Search
  • Follow NativePlanet
Share
» »காதல் ததும்பும் அழகிய செம்பரா சிகரம்

காதல் ததும்பும் அழகிய செம்பரா சிகரம்

தீண்டப்படாத, பசுமை போர்த்திய இயற்கையின் அழகுக்கு முன்னாள் இவ்வுலகில் எதுவுமே நிகராகாது. நகரத்தில் கான்கிரீட் காடுகளில் வாழும் மனிதர்களாகிய நமக்கு இயற்கையின் அழகை ரசிக்கவும் மறந்துவிட்டது. சாவி போட்ட கடிகாரமாக சுழன்றுவரும் நாம் சில நாட்களேனும் இந்த நரகமயமான நகர வாழ்கையில் இருந்து தப்பித்து இயற்கை அன்னையின் மடியில் துயில் கொள்வோம் வாருங்கள்.

கடவுளின் சொந்த தேசமான கேரளத்தில் பசுமை போர்த்திய அழகிய மலை ஒன்றுக்கு மனதுக்கும் உடலுக்கும் புத்துணர்ச்சி தரக்கூடிய சுற்றுலா ஒன்று செல்வோம் வாருங்கள்.

செம்பரா சிகரம் :

செம்பரா சிகரம் :

கேரள மாநிலத்தில் உள்ள வயநாடு மாவட்டத்தில் இருக்கிறது இந்த செம்பரா சிகரம். மேற்கு தொடர்ச்சி மலையின் ஒரு பகுதியாக நீலகிரி மலைகளை ஒட்டி அமைந்திருக்கும் இந்த செம்பரா சிகரம் தான் மலைகள் சூழ்ந்த நகரமான வயநாட்டின் மிக உயரமான சிகரமாகும்.

Photo:Sarath Kuchi

செம்பரா சிகரம் :

செம்பரா சிகரம் :

இந்த சிகரமானது கடல்மட்டத்தில் இருந்து 6,000 அடி உயரத்தில் அமைந்திருக்கிறது. வயநாடு மாவட்டத்தின் தலைநகரமான கல்பேட்டாவில் இருந்து வெறும் 8 கி.மீ தொலைவில் அமைந்திருக்கிறது.

Photo:Sarath Kuchi

செம்பரா சிகரம் :

செம்பரா சிகரம் :

கல்பெட்டாவில் இருந்து இந்த சிகரத்தின் அடிவாரம் இருக்கும் ஊரான மேப்படியை அடைந்து அங்கிருந்து இந்த சிகரத்தில் மலையேற்ற பயணத்தை துவங்கலாம். கேரளாவில் டிரெக்கிங் செய்ய விரும்புகிறவர்களுக்கு மத்தியில் மிகவும் பிரபலாமான ஓரிடமாக இந்த செம்பரா சிகரம் திகழ்கிறது .

Photo:Sankara Subramanian

செம்பரா சிகரம் :

செம்பரா சிகரம் :

இந்த செம்பரா சிகர மலையேற்றத்தின் சிறப்பே இங்குள்ள காதல் ஏரி தான். செம்பரா சிகரத்தில் இருக்கும் இந்த ஏரியானது இயற்கையாகவே காதல் இதய வடிவத்தில் அமைந்திருக்கிறது. மேலும் இந்த ஏரியில் இருந்து வயநாட்டை மொத்தமாக கண்டு ரசிக்கவும் முடியும்.

Photo:Karthik Narayana

செம்பரா சிகரம் :

செம்பரா சிகரம் :

இந்த டிரெக்கிங் பயணத்தை மேற்கொள்வதற்கு முன்பாக இங்குள்ள வனச்சரக அலுவலகத்தில் உரிய அனுமதி பெற வேண்டியதும் அவசியமாகும். மலையேற்றத்தில் ஈடுபடுகிறவர்களுக்கு உதவியாக மாநில சுற்றுலாத்துறை மலையேற தேவையான உபகரணங்களை வழங்குகிறது.

Photo:Sankara Subramanian

செம்பரா சிகரம் :

செம்பரா சிகரம் :

உங்கள் காதலியோடு அல்லது மனைவியுடனோ எங்காவது அழகான இடத்திற்கு செல்ல ஆசைப்பட்டால் நிச்சயம் வயநாட்டில் இருக்கும் இந்த செம்பரா ஏரிக்கு வாருங்கள். பேரழகு நிறைந்த காதல் ஏரியில் மனதுக்கு மிகவும் பிடித்தவருடன் நேரம் செலவிடுவதை விடவும் சிறந்த விஷயம் வேறேதாவது இருக்க முடியுமா என்ன? .

Photo:Sankara Subramanian

எங்கே அமைந்திருக்கிறது ?:

எங்கே அமைந்திருக்கிறது ?:

இந்த செம்பரா சிகரமானது கொல்லேகள் - மைசூர்- கோழிகோடு சாலையான NH 212 வில் இருந்து 11 கி.மீ தொலைவில் அமைந்திருக்கிறது. கேரள - கர்நாடக எல்லையை ஒட்டி அமைந்திருப்பதால் இரண்டு மாநிலங்களில் இருந்தும் பரவலாக பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

Photo:Sarath Kuchi

மற்ற சுற்றுலாத்தலங்கள் :

மற்ற சுற்றுலாத்தலங்கள் :

இந்த செம்பரா சிகரத்தை தவிர வயநாட்டில் மூன்று லட்சம் வருடங்களுக்கு முன்பு மனிதன் வாழ்ந்ததாக சொல்லப்படும் எடக்கல் குகைகள், ஆயிரம் ஆண்டுகள் பழமையான மகா விஷ்ணுவின் கோயிலான திருநெல்லி, குருவதீப் ஓடை போன்ற இடங்களும் சுற்றிப்பார்க்க சிறந்தவையாகும்.

Photo: Flickr

செம்பரா சிகரம் :

செம்பரா சிகரம் :

செம்பரா சிகரத்தின் சில அழகிய புகைபப்டங்களின் தொகுப்பு.

Photo:Sarath Kuchi

செம்பரா சிகரம் :

செம்பரா சிகரம் :

செம்பரா சிகரத்தின் சில அழகிய புகைபப்டங்களின் தொகுப்பு.

Photo:Sarath Kuchi

செம்பரா சிகரம் :

செம்பரா சிகரம் :

செம்பரா சிகரத்தின் சில அழகிய புகைபப்டங்களின் தொகுப்பு.

Photo:Sankara Subramanian

செம்பரா சிகரம் :

செம்பரா சிகரம் :

செம்பரா சிகரத்தின் சில அழகிய புகைபப்டங்களின் தொகுப்பு.

Photo:Sankara Subramanian

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X