Search
  • Follow NativePlanet
Share
» »அட இவ்வளவு நாள் தெரியாம போச்சே.. இந்த தங்க கோட்டை இந்தியாவில்தான் இருக்காம்!

அட இவ்வளவு நாள் தெரியாம போச்சே.. இந்த தங்க கோட்டை இந்தியாவில்தான் இருக்காம்!

இந்தியாவிலுள்ள தங்க கோட்டைக்கு பயணம் மேற்கொள்வோம் வாருங்கள்.

By Udhaya

ராஜஸ்தான் மாநிலம் இந்தியாவின் சுற்றுலா தலைநகரம் ஆகும். சுட்டெரிக்கும் பாலைவனம் சூழ்ந்திருந்தாலும் ஒவ்வொரு வருடமும் லட்சக்கணக்கான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப்பயணிகள் அங்கே செல்லக் காரணம் இந்தியாவின் ராஜ வாழ்கையின் அடையாளங்கள் மாறாமல் இன்றும் அப்படியே இருப்பது தான். பெரிய பெரிய கோட்டைகள், ஆடம்பரத்தின் உச்சத்தில் கட்டப்பட்ட மாளிகைகள், ராஜ உணவுகள், இன்றும் உற்சாகத்துடன் நடைபெறும் நாட்டுப்புற கலை நிகழ்சிகள் போன்றவை தான் ராஜஸ்தானுக்கு சுற்றுலா பயணிகள் வர முக்கிய காரணமாகும். ராஜஸ்தானில் இருக்கும் சுற்றுலாத்தலங்களில் முக்கியமானது ஜெய்சால்மர் நகரமாகும். 'தங்க நகரம்' என்றழைக்கப்படும் இது ராஜஸ்தானின் ராஜ வாழ்கையை அனுபவித்து வாழ சிறந்ததொரு இடமாகும். வாருங்கள் நாம் ஜெய்சால்மர் நகருக்கு ஏன் சுற்றுலா வரவேண்டும் என்பதற்கான 5 காரணங்களை தெரிந்துகொள்வோம்.

இந்தியாவில் தங்க கோட்டை!

PC: Magalie L'Abbé

ஜெய்சல்மர் நகரின் முக்கிய சுற்றுலா ஈர்ப்பாக இருப்பது இந்நகரின் மையத்தில் அமைந்திருக்கும் பிரம்மாண்டமான ஜெய்சல்மர் கோட்டை தான். கி.பி 1156ஆம் ஆண்டு 'ஜெய்சால்' என்ற மன்னனால் கட்டப்பட்டிருக்கிறது. எண்ணற்ற போர்களை சந்தித்திருக்கும் இக்கோட்டைக்குள் சென்றுவருவது நிச்சயம் புதுமையான அனுபவமாக இருக்கும்.

பாலைவனத்தில் கிடைக்கும் மணல் கற்களை கொண்டு கட்டப்பட்டிருக்கும் இக்கோட்டையினுள் அக்கால அரசர்கள் பயன்படுத்திய பொருட்கள் இன்றும் பாதுகாத்து வைக்கப்பட்டுள்ளன. அரசர்களின் போர் வாள், அவர்களின் ஆபரணங்கள், பல்லக்கு, மது அருந்த பயன்படுத்திய பொற்கிண்ணங்கள் போன்றவற்றை நாம் காணலாம்.

இந்தியாவில் தங்க கோட்டை!

PC: Nagarjun Kandukuru

பொன்னிறமான கற்களை கொண்டு கட்டப்பட்டிருப்பதால் மாலை நேரத்தில் சூரிய அஸ்தமனத்தின் போது இக்கோட்டை ஏதோ தங்கத்தினால் கட்டப்பட்டதை போன்று ஜொலிக்கிறது. இதனால் தான் இதற்கு 'தங்க கோட்டை' என்ற சிறப்புப்பெயர் வந்திருக்கிறது.

ஜெய்சால்மர் கோட்டையின் ஒரு பகுதியில் இன்றும் மக்கள் தொடர்ந்து வசித்து வருகின்றனர். இவர்கள் கோட்டை பாதுகாப்பில் இருந்த வீரர்களின் சந்ததிகள் என்று சொல்லப்படுகின்றனர்.

இந்தியாவில் தங்க கோட்டை!

PC: Daniel Mennerich

என்ன சாப்பிடலாம்?

இந்தியாவின் ஒவ்வொரு மாநிலமும் தனக்கென பிரத்யேகமான சுவையுடைய உணவுகளை கொண்டிருக்கின்றன. அந்தந்த பிரதேசங்களில் கிடைக்கும் பொருட்களை கொண்டு சமைக்கப்படும் பாரம்பரிய உணவுகளின் சுவைக்கு வேறெதுவும் நிகராக முடியாது. சாதாரண பாரம்பரிய உணவுகள் என்பதை தாண்டி அரசர்களுக்கு பரிமாறப்பட்ட ராஜ உணவுகளை ராஜஸ்தானில் இன்றும் நாம் சுவைக்க முடியும்.

இந்தியாவில் தங்க கோட்டை!

PC: connie Ma

எப்படி செல்வது?

ஜெய்சல்மர் நகரை எப்படி சென்றடைவது?, அங்கே இருக்கும் ஹோட்டல்களின் விவரங்கள் என்னென்ன என்பது போன்ற சுற்றுலாவுக்கு தேவையான விவரங்களை தமிழ் பயண வழிகாட்டியில் தெரிந்துகொள்ளுங்கள்.

அட கேரளாவில் இப்படி ஒரு இடமா நம்ம பாத்ததே இல்லையே!அட கேரளாவில் இப்படி ஒரு இடமா நம்ம பாத்ததே இல்லையே!

Read more about: travel பயணம்
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X