Search
  • Follow NativePlanet
Share
» »உங்கள் காதலியுடன் நீங்க கண்டிப்பாக போக வேண்டிய இடங்கள்

உங்கள் காதலியுடன் நீங்க கண்டிப்பாக போக வேண்டிய இடங்கள்

கல்யாணத்துக்கு முன்பாக நாம் மிகவும் நேசிக்கும் ஒருவருடன் இரைச்சல் இல்லாத, இயற்கையின் பேரழகு நர்த்தனமாடும் ஓரிடத்திற்கு செல்வது ஒருவர் மீது ஒருவர் வைத்திருக்கும் அன்பை அதிகரிப்பதோடு மட்டும் இல்லாமல் வாழ்கையில் என்றென்றைக்கும் மறக்க முடியாத அற்புதமான ஏற்ப்படுத்திக் கொள்ளவும் சிறந்த வாய்ப்பாக அமையும். அப்படியானதொரு சுற்றுலா போக வேண்டும் என நீங்கள் நீண்ட நாட்களாக நினைத்துக்கொண்டிருந்தால் அதற்கு இதுவே சரியான தருணம்.

நீங்கள் உங்கள் அன்பானவருடன் சுற்றுலா போக சிறந்த இடங்கள் எவைஎவை என்பதை இங்கே தெரிந்து கொள்ளுங்கள்.

hotels.com இல் ஹோட்டல் அறைகள் முன்பதிவு கட்டணங்களில் 50% தள்ளுபடிக்கான கூப்பன் இதோ

ஆலி - உத்தரகண்ட் :

ஆலி - உத்தரகண்ட் :

ஹிமாலய மலையில் இருக்கும் எழில் மிகுந்த இடங்களில் உத்தரகண்ட் மாநிலமும் ஒன்றாகும். இம்மாநிலத்தில் உள்ள அற்புதமான மலைவாசஸ் தளங்களில் ஒன்று தான் ஆலி . சிம்லா, மனாலி, குல்மார்க் போன்ற இடங்களோடு ஒப்பிடும் போது ஆலி இன்னும் பரவலாக அறியப்படாத ஓரிடமாகவே உள்ளது.

Photo:Corby Ziesman

ஆலி - உத்தரகண்ட் :

ஆலி - உத்தரகண்ட் :

கடல் மட்டத்தில் இருந்து 2500 - 3000 அடி உயரத்தில் பத்ரிநாத் கோயிலை நோக்கி செல்லும் வழியில் அமைந்திருக்கும் இந்த ஆலி நகரில் இருந்து ஹிமாலய மலையின் மிக அற்புதமான காட்சிகளை காண முடியும்.

Photo:Ishan Manjrekar

ஆலி - உத்தரகண்ட் :

ஆலி - உத்தரகண்ட் :

இந்த ஆலி நகரின் தனித்துவமான அம்சம் இங்குள்ள பனிச்சறுக்கு விளையாட்டு தான். 'ஸ்கியிங்' எனப்படும் பனிச்சறுக்கு விளையாட்டில் ஈடுபட இந்தியாவில் மிகச்சிறந்த இடமாக இந்த ஆலி குறிப்பிடப்படுகிறது. ஸ்கியிங் தவிர ஆலியில் உலகத்திலேயே மனிதனால் உருவாக்கப்பட்ட மிக உயர்ந்த செயற்கை ஏரியும் இருக்கிறது.

Photo:Shikhar Sethi

ஆலி - உத்தரகண்ட் :

ஆலி - உத்தரகண்ட் :

ஸ்கியிங் தவிர கோடைகாலத்தில் பனிமலைகளில் பசுமை சூழ்ந்திருக்கும் போது ட்ரெக்கிங் எனப்படும் மலையேற்றம் செய்யவும் சிறந்த இடமாக சொல்லப்படுகிறது. இங்கிருக்கும் கேபிள் கார் தான் ஆசியாவிலேயே மிக நீளமானதாகும். 4 கி.மீ நீளமுள்ள காரில் பயணித்து ஆலியின் பேரழகை கண்டு மகிழலாம்.

Photo:Joginder Pathak

ஆலி - உத்தரகண்ட் :

ஆலி - உத்தரகண்ட் :

ஆலியில் அழகியதொரு துலிப் மலர்த்தோட்டம்.

Photo:Vikgup

ஆலி - உத்தரகண்ட் :

ஆலி - உத்தரகண்ட் :

இங்கு பெரும் எண்ணிக்கையில் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளும் வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. பனிச்சறுக்கு அல்லது ட்ரெக்கிங் போன்ற சாகசங்களில் ஈடுபட விரும்புகிறவர்கள் கண்டிப்பாக இந்த இடத்திற்கு ஒருமுறையேனும் வர வேண்டும்.

Photo:Michael Scalet

ஆலி - உத்தரகண்ட் :

ஆலி - உத்தரகண்ட் :

ஆலி பற்றிய மேலதிக தகவல்களை தமிழ் பயண வழிகாட்டியில் தெரிந்து கொள்ளுங்கள்.

Photo:Shikhar Sethi

உதய்பூர் - ராஜஸ்தான் :

உதய்பூர் - ராஜஸ்தான் :

'இந்தியாவின் வெனிஸ்' என்ற புனைப்பெயருடன் விளிக்கப்படும் இந்த உதய்பூர் நகரம் பாலைவன மாநிலமான ராஜஸ்தானில் அமைந்திருக்கிறது. ராஜஸ்தானின் பாரம்பரியம் மிக்க அரண்மனைகளையும், கோட்டைகளையும் இங்கு காண முடிவதோடு மட்டுமில்லாமல் தாங்கும் விடுதிகளாக மாற்றப்பட்டிருக்கும் இவற்றில் 'ராஜா - ராணியாக' தங்கவும் செய்யலாம்.

Photo:Paul Asman and Jill Lenob

உதய்பூர் - ராஜஸ்தான் :

உதய்பூர் - ராஜஸ்தான் :

லேக் பேலஸ் :

உதைபுரில் இருக்கும் மிக மிக அழகான அதே சமயம் கொஞ்சம் காஸ்ட்லியான இடம் 'லேக் பேலஸ்' ஆகும். பிசோலா என்ற செயற்கை ஏரியின் நடுவே 'ஜக் நிவாஸ்' என்ற குட்டித்தீவில் அமைந்திருக்கும் இந்த இடம் 1971 ஆம் ஆண்டில் இருந்து 'தாஜ் ஹோட்டல்ஸ்' குழுமத்தின் தங்கும் விடுதிகளில் ஒன்றாக செயல்பட்டு வருகிறது.

Photo: Flickr

உதய்பூர் - ராஜஸ்தான் :

உதய்பூர் - ராஜஸ்தான் :

உலகில் உள்ள மிகவும் ரோமேண்டிக்கான ஹோட்டல்களில் ஒன்றாக இது தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறது. இதற்கு முக்கிய காரணங்களில் ஒன்று சூரியன் அஸ்தமிக்கும் மாலை நேரத்தில் இந்த லேக் பேலசை சுற்றியிருக்கும் குளம் தங்க நிறத்தில் காட்சியளிக்கிறது. அப்போது உங்களின் காதலியுடனோ மனைவியுடனோ இந்த பேலஸில் இருந்து படகில் ரோமேண்டிக்கான டின்னர் சாப்பிடலாம்.

Photo:Tomasz Wagner

உதய்பூர் - ராஜஸ்தான் :

உதய்பூர் - ராஜஸ்தான் :

இரவில் வண்ணமயமாக ஒளிரும் லேக் பேலஸ்.

Photo:Ankit Agarwal

உதய்பூர் - ராஜஸ்தான் :

உதய்பூர் - ராஜஸ்தான் :

இரவில் வண்ணமயமாக ஒளிரும் லேக் பேலஸ்.

Photo:Benjamin B

உதய்பூர் - ராஜஸ்தான் :

உதய்பூர் - ராஜஸ்தான் :

இதை தவிர செயற்கை நீரூற்றுகள் நிரம்பிய பதெஹ் சாகர் ஏரி, ஷகிளியோன் கி பாரி என்ற தோட்டம், உதய்பூர் மகாராஜாவின் அரண்மனையான சிவ் நிவாஸ் பேலஸ் போன்ற இடங்களும் நாம் கண்டிப்பாக பார்க்க வேண்டியவை ஆகும்.

Photo: Flickr

உதய்பூர் - ராஜஸ்தான் :

உதய்பூர் - ராஜஸ்தான் :

உதய்பூரில் இருக்கும் ஹோட்டல்கள், உதய்பூரை எப்படி அடைவது ? என்பது போன்ற சுற்றுலா செல்வதற்கான அத்தியாவசிய தகவல்களை தமிழ் பயண வழிகாட்டியில் தெரிந்து கொள்ளுங்கள்.

Photo:Tomasz Wagner

ஆலப்புழா - கேரளா :

ஆலப்புழா - கேரளா :

கடவுளின் சொந்த நாடு என்று சொல்லப்படும் கேரளத்தில் இருக்கும் மிக மிக அழகான இடங்களில் 'ஆலப்புழா' முக்கியமானது. காதலியுடனோ, மனைவியுடனோ சில நாட்கள் தனிமையில் கொண்டாட விரும்புகிறவர்களுக்கு ஆலப்புழா சொர்க்கம்.

Photo:Himanshu Sarpotdar

ஆலப்புழா - கேரளா :

ஆலப்புழா - கேரளா :

அலைகள் எழாத உப்பங்கழி நீரோடைகள் சூழ்ந்திருப்பதால் ஆலப்புழாவில் 'படகு வீடுகள்' மிகவும் பிரபலம். கிட்டத்தட்ட ஐந்து நட்சத்திர ஹோட்டலுக்கு நிகரான வசதிகள் செய்யப்பட்டிருக்கும் இந்த படகு வீடுகளில் மிதந்தபடியே ஆலப்புழாவின் பேரழகை ரசிக்கலாம்.

Photo:Sarath Kuchi

ஆலப்புழா - கேரளா :

ஆலப்புழா - கேரளா :

ஆலப்புழாவில் இருக்கும் வேம்பநாடு ஏரி தான் இந்தியாவிலேயே மிகப்பெரியதாகும். இந்த ஏரியின் ஒரு கிளையான புன்னமடா ஏரியில் ஒவ்வொரு வருடமும் ஓணம் பண்டிகையை ஒட்டி பாம்பு படகு போட்டி நடைபெறுகிறது. கேரளத்தில் முக்கியமான கலாச்சார அடையாளங்களில் ஒன்றான இந்த போட்டியை வாழ்கையில் ஒருமுறையேனும் கண்டுகளிக்க வேண்டும்.

Photo:-Reji

ஆலப்புழா - கேரளா :

ஆலப்புழா - கேரளா :

ஆலப்புழாவிற்கு சுற்றுலா சென்று விட்டு இங்கு செல்லாமல் திரும்பி வரக்கூடாது என்று சொல்லக்கூடிய இடமென்றால் அது ஆலப்புழா கடற்கரை தான். அதிகம் மாசுபடாத, இனிமையான, இதமான சூழல் நிலவும் அருமையான கடற்கரையாகும் இது. அதே போல இங்கிருக்கும் அம்பலப்புழா கிருஷ்ணன் கோயில், கிரிஷ்ணபுரம் அரண்மனை போன்ற இடங்களும் நாம் கண்டிப்பாக பார்க்க வேண்டியவை ஆகும்.

Photo:Babitha George

ஆலப்புழா - கேரளா :

ஆலப்புழா - கேரளா :

ஆலப்புழா நகரை பற்றிய விரிவான விவரங்களையும், அந்நகரில் இருக்கும் தாங்கும் விடுதிகள் பற்றிய விவரங்களையும் தமிழ் பயண வழிகாட்டியில் தெரிந்து கொள்ளுங்கள்.

Photo:Mehul Antani

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X