Search
  • Follow NativePlanet
Share
» »வெறும் வளையலுக்காக ஈடு கொடுக்கப்பட்ட கோட்டையை தெரியுமா?

வெறும் வளையலுக்காக ஈடு கொடுக்கப்பட்ட கோட்டையை தெரியுமா?

வெறும் வளையலுக்காக ஈடு கொடுக்கப்பட்ட கோட்டையை தெரியுமா?

By Bala Latha

தொடக்கக் காலத்தில் இந்த நகரம் பகடிகி என்று அறியப்பட்டது. இந்த நகரத்தை பீஜப்பூர் அரசர்களில் ஒருவர் தனது மகளுக்கு "வளையல் காசு" க்காக பரிசாக கொடுத்ததாக தெரிவிக்கப்படுகிறது, அதாவது அந்தக் காலத்தில் மகள்களுக்கு வளையல்கள் மற்றும் இதர நகைகளை வாங்கிக் கொள்வதற்கு நகரங்களைச் சீதனமாகக் கொடுப்பது வழக்கம்.

பார் போற்றும் பர்வதமலை பரவசமூட்டும் அதிசயங்கள்.. தெரியுமா?பார் போற்றும் பர்வதமலை பரவசமூட்டும் அதிசயங்கள்.. தெரியுமா?

பாகல்கோட்டில் சுற்றிப்பார்ப்பதற்கு வெகுவான ஈர்ப்பு மையங்கள் உள்ளன. அருகாமையில் உள்ள சுற்றுலா ஈர்ப்பு மையங்களில் சிலவான பட்டடக்கல், பாதாமி குகைகள், அய்ஹோலி, துர்கா கோவில், கலகனாத் கோவில் மற்றும் காசி விஷ்வேஸ்வரா ஆகிய கோயில்கள் அதன் சிக்கலான கட்டடக்கலை மற்றும் சிற்ப வேலைப்பாடுகளால் அங்கே வருகை தந்தவர்களின் பயணத்தை மிகவும் மதிப்புள்ளதாக்குகிறது.

பாகுபலி 2 படம் உருவான இடங்கள் எவை தெரியுமா?பாகுபலி 2 படம் உருவான இடங்கள் எவை தெரியுமா?

ஹோலி ஹப்பா இந்தப் பிரதேசத்தின் முதன்மை பண்டிகையாகும். கொல்கத்தாவிற்குப் பிறகு பாகல்கோட் ரங் பஞ்சமி பண்டிகையைக் கொண்டாடும் விதத்தினால் புகழ்பெற்று விளங்குகிறது.

பாகல்கோட் இதர நகரங்களோடு சாலை, ரயில் மற்றும் வான்வழிப் போக்குவரத்துகளில் நன்கு தொடர்பு கொண்டுள்ளது.
பகல்கோட்டின் சுற்றுலா ஈர்ப்பு மையங்கள் - பகல்கோட்டில் வருகைத் தரவேண்டிய சுற்றுலாத் தலங்கள்.

ஸ்ரீ பத்மநாப சுவாமி கோயிலின் கருவறை மர்மங்கள் பற்றி தெரியுமா?ஸ்ரீ பத்மநாப சுவாமி கோயிலின் கருவறை மர்மங்கள் பற்றி தெரியுமா?

பாகல்கோட்டில் சுற்றிப்பார்க்க நிறைய சுற்றுலா ஈர்ப்பு மையங்கள் உள்ளன. இங்கே நேடிவ் பிளானட் உங்களுக்கு பாகல்கோட்டில் வருகைத்தர வேண்டிய சுற்றுலாத் தலங்களின் பட்டியலை வழங்குகிறது. மேலும் உங்களுக்கு பாகல்கோட்டில் பயணம் செய்ய ஒவ்வொரு இடத்தைப் பற்றியும் விரிவான தகவல்களை அளிக்கிறது.

குடல சங்கமா - பாகல்கோட்
கண்டிப்பாக வருகைத்தாருங்கள்.

உலகுக்கே சவால் விடும் தமிழகத்தின் மர்மங்களைப் பற்றி தெரியுமா?உலகுக்கே சவால் விடும் தமிழகத்தின் மர்மங்களைப் பற்றி தெரியுமா?

பசவண்ணா என்பவர் 12 - ஆம் நூற்றாண்டின் கர்நாடகாவின் மன்னர் பிஜாலா 1 அவர்கள் ஆட்சியில் அளிக்கப்பட்ட புலவர் ஆதரவின் கீழ் இருந்த கன்னடப் புலவர், சமூக சீர்திருத்தவாதி மற்றும் துறவியாவார். பசவண்ணா கடவுள் சிவனின் தீவிர பக்தர் ஆவார். அவரது புரட்சிகரமான இயக்கம் தென்னிந்தியாவில் வீரசைவம் சங்கத்திற்கு (லிங்காயத் சமூகம்) எழுச்சியைத் தந்தது. கூடல சங்கமா அல்லது குடல சங்கமா என்கிற இடத்தில் பசவண்ணா தனது குழந்தைப் பருவத்தைக் கழித்தார் மற்றும் அங்கேயே இறந்தார். எனவே லிங்காயத்களுக்கும் வீரசைவத்தைப் பின்பற்றுபவர்களுக்கும் அவ்விடம் மிகவும் முக்கியமான புனித யாத்திரைத் தலங்களுள் ஒன்றாகும்.

உருவப்பட ஆதாரம்: மஞ்சுநாத் நிக்கித்

மத நல்லிணக்கம் மற்றும் சமத்துவம்

மத நல்லிணக்கம் மற்றும் சமத்துவம்

கூடலசங்கம் சங்கமேஸ்வரா கோயில் (சங்கமநாதா கோயில்) மற்றும் ஐக்ய மண்டபா (பசவண்ணாவின் சமாதி அல்லது கல்லறை) ஆகியவற்றிற்கு புகழ் வாய்ந்ததாக அறியப்படுகிறது.

சித்ர துர்காவில் நீங்கள் தவறவிடக்கூடாத 5 அதி அற்புத இடங்கள்!!

பசவண்ணாவின் இலக்கியங்கள் மற்றும் பழமையான கர்நாடகாவின் தொல்பொருட்களின் தொகுப்பைக் கொண்ட ஒரு அருங்காட்சியகமும் கூட அங்குள்ளது.

குடலா சங்கமா பாகல்கோட் மாவட்டத்தில் உள்ள கிருஷ்ணா மற்றும் மாலாபிரபா ஆகிய நதிக்கரைகளிலுள்ள ஒரு சிறிய கிராமமாகும். கர்நாடகாவிலுள்ள மிகப் பெரிய பக்தி இயக்கத்தின் ஒரு பகுதியாக இந்த சுவாரஸ்யமான இடங்களில் ஒன்று திகழ்கிறது. பாகல்கோட் ஹோலி ஹப்பாவிற்கு புகழ் பெற்றதாகும். இந்தப் பண்டிகை பண்டைக் காலத்திலிருந்து அதன் ஆட்சியாளர்களால் அவர்களது மக்களிடையே மத நல்லிணக்கம் மற்றும் சமத்துவம் ஆகியவற்றை மேம்படுத்த மிகப்பெரிய அளவில் கொண்டாடப்பட்டு வந்தது.

முன்பெல்லாம் இது 6 நாள் கொண்டாட்டமாக கொண்டாடப்படும் வழக்கமாக இருந்தது. ஆனால் இப்போது பாதுகாப்பு காரணங்களுக்காக 4 நாட்கள் கொண்டாடப்படுகிறது. இங்கு மிகப்பெரிய அளவில் கொண்டாடப்படும் ஹோலி கொண்டாட்டங்களை வங்காளத்தின் துர்கா பூஜை அல்லது கேரளத்தின் ஓணம் பண்டிகையுடன் ஒப்பிடலாம். இந்தப் பண்டிகையும் அனைத்து மதத்தினராலும் சமமான உற்சாகத்துடன் கொண்டாடப்படுகிறது.


Pc: Prashanthns

தொடக்கப்புள்ளி

தொடக்கப்புள்ளி

தொடக்கப்புள்ளி: பெங்களூரு
பயண இலக்கு: பகல்கோட் மாவட்டம்
பயண நாட்களின் எண்ணிக்கை: 3 நாட்கள்

வருகை தர சிறந்த காலம்: அக்டோபர் முதல் பிப்ரவரி வரை, ஹோலிப் பண்டிகைக்கு மார்ச் மாதம்.

உங்களுக்குத் தேவையான பொருட்கள்: ஒரு நல்ல கேமிரா, மொபைல் போன் மற்றும் கேமிரா மற்றும் மொபைல் போன்களின் சார்ஜர்கள், பவர் பேங்குகள் மற்றும் டார்ச் லைட்டுகள். ஒரு வேளை நீங்கள் மாலை நேரங்களில் இந்தப் பயண இலக்குகளைச் சுற்றிப்பார்க்க தங்கவேண்டி இருந்தால், உங்கள் கைவசம் சிறிது சில்லறைப் பணத்தை வைத்திருப்பது சிறிய உணவகங்கள் மற்றும் சுங்கச்சாவடிகளில் பணம் செலுத்த உதவியாக இருக்கும். மேலும் ஹோலிக் கொண்டாட்டங்களில் உங்களை ஈடுபடுத்திக் கொண்ட பிறகு உங்கள் ஆடைகளை அங்கேயே விட்டுவிட்டு வேறு ஆடைகள் அணிவதில் உங்களுக்கு மறுப்பேதும் இல்லையென்றால் சில துணிமணிகளையும் உங்களுடன் எடுத்துச் செல்லுங்கள்.

பெங்களூருவிலிருந்து பாகல்கோட்டை எப்படி அடையலாம்?

பெங்களூருவிலிருந்து பாகல்கோட்டை எப்படி அடையலாம்?


அருகாமையிலுள்ள சில மாநகரங்களுடன் பாகல்கோட் சாலை வழியாக இணைக்கப்பட்டுள்ளது. தேசிய நெடுஞ்சாலை 161 வழியாக செல்லும் போது பகல்கோட்டை ஹூப்ளி மற்றும் பிதார் நகரங்களுடன் இணைக்கிறது. தேசிய நெடுஞ்சாலை வழியில் இணையும் இதர சில இடங்கள் பிஜாப்பூர், ஜெவார்கி, குல்பர்கா மற்றும் ஹூம்னாபாத் ஆகியன ஆகும்.

வான் வழியாக: பாகல்கோட்டிற்கு வழக்கமான விமானங்கள் இல்லை. மிக அருகில் உள்ள விமான நீலையம் ஹூப்ளி விமான நிலையமாகும். அது தோராயமாக 109 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ளது.

ரயில் வழியாக: பாகல்கோட்டிற்கு யஷ்வந்த்பூர் மற்றும் பெங்களூருவிலிருந்து ஐந்து நீண்ட தூரப்பயண ரயில்கள் உள்ளன. தற்போதைய ரயில் நேரங்களை அறிய ரயில்வே இணையதளத்தை சோதனையிடவும்.

சாலை வழியாக: பெங்களூருவிலிருந்து பகல்கோட்டிற்கு நிறைய அரசாங்கம் மற்றும் தனியார் பேருந்துகள் இயங்குகின்றன. மாற்று வழியாக நீங்கள் ஹூப்ளிக்கு ஒரு பேருந்தை எடுத்துக் கொண்டு அங்கிருந்து பகல்கோட்டிற்கு மற்றொரு பேருந்தில் செல்லலாம்.
எது எப்படி இருப்பினும் ஒரு சாலை வழிப் பயணத்தில் இடையிடையே உள்ள பயண இலக்குகளில் நிறுத்திச் சுற்றிப்பார்ப்பதைச் சாத்தியமாக்க உங்களது தனிப்பட்ட வாகனத்தில் செல்வது எப்போதும் சிறந்த தேர்வாகும்.

பத்திரிகையாளர் மரியாதை: தாமஸ் பெல்சிக்

பாதைகள்

பாதைகள்

பாதை வழி 1: பெங்களூரு - டும்கூர் - சிரா - ஹிரியூர் - ஹோஸ்பேட் - இல்கல் - பகல்கோட். தேசிய நெடுஞ்சாலை 48 மற்றும் தேசிய நெடுஞ்சாலை 50 வழியாக சுமார் 476 கிலோ மீட்டரை கடக்க சுமார் 7.50 மணி நேரத்தை கடக்க எடுத்துக் கொள்கிறது.

பாதை வழி 2: பெங்களூரு - டும்கூர் - ஹிரியூர் - தேவங்கிரி - ராணி பென்னூரு - ஹவேரி - ஹூப்ளி - பாகல்கோட் தேசிய நெடுஞ்சாலை 48 வழியாக 529 கிலோ மீட்டரை கடக்க சுமார் 8.7 மணி நேரம் எடுத்துக் கொள்கிறது.

பாதை வழி 3: பெங்களூரு - பெனுகொண்டா - தர்மாவரம் - அனந்தபூர் - பள்ளாரி - ஹோஸ்பேட் - இல்கல் - பகல்கோட் பெங்களூர் - ஹைதராபாத் நெடுஞ்சாலை - ஸ்ரீநகர் / கன்னியாகுமாரி நெடுஞ்சாலை வழியாக 529 கிலோ மீட்டர் தூரத்தைக் கடக்க சுமார் 9 மணி நேரத்தை எடுத்துக் கொள்கிறது.

இதர இரண்டு வழிகளை விட 53 கிலோ மீட்டர் வரை குறைவாக இருக்கும் பாதை வழி 1 ஐ தேர்ந்தெடுங்கள். அது ஒரு வார இறுதி பயணம் என்பதால் செலவழிக்க நிறைய நேரம் இருக்குமென்பதால், போகும் வழியில் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இதரப் பயண இலக்குகளையும் சுற்றிப் பார்க்க நீங்கள் இடையிடையே நிறுத்தலாம்.

பத்திரிகையாளர் மரியாதை: மஞ்சுநாத், தொட்டமணி, கஜேந்திரகத்.

நாள் 1:

நாள் 1:

உங்கள் பயணத்தை அதிகாலையிலேயே சில லேசான சிற்றுண்டிகளுடன் தொடங்குங்கள். எனவே ஒரு மணி நேரத்திற்குள் நீங்கள் தும்கூரை அடைந்து காலை உணவை எடுத்துக் கொள்ளலாம். அத்துடன் காலை நேர போக்குவரத்து நெரிசலையும் தவிர்க்கலாம். மனதாரக் காலை உணவை உண்ட பிறகு உங்கள் பயணத்தை மீண்டும் தொடர்ந்து 4.5 முதல் 5 மணி நேரம் வரை பயணித்து ஹோஸ்பேட்டை அடைந்து மதிய நேர உணவை நேரத்தோடு எடுத்துக் கொள்ளலாம். பிறகு உங்களை தளர்த்திக் கொண்டு உங்கள் பயணத்தை மீண்டும் தொடர்ந்து சரியாக 2.5 மணி நேரங்களில் நீங்கள் பகல்கோட்டை அடையலாம்.

பாகல்கோட்டை அடைந்து அங்கு அறை எடுத்துக் கொண்ட பிறகு அப்போதே மாலை வெகுநேரம் தாமதமாகியிருக்கும். எனவே அங்கிருந்து 45 நிமிட வாகன ஓட்டத்தில் செல்லக்கூடிய அருகாமையில் உள்ள பில்கி நகரத்திற்குப் புறப்படுங்கள். நீங்கள் தங்கியிருக்கும் அறைக்கு திரும்பி வந்து இரவு உணவையும் எடுத்துக் கொண்டு தூங்குவதற்கு முன்பாக அரித்தினாபாவி - அழகிய கல் கிணறு, சித்திஸ்வரா கோயில் மற்றும் ஹஜராத் ஹசன் தர்கா ஆகிய இடங்களை சுற்றிப்பார்த்து வாருங்கள்.
பத்திரிகையாளர் மரியாதை: Wikimedia.

நாள் 2:

நாள் 2:

உங்கள் நாளை விரைவாகத் தொடங்கி உள்ளூர் மக்களுடன் ஹோலி கொண்டாட்டங்களில் இணைந்துக் கொள்ளுங்கள். வண்ணங்களைக் கழுவி கொண்ட பிறகு மற்றும் உணர்வுகளைத் தூண்டும் மிகச்சிறந்த காலை உணவை எடுத்துக் கொண்ட பிறகு பாகல்கோட் நகரத்திலிருந்து சுமார் ஒரு மணி நேரப் பயணத்தில் செல்லக்கூடிய அய்ஹோலிக்கு புறப்படுங்கள். மாலாப்பிரபா நதிக்கரையில் அமைந்துள்ள அய்ஹோலி சாளுக்கிய வம்சத்தின் கிட்டத்தட்ட 125 கோயில்களின் தாயகமாகும்.

இங்கிருந்து யுயெனஸ்கோவின் உலக பாரம்பரிய அமைவிடமான பட்டடக்கல்லுக்குப் புறப்படுங்கள். பட்டடக்கல் கிபி 8 ஆம் நூற்றாண்டின் நினைவுச் சின்னங்களுக்குப் பெயர் பெற்றதாகும் மற்றும் ராணி லோக மஹா தேவியால் கட்டப்பட்ட விருபாக்க்ஷா கோவிலின் தாயகமாகும். அந்தக் கோயில் தென்னிந்தியப் பாணியில் கட்டப்பட்ட மிக அழகான கோயில்களில் ஒன்றாகும். மற்றும் காஞ்சியின் கைலாசநாதா கோயிலின் உருவப் பிரதியாகும்.


பட்டடக்கல்லில் மதிய உணவை முடித்துக் கொண்டபிறகு சுமார் அரை மணிநேரம் கீழே இறங்கி பயணம் செய்தால் புகழ்பெற்ற பாதாமியை அடையலாம். பாதாமி பாறை வெட்டு குகைக் கோயில்களுக்கு பிரசித்திப் பெற்றதாகும். அங்குள்ள நான்கு குகைக் கோயில்கள் அப்போது இருந்த ஆட்சியாளர்களின் மதசார்பற்ற இயல்பிற்கு அடையாளமாக நிற்கிறது. குகை 1 சிவனுக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. குகை 2 மற்றும் 3 விஷ்ணுவுக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. குகை 4 ஜைன தீர்த்தங்கரர்களுக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. குகைகளை எல்லாம் சுற்றிப்பார்த்தப் பிறகு பகல்கோட்டிற்கு திரும்பி பயணம் செய்து இரவு உணவை முடித்துக் கொண்ட பிறகு அதை ஒரு முழுமையடைந்த நாள் என்று அழையுங்கள்.

பத்திரிகையாளர் மரியாதை: தீபக் படீல்

நாள் 3:

நாள் 3:

உங்கள் இறுதி நாள் பயணத்தை ஹோலிக் கொண்டாட்டங்கள், இனிப்புகள் மற்றும் காலை சிற்றுண்டியுடன் தொடங்குங்கள். அறையை காலி செய்து விட்டு நகரத்தை விட்டு புறப்படும் முன் பகல்கோட் நகரத்தின் விழாக் கொண்டட்டங்களில் மூழ்கித் திளையுங்கள். பின்பு நேராக குடல சங்கமாவிற்கு புறப்படுங்கள். இங்கே புகழ்பெற்ற நதிகளான கிருஷ்ணா மற்றும் கட்டப்பிரபா நதிகள் சங்கமிப்பதையும் மற்றும் ஆந்திரப் பிரதேசத்தின் ஸ்ரீ ஷைலத்தை நோக்கிப் பாய்வதையும் கண்டு மகிழுங்கள்.

இங்கே சிறந்த தத்தவ ஞானி மற்றும் சமூக சீர்திருத்தவாதியான பசவண்ணாவின் ஐக்ய மண்டபத்தையும் அங்கே தானாகப் பிறந்ததாக நம்பப்படும் சுயம்பு லிங்கத்தையும் தரிசனம் செய்யுங்கள். பிறகு அங்கிருந்து ஒருவகை சிவப்பு கிரானைட் கல்லுக்கு பிரசித்திப் பெற்ற இல்கல்லுக்கு வாகனத்தை செலுத்துங்கள். ஆனால் இல்கல் கையால் நெய்யப்பட்ட புடவைகளான ‘இல்கல் புடவை'களுக்கு மிகவும் பிரபலமாக அறியப்படுகிறது. நீங்கள் பெங்களூருக்கு திரும்பி வருவதற்கு முன்பு உங்கள் மனம் திருப்தியடையும் அளவிற்கு இந்தப் புடவைகளை வாங்கிச் செல்லுங்கள்.

இந்த வரலாற்று சிறப்புமிக்க மற்றும் விழாக்காலச் சுற்றுலா இல்கல் புடவை எனும் பொக்கிஷத்துடன், உங்களின் ஹோலிக் கொண்டாட்டங்களை மறக்கமுடியாத ஒன்றாக ஆக்கும் என்பது நிச்சயம்!

பத்திரிகையாளர் மரியாதை: Wikipedia.org.

Read more about: travel temple
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X