Search
  • Follow NativePlanet
Share
» »தனுஷ்கோடி - ஒரு துயரத்தின் சாட்சி!

தனுஷ்கோடி - ஒரு துயரத்தின் சாட்சி!

By Staff

இன்றைய தலைமுறையினர் சிலருக்கு மட்டுமே தனுஷ்கோடி என்ற ஊர் தமிழகத்தில் இருந்திருக்கிறது என்று தெரியும். அதனால், தனுஷ்கோடி என்ற தொலைந்து போன ஊரின் பின்னே இருக்கும் அந்த துயரத்தைப் பார்ப்போம்.

இன்று எத்தனையோ அறிவியல், தொழில்நுட்ப முன்னேற்றம் வந்த பின்பும் நம்மால் சென்னை வெள்ளத்தை தடுக்க முடியவில்லை. அப்படியிருக்க 50 ஆண்டுகளுக்கு முன் ஒரு சூறாவளி வந்து ஒரு ஊரையே விழுங்கப் போகிறது என்று யாருக்குத் தெரிந்திருக்கும். துயரமாக அது நடந்தது

1964'ஆம் ஆண்டு டிசம்பர் 23 அன்று மன்னார் வளைகுடாவில் ஏற்பட்ட புயல் காரணமாக ஆழிப் பேரலைகள் தனுஷ்கோடி நகரத்தை மூழ்கடித்தது. தனுஷ்கோடியையும் பாம்பனையும் இணைக்கும் இருப்புப்பாதை புயலில் அடித்துச் செல்லப்பட்டது. துரதிருஷ்டவசமாக, சென்னையிலிருந்து இராமேஸ்வரம் வந்து கொண்டிருந்த ரயிலும் அடித்துச் செல்லப்பட்டதில் அதில் பயணித்த நூற்றுக்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். அதிகாலையில் நடந்த இந்த இயற்கை சீற்றத்தால் இரண்டாயிரத்திற்கும் அதிகமானோர் உயிரிழந்தனர். இதன் பின்னர், தமிழ் நாடு அரசு, இந்த ஊரை வாழத் தகுதியற்றதாக அறிவித்தது.

இன்று:

தனுஷ்கோடி ஒரு அருங்காட்சியகம் போல், சிதிலமடைந்த தேவாலயம் மற்றும் சில கட்டிடங்களும், ஒரு துயரத்தின் மெளன சாட்சியாக இருக்கிறது. இன்றும் சில மீனவ குடும்பங்கள் வசிக்கின்றனர். இவர்கள், தனுஷ்கோடிக்கு வரும் சுற்றுலாப் பயணிகளை நம்பியே வாழ்கின்றனர். சுற்றுலா பயணிகளுக்கு மீன் பொறித்துத் தருவது உள்ளிட்டவற்றை செய்து வருகின்றனர்.

இந்த மாதம் அதிகம் படிக்கப்பட்ட கட்டுரைகள் கீழே

தனுஷ்கோடி

தனுஷ்கோடி

1964 புயலால் சிதிலமடைந்த தேவாலயம்!

Photo Courtesy :Chenthil

யாருமில்லாத தீவில் நந்தி ஒன்று சிவனுக்குகாக காத்திருக்கிறது

யாருமில்லாத தீவில் நந்தி ஒன்று சிவனுக்குகாக காத்திருக்கிறது

தேவாலயம் போல ஒரு சிவன் கோவிலும் இருந்திருக்கிறது. அதுவும் புயலால் அடித்துச் செல்லப்பட்டு விட்டது.

Photo Courtesy :Rohithriaz

கடற்கரை

கடற்கரை

ராமேஸ்வரத்தில் இருந்து 20 கி.மீ தொலைவில் இருக்கிறது தனுஷ்கோடி.

Photo Courtesy :Nsmohan

தனுஷ்கோடி

தனுஷ்கோடி

சிதைந்த தனுஷ்கோடி அருகே உள்ள அரிச்சல் முனை கடற்கரை.

Photo Courtesy :ArunElectra

தனுஷ்கோடி

தனுஷ்கோடி

தனுஷ்கோடி பேருந்து சாலை முடிவடையும் இடத்தில் உள்ள சிதலமடைந்த மீன்பிடி படகு.

Photo Courtesy :Nsmohan

தனுஷ்கோடி

தனுஷ்கோடி

சுற்றுலா பயணிகளை கடற்கரைக்கு கொண்டு செல்லும் சிற்றுந்துகள்!

Photo Courtesy :Nsmohan

தனுஷ்கோடி

தனுஷ்கோடி

தனுஷ்கோடி, இங்கிருந்து இலங்கை 15 கி. மீ., தொலைவில் உள்ளது.

Photo Courtesy : Nsmohan

தனுஷ்கோடி

தனுஷ்கோடி

பேருந்துகள் கிடையாது; இது போல மினி லாரிகள்தான் சுற்றுலா பயணிகளுக்காக‌!!

Photo Courtesy : Nsmohan

தனுஷ்கோடி

தனுஷ்கோடி

இது தனுஷ்கோடியின் ரயில் நிலையம் :-( நம்ப முடிகிறதா ஊரே புயலில் அடித்துச் சென்ற பிறகு ரயில் நிலையம் எப்படியிருக்கும் ?

Photo Courtesy :Nsmohan

தனுஷ்கோடி

தனுஷ்கோடி

கையால் மீன் பிடிக்கும் தனுஷ்கோடி மக்கள்

Photo Courtesy :

தனுஷ்கோடி

தனுஷ்கோடி

தனுஷ்கோடி கடற்கரையில் ஒரு வெளிநாட்டு தம்பதியர்!

Photo Courtesy :M.Mutta

தனுஷ்கோடி

தனுஷ்கோடி

படகு - ஒரு மெளன சாட்சியாக தனுஷ்கோடி கடற்கரையில்!

இந்தியாவில் இப்படியும் ஓர் அற்புதத்தீவு - ஆயிரம் ரூபாயில் அசத்தல் பயணம் போலாமா?இந்தியாவில் இப்படியும் ஓர் அற்புதத்தீவு - ஆயிரம் ரூபாயில் அசத்தல் பயணம் போலாமா?

கன்னியாகுமரிக்கு மிக அருகில் இப்படி ஒரு கோவா பீச் இருக்கு தெரியுமா?கன்னியாகுமரிக்கு மிக அருகில் இப்படி ஒரு கோவா பீச் இருக்கு தெரியுமா?

உலகமே வியக்கும் இந்த முனை கன்னியாகுமரி அல்ல என்பது உங்களுக்குத் தெரியுமா?உலகமே வியக்கும் இந்த முனை கன்னியாகுமரி அல்ல என்பது உங்களுக்குத் தெரியுமா?

குடும்ப சாபம் இப்போதே நீங்க வேண்டுமா ?. அப்ப இந்த கோவிலுக்கு போங்ககுடும்ப சாபம் இப்போதே நீங்க வேண்டுமா ?. அப்ப இந்த கோவிலுக்கு போங்க

கடவுள்கள் வேற்றுக் கிரக வாசிகளா? - ஆயிரமாயிர வருட நம்பிக்கையை சுக்குநூறாக்கும் தகவல்கள்கடவுள்கள் வேற்றுக் கிரக வாசிகளா? - ஆயிரமாயிர வருட நம்பிக்கையை சுக்குநூறாக்கும் தகவல்கள்

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X