Search
  • Follow NativePlanet
Share
» »சிக்மகளூர் - இயற்கையோடு கொஞ்சம் உறவாடி மகிழ்வோம்!!!

சிக்மகளூர் - இயற்கையோடு கொஞ்சம் உறவாடி மகிழ்வோம்!!!

By

கர்நாடக மாநிலத்தில் மேற்கு தொடர்ச்சி மலைகளின் அழகிய தோற்றங்களுக்கு சொந்தமான மலேநாடு பகுதியில் அமைந்துள்ள சிக்மகளூர் நகரம், இயற்கை எழிற்காட்சிகள் நிரம்பிய அட்டகாசமான சுற்றுலாத் தலமாகும்.

இங்கு புண்ணிய யாத்ரிக தலங்களிலிருந்து, காபி தோட்டங்கள், காட்டுயிர் பூங்கா, சாகச பொழுது போக்கு அம்சங்கள், அருவிகள், வனவிலங்கு சரணாலயங்கள் என பயணிகளுக்கு தேவையான அனைத்து விதமான அம்சங்களும் கொட்டிக்கிடக்கின்றன.

இயற்கையோடு உறவாடி மகிழ வெகு பொருத்தமான இடமாக திகழும் சிக்மகளூர் நகரத்துக்குள் செல்வோம் வாருங்கள்!!!

சிக்மகளூர் ஹோட்டல் டீல்கள்

சுற்றுலாத் தலங்கள்

சுற்றுலாத் தலங்கள்

பாபா புதன் கிரி, அம்ருதேஷ்வரா கோயில், மாணிக்யதாரா அருவி , முல்லையாநகரி மலை ஆகிய இடங்கள் சிக்மகளூரின் பிரதான சுற்றுலாப் பகுதிகளாக அறியப்படுகின்றன.

சிக்மகளூரின் சுற்றுலாத் தலங்கள்

படம் : Riju K

பாபா புதன் கிரி

பாபா புதன் கிரி

சிக்மகளூர் நகரத்திலிருந்து 28 கி.மீ தூரத்தில் உள்ள பாபா புதன் கிரிம் இந்துக்களுக்கும், முஸ்லிம்களுக்கும் ஒரே பொதுவான ஆன்மீக யாத்ரீக ஸ்தலமாக விளங்குகிறது. இங்கு வருகை தரும் பயணிகள் இந்த மலைகளில் சித்தர்களால் புனிதப்படுத்தப்பட்ட மூன்று குகைகளை பார்க்கலாம்.

படம் : Mithun P S

குகைகள்

குகைகள்

பாபா புதன் கிரி பகுதியில் அமைந்துள்ள குகைகள்.

படம் : sai sreekanth mulagaleti

அம்ருதேஷ்வரா கோயில்

அம்ருதேஷ்வரா கோயில்

சிக்மகளூரிலிருந்து 67 கி.மீ தொலைவில் அம்ருதேஷ்வரா கோயில் அமைந்துள்ளது. இந்தக் கோயில் ஹொய்சள வம்சத்தை சேர்ந்த இரண்டாம் வீர பல்லால என்ற அரசரால் 1196-ஆம் ஆண்டு கட்டப்பட்டுள்ளது. ஆனால் இந்தக் கோயிலுக்கு இதைக் கட்டிய சிற்பியான அம்ருதேஷ்வர தண்டநாயகரின் பெயர் வைக்கப்பட்டுள்ளது ஒரு ஆச்சரியமான விஷயமாகும்.

படம் : Dineshkannambadi

முல்லையாநகரி மலை

முல்லையாநகரி மலை

சிக்மகளூர் பகுதியில் உள்ள முல்லையாநகரி மலைதான் கர்நாடக மாநிலத்திலேயே உயரமான சிகரத்தைக்கொண்ட மலையாகும். முல்லையாநகரி மலை உச்சியை அடைய சுற்றுலாப் பயணிகள் சர்பதாரி எனும் மலையடிவாரத்திலிருந்து மலையேற்றத்தை துவங்க வேண்டும். மலையேற்றத்தை தவிர இப்பகுதியில் மௌன்டெயின் பைக்கிங் உள்ளிட்ட சாகச பொழுதபோக்கு அம்சங்களும் உள்ளன.

படம் : Riju K

டிரெக்கிங்

டிரெக்கிங்

முல்லையாநகரி சிகரத்துக்கு டிரெக்கிங் செல்லும் சுற்றுலாப் பயணிகள்.

படம் : Premnath Thirumalaisamy

உச்சியிலிருந்து....

உச்சியிலிருந்து....

முல்லையாநகரி சிகரத்தின் உச்சியிலிருந்து ஒரு காட்சி.

படம் : Vijay S

முத்தோடி வனத்துறை முகாம்

முத்தோடி வனத்துறை முகாம்

பத்ரா வனவிலங்கு சரணாலயத்தில் பிரசித்தி பெற்ற பகுதியாக இந்த முகாம் விளங்குகிறது. இது சிக்மகளூரிலிருந்து 32 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது.

படம் : Dineshkannambadi

மாணிக்யதாரா அருவி

மாணிக்யதாரா அருவி

சிக்மகளூரிலிருந்து 40 கி.மீ தொலைவில் பாபா புதான்கிரி மலை அருகே மாணிக்யதாரா அருவி அமைந்துள்ளது.

படம் : Sampigesrini

நீராடல்

நீராடல்

கோடை காலத்தில் நீர் வரத்து குறைவாக இருக்கும் மாணிக்யதாரா அருவியில் நீராடும் சுற்றுலாப் பயணிகள்.

படம் : sai sreekanth mulagaleti

சென்ட்ரல் காபி ரிசர்ச் இன்ஸ்டிட்யூஷன்

சென்ட்ரல் காபி ரிசர்ச் இன்ஸ்டிட்யூஷன்

130 ஹெக்டேர் பரப்பளவு கொண்ட CCRI ஆய்வு பண்ணையில் 80.26 ஹெக்டேர் பரப்பில் காபி தோட்டம் அமைந்துள்ளது. இதில் 28.94 ஹெக்டேருக்கு ரோபஸ்டா வகை காப்பியும், 51.32 ஹெக்டேர் பரப்பில் அராபிகா வகை காப்பியும் பயிரிடப்பட்டுள்ளது. ஒரு அதிநவீன உபகரணங்களுடன் கூடிய ஆய்வுக்கூடமும் காபி தோட்டங்கள் மற்றும் அது தொடர்பான இதர துறைகளுக்கான நூல்களுடன் கூடிய ஒரு நூலகமும் இங்கு உள்ளது.

படம் : prashantby

அய்யனகேரே ஏரி

அய்யனகேரே ஏரி

சிக்மகளூரிலிருந்து 20 கி.மீ தொலைவில் அய்யனகரே ஏரி அமைந்துள்ளது. இங்கு சுற்றுலாப் பயணிகள் மீன் பிடித்து மகிழலாம் என்பதோடு கூடாரம் அமைத்தும் தங்கலாம்.

சிக்மகளூர் செல்லும் வழி

சிக்மகளூர் செல்லும் வழி

சிக்மகளூர் செல்லும் வழியில் உள்ள ஒரு அழகிய வியூ பாயிண்ட்.

படம் : Abdulla Al Muhairi

காபி தோட்டங்கள்

காபி தோட்டங்கள்

சிக்மகளூரின் அழகிய காபி தோட்டங்கள்.

படம் : flickoholic

எங்கு தங்கலாம்?

எங்கு தங்கலாம்?

சிக்மகளூர் ஹோட்டல் டீல்கள்

படம் : gentlesound

சிக்மகளூரை எப்போது மற்றும் எப்படி அடைவது?

சிக்மகளூரை எப்போது மற்றும் எப்படி அடைவது?

எப்படி அடைவது?

எப்போது பயணிக்கலாம்?

படம் : Harsha S

    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X