Search
  • Follow NativePlanet
Share
» »பெங்களூரில் இருந்து வார இறுதி விடுமுறைக்கு எங்கே செல்லலாம்?

பெங்களூரில் இருந்து வார இறுதி விடுமுறைக்கு எங்கே செல்லலாம்?

By Naveen

பெங்களூரில் வேலை செய்பவரா நீங்கள்?. வார விடுமுறையின் போது குடும்பத்தினருடனோ அல்லது நண்பர்களுடனோ ஓரிரு நாளில் சென்று வருவது போல எந்தெந்த இடங்களுக்கு சுற்றுலா சென்று வர ஆசைப்படுகிறீர்களா?. பெங்களூரில் இருந்து இருநூறு கி.மீ இருக்கும் வீக் எண்டு விடுமுறையை கழிக்க அற்புதமான இடங்கள் சிலவற்றைப்பற்றி தெரிந்துகொள்வோம் வாருங்கள்.

ஷிவனசமுத்ரா :

ஷிவனசமுத்ரா :

காவேரி ஆற்றின் குறுக்கே அமைந்திருக்கும் இரட்டை அருவியான ஷிவனசமுத்ரா அருவியானது கர்நாடக மாநிலத்தில் மாண்டியா மாவட்டத்தில் உள்ள ஷிவனசமுத்ரா என்ற ஊரில் உள்ளது. இது பெங்களூரில் இருந்து 132 கி.மீ தொலைவில் அமைந்திருக்கிறது.

Sajesh Dasan

ஷிவனசமுத்ரா :

ஷிவனசமுத்ரா :

குடகு மலையில் உற்ப்பத்தியாகும் காவேரி ஆறு தக்கான பீட பூமியில்பாறைப்படுகைகள் மற்றும் பள்ளத்தாக்குகள் வழியே பாய்ந்தோடிஷிவனசமுத்ரா என்ற இடத்தில் ‘ககனசுக்கி' மற்றும் ‘பரச்சுக்கி' என இரண்டு கிளைகளாக பிரிகிறது.

அப்படி பிரியும் ஆறு 98 அடி உயரத்தில் இருந்து அருவியாக ஆர்ப்பரித்துக் கொட்டுகிறது.

Maruthu Pandian

ஷிவனசமுத்ரா :

ஷிவனசமுத்ரா :

பரச்சுக்கி அருவியும், ககனசுக்கி அருவியும் ஒரு கி.மீ தொலைவு இடைவேளையில் அமைந்திருக்கின்றன.ககனசுக்கி நீர்வீழ்ச்சியின் அழகை ஷிவனசமுத்ர காட்சிக் கோபுரத்திலிருந்து பார்த்து மகிழலாம். இந்த காட்சி கோபுரம் ஹஸ்ரத் மர்தானே கைப் தர்க்காவுக்கு அருகில் உள்ளது.

Abhinay Omkar

ஷிவனசமுத்ரா - எப்படி அடைவது? :

ஷிவனசமுத்ரா - எப்படி அடைவது? :

பெங்களூர், மைசூர் மற்றும் இதர அருகாமை நகரங்களிலிருந்துஷிவனசமுத்திரா அருவிக்கு 15கி.மீ தொலைவில் அமைந்துள்ள கொள்ளேகால் பகுதி வரை பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

மைசூர் ரயில் நிலையமே ஷிவனசமுத்திரத்துக்கு அருகிலுள்ள ரயில் நிலையமாக 77 கி.மீ தூரத்தில் அமைந்துள்ளது.

Nagaraju Hanchanahal

ஷிவனசமுத்ரா - எப்படி அடைவது? :

ஷிவனசமுத்ரா - எப்படி அடைவது? :

ஷிவனசமுத்ராவை சாலை மூலம் சென்றடைய விரும்புகிறவர்கள் பெங்களூரில் இருந்து கனகபுரா சாலை வழியாக நேராக மலவள்ளியை அடைந்து அங்கிருந்துஷிவனசமுத்ரா கிராமத்தை சென்றடையலாம்.

இந்த பயணம் வெறும் மூன்றரை மணி நேரமே ஆகக்கூடியது.

Maruthu Pandian

முதுமலை வனவிலங்கு சரணாலயம்:

முதுமலை வனவிலங்கு சரணாலயம்:

DSLR கேமரா இருக்கிறதா உங்களிடம்?. அப்படியென்றால் நீங்கள் பெங்களூரில் இருந்து வார விடுமுறையின் போது கட்டாயம் செல்ல வேண்டிய இடம்முதுமலை வனவிலங்கு சரணாலயம் ஆகும்.

நூற்றுக்கணக்கான வகை விலங்குகளும், பறவைகளும் வாழும் இந்த சரணாலயம் புகைப்படம் எடுப்பதில் ஆர்வமுடையவர்களின் சொர்க்கம் ஆகும்.

Thangaraj Kumaravel

முதுமலை வனவிலங்கு சரணாலயம்:

முதுமலை வனவிலங்கு சரணாலயம்:

முதுமலை வனவிலங்கு சரணாலயத்தை பெங்களூரில் இருந்து மைசூரு-குண்டுபேட்டே வழியாக சென்றடையலாம். 229கி.மீ தொலைவு கொண்ட இந்த பயணத்தை நிறைவு செய்ய தோராயமாக நான்கு மணி நேரம் பிடிக்கும்.

தென்னிந்தியாவில் வனவிலங்குகள் அதிகம் வாழும் இடம் என்கிற பெருமையுடைய இந்த பூங்காவில் சுற்றுலாப்பயணிகளை கவரும் ஏராளமான அம்சங்கள் வனத்துறையால் ஏற்பாடு செய்யப்படுகிறது.

ram reddy

முதுமலை வனவிலங்கு சரணாலயம்:

முதுமலை வனவிலங்கு சரணாலயம்:

முதுமலை வனவிலங்கு சரணாலயத்தில் வாழும்மானிடர் லிசார்டுகள், கழுதைப்புலிகள், நரிகள், மான்கள், சிறுத்தைப்புலி போன்ற பல்வேறு வகையான விலங்குகளை புகைப்படம் எடுக்க விரும்புகிறவர்கள் யானை சவாரியை தேர்ந்தெடுக்கலாம்.

யானை மீது ஒய்யாரமாக சவாரி செய்தபடியே விலங்குகளை அதன் வாழ்விடங்களிலேயே காண்பது முற்றிலும் புதிய அனுபவமாக இருக்கும்.

☆Mi☺Λmor☆

முதுமலை வனவிலங்கு சரணாலயம்:

முதுமலை வனவிலங்கு சரணாலயம்:

யானை சவாரி மட்டுமில்லாது பேருந்து மற்றும் ஜீப்புகளிலும் முதுமலை விலங்குகள் சரணாலயத்தை சுற்றிப்பார்க்கலாம். கோடை காலத்துக்கு முந்தைய ஜனவரி முதல் மார்ச் வரையிலான காலகட்டம் இந்த பூங்காவிற்கு செல்ல ஏற்ற நேரமாக சொல்லப்படுகிறது.

இங்கே முதுமலை தேசிய பூங்கா மட்டுமில்லாதுபைக்காரா ஏரி, காலாட்டி அருவி, தெப்பக்காடு யாணை முகாம், மொய்யாறு நதி போன்ற இயற்கை பேரழகு நிறைந்த இடங்களையும் காணத்தவறாதீர்கள்.

Srihari Kulkarni

செம்பரா சிகரம்:

செம்பரா சிகரம்:

முதுமலை தேசிய பூங்காவிற்கு செல்பவர்கள் அப்படியே அங்கிருந்து 73கி.மீ தொலைவில் கேரள மாநிலத்தில் உள்ள வயநாட்டில் இருக்கும் செம்பரா சிகரத்திற்கும் சென்று வாருங்கள்.

செம்பரா சிகரத்தின் சிறப்பம்சமே இதன் உச்சியில் இருக்கும் இயற்கையாகவே காதல் இதயத்தின் வடிவில் அமைந்திருக்கும் சிறிய ஏரியாகும்.

செம்பரா சிகரம்:

செம்பரா சிகரம்:

முதுமலை தேசிய பூங்காவிற்கு அருகில் இருக்கும் ஊரான கூடாலூரில் இருந்து செம்பரா சிகரத்தின் அடிவாரமான மேப்படி என்ற ஊரை அடைந்து அங்கிருந்து நான்கு கி.மீ மலையேற்றத்தின் மூலம் காதல் ஏரியை அடையலாம்.

புதிதாக திருமணமானவர்கள் கொஞ்சம் வித்தியாசமான இடத்திற்கு சுற்றுலா செல்ல வேண்டும் என்று ஆசைப்பட்டால் நிச்சயம் இங்கே வரலாம்.

ஜோக் அருவி:

ஜோக் அருவி:

கம்பீரமும், பேரழகும் ஒருங்கே கொண்ட இயற்கை அன்னையின் பேரழகு ததும்பும் படைப்பாய் விளங்குகிறது ஜோக் நீர்வீழ்ச்சி. ஷராவதி நதியிலிருந்து உற்பத்தி ஆகும் ஜோக் நீர்வீழ்ச்சி ராஜா, ராணி, ராக்கெட், ரோவர் என்று நான்கு வேறுபட்ட பகுதிகளை கொண்டது.

இந்த அருவி பெங்களூரில் இருந்து நானூறு கி.மீ தொலைவில் அமைந்திருக்கிறது.

ஜோக் அருவி:

ஜோக் அருவி:

830 அடி உயரத்திலிருந்து பெரும் ஆரவாரத்துடன் கொட்டும் இந்த அருவில் சுற்றுலாப்பயணிகள் குளிக்க அனுமதியில்லை. ஆனால் பசுமை நிறைந்திருக்கும் இந்த இடத்தின் இயற்கை வனப்பை ரசிக்க ஏராளமான சுற்றுலாப்பயணிகள் வருகை தருகின்றனர்.

ஜோக் அருவி- எப்படி அடைவது?:

ஜோக் அருவி- எப்படி அடைவது?:

ஜோக் நீர்வீழ்ச்சியை சாகராவிலிருந்தும், ஷிமோகாவிலிருந்தும் சாலை மூலமாக சுலபமாக அடையலாம்.ஜோக் நீர்வீழ்ச்சியிலிருந்து முறையே 13 மற்றும் 100 கிலோமீட்டரில் தலகுப்பா ரயில் நிலையமும் , ஷிமோகா ரயில் நிலையமும் உள்ளதால் பயணிகள் சுலபமாக ஜோக் அருவி வந்து சேரலாம்.

Read more about: bangalore week end ooty coorg wayanad
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X