Search
  • Follow NativePlanet
Share
» »இந்தியாவில் மிகப் பெரிய மீன் மார்க்கெட் எங்கிருக்கு? எப்படி இருக்கும? அவங்க பழக்க வழக்கம்? தெரிஞ்சுக

இந்தியாவில் மிகப் பெரிய மீன் மார்க்கெட் எங்கிருக்கு? எப்படி இருக்கும? அவங்க பழக்க வழக்கம்? தெரிஞ்சுக

இந்தியாவில் மிகப் பெரிய மீன் மார்க்கெட் எங்கிருக்கு? எப்படி இருக்கும? அவங்க பழக்க வழக்கம்? தெரிஞ்சுக்கனுமா? இதப் படிங்க!!

By Balakarthik Balasubramanian

இந்தியாவின் மிகப்பெரிய நகரமான மும்பைக்கு ஒரு முறையாவது சென்று வர வேண்டுமென்பது யாருடைய கனவாக இருக்கிறதோ இல்லையோ...கண்டிப்பாக காசு பார்ப்பவர்கள் கனவாக இருக்கிறது. ஆம், இங்கே தான் இந்தியாவின் மிகப்பெரிய வர்த்தக நிறுவனங்களும் வியாபாரங்களும் நடக்கிறது என்பது நாம் அனைவரும் அறிந்த ஒன்றே. அவற்றுள் மிகவும் பிரசித்திபெற்ற பழமை வாய்ந்த ஒரு இடம் தான் இந்த பச்சா தக்வா எனப்படும் ஒரு இடமாகும். ஆம், இது தான் மும்பை மாநகரின் பெரிய மீன் சந்தை என்றழைக்கப்படும் ஒரு இடமாகும்.

கனவுகளின் நாயகனாய் கருதப்படும் இந்த மும்பை மாநகரம்...இந்திய திரைப்பட துறையினரின் ஆதிக்கத்தால் வண்ணமயமான ஒரு நகரமாக இன்றும் பெருமையுடன் விளங்குகிறது. அதுமட்டுமல்லாமல்...இந்தியாவின் நிதி மற்றும் வர்த்தக மூலதனத்தை அதிகம் கொண்ட ஒரு தலைநகரமும் மும்பை என்பது குறிப்பிடத்தக்கதாகும். இந்த பெரிய நகரத்தை பற்றிய அறிமுகங்கள் ஏதும் பெரிதாக உங்களுக்கு தேவைப்படாது என நான் நினைக்கிறேன்...என்ன? நான் சொல்வது சரி தானா? உணவு, உடை மற்றும் பழக்கவழக்கம் என அனைத்திற்கும் பெயர் பெற்ற இந்த மும்பைக்கு, புதிதாய் பலரும் வந்துகொண்டும் போய்கொண்டும் இருக்கிறார்கள் என்றே இதன் பெருமையை பற்றி நம்மால் பேச முடியும்.

மும்பை நகரம் மிகப்பெரிய நகரமட்டுமல்லாமல்...மிகவும் பிரசித்திபெற்ற பல இடங்களையும் பெருமையுடன் தாங்கிகொண்டு கம்பீரமாக நிற்கிறது. இந்த நகரத்தினை அழகாக்கி கொண்டிருக்கும் வணிகர்கள்... அங்கும் இங்கும் அலைந்துகொண்டிருக்க...அதனாலே இந்த நகரம் எப்பொழுதும் மிகவும் பரபரப்புடனே காணப்படுகிறது. அவற்றிலும் குறிப்பாக சுற்றுலா பயணிகளுக்கு இந்த மும்பை மாநகரம் பெரும் விருந்தினை படைத்து மனதினை குதூகலத்தில் தள்ளுகிறது என்றே கூறவேண்டும்.

இந்தியாவில் மிகப் பெரிய மீன் மார்க்கெட் எங்கிருக்கு? எப்படி இருக்கும? அவங்க பழக்க வழக்கம்? தெரிஞ்சுக

ஆடம்பரத்தின் அழகிய உருவம் என நினைக்கவைக்கும் மும்பைக்கு யாராவது ஒருவர் சாதாரணமாக வந்தாலும் செல்லும்போது வசீகரிக்கப்பட்டு ரசனைமிக்க ஒருவனாக மாறியே செல்வார் என்பதே உண்மை. ஆம், அப்பேற்ப்பட்ட பல இடங்கள் விலைமதிப்பில்லா காட்சிகளை கண்களுக்கு வழங்கிகொண்டிருக்க...பழமையான நகரத்தையும் பெருமையையும் இன்றும் ஒரு சிலர் கடைப்பிடித்து, 'பழக்கவழக்கங்களில் நாங்கள் என்றுமே மேன்மையானவர்கள் தான்...' என நம்மை வியப்பில் ஆழ்த்துகிறார்கள். இங்கே நாம் பார்ப்பதற்கு பல இடங்கள் இருந்தாலும்..அவற்றுள் நாம் குறிப்பாக இப்பொழுது பார்க்க போவது மிக பழமைவாய்ந்த ஒரு பிரசித்திபெற்ற இடமான பச்சா தக்வா தான். ஆம், மும்பையின் மிகப்பெரிய மீன் சந்தை என்றழைக்கப்படும் ஒரு இடம் தான் இந்த பச்சா தக்வா என்பது குறிப்பிடத்தக்கது.

இங்கே உள்ள மீனவர்களின் வாழ்வாதாரம் என கருதப்படும் ஒரு இடம் தான் இந்த இடமாகும். ஏழு தீவுகள் ஒன்றிணைந்து மும்பை என ஒரு மாநகரம் தோன்றியதாக வரலாற்று கட்டுரைகளின் மூலம் நமக்கு தெரியவர... ஒரு முக்கிய துறைமுகம் அரபிக்கடலில் காணப்படுகிறது. இந்த நகரம் மிகப்பெரிய மாற்றம் கண்டு....இன்று இந்தியாவின் வர்த்தக தகவல்களை தாங்கிகொண்டு நிற்கும் பெருமை வாய்ந்த ஒரு இடமாக விளங்குகிறது. ஆம், பிரிட்டிஷ் ஆட்சியின் போது தீவிரமான முன்னேற்ற ஆலோசனைகளை மேற்கொண்ட காரணத்தினால்...இன்று மாபெரும் நகரமாக இந்த மும்பை விளங்குகிறது. விக்டோரியா நிலையம் என்றழைக்கப்பட்ட ஒரு பழமையான நிலையம் மறைந்து இன்று சத்ரபதி சிவாஜி இரயில் நிலையம் என்ற ஒன்றினை தாங்கிகொண்டு சிறப்புடன் செயல்படுகிறது. ஆம், 1887 ஆம் ஆண்டு கட்டப்பட்ட இந்த நிலையம்... ராணி விக்டோரியாவின் பொன்விழா ஆண்டு சிறப்பம்சம் என்று பேசப்படும் ஒன்றாகும்.

இன்றும் விக்டோரிய பாணியில் கட்டப்பட்ட பல கட்டிடங்களும், அழகிய அமைப்புகளும் மும்பையில் வரலாற்றின் பெருமையை தாங்கிகொண்டு தற்பெருமையுடன் சிறந்து விளங்குவதனை பார்க்கும்பொழுது நொடி பொழுதில் நாம் காலம் கடந்து சென்று வியப்பை நோக்கி இழுக்கபடுகிறோம் என்றே சொல்ல வேண்டும். மஜகோன் கப்பல்துறையில் காணப்படும் பச்சா தக்வா... நாம் இதுவரை பார்த்த விக்டோரிய கட்டிடங்களை போன்று நிறுவப்பட்டது ஒன்றும் அல்ல. அதற்கு எதிர்மறையான தோற்றத்துடன் காணப்படும் இந்த பகுதி மிகவும் பழமையான ஒரு இடமாகும். இருப்பினும், இங்கு வந்து செல்வோர்கள் அனைவராலும் பெருமையுடன் பேசப்படும் ஒரு இடமாகவும் இந்த பச்சா தக்வா இருக்கிறது.

இந்தியாவில் மிகப் பெரிய மீன் மார்க்கெட் எங்கிருக்கு? எப்படி இருக்கும? அவங்க பழக்க வழக்கம்? தெரிஞ்சுக

Appaiah

'ஃபெர்ரி வார்ஃப்' என்றழைக்கப்படும் இந்த இடம்...ஏற்றுமதி இறக்குமதிகளுக்கு மிகவும் பெயர் பெற்ற ஒரு இடமாகவும் விளங்குகிறது. ஆம், இந்த இடம்... மும்பையின் கிழக்குப் பகுதியில் உள்ள தானே குன்றுடன் சேர்ந்து காணப்படுகிறது. ஒவ்வொரு நாளும்...எண்ணற்ற கப்பல்களில் பொருட்கள் ஏறியபடியும் இறங்கியபடியும் காட்சியளிக்க... கப்பல்துறை, மக்கள் போக்குவரத்திற்கு ஏற்ப படகுகள், அருகாமையில் உள்ள தீவில் இறக்கப்படும் பொருட்கள், கடற்கரை கிராமங்கள் என எந்நேரமும் ஒரே சலசலப்புடன் அமைதியற்ற வணிக சூழலை இந்த இடம் நமக்கு அளிக்கிறது. இந்தி திரைப்படங்களின் காட்சிகளில் முக்கிய இடத்தை பிடிக்கும் இந்த இடம்...திரைக் கதைகளின் கருவில் பழமையான மும்பை தோற்றத்தை கொண்டிருந்தால்..கண்டிப்பாக இந்த இடம் முதன்மை வகிக்கும் என்பதில் எந்த ஒரு சந்தேகமும் வேண்டாம்.

இந்த இடம் அதிகாலை பொழுதில் அரசல் புரசலான சத்தங்கள் ஆங்காங்கே கேட்க தொடங்கி....இரவு வரை அந்த சத்தம் கொஞ்சம் கூட குறையாமல் ஒலித்த வண்ணம் இருந்துகொண்டே இருக்கிறது. இந்த இடத்தில் வணிக ரீதியுடன் மீன் பிடிப்பாளர்கள் இருந்தாலும்...அவர்கள் அனைவரிடமும் கொள்ளும் அன்பிற்கு அளவே இல்லை என்று தான் கூறவேண்டும்.

ஆம் அவ்வளவு நட்புடன் பழகும் அவர்களிடம் நாம்...எள் அளவு கோபம் கொள்வதே தவறு தான். அவர்கள் யாரென்று நாம் ஆச்சரியத்துடன் வரலாற்றின் பக்கங்களை புரட்டி பார்க்க...அவர்கள் தான், மும்பை, தீவாக இருந்தபோதே இங்கு வாழ்ந்த அசல் குடிமக்கள் என்பது நமக்கு தெரியவருகிறது. இருப்பினும் அவர்கள் காட்டும் அன்பை கணக்கீடுகையில் ஆணவமற்ற சிறந்த அவர்களுடைய குணத்தின் ஆழம் நம் மனதிற்கு தெரிகிறது என்பதே உண்மை. நாம் அவர்களிடம் ஒரு பெரிய தொகையினை கொடுத்து சிறந்த மீனையும் பெற்று செல்லலாம் என அவர்களின் நம்பிக்கையை பற்றி நாம் நாவார புகழ்ந்து பேசலாம்.

இந்தியாவில் மிகப் பெரிய மீன் மார்க்கெட் எங்கிருக்கு? எப்படி இருக்கும? அவங்க பழக்க வழக்கம்? தெரிஞ்சுக்கனுமா? இதப் படிங்க!!

Pradeep717

இங்கே காணும் ஆயிரக்கணக்கான மீன்கள்...வெவ்வேறு வடிவத்திலும், வெவ்வேறு அளவிலும், வெவ்வேறு வகையிலும் காணப்பட்டு நம் மனதினை அவற்றின் செதில்களில் பதுக்கிகொண்டு தர மறுக்கிறது என்றே கூற வேண்டும். அத்துடன்..."இந்த மீன் பெயர் என்ன?" என நாம் கேட்க....அவர்கள் மீனின் பெயரை சொல்லி...அந்த மீனை பற்றி தகவல்களை எந்த ஒரு எதிர்ப்பார்ப்புமின்றி வழங்குவது நம்மை ஆச்சரியத்தின் எல்லைக்கே அழைத்து சென்று... செய்யும் தொழில் மீது அவர்கள் வைத்திருக்கும் மரியாதையை நமக்கு எடுத்துகாட்டுகிறது.

குமிழ்கள் மற்றும் புதிய பிடியின் குவியல்கள் அங்காங்கே பரப்பி கிடக்க..."இந்த மீனை வாங்கலாமா? அந்த மீனை வாங்கலாமா?" என நம் மனம் குழம்பிதான் தவிக்கிறது. நான் உங்களிடம் பந்தயம் கூட கட்டுவேன்..ஆம், நீங்கள் இதுவரை இவ்வளவு பெரிய மீனை உங்கள் வாழ்க்கையில் பார்த்திருக்க வாய்ப்பே இல்லையென நான் அடித்து கூறுவேன்...இவன் என்ன இவ்வளவு பில்டப் தருகிறான் என நீங்கள் யோசிப்பது எனக்கு புரிகிறது...உங்கள் உயரம் என்ன? அட சும்மா சொல்லுங்களேன்...ஏன் கேட்கிறேனா? எல்லாம் காரணமாகத்தான்...சரி சரி...கோபம் கொள்ளாதீர்கள்...நான் சொல்கிறேன்..

இங்கே 6 அடி நீளமுள்ள மீனை உங்களால் பார்க்க முடியும் என நான் கூறினால் நம்புவீர்களா? என்ன நம்ப முடியவில்லையா...அப்படி என்றால்...ஒரு முறை இந்த சந்தைக்கு வந்து தான் பாருங்களேன்...

அந்த மிகப்பெரிய கப்பல்துறையின் நீண்ட மேடையில் நாம் நடக்க... ஒரு சிறிய நிழற்குடை வைக்கப்பட்டிருக்கிறது. அங்கே ஒரு இஞ்சி டீயை நாம் குடித்து கொஞ்சமாக காலை உணவினை முடித்துகொண்டு ஆற்றலுடன் அந்த சந்தையை சுற்ற..."என்னை பார்...இல்லை என்னை பார்..." என வெவ்வேறு விதமான மீன்கள் நம்மை வரிசைக்கட்டி வரவேற்கிறது. அட ஆமாம்..கப்பல்துறைக்கு வலதுபக்கத்தில் தினமும் மீன் குவியல்கள் குவிந்து கிடக்க...காலை 6 மணியிலிருந்து மீன் விற்பவர்களும்...அதனை வாங்குபவர்களும் அங்கும் இங்கும் அலைந்து கொண்டிருக்கின்றனர். அதனை பார்த்துவிட்டு மனமற்று நாம் நகர...மீன்பிடி படகுகளின் அணிவகுப்பு நம்மை வரவேற்கிறது. அத்துடன் கோலாபாவில் சாஸ்ரூன் கப்பல்துறையையும் நம்மால் காணமுடிகிறது. இந்த மஜகோன் கப்பல்துறை மிகவும் பழமையான ஒன்றாகும்.

இந்தியாவில் மிகப் பெரிய மீன் மார்க்கெட் எங்கிருக்கு? எப்படி இருக்கும? அவங்க பழக்க வழக்கம்? தெரிஞ்சுக்கனுமா? இதப் படிங்க!!

எப்படி நாம் மீண்டும் செல்வது?

டாக்யார்ட் சாலை வரைக்கும் செல்ல நமக்கு கார்களும், பேருந்துகளும் உதவ...அங்கிருந்து உள்ளூர் இரயில்களின் உதவியுடன் ஃபெர்ரி வார்ஃபை நாம் அடைய...அது நமக்கு அளவில்லா ஆனந்தத்தை தருகிறது. டாக்யார்ட் சாலை நிலையத்தின் மீது துறைமுகம் அமைந்திருக்க...அது தான் பச்சா தக்வாவிற்கு அருகில் காணப்படும் ஒன்று என்பதனை நாம் உணர்கிறோம். டாக்யார்ட் சாலை நிலையத்திலிருந்து பச்சா தக்வாவிற்கு செல்ல...நமக்கு தோராயமாக 1 கிலோமீட்டர் தூரம் தேவைப்படுகிறது.

Read more about: travel mumbai
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X