Search
  • Follow NativePlanet
Share
» »கன்னியாகுமரியில் உள்ள இந்த பாலத்தின் சிறப்பு தெரியுமா?

கன்னியாகுமரியில் உள்ள இந்த பாலத்தின் சிறப்பு தெரியுமா?

ஆசியாவின் மிக உயரமான பாலம் இது தெரியுமா?

மாத்தூர் தொட்டிப் பாலம் கன்னியாகுமரி மாவட்டத்தில் அமைந்துள்ளது. இது தெற்கு ஆசியாவிலேயே மிக உயரமான தொட்டிப் பாலமாகும்.

இது கன்னியாகுமரி மாவட்டத்தின் ஒரு பெயர்பெற்ற சுற்றுலாத்தலமுமாகும். இதன் பெருமைகளைப் பற்றி இந்த பதிவில் காணலாம்.

 பெயர் காரணம்

பெயர் காரணம்


தொட்டி வடிவில் கட்டப்பட்டிருப்பதால் தொட்டிப்பாலம் என அழைக்கப்படுகிறது.

wiki

 தொட்டில் பாலம்

தொட்டில் பாலம்


இரு மலைகளுக்கு நடுவே தொட்டில் போன்ற அமைப்பில் இருப்பதால் தொட்டில்பாலம் எனவும் அழைக்கப்படுகிறது.

wiki

எப்போது கட்டப்பட்டது?

எப்போது கட்டப்பட்டது?


இப்பாலம் 1969ல் முழுமையாக கட்டப்பட்டு நிறைவுபெற்றது.

wiki

 யாருடைய ஆட்சியில்

யாருடைய ஆட்சியில்


1962 ம் ஆண்டு தமிழ்நாடு முதல்வராக இருந்த காமராஜரால் தொடங்கப்பட்ட இப்பாலம் 1969ல் முழுமையாக கட்டப்பட்டு நிறைவுபெற்றது.

wiki

என்ன காரணம்

என்ன காரணம்

அந்த காலக் கட்டத்தில் தமிழகத்தில் வறட்சி தலைவிரித்தாடியது. இதனால் நீர் பற்றாக்குறை வராமல் தடுக்கவும்,
வறட்சியை தீர்ப்பதற்காகவும் இப்பாலம் கட்டப்பட்டது.

wiki

எங்கிருந்து நீர் வருகிறது

எங்கிருந்து நீர் வருகிறது

இது பறளியாற்றிலிருந்து வரும் நீரை சுமந்து செல்கிறது.

wiki

மலைகளை இணைக்கும் நீர்பாலம்

மலைகளை இணைக்கும் நீர்பாலம்


இது பறளியாற்றுத் தண்ணீரைக் கொண்டு செல்வதற்காக மலைப்பாங்கான காடுகளாக இருந்த மாத்தூர் பகுதியில் உள்ள கணியான் பாறை என்ற மலையையும், கூட்டுவாயுப்பாறை என்ற மலையையும் இணைக்கும் வகையில் கட்டப்பட்டுள்ளது.

commons.wikimedia.org

 நீள அகலம் உலக சாதனை

நீள அகலம் உலக சாதனை

இரண்டு மலைகளை இணைக்கும் இந்தப் பாலம் நீளவாக்கில் 1204 அடியாகவும், தரைமட்டத்திலுருந்து 104 அடி உயரத்திலும் கட்டப்பட்டு உள்ளது. இந்த பாலத்தைத் தாங்கி நிற்கும் ஒவ்வொரு தூணின் சுற்றளவும் 32 அடியாகும். இவ்வாறு மொத்தம் 28 தூண்கள் உள்ளன. தண்ணீர் செல்லும் பகுதிகள் ஏழு அடி அகலமும், ஏழு அடி உயரமும் கொண்ட தொட்டிகளாக தொகுக்கப்பட்டுள்ளன.

 என்ன பயன்

என்ன பயன்

அணையிலிருந்து வரும் நீர் முதலில் மாத்தூர் பாலத்திற்கும் அதன்பின் செங்கோடி மற்றும் வடக்குநாட்டுப் பாலங்கள் வழியாக தேங்காய்ப்பட்டணம் கிராமத்திற்கும் செல்கின்றது. மாத்தூர் தொட்டிப் பாலம் வழியாகக் கொண்டுசெல்லப்படும் நீர் கன்னியாகுமரி மாவட்டத்தின் கல்குளம், விளவங்கோடு ஆகிய இரு வட்டங்களில் உள்ள ஊர்களின் நீர்ப்பாசனத்திற்குப் பயன்படுகிறது.

 எங்குள்ளது

எங்குள்ளது

கன்னியாகுமரி மாவட்டம், அருவிக்கரை ஊராட்சி மன்றப் பகுதியில் மாத்தூர் தொட்டிப் பாலம் அமைந்துள்ளது. இது திருவட்டாரிலிருந்து 3 கி.மீ தொலைவிலும் இந்தியாவின் தென்முனையாகிய கன்னியாகுமரியிலிருந்து 60 கி.மீ. தொலையிலும் உள்ளது. இவ்வூர் குழித்துறை இரயில் நிலையத்திலிருந்து 15 கி.மீ. தொலைவிலும், திருவனந்தபுரம் வானூர்தி நிலையத்திலிருந்து 70 கி.மீ. தொலைவிலும் அமைந்திருக்கிறது.

உங்கள் பகுதியிலும் சுற்றுலாத் தளங்கள் உள்ளனவா ? அமைவிடம் மற்றும் சிறப்புகள் குறித்த முழுத் தகவலுடன் அந்த இடங்களின் புகைப்படங்களையும் இணைத்து [email protected] என்ற முகவரிக்கு எழுதி அனுப்புங்கள்.

Read more about: travel temple kanyakumari
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X