Search
  • Follow NativePlanet
Share
» »தாஜ் மஹால் உங்களுக்கு தெரியும் ஆனா குட்டி தாஜ் மஹால் தெரியுமா ?

தாஜ் மஹால் உங்களுக்கு தெரியும் ஆனா குட்டி தாஜ் மஹால் தெரியுமா ?

ஆக்ரா நகரில் யமுனை ஆற்றின் கரையில் அமைந்திருக்கும் தாஜ் மஹாலுக்கு இணையான அழகுடைய கட்டிடம் இந்த உலகத்திலேயே வேறு இருக்க முடியாது. கட்டிடக்கலையின் உச்சமென திகழும் இந்த தாஜ் மஹால் போன்றொரு கட்டிடத்தை காண்பது கூட அரிதே. அப்படிப்பட்ட தாஜ் மஹாலை போன்றே அரிதானதொரு கட்டிடம் மராட்டிய மாநிலத்தில் உள்ள ஔரெங்காபாத் நகரில் அமைந்திருக்கிறது. வாருங்கள், அந்த இடத்தை பற்றிய பல சுவாரஸ்யமான தகவல்களை தெரிந்து கொள்வோம்.

உள்நாட்டு விமானங்களில் ரூ.1000 வரை கட்டண தள்ளுபை பெறுவதற்கான இலவச கூப்பன்களை இங்கே பெற்றிடுங்கள்

யார் கட்டியது ? :

யார் கட்டியது ? :

யாருக்காக அதி உன்னதமான தாஜ் மஹால் கட்டப்பட்டதோ அவர் வயிற்றில் பிறந்த வாரிசால் தான் குட்டி தாஜ் மஹால் என்று அழைக்கப்படும் இந்த பிபி கி மொகுபரா கட்டப்பட்டிருக்கிறது.

யார் கட்டியது ? :

யார் கட்டியது ? :

ஆம், ராணி மும்தாஜின் மகனும், ஷாஹ் ஜஹானுக்கு பிறகு முகலாய சக்கரவர்த்தியாக முடிசூடிய பேரரசர் ஔரங்கசீப் அவர்களால் தனது முதல் மனைவி தில்ராஸ் பானு பேகமின் நினைவாக 17ஆம் நூற்றாண்டின் மத்தியில் கட்டப்பட்டிருக்கிறது.

யார் கட்டியது ? :

யார் கட்டியது ? :

தன் தந்தையை போன்று கட்டிடக்கலையில் பெரிய ஈடுபாடு கொண்டிராத ஔரங்கசீப் மன்னனால் கட்டப்பட்ட மிகப்பெரிய கட்டிடமாக இந்த 'பிபி கி மொகுபரா' திகழ்கிறது. இதே ஔரங்கசீப் மன்னனால் திட்டமிடப்பட்டு 1610ஆம் ஆண்டு நிர்மாணிக்கப்பட்ட ஔரங்காபாத் நகரிலே இந்த குட்டி தாஜ்மஹாலும் அமைந்திருப்பது குறிப்பிடத்தக்கது.

யார் கட்டியது ? :

யார் கட்டியது ? :

இந்த கட்டிடத்தை பற்றிய இன்னுமொரு சுவாரஸ்யமான தகவல் என்னவென்றால் ஷாஹ் ஜகானுக்காக தாஜ் மஹாலை வடிவமைத்த தலைமை சிற்பியான உஸ்தாத் அஹமத் லஹுரி என்பவரின் மகனான அத்ஹா - உல்லாஹ் என்பவரே ஷாஹ் - ஜஹானின் மகனான ஔரங்கசீபுக்காக இந்த குட்டி தாஜ் மஹாலை வடிவமைத்திருக்கிறார்.

யார் கட்டியது ? :

யார் கட்டியது ? :

தாஜ் மஹாலை போன்றே நான்கு மூலைகளிலும் உயரமான நான்கு தூண்கள் இங்கே உள்ளன. தாஜ் மஹாலில் இருப்பது போன்றே இஸ்லாமிய கட்டிடக்கலை அம்சங்கள் நிறைந்த மைய மண்டபமும் அமைந்திருக்கிறது.

யார் கட்டியது ? :

யார் கட்டியது ? :

பிபி கி மொகுபராவின் உள்ளே அற்புதமான கலைவேலைப்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இந்த கட்டிட வளாகத்தினுள்ளே ஒரு மசூதி ஒன்றும் அமைந்திருக்கிறது.

பிபி கி மொகுபரா :

பிபி கி மொகுபரா :

ஔரங்கசீப் மனைவியின் சமாதி.

பிபி கி மொகுபரா :

பிபி கி மொகுபரா :

இந்த வளாகத்தினுள் அமைந்திருக்கும் மசூதி.

பிபி கி மொகுபரா :

பிபி கி மொகுபரா :

ஏழைகளின் தாஜ் மஹால் என்றும் இந்த பிபி கி மொகுபரா அழைக்கப்படுகிறது.

பிபி கி மொகுபரா :

பிபி கி மொகுபரா :

இதனுள் இருக்கும் அழகிய வேலைப்பாடுகள் நிறைந்த சுவர்கள்.

பிபி கி மொகுபரா :

பிபி கி மொகுபரா :

அந்தி சாயும் வேலையில்பிபி கி மொகுபரா.

பிபி கி மொகுபரா :

பிபி கி மொகுபரா :

இந்த கட்டிடத்தை கட்ட அந்தக்காலத்திலேயே 7 லட்சம் ருபாய் செலவு செய்திருக்கின்றனர். இன்றைய மதிப்பில் பல நூறு கோடிகளை தாண்டும்.

பிபி கி மொகுபரா :

பிபி கி மொகுபரா :

ஔரங்கசீப் தன் தந்தையான ஷாஹ் ஜஹானை அவரது கடைசி காலத்தில் சிறை வைத்திருந்தாலும் அவர் கட்டியது போன்றே தானும் இப்படி ஒரு கட்டிடத்தை கட்டியிருப்பது ஔரங்கசீப் ஏற்படுத்திய மிகப்பெரிய வரலாற்று முரண்களில் ஒன்று.

ஔரங்காபாத் :

ஔரங்காபாத் :

இந்த குட்டி தாஜ்மஹாலை தாண்டி ஔரங்காபாத்தில் நாம் சுற்றிப்பார்க்க ஏராளமான இடங்கள் உண்டு. இந்த நகரத்தினுள்ளே மட்டும் மொத்தம் 52 கோட்டைக்கதவுகள் முகலாயர் காலத்தில் கட்டப்பட்டிருக்கின்றன. இதனாலேயே 'கதவுகளின் நகரன் என்ற புனைப்பெயரும் இந்த நகரத்திற்கு உண்டு.

photo:Cajetan Barretto

ஔரங்காபாத் :

ஔரங்காபாத் :

இந்த நகரத்தின் வடக்கு பகுதியில் சலீம் அலி பறவைகள் சரணாலயம் அமைந்திருக்கிறது. இயற்கை எழில் கொஞ்சும் ஒரு ஏரியை சுற்றி அமைந்திருக்கும் இந்த பறவைகள் சரணாலயத்திற்கு கோடை காலத்தில் ஏராளமான பறவைகள் வருகை தருகின்றன.

ஔரங்காபாத் :

ஔரங்காபாத் :

மகாராஷ்டிரா மாநிலத்தின் மிகவும் வளர்ச்சியடைந்த நகரங்களில் ஒன்றாகவும் ஔரங்காபாத் நகரம் இருப்பதால் இங்கே நிறைய ஷாப்பிங் மால்கள், கே.எப்.சி, கபே காபி டே போன்ற பன்னாட்டு உணவகங்களும் ஏராளமாக இருக்கின்றன. பழமை மற்றும் புதுமையின் ரசனை மிக்க கலவையாக இருக்கும் இந்த நகருக்கு நிச்சயம் ஒருமுறை வருகை தாருங்கள்.

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X