Search
  • Follow NativePlanet
Share
» »தீயில் எரிந்தும் சாகாத பெண்.....கேட்ட வரம் அருளும் கோட்டை மாரியம்மன்

தீயில் எரிந்தும் சாகாத பெண்.....கேட்ட வரம் அருளும் கோட்டை மாரியம்மன்

எரிந்தும் சாகாத பெண்.... குறிப்பிட்ட தினங்களின் அம்மன் முகத்தில் சூரியன் ஆச்சர்யம் தரும் கோட்டை மாரியம்மன் கோயில்

இறைவருள் அதிக சக்தி கொண்ட தேவியின் அம்சங்களில், ரேணுகாதேவி என்ற சக்தியே 'மாரியம்மன்' என்று நம்பப்படுகிறது. அவரின் சக்திக்கு ஒரு நம்பிக்கைக்கதை கூறப்படுகிறது.

ஜமதக்னி என்னும் மகாமுனிவர் பூமியில் வாழ்ந்துவந்தார். இவருடைய மனைவி ரேணுகாதேவி.

கார்த்திவீரியன் என்னும் பேரரசன், ஜமதக்னி முனிவரின் ஆசிரமத்தில் இருந்த காமதேனுவை அடைய விரும்பி மூர்க்கத்தனமாக போர் செய்தான்.

ஜமதக்னி முனிவரின் மகனான பரசுராமர், கார்த்திவீரியனிடம் போரிட்டு அவனது தலையை வெட்டிக் கொன்றார். பழிக்கு பழியாக கார்த்திவீரியனின் புத்திரர்கள் ஜமதக்னி முனிவரை கொன்றனர்.

கணவன் இருந்ததால், ஜமதக்னி முனிவரின் சிதையில் ரேணுகாதேவியும் உடன் கட்டை ஏறினாள். ஆனால் அந்த பெண் இறக்கவில்லை. ஏன் தெரியுமா?

கோட்டை மாரியம்மனின் அருள் பற்றி முழுவதும் தெரிந்துகொள்வோம் வாருங்கள்...

 கோட்டை மாரியம்மன் கோயில்

கோட்டை மாரியம்மன் கோயில்

திண்டுக்கல் மாவட்டத்தில் அமைந்துள்ள இந்த கோயில் தமிழகத்தின் மாரியம்மன்கோயில்களில் மிக முக்கியமானதாக கருதப்படுகிறது.

மலைக்கோட்டைக்கும் கோயிலுக்கும் என்ன தொடர்பு

மலைக்கோட்டைக்கும் கோயிலுக்கும் என்ன தொடர்பு

ஆயிரத்து எழுநூறுகளில் திப்புசுல்தான் இந்த பகுதியை ஆட்சி செய்துவந்தார்.

திப்புசுல்தானின் போர்வீரர்கள் மலைக்கோட்டையின் கிழக்குப் பக்கத்தில் உள்ள இடத்தில் மாரியம்மனுக்கு ஒரு சிறியகோயில் கட்டி வழிபட்டனர். மாரியம்மன்தான் அவர்களுக்கு காவல் தெய்வமாக இருந்துள்ளது. இதனால்தான் இது கோட்டை மாரியம்மன் என்று அழைக்கப்படுகிறது.

கருவறை எதனால் ஆனது தெரியுமா?

கருவறை எதனால் ஆனது தெரியுமா?

ஆரம்பத்தில் கருவைறை மண்ணால் கட்டப்பட்டிருந்ததாம். பின்னர் பீடம் மட்டுமே அமைக்கப்பட்டது. பின்னாளில் மூலவர் சிலை அமைக்கப்பட்டுள்ளது.

இவ்வளவு பழமையா?

இவ்வளவு பழமையா?

இந்த கோயில் சுமார் 300 ஆண்டுகள் பழமையானதாக அறியப்படுகிறது.

கோயிலின் மூலவர் சிலையை தனியாக பிரித்தெடுக்கமுடியாது. அந்த அளவுக்கு ஆழ்ந்து புதைக்கப்பட்டுள்ளது.

PC: Drajay

சூரியகதிர் விழும் ஆச்சர்யங்கள்

சூரியகதிர் விழும் ஆச்சர்யங்கள்

ஆண்டுதோறும் மார்ச் மாதம் 9, 10, 11 ஆகிய தேதிகளிலும், அக்டோபர் மாதம் 2, 3, 4 ஆகிய தேதிகளிலும் காலை 6.20 மணி முதல் 6.40 மணி வரை சூரியனின் ஒளிக்கதிர்கள் அம்மன் சிரசில் இருந்து முகத்தில் படிவது சிறப்பு அம்சமாகும்.

தங்கத்தேர்

தங்கத்தேர்

கோட்டை மாரியம்மன் கோவிலுக்கு தங்கரதம் அமைக்க ராமநாதபுரம் தேவஸ்தானத்தில் இருந்தும், திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோவிலில் இருந்தும் வரி இல்லாமல் தங்கம் கொள்முதல் செய்யப்பட்டது.

தமிழக அரசின் முழுப்பார்வையில் தங்கத்தேர் பணி நிறைவுற்றுள்ளது.

PC: Ariharan

மற்ற தெய்வங்கள்

மற்ற தெய்வங்கள்

இந்த ஆலய கருவறையில் கோட்டை மாரியம்மன் வீற்றிருந்து அருள்பாலிக்கிறாள். கருவறையை ஒட்டி முன்புறத்தின் தெற்கு பக்கம் விநாயகர் சன்னிதியும், வடக்கு பக்கம் மதுரை வீரன் சுவாமி சன்னிதியும் உள்ளன. வடகிழக்கில் நவக்கிரக சன்னிதி அமைந்துள்ளது.

எரிந்த பெண் எப்படி காப்பாற்றப்பட்டாள்

எரிந்த பெண் எப்படி காப்பாற்றப்பட்டாள்

சக்தியின் அம்சமான ரேணுகாதேவியை காக்க மழை பொழியச் செய்து அவளது உடலை தீயில் வேகாமல் செய்தான், இந்திரன். இருப்பினும் ஆடைகள் முழுவதும் தீயில் எரிந்தன. தீ பட்டதால் உடலில் கொப்பளங்கள் தோன்றின.

 கொப்பளங்களுக்கு மருந்து என்ன தெரியுமா?

கொப்பளங்களுக்கு மருந்து என்ன தெரியுமா?

ரேணுகாதேவி அருகில் இருந்த வேப்ப மரத்தின் இலைகளை பறித்து கயிறு போல் திரித்து ஆடையாக அணிந்து கொண்டாள். வேப்பிலை மருந்து மூலமாக அம்மன் தேவியை காப்பாற்றி அருளினாள் என்கின்றனர் பக்தர்கள்.

இதுபோன்று பல்வேறு நிகழ்வுகள் நடந்துள்ளதாக பக்தர்கள் தெரிவிக்கின்றனர். இதுதான் மாரியம்மனின் சக்தி.

அதிகம் பேர் படித்த டாப் 5 கட்டுரைகள்

ஓடிசாவில் இருக்கும் புகழ் பெற்ற ஐந்து கோயில்கள்ஓடிசாவில் இருக்கும் புகழ் பெற்ற ஐந்து கோயில்கள்

உலகின் இரண்டாவது மிகப்பெரிய சிவன் சிலை இருக்கும் கோயில் எது தெரியுமா?உலகின் இரண்டாவது மிகப்பெரிய சிவன் சிலை இருக்கும் கோயில் எது தெரியுமா?

ஓவ்வொரு தமிழரும் பார்க்கவேண்டிய கோவில்ஓவ்வொரு தமிழரும் பார்க்கவேண்டிய கோவில்

இஸ்லாமியர்களுக்காக கோவிலை இடித்த இந்துக்கள் - எங்கே தெரியுமா?இஸ்லாமியர்களுக்காக கோவிலை இடித்த இந்துக்கள் - எங்கே தெரியுமா?

ஒரே பாறையில் செதுக்கப்பட்ட பிரம்மாண்ட கோயில் பற்றி தெரியுமா?ஒரே பாறையில் செதுக்கப்பட்ட பிரம்மாண்ட கோயில் பற்றி தெரியுமா?

Read more about: travel temple
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X