Search
  • Follow NativePlanet
Share
» »எந்தெந்த கோவில்களில் எத்தனை கோடி பணம், நகை இருக்கு தெரியுமா?

எந்தெந்த கோவில்களில் எத்தனை கோடி பணம், நகை இருக்கு தெரியுமா?

By Staff

10,000 வருடங்களுக்கு மேலான பெரும் பழமையான வரலாறு கொண்ட இந்திய தேசத்தின் அடையாளமாக இத்தனை வருடங்களும் மாறாமல் இருக்கும் ஒரு விஷயம் கோயில்கள். இந்தியர்களின் அறிவாற்றல், செல்வ செழிப்பு, அறிவியல் கூர்மை, ஆன்மீக ஞானம் என யாவற்றையும் கோயில்களின் மூலமாகவே அறிந்து கொள்ள முடியும். மேற்குலக நாடுகளில் மனிதர்கள் விலங்குகளுக்கு இணையாக காட்டில் வாழ்ந்து கொண்டிருக்கையில் சூரியனின் சுழல் வேகத்தை கணித்தவர்கள் நாம்.

அப்படிப்பட்ட நம் நாட்டில் பழங்காலத்தில் கட்டப்பட்ட கோயில்கள் செல்வதினை சேமிக்கும் இடமாகவும் இருந்திருகின்றன. வைரங்களும், மரகதங்களும், தங்க ஆபரணங்களும் கோயில்களில் சிதறிக் கிடந்திருகின்றன. அப்படிப்பட்ட சில கோயில்கள் இன்றும் இருக்கின்றன. வாருங்கள் பாரத மண்ணில் இருக்கும் பணக்கார கோயில்களுக்கு ஒரு பயணம் மேற்கொள்வோம்.

பத்மநாப சுவாமி கோயில், திருவனந்தபுரம்:

பத்மநாப சுவாமி கோயில், திருவனந்தபுரம்:

இந்தியாவின் மட்டுமல்ல உலகத்திலேயே பணக்கார கோயில் என்ற பெருமையுடைய கோயில் தான் கேரளா மாநிலம் திருவனந்தபுரத்தில் இருக்கும் பத்மநாப சுவாமி கோயில். 2011ஆம் ஆண்டு இக்கோயிலில் இருக்கும் ஆபரணங்களை கணக்கெடுக்க வேண்டும் நீதிமன்றம் உத்தரவிட்டதில் இருந்தே இக்கோயில் மக்களின் கவனம் பெற ஆரம்பித்தது.

Photo:Manu Jha

பத்மநாப சுவாமி கோயில், திருவனந்தபுரம்:

பத்மநாப சுவாமி கோயில், திருவனந்தபுரம்:

இக்கோயிலில் பாதாளத்தில் இருந்த 5 ரகசிய கருவூலங்களில் இருந்த நகைகளை தோராயமாக கணக்கிட்டதிலேயே அதன் மதிப்பு ஒரு லட்சம் கோடிகளை தாண்டியது. கிலோ கணக்கில் இருந்த இரத்தின கற்கள் மதிப்பு யாராலும் கணக்கிட முடியாத அளவில் இருந்திருகின்றன. எனவே அவைகளை மிகச்சரியாக கணக்கிட்டால் தோராய மதிப்பை விட 10 மடங்கு இருக்குமாம்.

Photo:Rainer Haessner

பத்மநாப சுவாமி கோயில், திருவனந்தபுரம்:

பத்மநாப சுவாமி கோயில், திருவனந்தபுரம்:

அதாவது கிட்டத்தட்ட 10 லட்சம் கோடிகள். நம்மில் யாராலும் கற்பனையே செய்ய முடியாத தொகை அது. கி.மு 500 இல் பாடப்பட்ட முதற் சங்க தமிழ் பாடல்களில் இக்கோயில் பற்றிய குறிப்புகள் இருந்திருகின்றன. இக்கோயிலை 'தங்கத்தால் ஆன திருமன்றம்' என அவை குறிப்பிடுகின்றன.

Photo:Ashcoounter

பத்மநாப சுவாமி கோயில், திருவனந்தபுரம்:

பத்மநாப சுவாமி கோயில், திருவனந்தபுரம்:

விஷ்ணு பகவான் அனந்த சயன நிலையில் இருக்கும் இக்கோயிலுக்கு நிச்சயம் ஒருமுறையேனும் சென்று வாருங்கள். கேரளா மாநில தலைநகரான திருவனந்தபுரத்தின் நகர மையத்தில் இருந்து வெறும் 7 கி.மீ தொலைவிலேயே இக்கோயில் அமைந்திருக்கிறது.

Photo:Raji.srinivas

பத்மநாப சுவாமி கோயில், திருவனந்தபுரம்:

பத்மநாப சுவாமி கோயில், திருவனந்தபுரம்:

பத்மநாப சுவாமி கோயிலை எப்படி அடைவது என்பது பற்றிய மேலதிக தகவல்களை இங்கே அறிந்து கொள்ளுங்கள். திருவனந்தபுரத்தில் தங்குவதற்கு பட்ஜெட் ஹோட்டல்கள் முதல் ஆடம்பர ஹோட்டல்களை வரை நிறைய உள்ளன. அவற்றை இங்கே அறிந்துகொள்ளுங்கள். 'திருவனந்தபுரம் ஹோட்டல்கள்'.

Photo:Pranchiyettan

திருப்பதி வெங்கடாசலபதி கோயில்:

திருப்பதி வெங்கடாசலபதி கோயில்:

பணக்கார கோயில் என்பதன் அடையாளமாக இன்றாளவும் நம் மனதில் பதிந்திருக்கும் இடம் என்றால் அது திருவேங்கட மலையில் இருக்கும் திருப்பதி வெங்கடாசலபதி தான்.

Photo:vimal_kalyan

திருப்பதி வெங்கடாசலபதி கோயில்:

திருப்பதி வெங்கடாசலபதி கோயில்:

குபேர பகவானிடம் தனது திருமணத்திற்காக வாங்கிய கடனை திருப்பி தர உதவிசெய்தால் தமக்கும் பெருமாளின் அருள் கிடைக்கும் என்ற நம்பிக்கையின் காரணமாக பக்தர்கள் பெரும் செல்வத்தை கொடையாக அளித்ததன் பயனாக இன்று வெங்கடாசலபதிக்கு ஆயிரக்கணக்கான கோடி சொத்துகள் உள்ளனனவாம்.

Photo:Adityamadhav83

திருப்பதி வெங்கடாசலபதி கோயில்:

திருப்பதி வெங்கடாசலபதி கோயில்:

9ஆம் நூற்றாண்டில் பல்லவர்களாலும், 10ஆம் நூற்றாண்டில் தஞ்சையை ஆண்ட சோழர்களாலும், 14ஆம் நூற்றாண்டில் விஜயநகர பேரரசர்களாலும் வணங்கப்படும் கடவுளாக எழுமையான் இருந்திருக்கிறார். திருப்பதி கோயிலுக்கு சொந்தமாக 1000கிலோ தங்கம் இருக்கிறதாம்.

Photo:vimal_kalyan

திருப்பதி வெங்கடாசலபதி கோயில்:

திருப்பதி வெங்கடாசலபதி கோயில்:

தினமும் சுவாமியை தரிசிப்பதற்காக 50,00 முதல் ஒரு லட்சம் பக்தர்கள் வரை வருகின்றனர். வருடாந்திர பிரம்மோத்சவ விழாவின் பொது 5 லட்சம் பக்தர்கள் வரை இங்கே வருகின்றனர். திருப்பதியில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டு உலக பிரசித்திபெற்றது என்பது நாம் எல்லோரும் அறிந்ததே.

Photo:Surya Prakash.S.A.

திருப்பதி வெங்கடாசலபதி கோயில்:

திருப்பதி வெங்கடாசலபதி கோயில்:

திருப்பதியில் நாம் ஏன் முடி காணிக்கை செலுத்தும் வழக்கம் தோன்றியது போன்ற திருப்பதி கோயிலை பற்றிய விவரங்களை இங்கே அறிந்து கொள்ளுங்கள்.

Photo:Jamdirt631

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X