்நாத் குகை :

அமர்நாத் குகை :

இப்படிப்பட்ட தொன்மைவாய்ந்த இடத்திற்கு வாழ்க்கையில் ஒருமுறையேனும் வாருங்கள். இத அமர்நாத் பனிலிங்கத்தை எப்படி அடைவது அங்கிருக்கும் ஹோட்டல்களின் விவரங்கள் போன்றவற்றை இங்கே தெரிந்துகொள்ளுங்கள்.

Read more about: spiritual places kashmir temples
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X