Search
  • Follow NativePlanet
Share
» »தமிழ்நாட்டின் குளுகுளு அருவிகள்!!

தமிழ்நாட்டின் குளுகுளு அருவிகள்!!

தமிழ்நாட்டின் குளுகுளு அருவிகள்!!

By Staff

மலையுச்சியிலிருந்து ஆர்ப்பரித்து விழும் அருவியின் அழகையும், ஓங்காரமிட்டு கொட்டும் ஓசையையும் நாள் பூராவும் ரசித்துக்கொண்டிருக்கலாம்.

அந்த வகையில் பார்த்த மறு வினாடி உங்களை சொக்கவைக்கவும், பாறைகளில் விழுந்து சிதறும் சாரலில் உங்களை குளிரூட்டவும் எண்ணற்ற அருவிகள் தமிழ்நாட்டில் உங்களுக்காக காத்துக்கொண்டிருக்கின்றன.

நவராத்திரி - 9 இடங்களில் 9 விதமான கொண்டாட்டம்!நவராத்திரி - 9 இடங்களில் 9 விதமான கொண்டாட்டம்!

சில அருவிகளில் நீராடி மகிழலாம், ஆனால் சில அருவிகளை தூரத்திலிருந்து மட்டும்தான் பார்த்து ரசிக்க முடியும். அதேபோல சில அருவிகள் பயமூட்டும், சில அருவிகள் குளிரூட்டும்.

தமிழ்நாட்டில் அருவிகள் அவ்வப்போது பயமுறுத்தினாலும், பயணிகளை குளிரூட்டவும், களிப்பூட்டவும் சில அருவிகள் தவறுவதில்லை. இந்தப் பட்டியலில் என்னென்ன அருவிகள் தமிழ்நாட்டில் கட்டாயம் பார்க்க வேண்டும் என்பதை பற்றி காண்போம்.

அகஸ்தியர் அருவி, அம்பாசமுத்திரம்

அகஸ்தியர் அருவி, அம்பாசமுத்திரம்

அகஸ்தியர் அருவி திருநெல்வேலியிலிருந்து 53 கிலோமீட்டர் தொலைவிலும், அம்பாசமுத்திரத்திலிருந்து 13 கிலோமீட்டர் தூரத்திலும் அமைந்திருக்கிறது. அதோடு பாபநாசம் சிவபெருமான் கோயிலுக்கு மிக அருகில், 4 கி.மீ. தொலைவில் இருப்பதால் கோயிலிலிருந்து இந்த அருவியை நடந்தே சென்றடைய முடியும். இந்தப் பகுதியில் மூலிகைச் செடிகள் அதிகமாக காணப்படுவதால் அருவி நீரில் சரும வியாதிகளை போக்கும் சக்தி உள்ளதாக நம்பப்படுகிறது. மேலும் வெயில் காலம் வந்துவிட்டால் அகஸ்தியர் அருவியில் கூட்டம் அலைமோதும்.

கிளியூர் அருவி, ஏற்காடு

கிளியூர் அருவி, ஏற்காடு

கிளியூர் அருவி ஏற்காட்டில் இருந்து சுமார் 3 கி.மீ தொலைவில் சேர்வராயன் மலைத்தொடரில் அமைந்துள்ளது. இந்த அருவிக்கு சுற்றுலா வர ஜூலை முதல் நவம்பர் வரையிலான காலங்களே மிகவும் ஏற்றவை. ஏனெனில் பருவமழையின் காரணமாக நல்ல நீர்வரத்து காணப்படுவதுடன், 300 அடி உயரத்தில் இருந்து விழும் அருவியின் அற்புத காட்சி கண்களுக்கு விருந்தாக அமையும். இங்கு ஆள் நடமாட்டம் குறைவு என்பதால் நீங்கள் எவ்வளவு நேரம் வேண்டுமானாலும் அருவியில் குளித்து பொழுதை கழிக்கலாம். மேலும் மழைக்காலத்தில் மலையேற்றம் செய்யும்போது இங்குள்ள பாதைகள் வழுக்கும் என்பதால் கவனமாக இருப்பது அவசியம்.

மங்கீ ஃபால்ஸ், பொள்ளாச்சி

மங்கீ ஃபால்ஸ், பொள்ளாச்சி

மங்கீ ஃபால்ஸ் ஆனைமலை பகுதியில் கோயம்புத்தூரிலிருந்து 70 கிலோமீட்டர் தொலைவிலும், பொள்ளாச்சியிலிருந்து 27 கிலோமீட்டர் தூரத்திலும் அமைந்திருக்கிறது . இயற்கையாக அமைந்த அருவியான மங்கீ ஃபால்ஸில் பசுமையான காடுகள் மற்றும் கரடு முரடான பாறைகளை கொண்ட அருமையான மலையேற்ற பாதை ஒன்று உள்ளது. எனவே மலையேற்ற பிரியர்கள் திட்டமிட்டு நண்பர்கள் சகிதமாக இங்கு வந்தால் மறக்க முடியாத அனுபவமாக இருக்கும். மேலும் குழந்தைகளோடு பொழுதை கழிக்க ஏற்ற இடமான மங்கீ ஃபால்ஸ் செல்வதற்கு நுழைவுக்கட்டணமாக வெறும் 15 ரூபாயே வசூலிக்கப்படுகிறது.

சுருளி அருவி

சுருளி அருவி

தேனியிலிருந்து 43 கிலோமீட்டர் தொலைவில் உள்ள சுருளி அருவி தேனியின் முக்கியமான சுற்றுலாத் தலங்களில் ஒன்று. இந்த அருவியில் நீர்வரத்து ஜூன் முதல் அக்டோபர் வரையிலான காலங்களில் அதிகமாக காணப்படுவதால் இந்த காலங்களில் இங்கு சுற்றுலா வருவது சிறப்பானதாக கருதப்படுகிறது. இப்பகுதியில் 18 குகைகள் காணப்படுகின்றன. இவ்வருவியின் அருகே சுருளி வேலப்பர் கோயில், கோடிலிங்கம் லிங்கபர்வதவர்த்தினி கோயில் போன்ற கோயில்கள் உள்ளன. இதில் லிங்கபர்வதவர்த்தினி கோயிலில் கோடி லிங்கங்கள் வைக்க திட்டமிடப்பட்டுள்ளது. இப்போது சிறியதும் பெரியதுமாக மொத்தம் ஆயிரம் லிங்கங்கள் வைக்கப்பட்டுள்ளன.

தீர்பரப்பு அருவி, திருவட்டாறு

தீர்பரப்பு அருவி, திருவட்டாறு

தீர்பரப்பு அருவி கன்னியாகுமரியிலிருந்து 58 கிலோமீட்டர் தொலைவிலும், திருவட்டாறுக்கு அருகில் 10 கிலோமீட்டர் தூரத்திலும் அமைந்திருக்கிறது. இந்த அருவி வருடத்தில் 4 மாதங்கள் தவிற பிற மாதங்களில் வழிந்து ஓடுகின்றது. எனவே வளமை குறையாத இந்த அருவியை புகழ்வாய்ந்த சுற்றுலாத் தலமாக மாற்றுவதற்காக, சுற்றுலாத் துறை ஒரு குழந்தைகள் நீச்சல்குளத்தையும், ஒப்பணை அறையையும் இங்கு உருவாக்கி இருக்கிறது. இவ்வருவிக்கு அருகில் மஹாதேவர் கோவில் என்று அழைக்கப்படும் சிவன் கோவில் ஒன்று உள்ளது.

குற்றாலம்

குற்றாலம்

தமிழ்நாட்டில் குற்றாலம் அருவிக்கு அறிமுகமே தேவையில்லை. குற்றால அருவிகள் பேரருவி, சிற்றருவி, செண்பகாதேவி அருவி, தேனருவி, ஐந்தருவி, பழத்தோட்ட அருவி, புலியருவி, பழைய குற்றால அருவி, பாலருவி என்று ஒன்பது அருவிகளாக அறியப்படுகின்றன. இதில் பிரதான அருவியான பேரருவி 60 அடி உயரத்திலிருந்து விழுகிறது. இந்த அருவிகளில் ஜூன் மாதத்தில் தென்மேற்கு பருவகாலம் ஆரம்பித்தவுடன் நீர்வரத்து அதிகமாகும். எனவே ஜூன் மாதத்திலிருந்து மார்ச் மாதம் வரையிலும் குற்றாலம் வருவதற்கு ஏற்ற காலங்களாகும்.

ஒகேனக்கல் அருவி

ஒகேனக்கல் அருவி

ஒகேனக்கல் அருவி தர்மபுரியிலிருந்து 46 கிமீ தொலைவிலும், பெங்களூரிலிருந்து 3 மணி நேர பயண தூரத்திலும் அமைந்துள்ளது. இந்த அருவிப்பகுதியில் காணப்படும் கார்பனைட் பாறைகள் ஆசியாவில் மட்டுமல்லாமல் உலகிலேயே மிக பழமையானவையாகவும் கருதப்படுகின்றன. இங்கு கோடைக்காலத்தில் ஆற்றின் வேகம் குறையும் போது இந்த பகுதியில் உள்ள நீர்த்தேக்கங்களில் பரிசல் சவாரி செய்வது அற்புதமான அனுபவம். மேலும் அருவிக்கு அருகிலேயே அப்போதே நீரில் பிடிக்கப்படும் மீன்கள் உடனடியாக பயணிகளுக்கு பொரித்து தரப்படுவது மற்றொரு சுவாரசியம்.

திருமூர்த்தி அருவி

திருமூர்த்தி அருவி

திருமூர்த்தி அருவி கோயம்புத்தூருக்கு 86 கிலோமீட்டர் தொலைவிலும், உடுமலைப்பேட்டையிலிருந்து 21 கி.மீ தூரத்திலும் அமைந்திருக்கிறது. இந்த அருவிக்கு அருகில் பிரம்மா, விஷ்ணு, சிவன் ஆகிய மூன்று தெய்வங்களுக்கும் சேர்த்து ஒரே கோயிலாக எழுப்பப்பட்டுள்ள அமணலிங்கேஸ்வரர் கோயில் சுற்றுலாப் பயணிகளிடையே மிகவும் பிரபலம். இக்கோயிலுக்கு அருகே ஓடை ஒன்று பல காலமாக வற்றாமல் ஓடிக்கொண்டிருப்பதாக சொல்லப்படுகிறது.

மைசூரின் தசரா கொண்டாட்டங்கள்மைசூரின் தசரா கொண்டாட்டங்கள்

Read more about: waterfalls tamilnadu
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X