Search
  • Follow NativePlanet
Share
» »ஊட்டியில் இருக்கும் இந்தியாவின் மிக அழகான ஏரி எது தெரியுமா?

ஊட்டியில் இருக்கும் இந்தியாவின் மிக அழகான ஏரி எது தெரியுமா?

By Naveen

என்னதான் பெரிய பெரிய ஷாப்பிங் மால்களும், மல்டிபிளக்ஸ் தியேட்டர்களும், தீம் பார்க்குகளும் வந்தாலும் இயற்க்கை நம் உள்ளத்தில் வரவைக்கும் மகிழ்ச்சிக்கு ஈடுஇணையே கிடையாது. தூய்மையான காற்றை சுவாசித்தபடியே, பசுமை நிறைந்த இயற்கை அன்னையின் அரவணைப்பின் சுகத்தை அனுபவிக்க அவ்வப்போது பயணங்கள் மேற்கொள்ள வேண்டியது அவசியம்.

எங்கே செல்லலாம்?. ஆங்கிலேயர்கள் காலத்தில் துவங்கி இன்று பாதிக்குமேல் கான்கிரீட் காடுகளாக மாறிவிட்ட ஊட்டியில் இன்னமும் எஞ்சியிருக்கும் சில உண்மையிலேயே அழகான இடங்களில் ஒன்று தான் அவலாஞ்சி ஏரியாகும். இந்தியாவிலேயே மிகவும் அழகான இடம் என்ற சிறப்புக்குரிய எல்லா அம்சங்களும் கொண்ட இந்த ஏரிக்கு ஒரு பயணம் போகலாம் வாருங்கள்.

 அவலாஞ்சி ஏரி !!

அவலாஞ்சி ஏரி !!

மலைகளின் ராணியான ஊட்டியில் இருந்து 28 கி.மீ தொலைவில் அமைந்திருக்கிறது இயற்கை பேரழகின் மொத்த உருவமான அவலாஞ்சி ஏரி.

இந்த இடத்திற்கு சுற்றுலா செல்பவர்கள் ஊட்டியின் மற்ற இடங்களை காட்டிலும் ஏன் இது சிறந்த சுற்றுலாத்தலமாக சொல்லப்படுகிறது என்பதை இதை நோக்கிய பயணத்தின் போது ஏற்படும் சீதோஷன நிலை மாற்றத்திலேயே உணரலாம்.

Sandeep Somasekharan

 அவலாஞ்சி ஏரி !!

அவலாஞ்சி ஏரி !!

குந்தா நீர்மின்சாரத்திட்டதிற்காக கட்டப்பட்ட அணையின் நீர்ப்பிடிப்பு பகுதியாக அவலாஞ்சி ஏரி இருக்கிறது. இதைச்சுற்றி தேயிலைத்தோட்டங்கள் மற்றும் மரங்கள் நிறைந்த சிறிய வனப்பகுதி மற்றும் புல்வெளிகள் இருக்கின்றன.

stonethestone

 அவலாஞ்சி ஏரி !!

அவலாஞ்சி ஏரி !!

அவலாஞ்சி என்றால் ஆங்கிலத்தில் திடீரென்று ஏற்படும் மலைச்சரிவு அல்லது பனிச்சரிவு என்று பொருளாகும். 1809ஆம் ஆண்டு இங்கு மிகப்பெரிய மலைச்சரிவு ஏற்பட்டதாகவும் அதன் பின் அவலாஞ்சி என்ற பெயரே இவ்விடத்திற்கு நிலைத்து விட்டதாக சொல்லப்படுகிறது.

Prabhu B Doss

 அவலாஞ்சி ஏரி !!

அவலாஞ்சி ஏரி !!

இங்குள்ள புல்வெளிகளில் ஓடித்திரிந்து விளையாடும் போது தூய்மையான காற்றை சுவாசிக்கும்போது அது தரும் உற்சாகத்தை உணரும்போது தான் எவ்வளவு நச்சு கலந்த புகையை நாம் தினமும் சுவாசிக்கின்றோம் என்பதை உணர முடியும்.

Indianature SG

 அவலாஞ்சி ஏரி !!

அவலாஞ்சி ஏரி !!

அவலாஞ்சி ஏரியில் சுற்றிப்பார்ப்பதையும், புகைப்படம் எடுப்பதையும் தாண்டி ட்ரௌட் பிஷ்ஷிங் என்ற ஆங்கிலேயர்களால் நியூசிலாந்தில் இருந்து கொண்டுவரப்பட்ட ஒரு அரியவகை மீனை தூண்டில் கொண்டு பிடிக்கலாம்.

இதற்காக உபகரணங்கள் ஏரிக்கு அருகிலேயே வாடகைக்கு கிடைக்கின்றன.

Indianature SG

 அவலாஞ்சி ஏரி !!

அவலாஞ்சி ஏரி !!

இந்த ஏரிக்கு அருகிலேயே டென்ட் அமைத்து தங்குவதற்கென சில இடங்கள் இருக்கின்றன. அவற்றில் டென்ட் அமைத்து தங்கலாம். தூண்டில் கொண்டு பிடித்த டிரௌட் மீன்களை சமைத்து உண்டபடியே இரவு தீமூட்டி அதைச்சுற்றி அமர்ந்து பழங்கதைகள் பேசலாம்.

Premnath Thirumalaisamy

 அவலாஞ்சி ஏரி !!

அவலாஞ்சி ஏரி !!

அவலாஞ்சி ஏரியில் ராப்டிங் எனப்படும் மிதவைப்படகில் பயணம் செய்யலாம், ஏரியை சுற்றியுள்ள அடர்ந்த மரங்கள் நிறைந்த காடுகளுள் ட்ரெக்கிங் பயணம் மேற்கொள்வது போன்றவற்றை செய்யலாம்.

Indianature SG

 அவலாஞ்சி ஏரி !!

அவலாஞ்சி ஏரி !!

வார விடுமுறையின் போது நண்பர்களுடனோ, குடும்பத்தினருடனோ வர அற்புதமான இடமாகும் இந்தஅவலாஞ்சி ஏரி.

இங்கு வரும்போது இயற்கைக்கு கேடுவிளைவிக்கும் பிளாஸ்டிக் பொருட்களை தவிர்ப்பது அவசியம்.

Premnath Thirumalaisamy

 அவலாஞ்சி ஏரி !!

அவலாஞ்சி ஏரி !!

ஊட்டியில் இருக்கும் ஹோட்டல்கள் பற்றிய விவரங்களை தமிழ் பயண வழிகாட்டியில் அறிந்துகொள்ளுங்கள்.

Indianature SG

 அவலாஞ்சி ஏரி !!

அவலாஞ்சி ஏரி !!

அவலாஞ்சி ஏரிக்கு செல்லும் வழி...

Indianature SG

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X