Search
  • Follow NativePlanet
Share
» »பெங்களுருவில் இருக்கும் உலகின் மிகப்பெரிய நந்தியை பற்றி தெரியுமா உங்களுக்கு ?

பெங்களுருவில் இருக்கும் உலகின் மிகப்பெரிய நந்தியை பற்றி தெரியுமா உங்களுக்கு ?

'நந்தி' என்றதுமே நம் நினைவுக்கு வருவது தஞ்சை பெரிய கோயிலில் உள்ள ஒற்றைக் கல்லினால் செய்யப்பட்ட நந்தி சிலை தான். இந்த நந்தி சிலையை போன்றே இந்தியாவின் தகவல் தொழில்நுட்பவியல் தலைநகரமான பெங்களுருவில் பசவன்குடி என்ற இடத்தில் அமைந்திருக்கும் நந்தி கோயிலில் மிகப்பிரமாண்டமான நந்தி சிற்பம் ஒன்று இருக்கிறது.

கிட்டத்தட்ட 20 அடி நீளம் கொண்ட இந்த நந்தி சிலையானது உலகத்தில் இருக்கும் மிகப்பெரிய நந்தி சிலைகளில் ஒன்றாக சொல்லப்படுகிறது. பெங்களுரு நகரின் மிகவும் பிரசித்தி பெற்ற ஆன்மீக ஸ்தலங்களில் ஒன்றான இந்த நந்தி கோயிலைப் பற்றிய சுவாரஸ்யமான தகவல்களை தெரிந்துகொள்வோம் வாருங்கள்.

நந்தி கோயில் :

நந்தி கோயில் :

உலகின் மிகப்பெரிய நந்தி சிலை அமைந்திருக்கும் தொட்ட கணேஷன குடி என்னும் இக்கோயிலானது தெற்கு பெங்களுருவில் பசவங்குடி என்ற ஊரில் இருக்கிறது.

Anushka14

நந்தி கோயில் :

நந்தி கோயில் :

1537ஆம் ஆண்டு பெங்களுருவின் தந்தை என என்றழைக்கப்படும் விஜயநகர பேரரசின் வம்சத்தை சேர்ந்த கெம்பே கௌடா மன்னரால் இக்கோயிலானதுகட்டப்பட்டிருக்கிறது.

Sankalp Varshney

நந்தி கோயில் :

நந்தி கோயில் :

தஞ்சை பெரிய கோயிலில் இருக்கும் நந்தி சிலையை போன்றே இக்கோயிலில் இருக்கும் நந்தி சிலையும் ஒற்றைக் கல்லினால் செய்யப்பட்டிருக்கிறது.

15 உயரமும், 20 அடி நீளமும் கொண்டு மிக பிரம்மாண்டமாக காட்சி தருகிறது இந்த நந்தி சிலை.

ser:Sarvagnya

நந்தி கோயில் :

நந்தி கோயில் :

சிவ பெருமானின் வாகனமான நந்தி ஒரு கோயிலின் மூலவராக இருப்பது மிகவும் அரிதாகும். உலகில் இதுபோல நந்தி மூலவராக வீற்றிருக்கும் மிகவும் அபூர்வமான கோயில்களில் ஒன்றாக இந்த தொட்டே கணேஷன குடி கோயில் திகழ்கிறது.

User:Sarvagnya

நந்தி கோயில் :

நந்தி கோயில் :

இங்கே ஒவ்வொரு ஆண்டும் கார்த்திகை மாதத்தின் கடைசி திங்கள் மற்றும் செவ்வாய் கிழமைகளில் 'கடலேகாய் பரிஷி' என்ற கடலை சந்தை நடத்தப்படுகிறது.

இந்த சந்தையில் பங்குகொள்ள கர்னாடக மாநிலம் முழுவதிலும் இருந்து ஏராளமான கடலை விவசாயிகளும், கடலை வாங்குவதற்காக ஏராளமான பக்தர்களும் வந்து குவிகின்றனர்.

Rkrish67

நந்தி கோயில் :

நந்தி கோயில் :

இக்கோயிலில் கடலை சந்தை நடத்தப்படுவதன் பின்னணியில் மிகவும் சுவாரஸ்யமான கதை ஒன்று சொல்லப்படுகிறது.

அதாவது ஒருகாலத்தின் இந்த கோயில் அமைந்திருக்கும் இடத்தில் மிகப்பெரிய அளவில் கடலை விவசாயம் நடந்து வந்திருக்கிறது. அப்போது கடலை பயிர்களை எல்லாம் காளை மாடு ஒன்று தின்று நாசம் செய்து வந்திருக்கிறது.

Ramon

நந்தி கோயில் :

நந்தி கோயில் :

இதனால் கோபமடைந்த விவசாயிகள் அந்த காளையை தடி கொண்டு அடித்து விரட்ட முயன்றிருக்கின்றனர். அவர்கள் அப்படி செய்த போது காளை ஓரிடத்தில் சென்று அமர்ந்து அப்படியே கல்லாக மாறியிருக்கிறது.

கல்லாக மாறியதோடு மட்டுமில்லாமல் நாட்கள் செல்லச்செல்ல மிகப்பெரியதாக வளரவும் ஆரம்பித்திருக்கிறது இந்த நந்தி சிலை.

நந்தி கோயில் :

நந்தி கோயில் :

இப்படியே இந்த நந்தி சிலை வளர்ந்துவந்தால் உலகமே அழிந்துவிடும் என்று பயந்த விவசாயிகள் தங்களை ஆபத்தில் இருந்து காப்பாற்ற சிவபெருமானை மனமுருகி வேண்டியிருக்கின்றனர்.

அவர்களின் கனவில் தோன்றிய சிவபெருமான் வளர்ந்து வரும் நந்தி சிலையின் நெற்றியின் அருகில் திரிசூலம் ஒன்றை நிறுவுமாறு சொல்கிறார். அதன்படி செய்தபின் இந்த நந்தி சிலை வளர்வது நின்றிருக்கிறது.

sdaviva

நந்தி கோயில் :

நந்தி கோயில் :

இந்த கோயிலின் அருகிலேயே விநாயகர் கோயில் ஒன்றும்இருக்கிறது. இந்த கோயிலில் மூலவரான விநாயகரின் சிலை முழுக்க முழுக்க வெண்ணெயால் செய்யப்பட்டிருக்கிறது.

இந்த வெண்ணை எப்போதும் உருகுவதே இல்லை என சொல்லப்படுகிறது. ஒவ்வொரு நான்கு வருடங்களுக்கு ஒருமுறை இந்த விநாயகர் சிலையில் உள்ள வெண்ணை பக்தர்களுக்கு வழங்கப்பட்டு பின்னர் புதிய வெண்ணை கொண்டு விநாயகர் சிலை மீண்டும் புதிதாக செய்யப்படுகிறது.

User:Mallikarjunasj

நந்தி கோயில் :

நந்தி கோயில் :

மேலும் இக்கோயிலின் பின்னால் மூன்று லட்சம் ஆண்டுகள் பழமையான மிகப்பெரிய பாறை ஒன்று இருக்கிறது. 'போகுல் பாறை' என்று அழைக்கப்படும் இந்த பாறை ஒரு காலத்தில் பெங்களுரு நாகரின் தெற்கு எல்லையாக இருந்திருக்கிறது.

arc Smith

நந்தி கோயில் :

நந்தி கோயில் :

நீங்கள் பெங்களுருவில் இருந்தாலோ அல்லது அடுத்தமுறை பெங்களுரு வந்தாலோ நிச்சயம் இந்த நந்தி கோயிலுக்கு வருகை தாருங்கள்.

நந்தி சிலையின் பிரம்மாண்டத்தில் மெய்சிலிர்த்திடுங்கள்.

நந்தி கோயிலின் நுழைவு வாயில்.

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X