உலகம் அழியும் நாள்: பத்மநாபசுவாமி கோயிலின் கடைசி அறையில் புதைந்துள்ள மர்மங்கள்
தேடு
 
தேடு
 

தஞ்சை பிரகதீஸ்வரர் கோயில் - தெரிந்ததும், தெரியாததும்!

Updated: Wednesday, March 22, 2017, 12:00 [IST]
Share this on your social network:
   Facebook Twitter Google+ Pin it  Comments

தமிழ்நாட்டில் ஆயிரம் ஆண்டுகளுக்கு கட்டப்பட்ட கோயில்கள் எத்தனை இருந்தாலும் தஞ்சை பெரிய கோயிலுக்கு ஈடு இணை ஏதுமில்லை.

வட நாடெங்கும் பயணித்து பல வெற்றிகளை சுமந்து வந்த ராஜராஜ சோழன் தான் வழியில் கண்ட பல்வேறு சிற்பக்கலை மரபுகளைச் சேர்ந்த கோயில்களின் தோற்றத்தில் கவரப்பட்டு அவற்றினும் சிறந்த ஒரு உன்னத கலைப்படைப்பை தனது ராஜ்ஜியத்தில் நிர்மாணிக்க விரும்பி மிகுந்த முனைப்புடன் இந்தக் கோயிலை உருவாக்கியிருக்க வேண்டும் என்பது சில வரலாற்று ஆசிரியர்களின் கருத்து.

வார்த்தைகளில் விவரிக்க முடியாத நுண்ணிய வடிவமைப்பு, கற்பனா சக்தி, மேலாண்மை துல்லியம், பொறியியல் நுணுக்கங்கள், அப்பழுக்கற்ற ஒழுங்கு, துளியும் பிசகாத கணக்கீடுகள் போன்ற அறிவியல் பூர்வமான நுட்பங்கள் இந்த ஒட்டுமொத்த கோயிலின் உருவாக்கத்தில் நிரம்பியுள்ளன என்றால் அது மிகையில்லை.

படித்துப் பாருங்கள் : சோழர்கள் கட்டிய அற்புத கோயில்கள்!

இந்தியாவிலேயே தனிச்சிறப்பு கொண்ட இந்த பிள்ளையார் கோயிலை தெரியுமா? 

கஜுராஹோ - இது காமத்திற்கான கோயில்

ஆயிரமாண்டு அதிசயம்!!!

1000 ஆண்டுகளை கடந்து நிற்கும் தஞ்சாவூர் பிரகதீஸ்வரர் கோயிலின் எழில் கொஞ்சும் கம்பீரத் தோற்றம்.

படம் : Nara J

ஒற்றைக்கல் நந்தி!

பிரகதீஸ்வரர் கோயிலில் அமைந்திருக்கும் இந்த ஒற்றைக்கல் நந்தி சிலை நாயக்கர்களால் கட்டப்பட்டது. இந்தச் சிலை 13 அடி உயரமும், 16 அடி நீளமும் கொண்டது.

படம் : Hari Shankar05

சோழர் கால கல்வெட்டு

தஞ்சை பெரிய கோயிலைச் சுற்றி சோழர் காலத்தில் பொறிக்கப்பட்ட கல்வெட்டுகள்.

படம் : Symphoney Symphoney

 

ராஜராஜன் சிலை

கோயிலுக்குள் காணப்படும் மாமன்னன் ராஜராஜனின் சிலை.

படம் : Venu62

சிவலிங்கங்கள்

பெரிய கோயிலைச் சுற்றி வரிசையாக அமையப்பெற்றுள்ள சிவலிங்கங்கள்.

படம் : Benjamín Preciado

ராஜராஜன் காலத்து நந்தி

மாமன்னன் ராஜராஜனால் உருவாக்கப்பட்ட இந்த நந்தி, வராகி அம்மன் சன்னதி அருகில் வைக்கப்பட்டுள்ளது. தற்போது நந்தி மண்டபத்தில் இருக்கும் ஒற்றைக்கல் நந்தி நாயக்கர்களால் உருவாக்கப்பட்டது.

படம் : Portvp

பிரம்மாண்ட சிவலிங்கம்

உலகின் மிகப்பெரிய சிவலிங்கங்களில் ஒன்றாக கருதப்படும் பெரிய கோயில் சிவலிங்கம் மலர்களால் அலங்கரிக்கப்பட்டிருக்கும் காட்சி.

படம் : Vsvs2233

தஞ்சாவூர் ஓவியம்

நாயக்கர் காலங்களில் தஞ்சை பெரிய கோயிலைச் சுற்றி எண்ணற்ற ஓவியங்கள் தீட்டப்பட்டுள்ளன. இந்த ஓவிய பாணியை பின்பற்றியே இப்போது பிரபலமாக அறியப்படும் தஞ்சாவூர் ஓவியம் வளர்ச்சியடைந்துள்ளது.

படம் : Ankushsamant

விநாயகர் சன்னதி

தஞ்சை பெரிய கோயில் வளாகத்தில் பின்னாட்களில் மராட்டிய மன்னர்களால் கட்டப்பட்ட விநாயகர் சன்னதி.

படம் : Bernard Gagnon

ராஜராஜனும், கருவூராரும்!

மாமன்னன் ராஜரானும், அவருடைய குரு கருவூரார் சித்தரும் உரையாடிக்கொண்டிருப்பது போல சோழர் காலத்தில் வரையப்பட்ட ஓவியம்.

படம் : Eugene a

கேரளாந்தகன் வாயில்

மாமன்னன் ராஜராஜன் கேரள நாட்டை கைப்பற்றியதின் காரணமாக கேரளாந்தகன் என பெயர்பெற்றதோடு, இந்த கேரளாந்தகன் வாயில் அதன் நினைவாக எழுப்பப்பட்டதாகும்.

படம் : Thamizhpparithi Maari

முருகன் கோயில்

தஞ்சை பெரிய கோயில் வளாகத்தில் அமைந்துள்ள முருகன் சன்னதி பின்னாட்களில் விஜயநகர மன்னர்களால் கட்டப்பட்டதாகும்.

படம் : Thamizhpparithi Maari

மேற்கூரை ஓவியங்கள்

கோயிலின் மேற்கூரைகளில் காணப்படும் ஓவியம் ஒன்று.

படம் : Thamizhpparithi Maari

நந்தி சிலைகள்

பெரிய கோயில் மதிற்சுவற்றின் மேலே அமையப்பெற்றுள்ள நூற்றுக்கணக்கான நந்தி சிலைகள்.

படம் : Thamizhpparithi Maari

பாலபிஷேகம்

பெரிய கோயிலின் பிரம்மாண்ட சிவலங்கத்துக்கு பாலபிஷேகம் செய்யப்படுகிறது.

படம் : Shefali11011

கொடிமரம்

நந்தி மண்டபத்துக்கு முன்னாள் நிற்கக்கூடிய கொடிமரம்.

படம் : PRADHEEP J V

 

இரவின் விளக்கொளியில்!

கோயில் விமானமும், கலசமும் இரவு நேரத்தின் விளக்கொளியில் பிரகாசித்துக்கொண்டிருக்கின்றன.

படம் : Sri Ram

வரைபடம்

தஞ்சை பெரிய கோயிலின் அமைப்பை விளக்கும் வரைபடம்.

படம் : Junykwilfred

தூண்கள்

வரிசையாகவும், மிக அழகாகவும் காட்சியளிக்கும் பெரிய கோயிலின் தூண்கள்.

படம் : PRADHEEP J V

கும்பாபிஷேகம்

கோயில் கும்பாபிஷேகத்தின் போது 12 அடி உயரம் கொண்ட கலசத்தின் மீது ஏறி எவ்வாறு அபிஷேகம் செய்கிறார்கள் என்பதை விளக்கும் படம்.

படம் : Alagusenthil

அம்மன் சன்னதி

பிரகதீஸ்வரர் கோயிலில் நந்தி மண்டபத்துக்கு அருகே உள்ள அம்மன் சன்னதி.

படம் : Thamizhpparithi Maari

நடராஜர் சன்னதி

கோயிலில் நுழைந்தவுடன் வலது பக்கத்தில் அமைந்துள்ள நடராஜர் சன்னதி.

படம் : Thamizhpparithi Maari

சிவ சிவ!

நந்தி மண்டபத்தின் முன்னே சிவ சிவ என்ற எழுத்துப் பொறிக்கப்பட்டிருக்கும் தோற்றம். பின்னால் பிரம்மாண்டமாக கோயில் விமானம் காட்சியளித்துக்கொண்டிருக்கிறது.

படம் : Vinayaraj

படிக்கட்டுகள்

சிவலிங்கம் அமையப்பெற்றிருக்கும் சன்னதிக்கு அழைத்துச் செல்லும் படிக்கட்டுகள்.

படம் : Aravindreddy.d

சோழர் கால ஓவியம்

சோழர் காலத்தில் வரையப்பட்ட நடன மங்கைகளின் ஓவியம்.

படம் : Venu62  

பத்மா சுப்ரமண்யம் நாட்டியம்

தமிழ்நாட்டின் புகழ்பெற்ற பரத நாட்டியக் கலைஞரான பத்மா சுப்ரமண்யம் பெரிய கோயிலின் ஆயிரமாவது ஆண்டுவிழாவின்போது 1000 நடனக் கலைஞர்களுடன் நடனமாடிய காட்சி.

படம் : Portvp

கோயில் யானை

அலங்கரிக்கப்பட்டு அழைத்து கரைப்படும் கோயில் யானை.

படம் : Aruna

கருவூரார் சன்னதி

பெரிய கோயில் வளாகத்தில் அமைந்துள்ள கருவூரார் சித்தரின் சன்னதி.

படம் : Junykwilfred

நடன அரங்கேற்றம் மற்றும் நடன நிகழ்ச்சிகள்

தஞ்சை பெரிய கோயிலில் அவ்வபோது நாட்டிய அரங்கேற்றமும், நாட்டிய நிகழ்ச்சிகளும் நடப்பது வழக்கம்.

படம் : Arian Zwegers

நெய் தீபம்

கோயில் உள்ளே விற்கப்படும் நெய்தீபங்கள்.

படம் : vishwaant avk

ராஜராஜன் நாடகம்

தஞ்சை பெரிய கோவில் ஆயிரமாவது ஆண்டு விழாவின் ஒரு பகுதியாக அரங்கேற்றப்பட்ட ராஜராஜன் நாடகத்திலிருந்து ஒரு காட்சி.

படம் : Portvp

தட்சிணாமூர்த்தி சன்னதி

பெரிய கோயிலில் உள்ள தட்சிணாமூர்த்தி சன்னதி.

படம் : Junykwilfred

சேதமடைந்த சிலைகள்

தஞ்சை பிரகதீஸ்வரர் கோயில் வளாகத்தில் காணப்படும் சேதமடைந்த சிலைகள்.

படம் : Sivananthan2001

1000 ஆண்டு விழா தரை விரிப்பு

பெரிய கோயிலின் 1000 ஆண்டு விழா கொண்டாட்டத்தின் போது தரையில் அமைக்கப்பட்ட விரிப்புகள்.

படம் : Portvp

மரப்பல்லியும், நம்பிக்கையும்!

கருவூரார் சன்னதி பின்புறம் அமைந்துள்ள மரத்தில் வாழும் மரப்பல்லியை பார்த்தால் வேண்டுதல் நிறைவேறும் என்ற நம்பிக்கை நிலவுகிறது.

படம் : Portvp

சிவகங்கை பூங்கா

பெரிய கோயிலுக்கு அருகே அமைந்துள்ள சிவகங்கை பூங்கா.

படம் : Ilasun

புது ஆறு

பெரிய கோயிலுக்கு அருகே பாய்ந்தோடும் காவிரி ஆற்றின் நீட்சி புது ஆற்றின் வெள்ளம்.

படம் : Ilasun

கருவூரார் சிலை

மாமன்னன் ராஜராஜனின் குருவாக கருதப்படும் கருவூரார் சித்தரின் சிலை. இவருடைய சன்னதி முன்பாக அமர்ந்து பக்தர்கள் தியானம் செய்வது வழக்கம்.

படம் : Thamizhpparithi Maari

அபிஷேக நீர்

சிவலிங்கத்துக்கு செய்யப்படும் அபிஷேக நீர் வழியும் இடம். இந்த நீரை பக்தர்கள் புனிதமாக கருதுவதுடன், கைகளால் தொட்டு தலையில் இட்டுக்கொள்வர்.

படம் : Thamizhpparithi Maari

பலிபீடம்

பெரிய கோயில் வளாகத்தில் காணப்படும் பலிபீடம்.

படம் : Thamizhpparithi Maari

English summary

Brihadeeswarar Temple - known and unknown facts

.
Please Wait while comments are loading...