Search
  • Follow NativePlanet
Share
» »அம்ரித்ஸர் நகரை சுற்றியுள்ள முக்கிய சுற்றுலாத் தளங்களுக்கு செல்லலாமா?

அம்ரித்ஸர் நகரை சுற்றியுள்ள முக்கிய சுற்றுலாத் தளங்களுக்கு செல்லலாமா?

அம்ரித்ஸர் நகரை சுற்றியுள்ள முக்கிய சுற்றுலாத் தளங்களுக்கு செல்லலாமா?

அம்ரித்ஸர் நகரை சுற்றி பல சுற்றுலாத் தலங்கள் உள்ளன. குருத்வாராக்களும், கோயில்களும், பல வரலாற்று இடங்களும் அமைந்துள்ளன. அவற்றுக்கெல்லாம் ஒரு பயணம் சென்று வரலாம் வாருங்கள்.

அம்ரித்ஸர் தங்கக்கோயில்

அம்ரித்ஸர் தங்கக்கோயில்

வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த பல குருத்வாரா கோயில்கள் இந்த அம்ரித்ஸர் நகரில் அமைந்துள்ளன. இவற்றில் முக்கியமானதாக தங்கக்கோயில் என்று அழைக்கப்படும் ‘ஹர்மந்திர் சாஹிப்' கோயிலை குறிப்பிடலாம்.
சீக்கிய மதத்தினர் மத்தியில் புனிதமான வழிபாட்டுத்தலமாகவும் தலைமைப்பீடமாகவும் கருதப்படும் இந்த கோயில் தினமும் 10000 யாத்ரீக பக்தர்களை உலகெங்கிலிருந்தும் ஈர்க்கிறது.


Vinish K Saini

 அம்ரித்ஸர் பிற கோயில்கள்

அம்ரித்ஸர் பிற கோயில்கள்

கால்சா எனப்படும் மத அமைப்பின் தலைமைக்கேந்திரமாக கருதப்படும் ஷீ அகால் தக்த் இந்த கோயில் வளாகத்தின் உள்ளேயே அமைந்திருக்கிறது. தங்கக்கோயில் மட்டுமல்லாமல் அம்ரித்ஸர் நகரில் பிபேக்சர் சாஹிப், பாபா அதல் சாஹீப், ராம்சர் சாஹிப் மற்றும் சந்தோக்ஸர் சாஹீப் போன்ற கோயில்களும் அமைந்திருக்கின்றன.

Ágoston Schoefft

 ஜாலியன் வாலாபாக்

ஜாலியன் வாலாபாக்

சீக்கியர்களுக்கான யாத்ரீக ஸ்தலமாக மட்டுமன்றி அம்ரித்ஸர் நகரம் முக்கியமான வரலாற்று பின்னணி வாய்க்கப்பட்ட பூமியாகவும் அறியப்படுகிறது. இந்திய சுதந்திர போராட்ட காலத்தில் ‘ஜாலியன் வாலா பாக்' படுகொலை எனும் துக்க நிகழ்வு 1919ம் ஆண்டில் இப்பகுதியில் நிகழ்ந்தது.

Sychonet

 நினைவுச் சின்னம்

நினைவுச் சின்னம்

இந்த சோகச்சம்பவத்தில் உயிர் நீத்த தியாகிகளின் நினைவாக ஒரு நினைவுச்சின்னம் ஜாலியன் வாலா பாக் பகுதியில் கட்டப்பட்டிருக்கிறது.

en.wikipedia.org

 கோட்டைகள்

கோட்டைகள்

ஆங்கிலேய ஆட்சிக்கு எதிராக போராடிய சீக்கியர்களின் வரலாற்றுக்கு சான்றாக மஹாராஜா ரஞ்சித் சிங் மியூசியம், கைர் உத்தின் மஸ்ஜித், பதிண்டா கோட்டை, சரகர்ஹி நினைவுச்சின்னம் மற்றும் கோபிந்த்கர் கோட்டை ஆகியவை அமைந்துள்ளன.

Jas Kaur

 மஹாராஜா ரஞ்சித் சிங் மியூசியம்

மஹாராஜா ரஞ்சித் சிங் மியூசியம்


அம்ரித்ஸர் நகரில் உள்ள அழகான ராம்பாக் தோட்டப்பூங்காவில் இந்த மஹாராஜா ரஞ்சித் சிங் மியூசியம் அமைந்துள்ளது. துவக்கத்தில் ராஜவம்சத்தினரின் கோடைக்கால மாளிகையாக விளங்கிய இந்த கட்டிடம் மஹாராஜா ரஞ்சித் சிங் உரிமையில் இருந்து பின்னர் ஒரு அருங்காட்சியகமாக மாற்றப்பட்டுள்ளது.

Harvinder Chandigarh

 கைர் உத்தின் மஸ்ஜித்

கைர் உத்தின் மஸ்ஜித்

முஹமத் கைர் உத்தின் என்பவரால் 1976ம் ஆண்டு கட்டப்பட்ட இந்த மசூதி ஸ்தலத்தில் தான் ஆங்கிலேயருக்கு எதிரான கலக முயற்சிகள் துவக்கப்பட்டன. டூட்டி ஏ ஹிண்ட் மற்றும் ஷா அதாவுல்லா புக்காரி ஆகியோர் இந்த கலகத்திற்கு தலைமை தாங்கியுள்ளனர்..

 பதிண்டா கோட்டை

பதிண்டா கோட்டை

பதிண்டா கோட்டை அம்ரித்ஸர் நகரில் உள்ள முக்கியமான சுற்றுலா அம்சங்களில் ஒன்றாக புகழ் பெற்றுள்ளது. பதிண்டா எனும் நகரத்தை நிர்மாணித்த பட்டி ராவ் என்பவரால் 1800 வருடங்களுக்கு முன்னால் இந்த கோட்டை கட்டப்பட்டிருக்கிறது.

 கோபிந்த்கர் கோட்டை

கோபிந்த்கர் கோட்டை

கோபிந்த்கர் கோட்டை அல்லது பாங்கியான் டா கிலா என்று அழைக்கப்படும் இந்த புராதன கோட்டை அம்ரித்ஸர் நகரில் தவறாமல் தரிசிக்க வேண்டிய சுற்றுலா அம்சமாகும். இந்திய சுதந்திரப்போராட்டத்தின் பல்வேறு நிகழ்வுகளுக்கு மௌன சாட்சியாக இருந்த இந்த வரலாற்றுக்கோட்டை 2006ம் ஆண்டு பஞ்சாப் முதல் அமைச்சர் கேப்டன் அம்ரிந்தர் சிங் அவர்களால் பொதுமக்கள் பார்வைக்கு திறந்துவிடப்பட்டது.

Gobindgarh Fort

 வாகா எல்லை

வாகா எல்லை


இந்தியா மற்றும் பாகிஸ்தானுக்கு இடையேயான ராணுவ எல்லைக்கேந்திரமான வாகா எல்லை எனும் இடம் அம்ரித்ஸர் நகருக்கு வரும் பயணிகளால் தவறாமல் விஜயம் செய்யப்படுகிறது. இங்கு நடத்தப்படும் ராணுவ அணிவகுப்பு நிகழ்ச்சிகள் பார்வையாளர்களால் வெகுவாக ரசிக்கப்படுகின்றன.

commons.wikimedia.org

 ஆன்மீகப் பயணம்

ஆன்மீகப் பயணம்

ஆன்மீக பயணிகளுக்கான சில முக்கியமான கோயில்களும் அம்ரித்ஸர் நகரில் அமைந்திருக்கின்றன. துர்கியானா கோயில், மந்திர் மாதா லால் தேவி, இஸ்க்கான் கோயில், ஹனுமான் மந்திர் மற்றும் ராம் திரத் கோயில் ஆகியவை இவற்றில் குறிப்பிடத்தக்கவை.

Guilhem Vellut

 இதர முக்கியமான சுற்றுலாத் தளங்கள்

இதர முக்கியமான சுற்றுலாத் தளங்கள்

கைசர் பாக், ராம்பாக், கல்சா கல்லூரி, குரு நானக் பல்கலைக்கழகம், தர்ன் தரன் மற்றும் புல் கஞ்சாரி போன்றவை அம்ரித்ஸர் நகரிலுள்ள இதர முக்கியமான சுற்றுலா அம்சங்களாகும்.

SinghVi

https://commons.wikimedia.org/wiki/File:Gurudawara_Sahib_Amritsar.jpg

Read more about: travel temple
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X