Search
  • Follow NativePlanet
Share
» »மைசூருக்கு பக்கத்தில் இருக்கும் தென்னிந்தியாவின் மிகப்பெரிய புத்த மடாலயம் !!

மைசூருக்கு பக்கத்தில் இருக்கும் தென்னிந்தியாவின் மிகப்பெரிய புத்த மடாலயம் !!

இன்று உலகில் பெரும்பான்மை மக்களால் பின்பற்றப்படும் மத நம்பிக்கைகளுள் பௌத்தமும் ஒன்று. இந்த நம்பிக்கையின் உயிர்நாடியாக திகழ்ந்த கௌத்தம புத்தர் பிறந்தது இந்திய திருநாடு செய்த பெரும் பாக்கியங்களில் ஒன்று. இன்று சீனா, ஜப்பான், இலங்கை, தென் கிழக்கு ஆசிய நாடுகளில் பெரும்பான்மையானவர்கள் பௌத்த மதத்தை பின்பற்றுபவர்களாகவே இருக்கின்றனர். ஆனால் இந்தியாவில் பௌத்தர்கள் மிகமிக சொற்ப எண்ணிக்கையிலேயே இருக்கின்றனர்.

ஏறத்தாழ ஆயிரத்து ஐநூறு ஆண்டுகளுக்கு முன்பு தமிழகத்தில் கூட பௌத்தம் பிராதானமாக இருந்ததென்றும் பின் காலப்போக்கில் சைவம் மற்றும் வைணவத்தின் எழுச்சி காரணமாக பௌத்த மதம் மறைந்து போனதாக வரலாற்று ஆய்வாளர்கள் குறிப்பிடுகின்றனர்.

இன்று இந்தியாவில் திபெத்தின் எல்லை பிரதேசமான லடாக் பகுதியில் தான் அதிக அளவில் பௌத்த மதத்தினர் வசிக்கின்றார். அப்படியிருக்க தென்னிந்தியாவில் மைசூருக்கு அருகே ஒரு புத்த மடாலாயம் அமைந்திருக்கிறது. சர்வ மதத்தினரும் செல்லக்கூடிய இந்த மடாலயத்தை பற்றிய சுவாரஸ்யமான தகவல்களை தெரிந்துகொள்வோம் வாருங்கள்.

பைலகுப்பே

பைலகுப்பே

தனி நாடு கோரிக்கையை வலியுறுத்தி போராடி வந்த திபெத்தியர்களை சீனா இரும்புக்கரம் கொண்டு ஒடுக்கியதோடு மட்டுமில்லாமல் திபெத்தை ஆக்கிரமிக்கவும் செய்தது. கம்யூனிச தேசமான சீனா ஆக்கிரமித்த பகுதியில் வாழ முடியாமல் அகதிகளாக வெளியேறிய ஏராளமான திபெத்தியர்களுக்கு இந்தியா அடைக்கலம் கொடுத்து குடி அமர்த்தியது. அப்படி தென்னிந்தியாவில் பௌத்தர்கள் குடி அமர்த்தப்பட்ட இடம் தான்பைலகுப்பே ஆகும்.

Premnath Thirumalaisamy

பைலகுப்பே

பைலகுப்பே

பைலகுப்பே நகரமானது கர்நாடக மாநிலத்தில் உள்ள மைசூரு மாவட்டத்தில் இருக்கிறது. சமீபத்தில் எடுக்கப்பட்ட கணக்கெடுப்புப்படி இங்கே மொத்தம் 70,000 பௌத்தர்கள் வசிக்கின்றனர்.

இங்கே தான் தென்னிந்தியாவின் மிகப்பெரிய புத்த மடாலயமான நம்ட்ரோளிங் மடாலயம் அமைந்திருக்கிறது.

Premnath Thirumalaisamy

பைலகுப்பே

பைலகுப்பே

திபெத்திய புத்த மதத்தில் கக்யு, சக்ய, கேளுக், ந்யிங்க்மா என நான்கு பிரிவுகள் இருக்கின்றன. இந்நான்கில் பழமையான பிரிவானந்யிங்க்மா பிரிவை சேர்ந்தது தான் நம்டிரோளிங் மடாலயம் ஆகும்.

இந்த மடாலயத்தில் 5000க்கும் அதிகமான துறவிகள் வசிக்கின்றனர். அதோடு இதனுள் ஆன்மீக கல்லூரி ஒன்றும் மருத்துவமனை ஒன்றும் செயல்படுகிறது.

Premnath Thirumalaisamy

 பைலகுப்பே

பைலகுப்பே

இந்த நம்டிரோளிங் மடாலயத்தை ந்யிங்க்மா பிரிவின் 11வது தலைவரான பெனோர் ரின்போச்சே என்ற புத்த துறவி 1963ஆம் ஆண்டு நிறுவியிருக்கிறார்.

இந்திய அரசாங்கத்தால் கொடுக்கப்பட்ட நிலத்தில் வெறும் மூங்கில்களை கொண்டு வேயப்பட்ட கூரை சாலையில் இம்மாடாலயம் ஆரம்பிக்கப்பட்டிருக்கிறது.

Rahul Ravindra

பைலகுப்பே

பைலகுப்பே

மடாலயத்தை தொடர்ந்து 1978ஆம் ஆண்டு இங்கே 'சேத்ரா' எனப்படும் பௌத்த மத கல்லூரி துவங்கப்பட்டிருக்கிறது.

இக்கல்லூரியில் திபெத்திய சந்ததியை சேர்ந்த மாணவர்களுக்கு கல்வி போதிக்கப்படுகிறது. பழமையான பௌத்த நூல்களில் உள்ள தியான முறைகள், மருத்துவ பயிற்சிகள் போன்றவை மாணவர்களுக்கு அளிக்கப்படுகின்றன.

Rakesh JV

பைலகுப்பே

பைலகுப்பே

1999ஆம் ஆண்டு இந்த மடாலயத்தில் பத்மசாம்பவ புத்த விஹாரம் எனப்படும் தங்க புத்த கோயில் அமைக்கப்பட்டது.

இந்த கோயில் ஆயிரத்திற்கும் மேற்ப்பட்ட துறவிகள் அமர்ந்து தியானம் செய்யும் வகையில் மிக விசாலமாக அமைக்கப்பட்டிருக்கிறது.

Premnath Thirumalaisamy

பைலகுப்பே

பைலகுப்பே

இந்த மடாலயத்தின் முக்கிய சுற்றுலா ஈர்ப்பாக இருப்பது இங்கு ஸ்தாபிக்கப்பட்டுள்ள 18மீ உயரமுள்ள தங்க தகடுகள் பதிக்கப்பட்ட புத்தர் சிலை தான்.

பைலகுப்பே

பைலகுப்பே

இந்த மடாலயத்திற்கு சிறப்பு நாட்களிலோ, பூஜை நேரங்களிலோ சென்றால் ஆயிரக்கணக்கான புத்த துறவிகள் ஒரே குரலில் புத்த மந்திரங்கள் சொல்வதையும், திபத்திய வாத்தியங்கள் இசைக்கப்படுவதையும் கேட்கலாம்.

Praful Tripathy

பைலகுப்பே

பைலகுப்பே

எந்த மதத்தை சேர்ந்தவராக இருந்தாலும் இந்த மடலாயத்தில் சென்று தியானத்தில் ஈடுபட எந்த தடையும் இல்லை.

புத்த கலாச்சாரத்தை அறிந்துகொள்வதில் ஆர்வம் உடையவர்கள் நிச்சயம் இந்த இடத்திற்கு வர வேண்டும்.

பைலகுப்பே

பைலகுப்பே

இங்கே வெளிநாட்டவர்கள் வர எந்த தடையும் இல்லை என்றாலும் இரவு இந்த மடாலயத்தில் தங்குவதற்கு மத்திய அரசிடம் உரிய அனுமதி பெற வேண்டும்.

Sahana Chattopadhyay

பைலகுப்பே

பைலகுப்பே

இந்த கோயிலின் சுவர்களின் திபெத்திய தங்கா ஓவியப்பாணியில் வரையப்பட்டுள்ள புத்தரின் வாழ்க்கைக்குறிப்புகள் மற்றும் வஜ்ராயண பௌத்த மரபு சார்ந்த கடவுள் ஓவியங்கள் காணப்படுகின்றன.

பைலகுப்பே

பைலகுப்பே

இந்த மடாலயத்தை பற்றிய மேலும் பல தகவல்களையும், இதனை எப்படி சென்றடைவது என்பது பற்றிய விவரங்களையும் தமிழ் பயண வழிகாட்டியில் தெரிந்துகொள்ளுங்கள்.

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X