Search
  • Follow NativePlanet
Share
» »அரக்கு பள்ளத்தாக்கு

அரக்கு பள்ளத்தாக்கு

By

அரக்கு பள்ளத்தாக்கு ஒடிசா மாநில எல்லைக்கு வெகு அருகில், விசாகபட்டணத்திலிருந்து 114 கிலோமீட்டர் தொலைவில் ஆந்திர மாநிலத்தில் அமைந்திருக்கிறது.

ஆந்திராவின் முதன்மையான மலைவாசஸ்தலமான அரக்கு பள்ளத்தாக்கு கிழக்கு தொடர்ச்சி மலைகள் சூழ கலாச்சாரம் மற்றும் பாரம்பரிய பெருமைகளை சுமந்து கொண்டு கம்பீரமாக காட்சியளித்துக் கொண்டிருக்கிறது.

அரக்கு பள்ளத்தாக்கு ஹோட்டல்கள்

சுற்றுலாத் தலங்கள்

சுற்றுலாத் தலங்கள்

அரக்கு பள்ளத்தாக்கின் முதன்மை சுற்றுலாத் தலங்களாக போரா குகைகள், அனந்தகிரி குன்று காப்பித் தோட்டங்கள், பத்மபுரம் பொட்டானிகல் கார்டன்ஸ், சங்க்டா அருவி, டிரைபல் மியூசியம் ஆகியவை அறியப்படுகின்றன.

சுற்றுலாத் தலங்கள்

படம் : roadconnoisseur

போரா குகைகள்

போரா குகைகள்

போரா குஹாலு என்று உள்ளூர் மொழியில் அழைக்கப்படும் போரா குகைகள் அனந்தகிரி குன்றின் ஒரு பகுதியாக இந்தியாவின் கிழக்கு கடற்கரை பகுதிகளில் அமைந்திருக்கிறது. இந்த குகைகள் கடல் மட்டத்திலிருந்து 2313 அடி உயரத்தில் அமைந்திருப்பதோடு, இந்தியாவின் மிகப்பெரிய குகைகளில் ஒன்றாகவும் திகழ்ந்து வருகிறது. பெரும்பாலும் சுண்ணாம்புக் கற்களாலேயே உருவாகியிருக்கும் போரா குகைகள் 80 மீட்டர் ஆழம் கொண்டதால், இந்தியாவின் ஆழம் மிகுந்த குகையாக கருதப்படுகிறது. இதன் காரணமாக போரா குகைகள் வரலாற்று ஆய்வாளர்கள், அறிவியல் மாணவர்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகளின் கூட்டத்தை அதிக அளவில் ஈர்த்து வருகிறது.

படம் : Raj srikanth800

ஷூட்டிங் ஸ்பாட்

ஷூட்டிங் ஸ்பாட்

அரக்கு பள்ளத்தாக்கு ஆந்திராவின் புகழ்பெற்ற சினிமா ஷூட்டிங் ஸ்பாட்களில் ஒன்று. இங்கு ஹாப்பி டேஸ், டார்லிங், கதா போன்ற தெலுங்கு திரைப்படங்கள் இங்கே படம்பிடிக்கப்பட்டுள்ளன.

படம் : roadconnoisseur

அனந்தகிரி குன்று காப்பித் தோட்டங்கள்

அனந்தகிரி குன்று காப்பித் தோட்டங்கள்

அரக்கு பள்ளத்தாக்கில் நீங்கள் காலடி எடுத்து வைத்தவுடன் காற்றில் மிதந்து வரும் காப்பிக் கொட்டையின் நறுமணம் உங்களுக்கு அற்புதமான வரவேற்பை கொடுக்கும். இந்த காப்பித் தோட்டங்கள் அரக்கு பள்ளத்தாக்கின் ஆரம்பத்திலேயே பல மைல்கள் அனந்தகிரி குன்று முழுக்க பரந்து விரிந்து கிடக்கிறது.

படம் : Amartyabag

கதிகலங்கவைக்கும் தருணம்!

கதிகலங்கவைக்கும் தருணம்!

அரக்கு பள்ளத்தக்கின் மீது ரயிலில் செல்லும் தருணம் எவரையும் கதிகலங்கவைத்துவிடும்.

படம் : Sunny8143536003

பத்மபுரம் பொட்டானிகல் கார்டன்ஸ்

பத்மபுரம் பொட்டானிகல் கார்டன்ஸ்

பத்மபுரம் பொட்டானிகல் கார்டன்ஸ் இரண்டாம் நூற்றாண்டுகளின் காலகட்டத்தில் ராணுவ வீரர்களின் உணவுத் தேவைக்கு காய்கறிகள் பயிரிடும் நோக்கத்தில் உருவாக்கப்பட்டது. ஆனால் இன்று காய்கறிகளை பயிருடுவதைக் காட்டிலும் பத்மபுரம் பொட்டானிகல் கார்டன்ஸ் அரிய வகை பூக்களையும், மரங்களையும் உற்பத்தி செய்யும் நர்சரியாக செயல்பட்டு வருகிறது. பத்மபுரம் பொட்டானிகல் கார்டன்ஸ் வளாகத்தில் குழந்தைகள் விளையாடி மகிழ பொம்மை ரயில் ஒன்று உள்ளது. இந்த பொம்மை ரயில் தோட்டங்களோடு தோட்டங்களாக பார்வையாளர்களின் கண்களுக்கு விருந்து படைத்து வருகிறது. இது தவிர பொட்டானிகல் கார்டனில் மரஉச்சிக் குடில்களில் அமைக்கப்பட்டுள்ள ரோஜா தோட்டம் சுற்றுலாப் பயணிகளின் கவனத்தை அதிக அளவில் ஈர்க்கிறது.

படம் : Bhaskaranaidu

டிரைபல் மியூசியம்

டிரைபல் மியூசியம்

அரக்கு பள்ளத்தாக்கில் நிறுவப்பட்டிருக்கும் டிரைபல் மியூசியம் பழங்குடியினரின் வாழ்க்கை குறித்து பொதுமக்களுக்கு எடுத்துச் சொல்லும் நோக்கத்துடன் செயல்பட்டு வருகிறது. இந்த அருங்காட்சியகத்தில் பழங்குடி மக்களின் களிமண் சிலைகளை பயணிகள் கண்டு ரசிக்கலாம். அதோடு டிரைபல் மியூசியத்தில் சிலைகள் உட்பட அனைத்து கைவினைப்பொருட்களும் நன்றாக காட்சிப்படுத்தப்பட்டிருப்பது பழங்குடி மக்களின் சடங்குகள் போன்றவற்றோடு சேர்த்து அவர்களையும் நாம் ஆழமாக தெரிந்து கொள்ள பெருவாய்ப்பாக அமைந்திருக்கின்றன.

படம் : thotfulspot

பழங்குடி நடனம்

பழங்குடி நடனம்

அரக்கு பள்ளத்தாக்கில் வசிக்கும் பழங்குடி பெண்கள் பாரம்பறிய பாடல் ஒன்றுக்கு நடனமாடும் காட்சி.

படம் : Rajib Ghosh

மர பொம்மைகள்

மர பொம்மைகள்

அரக்கு பள்ளத்தாக்கில் புதுமையான வடிவங்களில் மர பொம்மைகள் கிடைக்கும். எனவே நீங்கள் அரக்கு பள்ளத்தாக்கு செல்லும்போது இந்த மர பொம்மைகளை வாங்க மறந்துவிடாதீர்கள்.

படம் : Bhaskaranaidu

இருள்

இருள்

இருள் சூழ்ந்து காட்சியளிக்கும் போரா குகைகள்.

படம் : Raj

கொஸ்த்தானி நதி பள்ளத்தாக்கு

கொஸ்த்தானி நதி பள்ளத்தாக்கு

போரா குகைகள் அருகேயுள்ள கொஸ்த்தானி நதி பள்ளத்தாக்கு.

படம் : Adityamadhav83

போரா குகைகள் ரயில் நிலையம்

போரா குகைகள் ரயில் நிலையம்

அரக்கு பள்ளத்தாக்கில் உள்ள போரா குகைகள் ரயில் நிலையம்.

படம் : roadconnoisseur

ரயில்வே லைன்

ரயில்வே லைன்

அரக்கு பள்ளத்தாக்கு செல்லும் ரயில்.

படம்: Adityamadhav83

விவசாய நிலங்கள்

விவசாய நிலங்கள்

அரக்கு பள்ளத்தாக்கில் மலைகளுக்கு மத்தியில் பசுமையோடு காட்சியளிக்கும் விவசாய நிலங்கள்.

படம் : Raj

இசை வாத்தியங்கள்

இசை வாத்தியங்கள்

டிரைபல் மியூசியத்தில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ள தொன்மையான இசை வாத்தியங்கள்.

படம் : Bhaskaranaidu

சந்தைக்கு செல்லும் பானைகள்

சந்தைக்கு செல்லும் பானைகள்

அரக்கு பள்ளத்தாக்கில் உள்ள சந்தைக்கு விற்பனை செய்ய எடுத்துச்செல்லப்படும் மண் பானைகள்.

படம் : Bhaskaranaidu

டைடா

டைடா

டைடா எனும் சிறிய அழகான கிராமம் கிழக்கு தொடர்ச்சி மலைகளின் அடர்ந்த வனங்களுக்கு மத்தியில், விசாகப்பட்டணத்திலிருந்து 75 கிலோமீட்டர் தொலைவிலும், அரக்கு பள்ளத்தாக்கிலிருந்து 40 கி.மீ தூரத்திலும் அமைந்துள்ளது. டைடா கிராமத்தில் ஆந்திர பிரதேச சுற்றுலாத்துறையின் பங்களிப்போடு நிறுவப்பட்டிருக்கும் ஜங்கிள் பெல்ஸ் இயற்கை முகாம், அந்த கிராமத்தின் மிகவும் புகழ்பெற்ற சுற்றுச் சூழல் ரிசார்ட்டாக திகழ்ந்து வருகிறது. இந்த ரிசர்ர்ட் உங்களுக்கு தங்கும் வசதி மட்டும் அளிக்கவில்லை, அத்துடன் டிரெக்கிங், ஹைக்கிங் போன்ற சாகச போழுதுபோக்குகளுக்கும் ஏற்பாடு செய்து கொடுக்கிறது. அதிலும் பறவைகளை கண்டு ரசிப்பதற்காகவே ஒரு பிரத்தியேக நெடுந்தூர பயணம் இங்கு ஏற்பாடு செய்யப்படுகிறது. மேலும் டைடா கிராமத்தில் ஜங்கிள் பெல்ஸ் ரிசார்ட்டை தவிர வேறு சில ரிசார்ட்டுகளும், மரக்குடில்களும் அமைந்திருக்கின்றன.

படம் : Viswa Chandra

செல்லும் வழி

செல்லும் வழி

அரக்கு பள்ளத்தாக்கு செல்லும் சாலை.

படம் : Amartyabag

பழங்குடி பெண்கள்

பழங்குடி பெண்கள்

வியாபாரத்துக்கு செல்லும் பழங்குடி பெண்கள்.

படம் : roadconnoisseur

எங்கு தங்கலாம்?

எங்கு தங்கலாம்?

அரக்கு பள்ளத்தாக்கு ஹோட்டல்கள்

படம் : Ankitha veerepalli

அரக்கு பள்ளத்தாக்கை எப்போது மற்றும் எப்படி அடைவது?

அரக்கு பள்ளத்தாக்கை எப்போது மற்றும் எப்படி அடைவது?

எப்படி அடைவது?

எப்போது பயணிக்கலாம்?

படம் : Raj

Read more about: hill stations
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X