Search
  • Follow NativePlanet
Share
» »அந்தமான் தீவு: பேரழகின் பிறப்பிடம்

அந்தமான் தீவு: பேரழகின் பிறப்பிடம்

அந்தமான் தீவு: பேரழகின் பிறப்பிடம்

வெள்ளை மணல் நிறைந்த கடற்கரை, தெள்ளத்தெளிவான நீல நிற கடற்கரை, பசுமை நிறைந்த காடுகள் என பேரழகு நிறைந்திருக்கும் அந்தமான் தீவு வங்காள விரிகுடாவில் அமைந்திருக்கும் சொர்க்கம். அந்தமான் மற்றும் நிகோபார் தீவுக்கூட்டத்தின் முக்கியமான தீவான அந்தமான் தீவு பல அற்புதமான இடங்களை கொண்டு சுற்றுலாப்பயணிகளை ஈர்த்து வருகிறது. அமைதியாக தனிமையை இயற்கையுடன் ரசிக்க நினைப்பவர்களுக்கும், தங்கள் காதல் கணவருடனோ, மனைவியுடனோ தேனிலவு செல்ல வேண்டும் என நினைப்பவர்களுக்கும் அற்புதமான தேர்வாக இந்த அந்தமான் அமையும். வாருங்கள் அந்தமானுக்கு நல்லதொரு சுற்றுலா சென்று வரலாம்.

ஹவேலோக் தீவு:

Photo: Clint

அந்தமான் தீவை ஒட்டியே அமைந்திருக்கும் ஒரு குட்டித்தீவு தான் இந்த ஹவேலோக் தீவு. இந்த தீவில் இருக்கும் ராதாநகர் பீச் தேனிலவு வருபவர்கள் மத்தியில் மிகப்பிரபலமானது. எந்தவித வர்த்தக ஆக்கிரமிப்பும் இன்றி இந்த வெள்ளை மணல் கடற்கரை அத்தனை அழகாகவும், சுத்தமாகவும் உள்ளது. இந்த கடற்கரையின் சிறப்பான விஷயங்களில் ஒன்று யானை மேல் அமர்ந்தபடி இங்கு கடற்கரையில் சவாரி செய்ய முடியும். மேலும் இந்த தீவில் உலகில் இருக்கும் கடைசி நீந்தும் யானையான ராஜனை நீங்கள் காணலாம். பொதுவாக யானைகளால் நீந்த முடியாது ஆனால் சிறு வயத்தில் இருந்து பழக்கப்படுத்தப்பட்டத்தில் 75 வயதான ராஜன் யானை கடலில் எந்த சிரமும் இல்லாமல் நீந்துகிறது. இப்படிப்பட்ட ஒன்றை உலகத்தில் இங்கு மட்டுமே நாம் காண முடியும்.

லிட்டில் அந்தமான்:

Photo: Sankara Subramanian

அந்தமான் தீவில் இருந்து 120கி.மீ தொலைவில் அமைந்திருக்கிறது இந்த லிட்டில் அந்தமான் என்னும் அழகிய குட்டித்தீவு. அந்தமானில் இருப்பது போன்றே அழகான வெள்ளை மணல் கடற்கரை இங்கு உள்ளது. ஹுட் பே ஜெட்டி தான் இந்த தீவின் வாயிலாக விளங்குகிறது. இந்த தீவில் பட்லர் பே என்னும் இடம் சூரியக்குளியல் போடவும், அரியவகை ஆமைகளை பார்க்கவும், ஸ்குபா டைவிங் மூலம் பவளப்பாறைகளை பார்க்கவும் சிறந்த ஒரு இடமாக விளங்குகிறது. அதேபோல இங்கு உள்ள வைட் சர்ப் என்னும் குட்டி அருவி அவ்வளவு அழகானது. அடர்ந்த மழைக்காடுகளுக்குள் யானை மீது சவாரி செய்து செய்து இந்த அருவியை அடைவதும் பெரும் சுவாரஸ்யம் நிறைந்ததே.

எரிமலைத்தீவு:

Photo: Thomas Brauner

தெற்கு ஆசியாவில் எப்போது வேண்டுமானாலும் தீக்குழம்பை வெளியிட காத்துக்கொண்டிருக்கும் ஒரே ஒரு எரிமலை இந்த அந்தமான் தீவுக்கு பக்கத்தில் அமைந்திருக்கிறது. 'Barren Island' அதாவது கைவிடப்பட்ட ஒன்றும் இல்லாத தீவு என பொருள் படும் படி இது அழைக்கப்படுகிறது.

இங்கு யாரும் வசிப்பது இல்லை என்றாலும் இந்த தீவை சுற்றி இருக்கும் தெள்ளத்தெளிவான கடல் மற்றும் வேறெங்கும் காண முடியாத மீன் வகைகள் மற்றும் பவளப்பாறைகள் ஸ்குபா டைவிங் செய்ய உலகின் சிறந்த இடங்களில் ஒன்றாக திகழ்கிறது.

பரதங் தீவு:

Photo: Ajay R

இன்னும் கொஞ்சமும் மாசு படாத செழுமையான மாங்குரோவ் காடுகளையும், சுண்ணாம்புக்கல் குகைகளையும் கொண்ட இன்னும் அதிகம் வெளி உலகிற்கு தெரியாத இந்த தீவில் சுற்றிபார்க்க அதிக இடங்கள் இல்லை என்றாலும் உலகில் வேறெங்கும் காண முடியாத குட்டி குட்டி மண்மேடு எரிமலைகள் இங்கே உண்டு. இவை அவ்வப்போது சிறிய அளவில் தீக்குழம்புக்களை வெளியிடும். அதே போல போகப்போக சென்று நீண்டு கொண்டே போகும் சுன்னாம்புக்குகையில் நீரோட்டத்தால் இயற்கையாக உருவான சுண்ணாம்பு சிற்பங்களை நாம் காண முடியும்.

    Read more about: anthaman natural wonders
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X