உலகம் அழியும் நாள்: பத்மநாபசுவாமி கோயிலின் கடைசி அறையில் புதைந்துள்ள மர்மங்கள்
தேடு
 
தேடு
 

மகாபாரதத்தின் பழமையான நகரங்கள் நிகழ்காலத்தில் எப்படி இருக்குனு தெரிஞ்சிக்கணுமா?

Written by: Udhaya
Updated: Wednesday, May 17, 2017, 10:44 [IST]
Share this on your social network:
   Facebook Twitter Google+ Pin it  Comments

முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியையே வெளியேற்றிய கோயில் எங்கே? ஏன்? எப்படி?

மகாபாரதத்தைப் பற்றி பல்வேறு ஆயிரக்கணக்கான கற்பனைகள், கதைகள் வந்துகொண்டிருக்கின்றன. சிலர் அதை உண்மையில் நடந்ததாக கருதுகின்றனர். சிலர் அதை மறுக்கின்றனர். மகாபாரதம் புனையப் பட்ட கதை என்கின்றனர்.

மகாபாரதத்தில் கூறப்பட்ட பல நகரங்கள் நிகழ்காலத்தில் மிக வளர்ச்சியடைந்து சுற்றுலாத் தளமாகவும், வணிக நகரமாகவும் மாறிவிட்டன. அவற்றில் சில வெளிநாடுகளாகவும், பல இந்தியாவிலும் உள்ளன.

குறிப்பாக, தட்சசீலம் என்றழைக்கப்பட்ட பகுதி தற்போது பாகிஸ்தானின் ராவல்பின்டி பகுதியில் உள்ளது.

தட்சசீலம் பழைய காலத்தில் அறிவின் நகரமாக அறியப்பட்டது. தற்போது அது மிகச் சிறந்த சுற்றுலாத் தளமாக உள்ளது.

பாகிஸ்தானிலும், ஆப்கானிஸ்தானிலும் அமைந்துள்ள கந்தகார் பகுதி மகாபாரதத்தில் குறிப்பிடப்பட்டதாகும்.

சரி இனி இந்தியாவிலுள்ள பகுதிகள் எவை அவற்றின் தற்போதைய நிலை என்ன என்பது பற்றி காண்போம். இதை கிளிக் செய்யுங்கள்

கேக்காய பிரதேசம்

 

ஜம்மு காஷ்மீரின் வடபகுதியில் அமைந்துள்ள இந்த பகுதி மகாபாரதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

வாசுதேவ ராதா தேவியின் தங்கையை மணம்புரிந்தவர் ஜெய்சன். அவரது மகன் வின்ட் ஜரசந்தா, துரியோதனின் நண்பன். அந்தபகுதிதான் கேக்காய பிரதேசம்.

google map

தற்போதைய பகுதிகள்

 

இந்தியாவின் வடமேற்கு பகுதியில் இயற்கை கொஞ்சும் அழகுடன் வீற்றிருக்கும் காஷ்மீர் "பூமியின் சொர்க்கம்" என்று அழைக்கப்படுகிறது. பிரமாண்ட இமாலயத்திற்கும் பீர்பாஞ்சல் மலைப் பிரதேசத்திற்கும் இடையில் இவ்விடம் அழகுற அமைந்துள்ளது. உள்ளூர் கிராமிய கதைகளில் இவ்விடத்தில் காஷ்யபர் என்ற இந்து மதத் துறவி ஏரி ஒன்றை சுறுக்கி பிராமண இனத்தவருக்கு வாழ்விடம் அமைத்துக் கொடுத்தமையால் அவருடைய பெயரைத் தழுவி காஷ்மீர் என்று இவ்விடத்திற்கு பெயர் வந்ததாகக் கூறப்படுகிறது.

காஷ்மீர் - இயற்கை எழுதிய ஒப்பற்ற கவிதை!

PC: Nativeplanet

அங்குள்ள சுற்றுலாத் தளங்கள்

 

குல்மார்க், பஹல்கம், சோனமார்க், பாட்னிபாட், த்ராஸ், கார்கில் என பல பகுதிகள் உள்ளன.

அவற்றைப் பற்றி தெரிந்து கொள்ள கிளிக் செய்யுங்கள்.

 

எப்படி செல்லலாம்?


காஷ்மீரில் ரயில் நிலையங்கள் இல்லை. விமானம் அல்லது ரயிலில் சென்றால் வேறு வாகனத்தில் காஷ்மீரை அடையலாம்.

ஸ்ரீநகரிலிருந்து 305 கிலோ மீட்டர் தொலைவிலுள்ள ஜம்மு- தாவி இரயில் நிலையத்திலிருந்து ஸ்ரீநகரை விரைவாக அடையலாம். கொல்கத்தா, டில்லி, மும்பை போன்ற முக்கிய நகரங்களில் இருந்து ஜம்மு செல்ல நேரடி இரயில் வசதி உண்டு. முக்கியமான சமயங்களில் கூடுதல் இரயில் வசதியும் உண்டு.

காஷ்மீருக்கு மிக அருகாமையில் இருப்பது ஸ்ரீநகர் விமான நிலையம். இது காஷ்மீரிலிருந்து 14 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. டில்லி, மும்பை மற்றும் புனே போன்ற இடங்களில் இருந்து ஸ்ரீநகருக்கு விமான போக்குவரத்து உண்டு. புது டில்லியிலுள்ள இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்திலிருந்து எல்லா முக்கிய இடங்களுக்கும் செல்லலாம்.

 

இந்திர பிரதேசம் மற்றும் காந்தபிரதேசம்

 

மகாபாரதத்தில் சொல்லப்பட்ட இந்த பகுதிகள் தற்போதைய இந்திய தலைநகர் டெல்லியும் அதை சுற்றியுள்ள பகுதிகளுமாகும்.

 

நிகழ்காலத்தில் இந்திர பிரதேசம்


மானுட வரலாற்றில் மஹோன்னதமான கலாச்சார செழுமையை கொண்டுள்ள - பல்வேறு ராஜவம்ச நாகரிகங்களின் தொட்டிலாக விளங்கிய - பரந்த இந்திய தேசத்தில் சுற்றுலாப்பயணம் மேற்கொள்வதே ஒரு உன்னதமான அனுபவம் எனில், அதன் தலைநகரமாக விளங்கும் டெல்லி மாநகரத்துக்கு விஜயம் செய்வதும் ஒரு மறக்க முடியாத வாழ்நாள் அனுபவமாக இருக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

டெல்லி - அன்றும் இன்றும் இந்தியாவின் சக்தி மையம்

ஊட்டி கர்நாடகத்தில் இருக்கிறது என்றால் நம்புவீர்களா?

அருகிலுள்ள சுற்றுலாத் தளங்கள்

 

பிர்லா மந்திர், சௌசட் கம்பா, ரிட்ஜ், தில்லி ஹாத், கொரோனஷன் பார்க் என பல்வேறு சுற்றுலாத் தளங்கள் இதன் அருகே உள்ளன.

மேலும் தெரிந்து கொள்ள கிளிக் செய்யவும்

 

எப்படி செல்லலாம்?


5 தேசிய நெடுஞ்சாலைகள் டெல்லி நகரத்தை நாட்டின் பிற பகுதிகளுடன் இணைக்கின்றன என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்தூர், ஜெய்பூர், உதய்பூர், குவாலியர் போன்ற நகரங்களிலிருந்து டெல்லி மாநகரத்துக்கு சொகுசுப்பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

தமிழ்நாட்டிலிருந்து டெல்லி செல்வதற்கு சிக்கனமான பாதுகாப்பான ஒரே போக்குவரத்து மார்க்கமாக ரயில் சேவைகள் அமைந்துள்ளன.

 

பஞ்சல் பிரதேசம்


உத்தரப்பிரதேசத்தின் பாருக்காபாத், பரேய்லி,புடாவுன் முதலிய பகுதிகளை உள்ளடக்கியது பஞ்சல் பிரதேசம். கான்பூர், வாரனாசி முதலிய நகரங்களைச் சுற்றியுள்ள பகுதிகள்தான் பழங்காலத்தில் பஞ்சல் பிரதேசமாக அறியப்படுகின்றன.

நிகழ்காலத்தில் பஞ்சல் பிரதேசம்

 

எண்ணற்ற சுவாரசிய சுற்றுலாத்தலங்களை தன்னுள் கொண்டுள்ள உத்தரப்பிரதேச மாநிலம் சுற்றுலா ஆர்வலர்களை வசீகரித்து வரவேற்கிறது. சுற்றுலா என்றில்லை இந்திய ஆன்மீக மரபுகளில் நம்பிக்கை இருக்கிறதோ இல்லையோ ஒரு வரலாற்று பாரம்பரியம் என்ற அடிப்படையில் இங்குள்ள சில யாத்ரீக ஸ்தலங்களை இந்தியர் அனைவருமே வாழ்நாளில் ஒருமுறை தரிசிப்பது மிக அவசியம்.

 

சுற்றுலாத் தளங்கள்

 

நொய்டா, அயோத்தியா, மீரட், முஜாஃபர்நகர், மொராதாபாத்,அலிகார் முதலிய பல சுற்றுலாத் தளங்கள் அங்குள்ளன.

மேலும் படிக்க

 

பிருந்தாவன்


கங்கை நதிக்கரையில் கிருஷ்ணர் தனது இளமைப்பருவத்தை கழித்த ஸ்தலமாக கருதப்படும் இந்த விருந்தாவன் இந்துக்களுக்கு விருப்பமான யாத்ரீகத்தலமாகும். இந்த இடத்தில்தான் கிருஷ்ணன் கோபியர் சேலைகளை திருடியதாகவும், மற்றும் ராதையுடன் தனது ராசலீலைகளை நிகழ்த்தியதாகவும், தெய்வீக நடனங்கள் புரிந்ததாகவும், பல அசுரர்களை வதம் செய்ததாகவும் சொல்லப்படுகிறது.

எப்படி செல்வது

எப்படி செல்வது என்பது பற்றி அறிய இதை கிளிக் செய்யவும்

மேலும் இதைச் சுற்றியுள்ள சுற்றுலாத் தளங்கள் பற்றி அறிய இதை கிளிக் செய்யவும்

 

மதுரா

 

மதுரா, ஆரம்பத்திலிருந்து இன்று வரை "தெய்வீக அன்பு பொங்கும் இடம்" என்ற அர்த்தம் தொனிக்கும் வகையில் 'ப்ரஜ் பூமி' என்ற பெயரில் கொண்டாடப்பட்டு வருகிறது. கிருஷ்ண பகவான், இங்கு தன் குழந்தைப்பருவத்தைக் கழித்து, பல வருடங்கள் வளர்ந்து வந்ததனாலேயே, மதுராவிற்கு இப்பெயர் வழங்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.மேலும் தெரிந்து கொள்ள

 

 

Read more about: travel, fort
English summary

Ancient Cities of mahabharata in the present time in tamil

Ancient Cities of mahabharata in the present time in tamil
Please Wait while comments are loading...