Search
  • Follow NativePlanet
Share
» »தமிழ்நாடு மற்றும் கேரளாவில் உள்ள 'சீப்'ஆன இடங்கள் !!

தமிழ்நாடு மற்றும் கேரளாவில் உள்ள 'சீப்'ஆன இடங்கள் !!

By Naveen

இந்த உலகில் கனவுகளை நிஜமாக்க தடையாக இருக்கும் முக்கியமான விஷயம் பணம் தான். அதுவும் கல்லூரியில் படிக்கும் போது சிறகடித்து பறக்கத்துடிக்கும் நமக்கு பணம் எப்போதுமே பிரச்சனையாகத்தான் இருக்கும். குறிப்பாக நண்பர்களுடன் பயணம் போக பணம் பெரும்தடையாக இருக்கும். குறைந்தது சில ஆயிரங்கள் இல்லாமல் பிரபலமான சுற்றுலாத்தலங்களுக்கு செல்லவே முடியாது. இருந்தாலும் இளமை ஊஞ்சலாடும் பருவத்தில் பயணம் செய்யாமல் இருக்கவும் முடியாது?. என்ன செய்வது?.

தமிழ்நாடு, கேரளா மற்றும் கர்நாடகாவில் மிகக்குறைந்த செலவில் சுற்றிப்பார்க்க முடியும் சுற்றுலாத்தளங்கள் பற்றிய பயண தகவல்களை தெரிந்துகொள்வோம் வாருங்கள். இங்கே சுற்றுலாத்தலங்கள் பற்றிய முழுமையான பயண தகவல்கள் அடங்கிய தமிழ்பயண வழிகாட்டியின் சுட்டிகள் கொடுக்கப்பட்டுள்ளன. இவற்றை கிளிக் செய்து உங்களுக்கு விருப்பமான இடங்களை பற்றிய தகவல்கள், அங்கிருக்கும் ஹோட்டல்கள், அதனை எப்படி சென்றடைவது போன்ற பயனுள்ள தகவல்களை தெரிந்துகொள்ளலாம்.

ஹம்பி

ஹம்பி

கர்னாடக மாநிலத்தில் அமைந்திருக்கும் ஹம்பி விஜயநகர பேரரசின் உன்னதத்தை நமக்கு எடுத்துச் சொல்லும் ஓர் அற்புதமான இடமாகும். இங்கே நாம் மனிதனால் உருவாக்கப்பட்ட மிகச்சிறந்த சிற்பங்களை காணலாம்.

கோவளம்:

கோவளம்:

கடவுளின் சொந்த தேசம் என்று புகழப்படும் கேரளத்தில் உள்ள மிகச்சிறந்த கடற்கரை கோவளம் கடற்கரை ஆகும். நாவுற வைக்கும் அதிசுவையான கேரளத்து உணவுகளுக்கும் இந்நகரம் பிரபலமானதாகும்.

கன்னியாகுமரி

கன்னியாகுமரி

இந்திய திருநாட்டின் தென்கோடி முனையான கன்னியாகுமரிக்கு வாழ்கையில் ஒருமுறையேனும் நிச்சயம் வரவேண்டும். வானுயர்ந்த வள்ளுவர் சிலை, விவேகானந்தர் மண்டபம், சுசீந்திரம் கோயில் போன்றவை இங்கிருக்கும் முக்கிய சுற்றுலாத்தலங்கள் ஆகும்.

வேடந்தாங்கல் !!

வேடந்தாங்கல் !!

சில நாட்களாக பெய்த கனமழையால் தமிழகமே புத்துயிர் பெற்றிருக்கிறது. இதனால் வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயத்திற்கு வரும் பறவைகளின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது. பறவைகளை புகைபப்டம் எடுப்பதில் ஆர்வம் உடையவராக இருந்தால் உடனே வேடந்தாங்கலுக்கு கிளம்புங்கள்.

திருநெல்வேலி

திருநெல்வேலி

என்றும் வற்றா தாமிரபரணி ஆறு பாயும் திருநெல்வேலி இன்றும் மண் வாசனை மாறா நகரம் ஆகும். பசுமை பொங்கும் வயல்களும், ஆன்மீக திருத்தலங்களும் இங்கே நிறைந்திருக்கின்றன.

நெல்லையப்பர் கோயிலுக்கு அருகில் உள்ள இருட்டுக்கடையில் கிடைக்கும் அல்வா உலகப் பிரசித்தம்.

பெங்களுரு !!

பெங்களுரு !!

நவீன இந்தியாவின் தலைநகரம் பெங்களுரு. பேரழகு மிக்க பூங்காக்கள், வானுயர நிற்கும் கண்ணாடிச்சுவர் கொண்ட கட்டிடங்கள் என ஒரு அற்புதமான ரசனைக் கலவையாகும் இந்நகரம். பெங்களுருவில் வாழாத இளமை பால் !! என்ற புதுமொழி எத்தனை உண்மை என்பதை உணர ஒருமுறை அவசியம் வாருங்கள்.

தலசேரி

தலசேரி

மலபார் கடற்கரையில் இருக்கும் முக்கியமான நகரம் தான்தலசேரி. மலபாரின் பாரிஸ் என்றழைக்கப்படும் தலசேரி ஒரு காலத்தில் மிகமுக்கியமான மசாலா பொருட்கள் வணிப ஸ்தலமாக இருந்திருக்கிறது.

இங்கு கிடைக்கும் 'தலசேரி பிரியாணி' கேரளாவில் நமக்கு கிடைக்கும் அதிசுவையான உணவுகளில் ஒன்றாகும்.

ஏற்காடு

ஏற்காடு

ஏழைகளின் ஊட்டி என்றழைக்கப்படும் ஏற்காடு இன்று தமிழகத்தில் சாகச விளையாட்டுகளுக்கு சிறந்த இடமாக பிரபலமாகி வருகிறது.

ஊட்டி, கொடைக்கானலுக்கு சுற்றுலா சென்று அலுத்துப்போனவர்கள் இங்கே செல்லலாம்.

கோகர்ணா!!

கோகர்ணா!!

கர்னாடக மாநிலத்தில் இருக்கும் குட்டி கோவா தான் இந்தகோகர்ணா. கோவாவில் இருப்பது போன்றே அற்புதமான கடற்கரைகள் இங்கும் இருக்கின்றன.

கோவா செல்ல முடியாதவர்கள் இந்த இடத்திற்கு தாரளமாக செல்லலாம். இன்னும் அதிகம் பிரபலமாகியிராத கோகர்னாவில் தங்குவதற்கும், உணவு மற்றும் போக்குவரத்திற்கும் குறைந்த அளவே செலவாகும்.

பாண்டிச்சேரி

பாண்டிச்சேரி

தமிழ்நாட்டில் இருந்துகொண்டு குட்டி பிரான்ஸ் ஆன பாண்டிச்சேரிக்கு செல்லாமல் இருப்பது குற்றத்தினும் குற்றமாகும். குட்டித்தீவு, பாண்டிச்சேரி பீச், மணக்குள விநாயகர் கோயில், ஆரோவில்லே தியான மண்டபம் மற்றும் அழகிய பிரஞ்சு கால கட்டிடங்கள் உள்ள வீதிகள் போன்ற இடங்களுக்கு கட்டாயம் செல்ல வேண்டும்.

தேக்கடி

தேக்கடி

தமிழக-கேரள எல்லையில் இருக்கும் இயற்கை பொக்கிஷம் தான் தேக்கடி ஆகும். இங்கிருக்கும் பெரியார் ஏரியில் ஆதிகால மனிதன் போல மூங்கில் மிதவை படகில் பயணம் மேற்கொள்ளலாம்.

தஞ்சை !!

தஞ்சை !!

தமிழரின் பெருமையை அறிந்துகொள்ள தமிழராய் பிறந்த ஒவ்வொருவரும் வரவேண்டிய இடம் தஞ்சை பெரிய கோயிலாகும்.

இங்கே சொல்லப்பட்டிருக்கும் இடங்களுக்கு மிக குறைந்த செலவில் சென்றுவர முடியும். இந்தியாவில் உள்ள சுற்றுலாத்தலங்கள் பற்றிய முழுமையான தகவல்களை தமிழில் தெரிந்துகொள்ள/ என்ற இணையதளத்துக்கு வாருங்கள்.

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X