Search
  • Follow NativePlanet
Share
» »வானமே எல்லை: சென்னை - மேட்டுப்பாளையம் - ஊட்டி

வானமே எல்லை: சென்னை - மேட்டுப்பாளையம் - ஊட்டி

ஊட்டி, இந்த பேரக்கேட்டாலே மனசுல ஒரு சந்தோசம் வரும். வேலை, டென்ஷன், நெரிக்கும் டிராபிக், நைட்லயும் வேர்க்க வைக்கும் சூடு இதை எல்லாம் மறந்துட்டு நண்பர்களோட ஜாலியா இந்தவார விடுமுறைக்கு ஊட்டிக்கு ஒரு சின்ன ட்ரிப் போயிட்டு வரலாம்னு நினைக்கறீங்களா. வாங்க சென்னையில இருந்து ஊட்டிக்கு ஒரு அருமையான சாலைப்பயணம் போயிட்டு அப்படியே ஊட்டில கண்டிப்பா பார்க்க வேண்டிய இடங்களையும் பார்த்துட்டு வரலாம். சென்னைல இருந்து ஊட்டி போக சிறந்த வழிகள் எது, சீக்கிரம் போக கூடிய வழி எது, ரோடு மேப் ஆகியவற்றை தெரிந்து கொள்வோம்.

வெள்ளிக்கிழமை சிறப்பு சலுகை: பயண டிக்கெட்டுகளில் 50% வரை தள்ளுபடி பெற இங்கே கிளிக்குங்கள்

 சென்னை டு ஊட்டி:

சென்னை டு ஊட்டி:

சென்னையில் இருந்து ஊட்டி வர இரண்டு சிறந்த வழிகள் உள்ளன. ஒன்று சென்னையில் இருந்து தின்டிவனம், உளுந்தூர்பேட்டை வழியாக சேலம் வந்து அங்கிருந்து கோயம்பத்தூர், மேட்டுப்பாளையம் வழியாக ஊட்டியை அடைவது. 545கி.மீ தூரமுள்ள இந்தவளியில் சென்றால் ஊட்டியை அடைய 10 மணிநேரம் ஆகும்.

இரண்டாவது வேலூர், கிருஷ்ணகிரி வழியாக மேட்டூரை அடைந்து அங்கிருந்து அந்தியூர் மேட்டுப்பாளையம் வழியாக குன்னூர் தாண்டி ஊட்டியை அடைவது. 532கி.மீ தூரமுள்ள இந்த வழியாக சென்றால் ஊட்டியை பத்தரை மணிநேரத்தில் அடையலாம்.

போகும் வழியிலும் சுற்றிப்பார்க்க நல்ல இடங்கள் இருப்பதால் நாம் இரண்டாவது வழியாகவே பயணத்தை தொடருவோம்.

Photo:Sivanesan S

சென்னை டு கிருஷ்ணகிரி:

சென்னை டு கிருஷ்ணகிரி:

சென்னையில் இருந்து ஆசிய நெடுஞ்சாலை 45 இல் (AH45) பயணத்தை துவங்கினால் அரக்கோணம், வேலூர், ஆம்பூர் வழியாக நான்கு மணிநேரத்தில் 252 கி.மீ தூரத்தில் உள்ள கிருஷ்ணகிரியை அடையலாம். இந்த வழியில் வரும் போது ஆம்பூரில் புகழ்பெற்ற சிக்கன் பிரியாணியை சுவைக்க மறந்து விடாதீர்கள்.

கிருஷ்ணகிரி - மேட்டூர்:

கிருஷ்ணகிரி - மேட்டூர்:


கிருஷ்ணகிரியில் இருந்து அடுத்த கட்டமாக மேட்டூரை நோக்கி உங்கள் காரை செலுத்துங்கள். கிருஷ்ணகிரியில் இருந்து தருமபுரியை கடந்து 110 கி.மீ தொலைவில் இருக்கும் மேட்டுரை அடைவீர்கள். அங்கே நம் தமிழ்நாட்டுக்கே உயிர் ஆதாரமாக விளங்கும் காவேரி ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள மேட்டூர் அணையை பார்க்க தவற விடாதீர்கள்.

Photo:Harikrishnan Tulsidas

மேட்டூர் - மேட்டுப்பாளையம்:

மேட்டூர் - மேட்டுப்பாளையம்:


அடுத்து நாம் மேட்டூரில் இருந்து ஊட்டி மலை அடிவாரமான மேட்டுப்பாளையம் நோக்கி பயணத்தை தொடரலாம். மேட்டூரில் இருந்து பவானி, அவினாசி வழியாக மேட்டுப்பாளையம் வருவதை விடவும், அந்தியூர், சத்தியமங்கலம் வழியாக மேட்டூரை அடைவது சுலபமான வழி. இந்த வழியில் சென்றால் இரண்டரை மணி நேரத்தில் 130 கி.மீ தூரத்தில் உள்ள மேட்டுப்பாளையத்தை சுலபமாக அடையலாம்.

பவானி சாகர் அணை:

பவானி சாகர் அணை:

இந்த வழியில் சத்திய மங்கலத்தில் இருந்து 16 கி.மீ தூரத்தில் பவானி சாகர் அணை அமைந்திருக்கிறது. தமிழ் நாட்டின் முக்கிய அணைகளில் ஒன்றான இங்கு அருமையான பூங்கா ஒன்றும் அமைக்கப்பட்டுள்ளது. தவிர் அணைக்கு பக்கத்தில் அணையில் இருந்து பிடிக்கப்பட்ட சுவையான மீன்கள் சாப்பிட கிடைக்கும். குழந்தைகளுடன் சென்று வர அருமையான ஒரு இடம் இந்த பவானி சாகர் அணை. நேரமிருந்தால் அவசியம் சென்று வாருங்கள்.

Photo:Pratheept2000

சிறுமுகை:

சிறுமுகை:

மேட்டுப்பாளையத்திற்கு 10 கி.மீ முன் வரும் சிறிய கிராமம் தான் சிறுமுகை. இன்னும் நகரத்தின் தடையம் இல்லாத கிராமம் தான் என்றாலும் இங்கு காஞ்சிபுரத்திற்கு இணையாக பட்டு சேலை தயாரிப்பு நடக்கிறது. உண்மையில் காஞ்சீபுரம் பட்டு என சொல்லி விற்கப்படும் சேலைகளில் முக்கால் வாசி சிறுமுகையில் உருவானது தான்.

Photo:mary jane watson

மேட்டுப்பாளையம்:

மேட்டுப்பாளையம்:

தமிழ் நாட்டில் இருந்து ஊட்டி செல்லும் யாரும் மேட்டுப்பாளையம் செல்லாமல் ஊட்டிக்கு போக முடியாது. நீலகிரி மலை அடிவாரத்தில் அமைந்திருக்கும் இந்த நகரம் சமீப காலங்களில் கோவையின் முக்கியமான நகரங்களில் ஒன்றாக உருவெடுத்துள்ளது.

Photo:Challiyan

ஊட்டி ரயில்:

ஊட்டி ரயில்:

என்னதான் அதிநவீன வசதி கொண்ட கார்கள் வந்து விட்டாலும் நூற்றாண்டு பழமை வாய்ந்த ஊட்டி மலை ரயிலில் பயணம் செய்து ஊட்டியை அடைவதில் இருக்கும் திருப்தியும், பெருமையும் வேறெதிலும் நமக்கு வராது. மேட்டுப்பாளையத்தில் இருந்து 26.கி.மீ தூரம் மொத்தம் 250க்கும் மேற்ப்பட்ட பாலங்களை கடந்து செல்கிறது. இந்தப்பயணத்தில் நாம் அற்புதமான இயற்க்கை காட்ச்சிகளை காண முடியும். ஷாருக்கான் நடித்த 'உயிரே' படத்தில் வரும் 'தக்க தைய்யா' பாடல் மொத்தமும் இந்த ரயிலில் தான் படமாக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. எப்போதும் கூட்டம் இருக்கும் இந்த ரயிலில் முன்பதிவு செய்து விட்டு செல்வது நல்லது.

Photo:Stephan Niewolik

மேட்டுப்பாளையம் டு ஊட்டி சாலைப்பயணம்:

மேட்டுப்பாளையம் டு ஊட்டி சாலைப்பயணம்:

மலை ரயிலில் அல்லாமல் சாலை வழியாக செல்ல வேண்டுமெனில் மேட்டுப்பாளையத்தில் இருந்து ஊட்டியை அடைய இரண்டு மணிநேரம் ஆகும். 52 கி.மீ தூரமுள்ள இந்த பயணம் கொஞ்சம் ஆபத்தானதும் கூட. எனவே நன்றாக கார் ஓட்டத் தெரிந்தவர்கள் இருப்பது அவசியம். மேலே சொன்ன பாதை குன்னூர் வழியாக செல்ல மட்டுமே. இது தவிர கோத்தகிரி வழியாக சென்றால் இன்னும் 10 கி.மீ தூரம் அதிகம் பயணிக்க வேண்டி இருக்கும்.

Photo:Zigg-E

ஊட்டி:

ஊட்டி:

சந்தேகமே இல்லாமல் தமிழ் நாட்டில் இருக்கும் மிகச்சிறந்த சுற்றுலாத்தலம் என்றால் அது ஊட்டி தான். சில்லென அடிக்கும் காற்று, பசுமை போர்த்திய புல் வெளிகள் என ஒரு குட்டி சொர்க்கம் இந்த ஊட்டி.

ஊட்டியில் நாம் சுற்றிப்பார்க்க ஏராளமான இடங்கள் உள்ளன. குடும்பமாக வருவதென்றாலும் சரி, தேனிலவு வருவதென்றாலும் சரி ஊட்டி எல்லோருக்கும் ஏற்ற நல்லதொரு இடமே. வாருங்கள் ஊட்டியில் இருக்கும் சில சுற்றுலாத்தளங்களை பற்றி தெரிந்து கொள்வோம்.

Photo:Satheeshkumar K

அவலாஞ்சி ஏரி:

அவலாஞ்சி ஏரி:

ஊட்டியில் இருந்து 28 கி.மீ தொலைவில் இருக்கும் அருமையான ஓரிடம் இந்த அவலாஞ்சி ஏரி. மற்ற இடங்களை போல அல்லாமல் இங்கே வர்த்தகத்தனம் இல்லை . தனிமையில் காதல் துணையுடன் அற்புதமான இயற்க்கை காட்சிகளை ரசிக்க விரும்புகிறவர்களுக்கு மிகச்சிறந்த இடம் இது. இங்கே நாம் மீன் பிடிக்கலாம், அற்புதமான சூரிய உதயத்தை ரசிக்க இரவு கேம்ப் அடித்து தங்கலாம். ஊட்டியில் கண்டிப்பாக பார்க்க வேண்டிய இடம் இது.

Photo:stonethestone

எமரால்ட் லேக்:

எமரால்ட் லேக்:

1990களில் இங்கே டூயட் பாடாத தமிழ் ஹீரோக்களே இருக்க முடியாது. ஊட்டியில் இருந்து 25 கி.மீ தொலைவில் அமைந்திருக்கும் இந்த ஏரி ஊட்டியின் முக்கியமான இடங்களில் ஒன்றாகும். சுற்றிலும் பசுமையான தேயிலைத்தோட்டங்கள், அருமையான இயற்கை காட்சிகள் என இங்கு வரும் சுற்றுலாப்பயணிகளுக்கு விருந்து படைக்கிறது இந்த ஏரி.

Photo:http://www.flickr.com/photos/sankaracs/

தொட்டபெட்டா:

தொட்டபெட்டா:

ஊட்டியில் இருக்கும் உயரமான மலை சிகரம் அடைந்திருக்கும் இடம் இந்த தொட்டபெட்டா. கடல் மட்டத்தில் இருந்து 8,200 அடி உயரத்தில் இது அமைந்திருக்கிறது. இங்கிருந்து பார்த்தால் கர்னாடக மாநிலத்தில் இருக்கும் சாமுண்டி மலைகளை நாம் பார்க்கலாம். இது ஊட்டியில் இருந்து 10 கி.மீ தூரத்தில் அமைந்திருக்கிறது.

Photo:Ananth BS

பொட்டானிகல் கார்டென்:

பொட்டானிகல் கார்டென்:

பொட்டானிகல் கார்டெனுக்கு வராத ஊட்டி பயணத்தை கற்பனை கூட செய்து பார்க்காதீர்கள். ஊட்டியின் சுற்றுலா அடையாளங்களில் ஒன்றாக மாறிப்போன இங்கு வகை வகையான பூக்களையும், பசுமையான பல்வேறு வகை மரங்களையும் பார்கலாம். உங்கள் குழந்தைகளுக்கு இந்த இடம் நிச்சயம் பிரமிப்பையும், மகிழ்ச்சியையும் ஏற்படுத்தும்.

Photo:Adam Jones Adam63

ஊட்டி ஸ்நாக்ஸ்

ஊட்டி ஸ்நாக்ஸ்

இவைகள் தவிர ஊட்டியின் பிரத்யேக உணவுகளான வறுக்கியையும், காக்லேட்டுகளையும் சுவைக்க மறந்து விடாதீர்கள். மனதுக்கும், உடலுக்கும் புத்துணர்வூட்டும் இந்த பயணம் உங்களுக்கு இனிமையான ஒன்றாக அமையும். இன்னும் சிறகடித்து பார்போம் வாருங்கள், பயணங்களுக்கு வானமே எல்லை.

Photo:Ajay Tallam

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X