Search
  • Follow NativePlanet
Share
» »தில்லு இருந்தா இந்த கோட்டைக்கு போங்க பார்க்கலாம்...

தில்லு இருந்தா இந்த கோட்டைக்கு போங்க பார்க்கலாம்...

தில்லு இருந்தா இந்த கோட்டைக்கு போங்க பார்க்கலாம்...

By Super Admin

இந்தியாவில் இருக்கும் மிகவும் மர்மம் நிறைந்த இடமாக சொல்லப்படும் ராஜஸ்தான் மாவட்டத்தில் இருக்கும் பாங்கர் கோட்டைக்கு ஒரு திகிலூட்டும் சுற்றுலா செல்வோம் வாருங்கள்.

இந்த வாரம் அதிகம் படிக்கப்பட்ட செய்திகள் கீழே....

எங்கே அமைந்திருக்கிறது?:

எங்கே அமைந்திருக்கிறது?:

பாங்கர் கோட்டை ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள ஆழ்வார் மாவட்டத்தில் ஆரவல்லி மலைத்தொடரில் உள்ள சரிஸ்கா வனப்பகுதில் அமைந்திருக்கிறது.

Shahnawaz Sid

திகிலூட்டும் மர்மம்:

திகிலூட்டும் மர்மம்:

இந்த பாங்கர் கோட்டை இந்தியாவில் இருக்கும் மிகவும் திகிலான இடங்களில் ஒன்றாக சொல்லப்படுகிறது. இந்த கோட்டையில் மாலை நேரத்திற்கு பின் சுற்றுலாப்பயணிகள் அனுமதிக்கப்படுவதில்லை.

இந்த கோட்டையை பற்றிய பல அமானுஷமான கதைகள் உலாவருகின்றன.

Shahnawaz Sid

நிழல் படகூடாது:

நிழல் படகூடாது:

முன்னொரு காலத்தில் பாபா பாலநாத் என்ற சந்நியாசி இந்த கோட்டையினுள் சிறு வீடு ஒன்று கட்டி வாழ்ந்து வந்ததாகவும் அவர் தன்னுடைய வீட்டை விட பெரியதொரு கட்டிடம் ஒன்று கட்டப்பட்டு அதன் நிழல் தன் வீட்டின் மேல் விழுந்தால் இந்த மொத்த கோட்டையுமே அழிந்துவிடும் என்று சாபமிட்டதாகவும் அதனாலேயே இங்கே யாரும் வாசிக்காமல் கோட்டையை காலி செய்துவிட்டு சென்றதாகவும் ஒரு கதை சொல்லப்படுகிறது.

Shahnawaz Sid

சூனியக்காரரின் சாபம்:

சூனியக்காரரின் சாபம்:

சின்ஹா என்ற மந்திரவாதி இக்கோட்டையில் வாழ்ந்துவந்த ரத்னாவதி என்ற இளவரசி மீது மோகம் கொண்டு அவளை மணமுடிக்க நினைத்தானாம். ஒருநாள் இளவரசி தன் தோழியருடன் வாசனை திரவியம் வாங்க சந்தைக்கு வருவதை அறிந்துகொண்ட மந்திரவாதி வாசனை திரவியதிற்கு பதிலாக சூனியத்தால் செய்த மயக்கும் திரவியத்தை மாற்றி வைத்துவிட்டானாம்.

Hukum Negi

சூனியக்காரரின் சாபம்:

சூனியக்காரரின் சாபம்:

இதை எப்படியோ அறிந்துகொண்ட இளவரசி மந்திரவாதி மாற்றி வைத்திருந்த வசிய திரவியத்தை எடுத்து அருகில் இருந்த ஒரு பெரிய உருளையான பாறை மீது வீசவே அந்த பாறை உருண்டு வந்து மந்திரவாதியை நசுக்கி கொன்றதாம்.

Saad Akhtar

சூனியக்காரரின் சாபம்:

சூனியக்காரரின் சாபம்:

சாகும் தருவாயில் மந்திரவாதி இந்த பாங்கர் கோட்டையில் யாருமே இனி வாழ முடியாது என்று சபித்ததாகவும் அப்படி சபித்த சில காலத்திலேயே முகலாயர்களால் இக்கோட்டை முற்றுகையிடப்பட்டு கைப்பற்றப்பட்டதாம்.

அப்போது இந்த கோட்டையினுள் வாழ்ந்துவந்த அந்த இளவரசி உட்பட 10,000 பேரும் கொல்லப்பட்டிருக்கிறார்கள்.

Shahnawaz Sid

ஆவிகள் உலா வருகின்றன:

ஆவிகள் உலா வருகின்றன:

பாழடைந்த நிலையில் இருக்கும் இந்த கோட்டையினுள் இன்றும் அந்த மந்திரவாதி மற்றும் அவன் காதலித்த இளவரசி ஆகியோரது ஆவிகள் இன்றும் இந்த கோட்டையை சுற்றி உலா வருவதாக சொல்லப்படுகிறது.

பகலில் கூட இந்த கோட்டையினுள் இருக்கும் சில பகுதிகளுக்கு யாரும் நுழைய முடியாதபடி அந்த ஆவிகள் சுற்றிவருவதாகவும் சொல்லப்படுகிறது.

Shahnawaz Sid

கோட்டையினுள் என்ன இருக்கிறது?:

கோட்டையினுள் என்ன இருக்கிறது?:

இந்த கோட்டையின் முக்கிய நுழைவு வாயிலான 'பூத் பங்களா'(பேய்களின் வீடு) மூலம் நுழைந்தால் ஹனுமார் கோயில், கோபிநாத் கோயில், மங்கள தேவி கோயில், கணேஷ் கோயில், போன்ற பல்வேறு ஹிந்து கடவுளர்களின் கோயில்களையும், ராஜ பரம்பரையினர் வசித்த மாளிகைகள், வியாபாரிகள் வசித்த ஹவேளிக்கள் போன்றவற்றை காணலாம்.

Shahnawaz Sid

எவ்வளவு தூரத்தில் இருக்கிறது:

எவ்வளவு தூரத்தில் இருக்கிறது:

பாங்கர் கோட்டை டெல்லியில் இருந்து 235கி.மீ தொலைவில் அமைந்திருக்கிறது. கொஞ்சம் திகிலான இடத்திற்கு செல்லும் விருப்பமுடையவர்கள் நிச்சயம் ஒருமுறை இந்த கோட்டைக்கு சென்று வாருங்கள்.

Shahnawaz Sid

காரடையான் நோன்பு- இந்த கோயிலுக்கு போனா நீங்க தீர்க்கசுமங்கலியா வாழலாம்! காரடையான் நோன்பு- இந்த கோயிலுக்கு போனா நீங்க தீர்க்கசுமங்கலியா வாழலாம்!

பெரிய கோயில் கட்டப்பட்ட 7 ஆண்டுகளில் நடந்த மர்மங்கள் ? பெரிய கோயில் கட்டப்பட்ட 7 ஆண்டுகளில் நடந்த மர்மங்கள் ?

 பேயை நேரில் பார்க்கணுமா அப்போ இங்கெல்லாம் நைட் டிராவல் பண்ணுங்க பேயை நேரில் பார்க்கணுமா அப்போ இங்கெல்லாம் நைட் டிராவல் பண்ணுங்க

Read more about: rajasthan forts haunted places
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X