Search
  • Follow NativePlanet
Share
» »அருணாசலப் பிரதேசம் - ஆர்க்கிட் மலர்களின் புன்னகை!!!

அருணாசலப் பிரதேசம் - ஆர்க்கிட் மலர்களின் புன்னகை!!!

By

வடகிழக்கிந்தியாவின் எல்லைப்பகுதியில் அமைந்திருக்கும் அருணாசலப் பிரதேசம் புவியியல் அமைப்பு மிக விசேஷமான ஒன்று. இம்மாநிலத்தின் பெரும்பாலான பகுதிகள் இமாலயத்தின் மலைப்பகுதிகளால் சூழப்பட்டு, ஐந்து ஆற்றுப்பள்ளத்தாக்கு பகுதிகளாக பிரிக்கப்பட்டிருக்கிறது.

மேலும் ‘ஆர்க்கிட் மலர்களின் சொர்க்கம்' என்றழைக்கப்படும் அருணாச்சல் பிரதேசத்தில் 500 வகைகளுக்கும் மேற்பட்ட ஆர்க்கிட் மலர்த்தாவரங்கள் காணப்படுகின்றன.

இந்தியாவில் காணப்படும் ஆர்க்கிட் வகைகளில் பாதிக்கும் மேற்பட்டவை இம்மாநிலத்தில்தான் அமைந்துள்ளன.

அருணாசலப் பிரதேசம் ஹோட்டல் டீல்கள்

சுற்றுலாத் தலங்கள்

சுற்றுலாத் தலங்கள்

மாநிலத்தலைநகரான இட்டாநகரில் காட்டுயிர் சரணாலயம் மற்றும் இட்டாநகர் கோட்டை ஆகியவை அமைந்துள்ளன. தவாங், அலோங், ஜிரோ, பொம்டிலா, பசிகாட் ஆகிய நகரங்களும் அருணாசலப் பிரதேசத்தின் முக்கிய சுற்றுலாத்தலங்களாக விளங்குகின்றன.

அருணாசலப் பிரதேசம் சுற்றுலாத் தலங்கள்

படம் : Prashant Ram

நம்டஃபா தேசியப் பூங்கா

நம்டஃபா தேசியப் பூங்கா

அருணாச்சலப் பிரதேசத்தில் உள்ள புகழ் பெற்ற முக்கிய சுற்றுலாத் தலங்களில் ஒன்றாக விளங்குகிறது நம்டஃபா தேசியப் பூங்கா. மிதூன் என்றழைக்கப்படும் காட்டெருமைகள், யானைகள், மான்கள், இமயமலை கருங்கரடிகள், டகின் எனப்படும் ஆடுகள், பட்கோய் மலைத்தொடரை சேர்ந்த காட்டு ஆடுகள், மஸ்க் மான்கள், தேவாங்குகள், கரடிப் பூனைகள் மற்றும் செந்நிற பாண்டாக்கள் போன்ற விலங்குகளை பயணிகள் கண்டு களிக்கலாம்.

படம் : Prashanthns

திஹிங் ரிவர் கேம்ப்

திஹிங் ரிவர் கேம்ப்

நம்டஃபா தேசியப் பூங்காவுக்கு அருகில் திஹிங் ஆற்றங்கரையில் இந்த திஹிங் ரிவர் கேம்ப் அமைந்துள்ளது.

மேலும் விவரங்களுக்கு

படம் : gkrishna63

திஹிங் நதி

திஹிங் நதி

நம்டஃபா தேசியப் பூங்காவுக்கு அருகில் பாயும் திஹிங் நதி.

படம் : Travelling Slacker

செலா பாஸ்

செலா பாஸ்

குளிர்காலத்தில் இப்பகுதியிலுள்ள மலைகள் பனியால் மூடப்பட்டு வெள்ளிமலைகள் போன்று ஒளிர்கின்றன. 101 ஏரிகள் இந்த செலா பாஸ் மலைப்பாதையை சுற்றிலும் அமைந்திருப்பதாக சொல்லப்படுகிறது.

படம் : Prashant Ram

செலா ஏரி

செலா ஏரி

பனிக்காலத்தில் உறைந்துபோய் கிடக்கும் செலா ஏரியில் தில்லாக நிற்கும் பயணி.

படம் : Prashant Ram

நூராரங்

நூராரங்

தவாங் மாவட்டத்தில் தவாங் மற்றும் பொம்டிலா நகரங்களுக்கு இடையே உள்ள ஜாங் நகரத்திலிருந்து 2 கி.மீ தூரத்தில் நூராரங் அருவி அமைந்துள்ளது. செலா பாஸ் பாதையின் வடபுறச்சரிவிலிருந்து ஓடி வரும் நுராரங்க் ஆறு நூராரங் அருவியாக இவ்விடத்தில் விழுகிறது.

படம் : Joshua Singh

கேன் பாலம்

கேன் பாலம்

திபாங் பள்ளத்தாக்கில் ஓடும் ட்ரை நதிக்கு குறுக்கே கேன் பாலம் எனப்படும் இந்த கயிற்றுப் பாலம் அமைக்கப்பட்டுள்ளது.

படம் : goldentakin

தவாங் மடாலயம்

தவாங் மடாலயம்

அருணாசலப்பிரதேச மாநிலத்தின் தவாங் மாவட்டத்தில் பொம்டிலா எனும் இடத்திலிருந்து 180 கி.மீ தூரத்தில் தவாங் மடாலயம் அமைந்துள்ளது. இந்த தவாங் மடாலயத்தின் பெயரால்தான் ஒட்டுமொத்த தவாங் மலைநகரமும் அழைக்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. கி.பி (1680-1681)-ல் நிறுவப்பட்ட இந்த மிகப்பெரிய மடாலயம் ஆசியாவிலேயே மிகப்பெரியது எனும் பெருமையை கொண்டுள்ளது.

படம் : Sandrog

இட்டாநகர் காட்டுயிர் சரணாலயம்

இட்டாநகர் காட்டுயிர் சரணாலயம்

அருணாசலப் பிரதேசம் மாநிலத்திலுள்ள எட்டு சரணாலயங்களில் இந்த இட்டாநகர் காட்டுயிர் சரணாலயமும் ஒன்றாகும். பபும்பரே மாவட்டத்தில் உள்ள இது 140.30 ச.கி.மீ பரப்பளவில் பரந்து அமைந்துள்ளது.

படம்

அலாங்

அலாங்

அருணாச்சலப் பிரதேசம் மேற்கு ஷியாங் மாவட்டத்தில் மலைகளுக்கு மத்தியில் பல்வேறு சிறிய கிராமங்களை உள்ளடக்கிய ஒரு அழகிய நகரம் அலாங் ஆகும்.

படம் : rajkumar1220

பாட்டும் பாலம்

பாட்டும் பாலம்

பாட்டும் பாலம் யொமொகோ நதியின் குறுக்கே கட்டப்பட்டுள்ள வாகன போக்குவரத்துக்குரிய ஒரு கயிற்றுப் பாலம் ஆகும். இந்தப் பாலத்தில் இருந்து அலாங் நகரதின் அற்புதமான காட்சியைப் பார்க்க முடிவதால் இது சுற்றுலா பயணிகள் மத்தியில் மிகப் பிரபலமாக உள்ளது. இரவின் மடியில் விளக்குகள் வெளிச்சத்தில் இந்தப் பாலம் ஜொலிப்பது ஒரு கண்கொள்ளாக் காட்சியாகும். பாலத்தின் பிண்ணணில் பனி மூடப்பட்டிருக்கும் மலைகளின் காட்சியானது கண்களுக்கு ஒரு இனிமையான காட்சியாக உள்ளது.

வெந்நீர் ஊற்று, தேஸு

வெந்நீர் ஊற்று, தேஸு

தேஸு-விற்கு அருகில் உள்ள வாலோங்கில் அமைந்துள்ள சிறப்பான வெந்நீர் ஊற்றுகளில் தலையை நனைப்பதற்காகவே எண்ணற்ற சுற்றுலாப் பயணிகள் இங்கு வருவார்கள். இது வாலோங்கில் இருந்து 5 கிமீ தொலைவில் உள்ளது.

பக்கே புலிகள் சரணாலயம்

பக்கே புலிகள் சரணாலயம்

கிழக்கு கமெங் மாநகராட்சியில் அமைந்துள்ள பக்கே புலிகள் சரணாலயம் 862 சதுர கி.மீ. பரப்பளவில் அமைந்துள்ளது. புலிகளைத் தவிர காட்டுப் பூனைகள், நரிகள், காட்டெருமைகள், பறக்கும் அணில்கள், சிறுத்தைகள், காட்டு நாய்கள், மான்கள், யானைகள், குரைக்கும் மான்கள், காட்டுப்பன்றிகள் உள்ளிட்ட விலங்குகளை பயணிகள் இங்கு பார்த்து ரசிக்கலாம்.

படம் : Nandini Velho and Anjora Noronha

ஜிரோ

ஜிரோ

ஜிரோ நகரம் நெற்பயிர்களை கொண்ட நிலங்கள் மற்றும் பைன் மரங்களால் சூழ்ந்துள்ளது. பசுமையான டால்லி பள்ளத்தாக்கு, ஜிரோ புடு என்ற சிறு குன்று, டரின் மீன் பண்ணை, கார்டோவில் உள்ள உயரமான சிவலிங்கம் ஆகியவை ஜிரோவில் கண்டிப்பாக பார்க்க வேண்டிய சுற்றுலாத் தலங்களாகும்.

படம் : rajkumar1220

25 அடி உயர சிவலிங்கம்

25 அடி உயர சிவலிங்கம்

கார்டோ காட்டில் உள்ள ஹபோலி நகரத்திலிருந்து 4 கி.மீ. தொலைவில், சிதேஷ்வர்நாத் கோயிலிலுள்ள 25 அடி உயர சிவலிங்கம் ஜிரோ நகரின் மிகப் பிரபலமான சுற்றுலாத் தலமாகும்.

படம் : rajkumar1220

தேவ்பானி

தேவ்பானி

ரோயிங் பகுதியில் பாயும் தேவ்பானி ஆற்றுக்கு குறுக்கே கட்டப்பட்டுள்ள மூங்கில் பாலத்தை கடக்கும் பயணிகள் வாகனம்.

படம் : gkrishna63

திபாங் பள்ளத்தாக்கு

திபாங் பள்ளத்தாக்கு

திபாங் மாவட்டத்தில் உள்ள திபாங் பள்ளத்தாக்கு.

படம் : gkrishna63

சூரிய அஸ்த்தமனம்

சூரிய அஸ்த்தமனம்

திபாங் பள்ளத்தாக்கில் இருந்துகொண்டு சூரிய அஸ்த்தமனத்தை ரசிக்கும் அனுபவம் அற்புதமானது.

படம் : gkrishna63

கர்தில்லி கிராமம்

கர்தில்லி கிராமம்

திபாங் பள்ளத்தாக்கு பகுதியில் உள்ள கர்தில்லி கிராமமும், அந்தப் பகுதியில் பாரம்பரிய முறைப்படி கட்டப்பட்டிருக்கும் மரக்குடிலும்.

படம் : goldentakin

எமுளி கிராமம்

எமுளி கிராமம்

திபாங் மாவட்டத்தில் அமைந்துள்ள எமுளி கிராமம்.

படம் : goldentakin

எங்கு தங்கலாம்?

எங்கு தங்கலாம்?

அருணாசலப் பிரதேசம் ஹோட்டல் டீல்கள்

படம் : rajkumar1220

    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X