Search
  • Follow NativePlanet
Share
» »சென்னை டூ மும்பை - ஒரு நீண்ட பயணம்!!!

சென்னை டூ மும்பை - ஒரு நீண்ட பயணம்!!!

By

தேசிய நெடுஞ்சாலை 4 மும்பையையும், சென்னை மாநகரையும் இணைக்கிறது. 1235 கி.மீ நீளம் கொண்ட இந்தச் சாலை 4 மாநிலங்களின் ஊடாக செல்கிறது.

அதாவது மகாராஷ்டிரா, கர்நாடகா, ஆந்திரப் பிரதேசம், தமிழ்நாடு ஆகிய மாநிலங்களின் முக்கிய நகரங்களின் வழியே செல்லும் இந்த நெடுஞ்சாலை இந்திய அரசின் தங்கநாற்கரச் சாலைத் திட்டத்தின் ஒரு பகுதியாகும்.

நீங்கள் சென்னையிலிருந்து, மும்பைக்கு காரில் ஒரு நீண்ட பயணத்தை மேற்கொள்ள விரும்பினால் தேசிய நெடுஞ்சாலை 4 உங்களுக்கு ஒரு அற்புதமான அனுபவத்தை கொடுக்கக் காத்திருக்கிறது!

கொச்சி டூ மும்பை = 36 சுற்றுலாத் தலங்கள்!!!

சென்னை

சென்னை

சென்னையிலிருந்து தொடங்கும் இந்தப் பயணம் 1235 கி.மீ நீண்டு செல்லப் போகிறது. நீங்க ரெடியா?...

சென்னையின் சுற்றுலாத்தலங்கள்

படம் : Pratik Gupte

ராணிப்பேட்டை

ராணிப்பேட்டை

ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் பெரிய ராணுவத்தளமாக இருந்த காரணத்தால் ராணுவ பேட்டை என அழைக்கப்பட்டு, அதுவே பின்பு ராணிப்பேட்டை என்று மாறியதாக சொல்லப்படுகிறது. இந்த நகரம் வேலூர் மாவட்டத்தில் உள்ளது.

படம் : Santhosh Janardhanan

வேலூர்

வேலூர்

வேலூரில் வேலூர் கோட்டை, ஸ்ரீபுரம் தங்கக்கோயில், மணிக்கூண்டு, அரசு அருங்காட்சியகம், ஃப்ரெஞ்சு பங்களா, முத்து மண்டபம் என பல்வேறு சுற்றுலாத் தலங்கள் உள்ளன.

வேலூரின் சுற்றுலாத்தலங்கள்

சித்தூர்

சித்தூர்

சித்தூர் மூலமாக நாம் இப்போது ஆந்திர மாநிலத்தில் நுழைகிறோம். திருப்பதி, காளஹஸ்தி போன்ற புகழ்பெற்ற ஆன்மிக ஸ்தலங்கள் சித்தூர் மாவட்டத்தில்தான் அமைந்திருக்கின்றன. அதுமட்டுமல்லாமல் பிரபலமான ஷூட்டிங் ஸ்பாட்டான தலக்கோணம் அருவி சித்தூரில்தான் உள்ளது.

படம் : Vinoth Chandar

கோலார்

கோலார்

கர்நாடகாவின் கிழக்கு வாசல் என்று அழைக்கப்படும் தங்கச்சுரங்கமான கோலார் நகரம் மூலமாக நாம் கர்நாடகாவில் காலடி எடுத்து வைத்துள்ளோம்.

கோலாரின் சுற்றுலாத்தலங்கள்

படம் : Shailesh.patil

பெங்களூர்

பெங்களூர்

பெங்களூரில் கமர்ஷியல் தெரு, லால் பாக், காளை கோயில், UB சிட்டி, இஸ்கான் கோயில் ஆகியவை கண்டிப்பபக பார்க்க வேண்டிய இடங்கள்.

பெங்களூரின் சுற்றுலாத்தலங்கள்

பெங்களூர் ஹோட்டல் டீல்கள்

தும்கூர்

தும்கூர்

பெங்களூரிலிருந்து 70 கி.மீ தொலைவில் உள்ளது தும்கூர் நகரம். தேசிய நெடுஞ்சாலை 4-இன் வழித்தடத்திலேயே தும்கூரில் மிகப்பெரிய ஆஞ்சநேயர் சிலையுடன் ஒரு அனுமார் கோயில் உள்ளது.

படம் : Manjeshpv

ஹிரியூர்

ஹிரியூர்

கர்நாடக மாநிலத்தின் பழமையான அணையாக கருதப்படும் மாரிக்கனிவே அணை ஹிரியூர் தாலுக்காவில்தான் அமையப்பெற்றுள்ளது. இந்த அணை வேதாவதி ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ளது.

படம் : Urdangaray

சித்ரதுர்கா

சித்ரதுர்கா

சித்ரதுர்கா கோட்டைக்காக புகழ்பெற்ற சித்ரதுர்கா நகரம் பெங்களூரிலிருந்து 200 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது.

படம் : Nagarjun Kandukuru

தாவணகெரெ

தாவணகெரெ

பெங்களூரிலிருந்து 265 கி.மீ தொலைவில் தாவணகெரெ அமைந்துள்ளது.

படம் : Irrigator

ஹாவேரி

ஹாவேரி

ஹாவேரி என்றால் கன்னட மொழியில் 'பாம்புகளின் உறைவிடம்' என்று அர்த்தம். இது பெங்களூரிலிருந்து 340 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது.

படம் : Dineshkannambadi

ஹுப்பள்ளி

ஹுப்பள்ளி

ஆங்கிலத்தில் ஹுப்ளி என்றழைக்கப்படும் ஹுப்பள்ளி நகரம் தென்னிந்தியாவின் முக்கியமான நகரங்களில் ஒன்றாகும்.

ஹுப்பள்ளியின் சுற்றுலாத்தலங்கள்

படம் : Syed Zohaibullah

பெளகாவி

பெளகாவி

பெல்காம் என்று பரவலாக அறியப்படும் பெளகாவி நகரம், கர்நாடகாவின் மிகப்பெரிய நகரங்களில் ஒன்றாகும்.

படம் : Manjunath Doddamani Gajendragad

கோகாக்

கோகாக்

பெளகாவி மாவட்டத்தில் உள்ள கோகாக் நகரம் பெளகாவி நகரிலிருந்து 70 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது. இந்த நகரம் கோகாக் அருவிக்காக மிகவும் புகழ்பெற்றது.

படம் : RameshSharma1

கோலாப்பூர்

கோலாப்பூர்

கோலாப்பூர் மூலமாக நாம் இந்தப் பயணத்தில் மஹாராஷ்டிராவுக்குள் நுழைகிறோம். கோலாப்பூர் நகரத்தை மஹாராஷ்டிரா மாநிலத்தின் ஆன்மீக அடையாளச் சின்னம் என்றே சொல்லலாம். புராதனமான பழம்பெருமை வாய்ந்த ஆலயங்கள், அமைதி தவழும் பூங்காங்கள், வரலாற்றுப் பின்னணியை உடைய கோட்டைகள் மற்றும் அரண்மனைகள் என்று பல அம்சங்களை கோலாப்பூர் நகரம் கொண்டுள்ளது.

கோலாப்பூரின் சுற்றுலாத்தலங்கள்

கோலாப்பூர் ஹோட்டல் டீல்கள்

படம் : kolhapurtourism

கராட்

கராட்

மஹாராஷ்டிரா மாநிலத்தின் சதாரா மாவட்டத்தில் கொய்னா நதியும், கிருஷ்ணா நதியும் சங்கமிக்கும் இடத்தில் கராட் நகரம் அமைந்துள்ளது. ப்ரீத்தி சங்கமம் என்று அழைக்கப்படும் இந்த சங்கமத்தை காண கண்கோடி வேண்டும்.

படம் : Nilrocks

சதாரா

சதாரா

சதாரா என்னும் சொல்லுக்கு ஏழு மலைகள் என்பது பொருளாகும். ஜரண்டேஷ்வர், யவடேஷ்வர், அஜிங்க்யாத்ரா, கிட்லிச்சா டோங்கார், சஜ்ஜன்காட், பெத்யாச்சா பைரோபா மற்றும் நக்டிச்சா டோங்கார் போன்றவை அந்த ஏழு மலைகளாகும். இந்த நகரம் காஸ் பள்ளத்தாக்குக்காக (பூக்களின் பள்ளத்தாக்கு) உலகப் புகழ்பெற்றது.

சதாராவின் சுற்றுலாத்தலங்கள்

சதாரா ஹோட்டல் டீல்கள்

படம் : Sebastian Joseph

புனே

புனே

புனித நகரம் என்ற பொருள்படும் புண்ணியநகரா என்ற சொல்லிலிருந்து இந்த புனே என்ற பெயர் பிறந்துள்ளது. மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில், மஹாராஷ்டிரா மாநிலத்தில் கடல் மட்டத்திலிருந்து சுமார் 560 அடி உயரத்தில் புனே நகரம் அமைந்துள்ளது.

புனேவின் சுற்றுலாத் தலங்கள்

புனே ஹோட்டல் டீல்கள்

படம்

பன்வேல்

பன்வேல்

மஹாரஷ்டிராவின் ராய்கட் மாவட்டத்தில் உள்ள பன்வேல் நகரம் கொங்கன் பிரதேசத்தின் நுழைவாயிலாக திகழ்ந்து வருகிறது.

படம் : Pradeep717

மும்பை

மும்பை

அட்டகாசமான சுற்றுலாத் தலங்களையெல்லாம் கடந்து இறுதியாக மும்பைக்கு மாநகரத்துக்கு வந்துவிட்டோம். அப்படியே மும்பையையும் சுற்றிப்பார்த்து விட வேண்டியதுதான்!!!

மும்பையின் சுற்றுலாத் தலங்கள்

மும்பை ஹோட்டல் டீல்கள்

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X