Search
  • Follow NativePlanet
Share
» »தர்மசாலா - இந்தியாவின் குட்டி திபெத்

தர்மசாலா - இந்தியாவின் குட்டி திபெத்

ஹிமாச்சல பிரதேச மாநிலத்தில் அமைந்திருக்கும் தர்மசாலா நகரம் இந்தியாவில் இருக்கும் மிக அழகான அதே சமயம் வெளி உலகிற்கு அதிகம் பரிட்சயம் இல்லாத சுற்றுலாத்தலமாகும். சுற்றுலா ஸ்தலம் என்பதை தாண்டி திபெத்தியர்களின் மத குருவான 'தலாய் லாமா' இந்தியாவின் அரசியல் அகதியாக வாழும் இடமாகவும், நாடு கடந்த திபெத்திய அரசாங்கத்தின் தலைமையிடமாகவுமே இந்த தர்மசாலா நகரம் அறியப்படுகிறது.

இமய மலைத்தொடரில் இயற்கை எழில் கொஞ்சும் காணிடங்கள் மட்டுமின்றி இங்குள்ள கலாச்சார பன்முகத்தன்மையும் நமது சுற்றுலாவை என்றென்றைக்கும் மறக்கமுடியாத ஒன்றாக மாற்றிடும். வாருங்கள், தர்மசாலாவை சுற்றிப்பார்க்கலாம்.

எங்கே அமைந்திருக்கிறது ? :

எங்கே அமைந்திருக்கிறது ? :

மேலே சொன்னது போல ஹிமாச்சல பிரதேச மாநிலத்தில் அமைந்திருக்கும் தர்மசாலா நகரம் கங்க்ரா மாவட்டத்தின் தலைநகராகவும் திகழ்கிறது. அடர்ந்த காடுகள் சூழ்ந்திருக்க கங்க்ரா பள்ளத்தாக்கில் இந்த தர்மசாலா நகரம் அமையப்பெற்றிருக்கிறது. இந்த நாகரம் முன்னர் 'பாக்சு' என்ற பெயரால் விளிக்கப்பட்டிருக்கிறது.

Photo:Hendrik Terbeck

முக்கிய சுற்றுலாத்தலங்கள் :

முக்கிய சுற்றுலாத்தலங்கள் :

தால் ஏரி, கங்க்ரா பள்ளத்தாக்கு, சென்ட்.ஜான்ஸ் சர்ச், கரேரி ஏரி, சின்ட்புர்னி கோயில், பக்ஹ்சுனாக் அருவி, மெக்லியோட் கஞ்ச் போன்றவை தர்மசாலாவின் முக்கிய சுற்றுலாத்தலங்கலாக திகழ்கின்றன. மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்கள் இங்கு சுற்றுலா வர சிறந்த மாதங்களாகும்.

Photo:Utsav Verma

தால் ஏரி :

தால் ஏரி :

தால் ஏரி என்றதும் காஷ்மீரில் இருக்கும் இடம் என்று நினைத்து விட வேண்டாம். தர்மசாலாவிலும் டொடா ராணி என்ற இடத்தில் 'தால்' என்ற பெயரில் அழகிய சிறு ஏரி அமைந்திருக்கிறது. இந்த ஏரி சுற்றுலாத்தலமாக மட்டும் இல்லாமல் ஆன்மீக ஸ்தலமாகவும் விளங்குகிறது. இந்த ஏரியை சுற்றிலும் சிவ பெருமானுக்கு உகந்ததாக சொல்லப்படும் தியோதர் மரங்கள் சூழ்ந்திருப்பதோடு மட்டும் இல்லாமல் இந்த ஏரிக்கரையில் சிவன் கோயில் ஒன்றும் அமைந்திருக்கிறது.

பல்வகை மீன்கள் வாழும் இந்த குளத்தின் நீர் பச்சை நிறத்தில் இருக்கிறது குறிப்பிடத்தக்கது. தர்மசாலா நகரில் இருந்து 11 கி.மீ தொலைவில் அமைந்திருக்கும் இந்த ஏரியை தனியார் வாடை வாகனங்கள் மூலம் சென்றடையலாம்.

Photo:Munish Chandel

மெக்லியோட் கஞ்ச் :

மெக்லியோட் கஞ்ச் :

தர்மசாலா நாகரில் இருந்து 15 கி.மீ தொலைவில் அமைந்திருக்கும் மெக்லியோட் கஞ்ச் என்னும் இந்த இடம் சுற்றுலா ரீதியாகவும், அரசியல் ரீதியாகவும் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்த இடங்களில் ஒன்றாகும். இங்கு தான் திபெத்தியர்களின் மத குருவான தலாய் லாமா இந்தியாவின் அரசியல் அகதியாக 1959ஆம் ஆண்டு முதல் வசித்து வருகிறார். அதே போன்று நாடு கடந்த திபெத்திய அரசாங்கத்தின் தலைநகரமாகவும் மெக்லியோட் கஞ்ச் இருந்து வருகிறது.

மெக்லியோட் கஞ்ச் :

மெக்லியோட் கஞ்ச் :

இங்கு வரும் சுற்றுலாப்பயணிகளில் பெரும்பாலானவர்கள் திபெத்தியர்களின் கலாச்சாரம், அவர்களின் வழிபாட்டு முறைகள், உணவுகள், வாழ்க்கை முறை போன்றவற்றை அறிந்து கொள்வதற்காகவே வருகின்றனர் என்றே சொல்லலாம்.

மெக்லியோட் கஞ்ச் :

மெக்லியோட் கஞ்ச் :

இங்கு தலாய் லாமா வசிக்கும் 'ட்சுகலாக் காங்' கோயில் சுற்றுலாப்பயணிகள் காண விரும்பும் இடங்களில் முதன்மையானதாகும். இது மட்டும் இல்லாமல் நம்கயால் மடாலயம், திபெத்திய கலைக்கல்லூரி போன்ற இடங்களும் சுற்றுலாப் பயணிகளை ஈர்க்க தவறுவதில்லை.

மெக்லியோட் கஞ்ச் :

மெக்லியோட் கஞ்ச் :

பேரழகு ததும்பும் மெக்லியோட் கஞ்ச்.

photo:rajkumar1220

மெக்லியோட் கஞ்ச் :

மெக்லியோட் கஞ்ச் :

பேரழகு ததும்பும் மெக்லியோட் கஞ்ச்.

photo:rajkumar1220

மெக்லியோட் கஞ்ச் :

மெக்லியோட் கஞ்ச் :

பேரழகு ததும்பும் மெக்லியோட் கஞ்ச்.

photo:Kiran Jonnalagadda

மெக்லியோட் கஞ்ச் :

மெக்லியோட் கஞ்ச் :

பேரழகு ததும்பும் மெக்லியோட் கஞ்ச்.

photo:PnP!

சென்ட்.ஜான்ஸ் சர்ச் :

சென்ட்.ஜான்ஸ் சர்ச் :

மெக்லியோட் கஞ்சில் இருக்கும் மிக முக்கிய, வரலாற்று தொன்மை வாய்ந்த தேவாலயம் இந்த சென்ட்.ஜான்ஸ் சர்ச் ஆகும். 1852 ஆம் ஆண்டு லார்ட் எல்கின் என்பவரின் நினைவாக பழமையாக பிரிட்டிஷ் கால கட்டிடக்கலை வடிவமைப்பில் அமைத்திருக்கிறது. இந்த சர்ச்சில் லார்ட் எல்கினின் மனைவி அன்பளிப்பாக வழங்கிய பெல்ஜியம் நாட்டு கண்ணாடிகள் இங்குள்ள ஜன்னல்களில் பொருத்தப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

Photo:Lewesian1982 (talk)

சென்ட்.ஜான்ஸ் சர்ச் :

சென்ட்.ஜான்ஸ் சர்ச் :

பெல்ஜியம் கண்ணாடிகள் பொருத்தப்பட்ட தேவாலயத்தின் உட்பகுதி.

photo:rajkumar1220

பக்சுனாக் அருவி :

பக்சுனாக் அருவி :

தர்மசாலா பகுதியில் இருக்கும் ஒரே அருவியான இந்த பக்சுனாக் அருவியை கொஞ்ச தூரம் மலையேற்றத்திற்கு பிறகே அடைய முடியும்.ஏகாந்தமான சூழலில் இயற்கையின் அழகை நாம் இங்கே ரசித்து மகிழலாம்.

Photo:http://www.flickr.com/photos/simon-and-india/

பக்சுனாக் அருவி :

பக்சுனாக் அருவி :

அருவியை அடையும் பாதை.

Photo:lukexmartin

பக்சுனாக் அருவி :

பக்சுனாக் அருவி :

அருவியை அடையும் பாதை.

Photo:lukexmartin

பக்சுனாக் அருவி :

பக்சுனாக் அருவி :

அருவியை அடையும் பாதை.

Photo:lukexmartin

தர்மசாலா

தர்மசாலா

தர்மசாலாவை பற்றிய மேலதிக விவரங்களை அறிந்து கொள்ள இங்கே கிளிக்குங்கள்

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X