Search
  • Follow NativePlanet
Share
» »தென் தமிழகத்தில் சுவையான ஒரு இன்ப சுற்றுலா

தென் தமிழகத்தில் சுவையான ஒரு இன்ப சுற்றுலா

என்னதான் பெரிய பெரிய ஷாப்பிங் மால்களும், கேளிக்கை பூங்காக்களும் இருந்தாலும் மண் மணக்கும் நம்ம ஊர்களுக்கு எதுவுமே இணையாகாது. அமெரிக்கா, சிங்கப்பூர், துபாய் என வெளிநாடுகளில் நல்ல நிலையில் இருந்தாலும் ஊருக்கு போய் நாம் பிறந்த மண்ணில் கவுரவமாக வாழ வேண்டும் என்ற ஆசை நம்மில் ஒவ்வொருவரிடமும் உண்டு. வேலை, குழந்தைகளின் கல்வி போன்ற காரணங்களினால் அது முடியாமல் போனாலும் கொஞ்சமும் கிராமத்து சுவை அறிந்திராத நம் குழந்தைகளுடன் குறைந்தது ஒரு சுற்றுலாவேனும் சென்று வரலாம் இல்லையா?

வாருங்கள் மதுரை, காரைக்குடி, திருநெல்வேலி,கன்னியாகுமரி என இன்றும் மண் மனம் மாறாத தென் தமிழக இடங்களுக்கு ஒரு சுற்றுலா செல்வோம் குழந்தையாய் மாறி குதுகளிப்போம்.

சுற்றுலா செல்கையில் ஹோட்டல் கட்டணங்களில் 50% தள்ளுபடி பெற்றிடுங்கள்

மதுரை - சொர்கமே என்றாலும் அது நம்ம ஊரை போல வருமா... :

மதுரை - சொர்கமே என்றாலும் அது நம்ம ஊரை போல வருமா... :

மதுரை, இந்த ஊரை பிடிக்காதவர்கள் எங்கயுமே இருக்க முடியாது. மனம் மயக்கும் மல்லிகை, பேரழகு பொருந்திய மீனாட்சி அம்மன் கோயில், இன்னும் இன்னும் வேண்டும் என கேட்கத்தூண்டும் அதி சுவையான உணவுகள், பல்லாங்குழி விளையாடும் கிழவிகள், கில்லி, கபடி விளையாடும் இளசுகள் என மதுரை இன்றும் தன்அடையாளங்களை விட்டுத்தராமல் அப்படியே உள்ளது.

Photo:எஸ்ஸார்

மதுரை - சொர்கமே என்றாலும் அது நம்ம ஊரை போல வருமா... :

மதுரை - சொர்கமே என்றாலும் அது நம்ம ஊரை போல வருமா... :

மீனாட்சி அம்மன் கோயில்:

நம்ம ஊரில் இருக்கும் ஒரு உலக அதிசயம் இந்த மீனாட்சி அம்மன் கோயில். வைகை நதிக்கரையில் உடையார் சுந்தரேஸ்வரருடன் பார்வதி தேவி மீனாட்சி அம்மனாக வீற்றிருக்கும் இந்த கோயில் ஈராயிரம் ஆண்டுகளாக முக்கூடல் நகராம் மதுரையின் உயிர் நாடியாக திகழ்கிறது. இந்த கோயிலில் மட்டும் மொத்தம் 33,000 சிற்ப்பங்கள் உள்ளனவாம். மேலும் உலகத்திலேயே மிகப்பெரிய கற்கூரையை உடைய கோயில் என்ற பெருமையையும் இது பெற்றுள்ளது.

Photo:McKay Savage

மதுரை - சொர்கமே என்றாலும் அது நம்ம ஊரை போல வருமா... :

மதுரை - சொர்கமே என்றாலும் அது நம்ம ஊரை போல வருமா... :

ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் மாதத்தில் நடக்கும் மீனாட்சி - சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் இக்கோயிலின் மிக முக்கிய திருவிழாவாகும். மதுரைக்கு வருகையில் அதன் அடையாளமாக திகழும் இந்த கோயிலுக்கு வரத்தவறி விடாதீர்கள்.

Photo:Suresh, Madurai

திருமலை நாயக்கர் மஹால்:

திருமலை நாயக்கர் மஹால்:

மதுரையை ஆண்ட திருமலை நாயக்க மன்னரால் கட்டப்பட்ட இந்த அரண்மனையானது திராவிட மற்றும் இஸ்லாமிய கட்டிடக்கலையின் கலவையாக இருக்கிறது. தமிழ் நாட்டில் முற்கால மன்னர்கள் வாழ்ந்த இடங்களில் எஞ்சியிருக்கும் சிலவற்றில் இந்த நாயக்கர் மஹால் முக்கியமானது.

Photo:Vinay Datta

திருமலை நாயக்கர் மஹால்:

திருமலை நாயக்கர் மஹால்:

உண்மையில் இப்போதிருக்கும் அளவை காட்டிலும் நான்கு மடங்கு பெரியதாக இருந்ததாம் ஆனால் போர், ஆட்சி மாற்றம் போன்ற பல்வேறு காரணங்களினால் அரண்மனையின் ஒரு பகுதி மட்டுமே எஞ்சி நிற்கிறது. மதுரை செல்கையில் இங்கும் கட்டாயம் சென்று வாருங்கள்.

Photo:Avionsuresh

திருமலை நாயக்கர் மஹால்:

திருமலை நாயக்கர் மஹால்:

இங்கே சிலப்பதிகாரத்தை ஒலி-ஒளி நிகழ்ச்சியாக தமிழுலும் ஆங்கிலத்திலும் கண்டும் கேட்டும் மகிழலாம். மதுரையில் இருந்து 80 கி.மீ தொலைவில் ராஜபாளையம் நகருக்கு அருகே அமைந்திருக்கும் இந்த இடத்தை அடைய குறைந்தது ஒன்றரை மணிநேரமாவது ஆகும்.

Photo:Jeroalex

மதுரை உணவுகள்:

மதுரை உணவுகள்:

மதுரையில் கிடைக்கும் உணவை ஒரு முறை ருசித்தவர்கள் பின் வாழ்க்கை முழுக்க அதுபோல ருசித்து சாப்பிட வேண்டும் என நினைப்பார்கள். அப்படி சுவைக்கு அடிமையாக்கவல்லது மதுரையில் கையால் அரைத்த மசாலாவில் செய்த உணவுகளும், உயிரை குளிரவைக்கும் ஜிகிர்தண்டாவும். மதுரை ஸ்பெஷல் சிக்கன் குருமா, பரோட்டாவை கண்டிப்பாக சுவைத்து மகிழுங்கள்.

Photo:KARTY JazZ

காரைக்குடி - இது செட்டிநாட்டு ஸ்பெஷல்! :

காரைக்குடி - இது செட்டிநாட்டு ஸ்பெஷல்! :

மதுரையைப் போன்றே மாறாத மண் மணத்தையும் மயக்கும் சுவையையும் கொண்டிருக்குமிடம் புதுக்கோட்டை, காரைக்குடி பகுதிகளை உள்ளடக்கிய செட்டிநாடு ஆகும். உணவு, கட்டிடக்கலை, பண்பாடு ஆகிய அனைத்திலுமே தனக்கென ஒரு தனி அடையாளத்தை செட்டிநாடு கொண்டிருக்கிறது.

Photo:@agentcikay

காரைக்குடி - இது செட்டிநாட்டு ஸ்பெஷல்! :

காரைக்குடி - இது செட்டிநாட்டு ஸ்பெஷல்! :

செட்டிநாட்டில் கிடக்கும் உணவுகளில் நாட்டுக்கோழி குழம்பு தான் சுற்றுலாப் பயணிகளிடையே மிகப்பிரபலம். கையால் அரைத்த மசாலாவில் செய்து மணக்க மணக்க கிடைக்கும் இந்த குழம்பை ஒரு பிடிபிடிக்கலாம்.

Photo:Charles Haynes

காரைக்குடி - இது செட்டிநாட்டு ஸ்பெஷல்! :

காரைக்குடி - இது செட்டிநாட்டு ஸ்பெஷல்! :

கிராமத்து பின்னணி உள்ள நிறைய தமிழ் திரைப்படங்களில் நாம் பார்த்திருக்கக்கூடிய பிரமாண்டமான பர்மா தேக்குகளிலும், இத்தாலியில் இருந்து வரவழைக்கப்பட்ட கற்களாலும் கட்டப்பட்ட செட்டிநாட்டு அரண்மனைகளுக்கு சென்று ஒரு நாள் முழுக்க சுற்றிப்பார்க்கலாம். புதுமையான மற்றும் சுவையான ஒரு பயணமாக இந்த செட்டிநாட்டு பயணம் உங்களுக்கு அமையும்.

Photo:Jean-Pierre Dalbéra

திருநெல்வேலி - நினைக்கும் போதெல்லாம் மனம் இனிக்கும்:

திருநெல்வேலி - நினைக்கும் போதெல்லாம் மனம் இனிக்கும்:

திருநெல்வேலி, இந்த சொல்லை கேட்ட மாத்திரமே குழந்தையும் சொல்லும் 'அல்வா' என்று. அந்த அளவிற்கு திருநெல்வேலியில் கிடைக்கும் இருட்டுக்கடை அல்வா உலகம் முழுக்க பிரபலமாகும். மேலும் திருநெல்வேலியில் சுற்றிப்பார்க்க நல்ல நல்ல இடங்களும் உண்டு. அவற்றை தெரிந்து கொள்வோம் வாருங்கள்.

Photo:Simply CVR

திருநெல்வேலி - நினைக்கும் போதெல்லாம் மனம் இனிக்கும்:

திருநெல்வேலி - நினைக்கும் போதெல்லாம் மனம் இனிக்கும்:

இருட்டுக்கடை அல்வா:

உலகம் முழுக்க பிரபலம் என்ற போதிலும் இன்றும் நெல்லையப்பர் கோயிலை ஒட்டியுள்ள வீதியில் சிறிய பெட்டிக்கடை போன்று அமைந்திருக்கிறது 'இருட்டுக்கடை'. மாலை ஐந்து மணிக்கு மேல் தான் கடை திறக்கப்படுகிறது. ஒரே ஒரு சிறிய விளக்கு மட்டுமே எரிவதாலேயே இருட்டுக்கடை என பெயர் பெற்றிருக்கிறது.

Photo:Lavanya Kumara Krishnan

திருநெல்வேலி - நினைக்கும் போதெல்லாம் மனம் இனிக்கும்:

திருநெல்வேலி - நினைக்கும் போதெல்லாம் மனம் இனிக்கும்:

வாயில் வைத்தவுடன் வழுக்கி செல்லும் இந்த அல்வாவின் தனித்துவமான சுவைக்கு தாமிரபரணி ஆற்றின் தண்ணீரும், ஒரு வகை சம்பா நெல்லுமே காரணமாக சொல்லப்படுகிறது. திருநெல்வேலி வந்தால் மறக்காமல் இருட்டுக்கடைக்கு வந்து அல்வாவை வாங்கிச்செல்லுங்கள்.

திருநெல்வேலி - நினைக்கும் போதெல்லாம் மனம் இனிக்கும்:

திருநெல்வேலி - நினைக்கும் போதெல்லாம் மனம் இனிக்கும்:

திருநெல்வேலியின் முக்கிய பகுதியில் அமைந்திருக்கும் நெல்லையப்பர் திருக்கோயில் ஆகும். நின்றசீர் நெடுமாறன் என்னும் அரசனால் 7ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டதாகும்.
அற்புதமான கலையம்சங்களுடன் கட்டப்பட்டுள்ள இக்கோயிலின் மணிமண்டபத்தில் இருக்கும் 'இசைத்தூண்கள்' இயக்கப்படுகையில் வெவ்வேறு வகையான இசைகளை எழுப்பகூடியவை.

இங்கு நவராத்திரி, ஐப்பசி மாதத்தில்(Oct 15 - Nov 15) நடக்கும் திருக்கல்யாண விழாவும் நெல்லையப்பர் கோயிலின் முக்கிய விழாக்கள் ஆகும்.

Photo:arunpnair

கன்னியா குமரி:

கன்னியா குமரி:

அரேபியக்கடல், இந்தியப்பெருங்கடல், வங்காள விரிகுடா என முக்கடல் சங்கமிக்கும் இடமான கன்னியா குமரி அற்புதமான இயற்கை எழில் கொஞ்சும் நகரம். கேரளத்திற்கு பக்கத்தில் இருப்பதால் இங்கு தமிழ் கலாச்சாரமும், கேரளா கலாச்சாரமும் பின்னிப்பிணைந்தே இருக்கின்றன.

நாஞ்சில் நாடு என அழைக்கப்படும் அளவிற்க்கு குமரியின் பழக்க வழக்கங்கள், உணவு வகைகள் என தனக்கென தனியொரு அடையாளத்தை கொண்டிருக்கும் இனியதொரு நகரம் குமரி.

Photo:M.Mutta

வள்ளுவர் சிலை:

வள்ளுவர் சிலை:

வள்ளுவன் இல்லாத தமிழ் திலகமில்லாத பெண்ணுக்கு சமம். தமிழுக்கு உலக மொழி என்ற இருப்பை ஏற்ப்படுத்தி தந்த திருவள்ளுவரின் சிலை 133அடி உயரத்தில் விண்ணுக்கும் மண்ணுக்குமாய் உயர்ந்து நிற்கிறது. 2004ஆம் ஆண்டு ஆழிப்பேரலை துயரத்திலும் சிலதலமடையாமல் நின்ற பெருமை இதற்குண்டு. குமரி முனையில் இருந்து இவ்விடம் வரை செல்ல படகு வசை உண்டு. தமிழ் மேல் பற்றும் காதலும் உடைய அனைவரும் செல்ல வேண்டிய இடம் இதுவாகும்.

Photo:Premnath Thirumalaisamy

விவேகானந்தர் பாறை:

விவேகானந்தர் பாறை:

பாரத மாதாவின் பெருமை மிகு புதல்வர்களில் ஒருவரான விவேகானந்தர் ஞானத்தை அடையும் போக்கில் மூன்று நாட்கள் இடைவிடாது தியானம் செய்த பாறையின் மேல் அவர் நினைவாக எழுப்பப்பட்டதே இந்த விவேகானந்தர் நினைவு மண்டபமாகும். ஹிந்து, கிருத்துவ மற்றும் இஸ்லாமிய மதங்களின் கட்டிடக்கலையை ஒன்றிணைத்து இது கட்டப்பட்டுள்ளது. இங்கு வரும் சுற்றுலாப்பயணிகள் அனைவரும் தியான மண்டபத்தில் சிறிது நேரம் தியானம் செய்து விட்டு செல்கின்றனர். வள்ளுவர் சிலையை சுற்றிப்பார்த்த பிறகு அப்படியே அதனருகில் இருக்கும் இங்கும் சென்று வரலாம்.

Photo:Premnath Thirumalaisamy

ராமேஸ்வரம்:

ராமேஸ்வரம்:

இந்த இடங்களை எல்லாம் சுற்றிப்பார்த்து விட்டு அப்படியே முடிந்தால் ராமேஸ்வரத்தில் இருக்கும் ராமநாத சுவாமி கோயிலுக்கும் ஒரு ஆன்மீக பயணம் சென்று வரலாம்.

Photo:Roberto and Bianca

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X