Search
  • Follow NativePlanet
Share
» »உங்களுக்கு சவால்னா பிடிக்குமா? அப்போ இமையமலை பாராப் பங்கல் பகுதி எப்படி இருக்கும்னு தெரிஞ்சுகோங்க!!

உங்களுக்கு சவால்னா பிடிக்குமா? அப்போ இமையமலை பாராப் பங்கல் பகுதி எப்படி இருக்கும்னு தெரிஞ்சுகோங்க!!

உங்களுக்கு சவால்னா பிடிக்குமா? அப்போ இமையமலை பாராப் பங்கல் பகுதி எப்படி இருக்கும்னு தெரிஞ்சுகோங்க!!

By Balakarthik Balasubramanian

அதிகம் படித்தவை: இந்த தூண் விழுந்தால் உலகமே அழிந்துவிடும்!

பாராப் பங்கல் பகுதி கடல் மட்டத்திலிருந்து சுமார் 2050 மீட்டர் உயரம் முதல் 5000 மீட்டர் உயரம் வரை அமைந்து நம் பயணத்தின் பெருமையை உணர்த்துகிறது. அப்படி என்ன தான் இந்த சவாலானப் பயணத்தில் நம்மால் பெருமைக் கொள்ள முடியும்! வாங்கப் பார்க்கலாம்.

நான் கடற்கரையில் வீசும் காற்றினைச் சுவாசித்துக் கொண்டு இருக்க, வீட்டினையே மறந்து வசிக்கும் இடத்தினை மனதினால் மாற்றிக்கொள்ளும் ஒரு நபர் எனப் பலரும் கூறுவார்கள். ஆம், என்றாவது ஒரு நாள் கடவுள் என் முன் தோன்றி உன் வீட்டினை நீ கடற்கரைப் பகுதியிலோ இல்லை மலைப் பகுதியிலோ அமைத்துக் கொள்ள ஆசைக் கொண்டால் எதனைத் தேர்வு செய்வாய் என்று என்னிடம் அவர் கேட்டால், அவர் வார்த்தையினை உச்சரித்த மறு நிமிடமே, வேறு விருப்பமற்றுக் கடற்கரைப் பகுதியினை நான் தேர்வு செய்வேன். ஆனால், மலையில் இருக்கும் கொள்ளை அழகை என் மனம் மறந்தது ஏனோ! என்றதொரு எண்ணம் ஒரு நாள் என் மனதில் ஏற்படும் என்பதனை நான் அப்பொழுது யோசித்துப் பார்க்கவேயில்லை.

ஆம், அந்த மலைப் பகுதியின் அழகினை ரசிக்கும் ஒரு நொடி முதல் வரை கடல் மட்டுமே என் மனதில் நினைவலைகளை எழுப்பிக்கொண்டிருக்க, அந்த மலை என் மனதில் ஏற்படுத்தியத் தாக்கம், எழுந்த கடல் பற்றின நினைவலைகளை மறைத்து, மலை தான் என் முதல் தேர்வு என சொல்ல வைத்தது. என் கனவுலகில், மேகங்கள் அலைந்துக்கொண்டிருந்த வான் பகுதியின் உயரத்தில் நின்ற நான், என்னையும் மீறி மனம் மட்டும் மேகம் பின்னே அலையப் பனிக் கொண்டு மலை மூடிய அதன் அழகினை ரசிக்க, உடல் மட்டும் நிற்கதியாகி அந்த சூழலில் சரணடைந்துப் பிரமித்துப் போனது. இந்தக் காட்சிகளை நிஜமாக்க நான் மலைப் பயணம் செல்ல ஆவலுடன் காத்திருந்தேன். துரதிர்ஷ்டவசமாக, என் வேலைகள் என் பயண நினைவினைக் கலைத்து பணியில் கவனம் செலுத்த தயாராக, இந்தப் பயணம் மட்டும் கனவாகவே என் மனதில் பனிபோல் உறைந்துப் போனது.

 பாராப் பங்கல் பகுதி எப்படி இருக்கும்?

manub

என் பணிகளை முடித்து மறு நிமிடம் நாம் பயணத்தினைப் பற்றிய சிந்தனையைக் கண்டிப்பாக செலுத்தி, இன்பமடைய மனம் முடிவெடுத்து வேலையில் நாட்டம் கொண்டு செயல்பட, இறுதியில் நான் எதிர்ப்பார்த்த அந்த ஒரு நாள் என்னைப் புதியதோர் பயணத்திற்கு அழைத்தது. என் பணிகள் என்னை அசதியில் தள்ள, இந்தப் பயணத்தின் ஒவ்வொரு நொடியினையும் நான் மகிழ்ச்சியுடன் செலவிட்டு என் மனதிற்கு தீனிப் போட நான் தீர்மானம் எடுத்துக் கொண்டேன். இதுவரை நான் செல்லாத ஒரு இடத்திற்குச் செல்ல ஆசைக் கொண்ட என் மனம், "புதியதோர் அனுபவத்தினை அடையத் தயாராகுத் தோழா" என்று என்னை உற்சாகப்படுத்தியது.

இமயமலைப் பகுதியில் உள்ள ஒரு சவாலானப் பயணமாகவும் அரிதானப் பயணமாகவும் இந்தப் பாரா பங்கல் பயணம் நம்மை மகிழ்ச்சியோடு வரவேற்கிறது. இந்தப் பயணத்திற்கு மலை ஏறுவதற்குத் தேவையான நுண்ணறிவும், உத்திகளும் உதவ, பயணத்தின் மூலம் நாம் ஆர்வம் கொண்டு முன்னோக்கிச் செல்கிறோம் என்று தான் கூற வேண்டும். கடல் மட்டத்திலிருந்து 2050 மீட்டர் முதல் 5000 மீட்டர் வரை உயரத்துடன் காணப்படும் இந்த இடம், நமக்குக் கடினமானதொரு இனிமையானப் பயணமாக அமைகிறது. மேலும் இங்குக் காணப்படும் இந்த குறுகியப் பாதைகளில் முகடுகளும், பனிப்பாறைகளும் நிறையவேக் காணப்படுகிறது.

இப்பொழுது நம் கனவுத் திரையினைக் கொஞ்சம் விலக்கிச் சுவாரஸ்யமாக சில விஷயங்களைப் பார்க்கலாமா. பயணத்தின் உங்களுடைய ஒவ்வொரு மணி நேரத்திலும் வித விதமானதொரு மலையின் உயரத்தினை நாம் கடப்போம் என்றால், அந்த உணர்வினை நம்மால் வருணிக்க இயலுமா என்ன! இந்தப் புதியப் பயணத்தில் நம்முடைய இன்பம் பொங்கும் இதயத்தின் படப்படப்பு அதிகரித்துக் காதல் கொள்ளும் என்பதில் எந்த ஒரு ஆச்சரியமும் வேண்டாம். இந்தப் பயணம் நம்மை எவ்வளவு மகிழ்விக்க முயல்கிறதோ, அந்த அளவிற்குப் பயமும் இருக்கிறது. ஆதலால் நாம் ஒருப் புது வித அனுபவத்தினை அடைவதுடன், கவனமானதொருப் பயணமாக அமைய நமக்கு மனம் மற்றும் உடல் வலிமையும் மிக முக்கியமாகத் தேவைப்படுகிறது.

 பாராப் பங்கல் பகுதி எப்படி இருக்கும்?

Sharada prasad

இந்தப் பயணத்திற்கு ஏதுவானதொருக் கால நிலை தான் எவை?

குளிர்காலத்தில் இங்குப் பனிப்பொழிவும், நிலச்சரிவும் அதிகமாக இருக்க, அந்தக் காலத்தில் நம் பயணத்தினைத் தவிர்த்து மே முதல் செப்டம்பர் மாதங்களில் நாம் பயணம் செல்வது மிகவும் இனிமையானதொருப் பயணமாக அமைகிறது. மேலும், இந்த குளிர்காலத்தில், சாலைகளும் முடக்கப்பட்டுவிட, போக்குவரத்து இடையூறுகளும் ஏற்படுகிறது. அதேபோல், கோடைக்காலத்தில் பனியின் தாக்கம் சற்று மிதமாக இருக்க, நாம் பனிப் பிரியர்களாக இருப்பின், இந்தக் காலத்தினை நம் பயணத்தின் வாயிலாக செலவிட்டு சந்தோஷமடையலாம் என்கின்றனர்.

பயணத்திற்கு நமக்குப் பயன்படும் அத்தியவாசியப் பொருட்கள் ஒருப் பார்வை:

மலையை ஏற ஏதுவாக இருக்கும் மலை ஏறப் பயன்படும் குச்சிகள், தலையில் பொருத்திக்கொள்ளும் ஒரு ஒளி விளக்கு, மருந்துகள் அடங்கிய முதலுதவிப் பெட்டி, திசைக் காட்டும் கருவி, பயணத்திற்கு ஏதுவானக் காலணிகள், தூங்குவதற்கு உகந்தப் பைகள், தொலைநோக்கி, புகைப்படக்கருவி, கம்பளி ஆடைகள், வெப்பம் (தனல்கள்), தலையைப் பாதுகாத்துக் கொள்ளும் ஒருத் தொப்பி, வாட்டர் பாட்டில்கள், கண்ணாடி, சிற்றுண்டிகள் ஆகியவை நம் பயணத்திற்கு அத்தியவாசியப் பொருட்களாக அமைந்து நம் பயணத்தினை இனிமையாக்குகிறது.

இந்தப் பயணம் மணலியில் தொடங்குகிறது. ஆம், நான் மணலியினை நோக்கி முன்பேக் கிளம்பி விமானத்தின் மூலம் பறந்துச் சென்றுவிட அங்குப் பிரசித்திப் பெற்ற ஹிடிம்ப தேவி ஆலயத்தினை முதலில் கண்டு என் பயணத்தின் ஆதிப்புள்ளியை ரசித்தேன். அந்த ஆலயத்தினை ரசித்துவிட்டு நான் மால் சாலையில் செல்ல, அங்கு விற்றுக்கொண்டிருந்த தட்டுக்களில் ஆவிப் பறக்க வைக்கப்படிருந்த வட இந்தியாவின் பிரசித்திப்பெற்ற உணவான மோமொவை ருசித்தேன். அதனை வெண்ணெய் தேயிலைக் கொண்டுக் கழுவி ஒருப் புதியதோர் இன்பத்தை அதன் பிறகு நான் அடைந்து அவ்விடத்தை விட்டு நகர்ந்தேன்.

 பாராப் பங்கல் பகுதி எப்படி இருக்கும்?

Shradda choudry

நாள் 1: மணலி முதல் லாமா துக் வரை

என் வயிற்றினை நான் நிரப்ப ஆசைக்கொண்டுக் காலை உணவினைச் சாப்பிட, உணவின் தரம் என் மனதினையும் சேர்த்து நிரப்பி, இதயம் வரை சென்றுத் தங்கியது. எங்கள் காலை உணவினை மகிழ்வுடன் உண்டுவிட்டு நாங்கள் பயணத்தினை ஆரம்பிக்க, தோராயமாக ஒரு 4 மணி நேர பயணத்தின் வாயிலாக அடர்ந்தக் காட்டிற்குள் சென்றோம். கடல் மட்டத்திலிருந்து 3017 மீட்டர்கள் உயரத்தில் காணப்பட்ட லாமா துக்கினை நாங்கள் அடைய, ஆல்பைன் நிறைந்தப் பீடபூமியில் எங்கள் முதல் நாள் ஓய்விற்கானக் கூடாரத்தினை அமைத்தோம். அங்கு இந்திராசம் என்னும் இடத்தில் காணப்பட்டப் பனி சூழ்ந்த தியோத் திப்பா உச்சம், காட்சிகளால் எங்களை வெகுவாக கவர்ந்தது. அந்த அழகியக் காட்சிகளை ரசித்துக் கொண்டே நாங்கள் அன்னாந்துப் பார்த்தபடி அயர்ந்துத் தூங்க, "நீங்கள் இன்னும் கடின இலக்கினை அடையவே இல்லை, அதற்குள் உங்களுக்கென்ன உறக்கம்" என எங்கள் மனம் ஏளனமாய் நோக்கி மூளையிடம் குற்றம் சாட்டியது.

நாள் 2: லாமா துக் முதல் ரியாலி தச் வரை

 பாராப் பங்கல் பகுதி எப்படி இருக்கும்?

Ramnath Bhat

லாமா துக்கிலிருந்துப் புறப்படும் நாம் 3 மணி நேரப் பயணத்திற்குப் பிறகு ரியாலித் தச்சினை அடைகிறோம். இந்தப் பயணம் ஒரு செங்குத்தான முகடுகளின் வழியாக செல்ல, கீழேக் காணப்பட்ட கந்த் பாரி திப்பா பனிப்பாறையினை நாங்கள் அடைந்தோம். அந்த இடத்திலிருந்துக் காட்சியளிக்கும் பியஸ் நதியும், மணலியும் அருமையானதொருக் காட்சியினை நம் கண்களுக்கு விருந்தாகப் படைக்கிறது. இறுதியாக நாங்கள் கண்ட அந்த ரியாலி தச் எங்கள் மனதினை முழுவதுமாக கவர்ந்துக் கைது செய்யக் கடல் மட்டத்திலிருந்து 3400 மீட்டர் உயரத்தில் உள்ள அந்தப் பகுதியில் தஞ்சம் புகுந்து எங்கள் கூடாரத்தினை அமைத்து இயற்கை முன்பு ஒருக் கைதியாகத் தங்கினோம்.

நாள் 3: ரியாலி தச் முதல் காலிஹெனிக் கணவாய் அடித்தளம் வரை

 பாராப் பங்கல் பகுதி எப்படி இருக்கும்?

John Hill

நாம் முத்தான மூன்றாம் நாள் பயணத்தினைப் புல்வெளிகளின் வழியாக ஆரம்பிக்க, ஓடையின் குறுக்கே இறங்கி நடக்கத் தொடங்குகிறோம். நாம் ஓடையினைக் கடந்து 3 மணி நேரம் நடந்துச் செல்லக் காலிஹெனிக் கணவாயின் அடித்தளத்தினை அடைகிறோம். கடல் மட்டத்திலிருந்து 4010 மீட்டர் உயரத்தில் உள்ளக் காலிஹெனிக் கணவாய் பகுதியில் கூடாரம் அமைத்து இறுதியாக அந்த நாளின் இதர நேரத்தினை ஓய்வின் மூலம் நாங்கள் செலவிட்டோம்.

நாள் 4: காலிஹெனிக் கணவாய் அடிவாரப்பகுதி முதல் தேவி கி மார்ஹி வரை:

 பாராப் பங்கல் பகுதி எப்படி இருக்கும்?

jen

நான்காம் நாள் பயணத்தில் ஒரு விறுவிறுப்பு நம்மைத் தொற்றிக் கொள்ள ஆர்வத்துடன் புறப்பட்டு 8 மணி நேரப் பயணமாக மலையினை நோக்கி ஏறுகிறோம். கடல் மட்டத்திலிருந்து 4725 மீட்டர் உயரத்தில் இருக்கும் காலிஹெனிக் கணவாயின் மேல்புறத்தினை நோக்கி ஏற, நீள் பரப்பில் காணப்படும் சிறுக் கற்களையும் முகடுகளையும் கடந்துச் செல்ல இறுதியாக காலிஹெனி பனிப் பாறைகளை நாம் அடைகிறோம்.

அந்தப் பகுதியினை அடையும் நாம் நம்முடைய ஓய்வுக்கு சிறிது, நேரம் ஒதுக்கிச் சிற்றுண்டிகளை எடுத்துக்கொள்ள அங்கு நாங்கள் கண்ட அந்த தொங்கியப் பாறைகளும் எங்கள் மனதினை வெகுவாக கவர்ந்து ஆச்சரியத்தில் தள்ளியது. அதன் பிறகு நாங்கள் கீழ் நோக்கி இறங்க, பனி சூழ்ந்த ஏரியில் எங்கள் மனதினைத் தொலைத்து முன்னோக்கி செல்ல இயலாமல் மனதினைத் தேடிக்கொண்டிருந்தோம். இறுதியாக நாங்கள் தேவி கி மார்ஹியினை அடைந்து அங்கு ஒருக் கூடாரத்தினை அமைத்து அயர்ந்து தூங்கத் தயாரானோம். எங்களுடையப் பயணத்தின் சிறப்பானதொரு நாளாக அமைந்த இந்த தருணம் எங்களுக்குச் செல்லும் இடமெல்லாம் பலக் காட்சிகளைக் கர்வமின்றி வழங்கியது என்று மன நிறைவுடன் நாம் கூறலாம்.

நாள் 5: தேவி கி மார்ஹி முதல் தல் மார்ஹி வரை

 பாராப் பங்கல் பகுதி எப்படி இருக்கும்?

jen

ஐந்தாம் நாள் ஆற்றலை தரும் வகையில் அருமையானதொருச் சத்துள்ள இந்திய உணவினை உண்டு நாங்கள் தல் மார்ஹிக்குப் புறப்பட்டோம். நாங்கள் இந்த 6 மணி நேரப் பயணத்தில் மூச்சு வாங்க ஏறியும் இறங்கியும் செல்ல, கடல் மட்டத்திலிருந்து 3900 மீட்டர் உயரத்தில் காணப்படும் தல் மார்ஹியினை அடைந்தோம். இந்த நான்கு நாட்களில் கடினமென்னும் காற்றினை மட்டும் சுவாசித்த எங்கள் மனம், எளிது என்னும் வார்த்தையினைத் தேட ஆறாம் நாளிற்காக காத்திருக்க, அங்குக் கூடாரம் ஒன்று அமைத்து இதர நேரத்தினை நாங்கள் ஓய்வின் மூலம் செலவிட்டு அயர்ந்தோம்.

நாள் 6: தல் மார்ஹி முதல் பாராப் பங்கல் வரை

 பாராப் பங்கல் பகுதி எப்படி இருக்கும்?

Felix dance

தல் மார்ஹியிலிருந்து நாம் புறப்பட்டு கீழ் இறங்கிச் செல்ல ரவி நதியினை அடைகிறோம். ரவி நதியிலிருந்துப் புறப்படும் நாம் ஒரு அடர்ந்தக் காட்டின் வழியாக செல்ல ஒருக் கிராமத்தினை அடைகிறோம். ஆம், நான் பார்க்கும் அந்தக் கிராமம் தான் பாரா பங்கல் கிராமம் ஆகும். அந்தக் கிராமத்திலிருந்து 6 மணி நேரப் பயணத்தின் மூலமாக நாம் பாரா பங்கலை அடைந்து, கடல் மட்டத்திலிருந்து 2882 மீட்டர் உயரத்தில் காணப்படும் அந்த அழகியக் காட்சிக்கு நம் மனதினை இரையாக்கி இன்பமடைகிறோம்.

நாள் 7: பாராப் பங்கல் முதல் மார்ஹி வரை

 பாராப் பங்கல் பகுதி எப்படி இருக்கும்?

Ashish sharama

நாம் இந்த ஏழாம் நாள் பயணத்தில் மாபெரும் தம்சார் பனிப்பாறையின் வழியாக ஏறிச் செல்ல, 5 மணி நேரப் பயணத்தின் மூலமாகப் ஊசியிலை, தியோடர் எனப்படும் மரங்கள், பூச்ச மரம் நிறைந்தக் காடுகளை நாம் அடைகிறோம். இறுதியாகத் தம்சர் பனிப்பாறையின் அடியில் காணப்படும் மார்ஹிப் பகுதியினை நாம் அடைகிறோம். நான் என் கரத்தில் கட்டப்பட்டக் கடிகாரத்தின் உதவியுடன் கடல் மட்டத்திலிருந்து 3830 மீட்டர் உயரத்தில் இருப்பதனை தெரிந்துக் கொள்ள, லேசாகத் தலைச் சுற்றி அழகியச் சூழலில் புதைந்து சுய நினைவுக்கு வரத் தவித்தது என் மனம். நாங்கள் எங்கள் பயணத்தினை ஆரம்பித்து ஒரு வாரம் ஆகிவிட்டது என்பதனைத் தெரிந்துக் கொள்ளும் எங்கள் மனம் சிறிதுக் களைப்பினை உணர்ந்து கண்கள் லேசாக சுறுங்கிக் காட்சியளிக்க, இந்தக் கண் சுறுக்கத்திற்குக் காரணம், கடந்து வந்த தூரமா? இல்லை என்றால் திரும்பி வீட்டிற்குச் செல்லப் போகும் ஒரு ஏக்கமா? எனத் தெரியாமல் மூளைத் தடுமாறிச் செய்கைகளை சரியாகத் தர மறுத்துத் தயங்கியது. இந்த மாதிரி ஒரு அருமையானப் பயணம் இனிமேல் எப்பொழுது என்னும் ஏக்கமும் எங்களுக்குள் இருந்தது என்னவோ உண்மை தான்.

நாள் 8: மார்ஹி முதல் ப்லாச்சக் வரை

 பாராப் பங்கல் பகுதி எப்படி இருக்கும்?

okorok

நாங்கள் அனைவரும் மேலே ஏறி ப்லாச்சக் நோக்கிச் செல்ல, அதுக் கடல் மட்டத்திலிருந்துச் சுமார் 2721 மீட்டர் உயரத்தில் காணப்படுகிறது என்பதனைத் தெரிந்துக் கொள்ளும் நம் மனம் எட்டாம் நாளில் ஒரு வித உற்சாகத்துடனேச் சென்றது. இந்தப் பயணம் எங்களைத் தம்சார் கணவாயினை நோக்கி மீண்டும் அழைத்துச் செல்கிறது என்பதனைத் தெரிந்துக் கொள்ளும் நம் மனம் உற்சாகம் குறைந்து ஏக்கத்துடன் மீண்டும் காணப்படுகிறது. இந்தக் கணவாயின் உச்சத்தினை அடையும் நாம் அங்குக் கங்க்ராப் பள்ளத்தாக்கின் அழகியக் காட்சிகளை இதழ்கள் விரிக்கப் பார்த்து ரசிக்கிறோம். அங்கிருந்து மீண்டும் ப்லாச்சாவினை நோக்கி இறங்கிய நாங்கள் அந்தப் பகுதியில் இருந்தக் கட்டைகளில் எங்கள் தூக்கத்தினைத் தொடங்கி அடுத்த நாளுக்குத் தயாரானோம்.

நாள் 9: ப்லாச்சக் முதல் பில்லிங்க் வரை

 பாராப் பங்கல் பகுதி எப்படி இருக்கும்?

B.Balaji

இந்தப் பயணத்தில் ஒரு முக்கியமான இடமென்றதொருக் கோரிக்கை நம் முன்பு வைக்கப்பட நம் மனம் இந்த இடத்தினைக் காண மிகவும் ஆசைக் கொள்கிறது. நாங்கள் அனைவரும் ராஜ்குந்தாவினை நோக்கி நடக்க, அந்த வழியில் காணப்பட்ட ஊசியிலைக்காடுகளைக் கடந்து நடந்துச் சென்றோம். அடுத்து சில மணி நேரங்கள் நாங்கள் முன் நோக்கிச் செல்ல இறுதியாக பில்லிங்க் பகுதியினை அடைந்தோம். அத்துடன் எங்கள் பயணமும் முடிவுக்கு வந்துவிட்டது என்பதனைத் தெரிந்துக் கொண்ட எங்கள் மனம் மணலியினை நோக்கி மனமற்று மீண்டும் செல்கிறது.

இந்தப் பயணத்தின் வாயிலாக, என் மனதில் இருந்தப் பணி சுமைகள், கவலைகள் அனைத்தும் மறைந்துப் புதிய ஒரு மனிதனாக என்னை பாவித்துக் கொண்டு வீட்டை நோக்கி மனமின்றிப் புறப்பட்டேன். என் மனதினில் மீண்டும் செல்வதனைப் பற்றிய ஏக்கம் இருந்தாலும், நாங்கள் கண்ட அந்தக் காட்சிகள், எங்கள் ஏக்கத்தினைக் குறைத்து நினைவலைகளை மனதில் எழுப்பி எங்கள் உடலையும் தளர்த்தி அசதியினை விட்டு விலக்கியது. எனக்குள்ளே ஒரு உணர்வு, இந்தப் பயணம் எனக்குப் புதிய இடங்களை மட்டும் தான் காட்டியதா, இல்லை என்றால் என்னை எனக்கே யார் என்றுக் காட்டியதா? என்னும் ஒரு ஆச்சரியம். ஆம், இங்கு வந்து திரும்புவோருக்குக் கண்டிப்பாக இந்த உணர்வு ஏற்படும் என்பதில் எந்த ஒரு சந்தேகமும் வேண்டாம்.

இந்த மாதத்தில் பட்டையை கிளப்பிய டாப் 5 கட்டுரைகள்

உலகம் அழியும் நாள்: பத்மநாபசுவாமி கோயிலின் கடைசி அறையில் புதைந்துள்ள மர்மங்கள்உலகம் அழியும் நாள்: பத்மநாபசுவாமி கோயிலின் கடைசி அறையில் புதைந்துள்ள மர்மங்கள்

அலறியடித்து ஓட்டம்பிடிக்கும் பக்தர்கள் 6 மணிக்கு மேல் கல்லாகும் மனிதர்கள் எங்கே தெரியுமா?அலறியடித்து ஓட்டம்பிடிக்கும் பக்தர்கள் 6 மணிக்கு மேல் கல்லாகும் மனிதர்கள் எங்கே தெரியுமா?

ஏழுமலையானின் வியப்பூட்டும் மர்மங்கள் குறித்து தெரியுமா?(விடியோ)ஏழுமலையானின் வியப்பூட்டும் மர்மங்கள் குறித்து தெரியுமா?(விடியோ)

திருப்பதியில் இருப்பது உண்மையில் யார் தெரியுமா?திருப்பதியில் இருப்பது உண்மையில் யார் தெரியுமா?

இந்த எடத்துல அணைய போட்டா கர்நாடகா நம்மகிட்ட தண்ணிக்கு கெஞ்சும் இனி!இந்த எடத்துல அணைய போட்டா கர்நாடகா நம்மகிட்ட தண்ணிக்கு கெஞ்சும் இனி!

Read more about: travel mount
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X