உலகம் அழியும் நாள்: பத்மநாபசுவாமி கோயிலின் கடைசி அறையில் புதைந்துள்ள மர்மங்கள்
தேடு
 
தேடு
 

நாசாவே வியக்கும் இந்த சிவன் கோவில் மர்மங்கள் உங்களுக்கு தெரியுமா?

Written by: Udhaya
Updated: Friday, August 4, 2017, 11:02 [IST]
Share this on your social network:
   Facebook Twitter Google+ Pin it  Comments

இந்தியா என்பது ஒரு நாடல்ல.. கிட்டத்தட்ட 56 நாடுகளின் இணைப்பே இந்தியாவாக உருவானது என்று நாம் படித்திருக்கிறோம். அப்படி வெவ்வேறு மன்னர்களின் ஆட்சியில் இருந்தும் பலருக்கு தெரியாத ஒரு அதிசயம் இந்தியாவில் உள்ளது. 

திருவண்ணாமலையார் பற்றி உங்களுக்குத் தெரிந்திராத ஆச்சர்யங்கள்!

இன்று சிவராத்திரி. இந்த சிவராத்திரி நாளன்று நாம் சிவனை வழிபட்டால் பாவங்கள் நீங்கி எதிர்காலம் சிறப்பாக அமையும் என்பது நம்பிக்கை. இதையெல்லாம் நம்பாவிட்டால் பரவாயில்லை. ஆனால் அறிவியலை நம்புவீர்கள் தானே...

இஸ்லாமியர்களுக்காக கோவிலையே இடித்த இந்துக்கள் - எங்கே தெரியுமா?

நாசா, உலகின் வான்வெளி அறிவியலில் எவ்வளவோ சாதித்திருக்கிறது. அப்படிபட்ட நாசாவே கண்டு குழம்பும் அளவுக்கு ஒரு அதிசயம் இந்த 8 கோவில்களில் உள்ளது. இத்துடன் வான்வெளி புகைப்படத்தையும் இணைத்துள்ளோம். இந்த மர்மம் பற்றி பலர் பலவிதமாக கருத்து தெரிவித்திருந்தாலும், இன்று வரை ஒரு தீர்வு என்பது இல்லாமலே இருக்கிறது.

முதலில் இந்த 8 கோயில்களுக்கும் எப்படி செல்வது என்று தெரிந்து கொள்ளலாமா?

கேதார்நாத்

 


உத்திரகாண்ட் மாநிலம் ருத்ரபிரயாக் மாவட்டத்தில் உள்ள ஒரு நகர பஞ்சாயத்து கேதார்நாத் ஆகும். இது சரியாக புவியிடைக்கோடு (30.7352° N, 79.0669) இல் அமைந்துள்ளது.


கேதார்நாத்துக்கு அருகிலுள்ள ரயில் நிலையம் ரிஷிகேஷ். இது கேதார்நாத்திலிருந்து 221 கி.மீ தூரத்தில் அமைந்துள்ளது. இங்கிருந்து கேதார்நாத் செல்ல பிரிபெய்டு டாக்சிகள் இயக்கப்படுகின்றன. 207 கி.மீ தூரத்தை டாக்சி மூலமாக கடந்தபின் 14 கி.மீ தூரம் கால்நடையாக யாத்ரீகர்கள் கேதார்நாத்துக்கு ஏற வேண்டியிருக்கும்.

அடுத்ததாக இருப்பது காலேஷ்வரம். ஒரே நேர் கோட்டில் அமைந்திருப்பதை படத்தில் காணலாம்.

கேதார்நாத் பற்றி முழுமையாக அறிய வேண்டுமா?

காலேஷ்வரம்


காலேஷ்வரம், தெலங்கானா மாநிலம் கரீம்நகர் மாவட்டத்தில் உள்ள மகாதேவபூர் பகுதியில் அமைந்துள்ள ஒரு கிராமப்புற பகுதியாகும்.

கோதாவரி ஆற்றுப்படுகையில் அமைந்துள்ளது இந்த காலேஷ்வரம். தெலங்கானா தலைநகர் ஹைதராபாத்திலிருந்து 277 கிமீ தொலைவிலும், வாராங்கலிலிருந்து 115 கிமீ தொலைவிலும் அமைந்துள்ளது.

ஹைதராபாத், வாராங்கல், பர்க்கல், கரீம்நகர் மற்றும் பெடப்பள்ளி முதலிய இடங்களிலிருந்து பேருந்து வசதிகள் உள்ளன.

 

காலேஷ்வரத்திலிருந்து காளகஸ்தி ஒரே நேர்கோட்டில் அமைந்திருப்பதை படத்திலிருந்து அறிந்து கொள்ளலாம்

காலாகாலேஷ்வரா கோயில் பற்றி அறிய சொடுக்கவும்

காளகஸ்தி

 

ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டத்தில் அமைந்துள்ள காளகஸ்தி மிகவும் பிரசித்தி பெற்ற திருத்தலமாகும்.

திருப்பதியிலிருந்து 36 கி.மீ தூரத்திலேயே அமைந்திருக்கும் இந்த கோயில் ஐம்பெரும் பூதங்களுள் ஒன்றாகிய ‘வாயு'விற்காக எழுப்பப்பட்டுள்ள லிங்கத்தை கொண்டுள்ளது.

நல்ல போக்குவரத்து வசதிகளை கொண்டுள்ள காளஹஸ்தி நகரத்துக்கு ரயில் அல்லது சாலை மார்க்கமாக சுலபமாக சென்றடையலாம். அமைதி மற்றும் தெய்வீகச்சூழலுடன் தனித்தன்மையான கோயில்கள் நிரம்பி காட்சியளிக்கும் இந்த ஸ்ரீ காளஹஸ்தி நகரம் மனச்சாந்தியை தேடி பயணிக்க விரும்புபவர்களுக்கு மிகவும் ஏற்ற ஸ்தலமாகும்.

காளகஸ்தியிலிருந்து காஞ்சிபுரம் - ஏகாம்பரநாதர் கோயில் எந்த கோணத்தில் உள்ளது என்பது உங்களுக்கு இப்போது விளங்கியிருக்குமே...

ஸ்ரீ காளஹஸ்தி பற்றி அறிய வேண்டுமா?

காஞ்சிபுரம் - ஏகாம்பரநாதர் கோயில்

 

தமிழகத்தின் காஞ்சிபுரம் மாவட்டத்தில் அமைந்துள்ள காஞ்சி ஏகாம்பரநாதர் கோயில் ஏழாம் நூற்றாண்டில் கட்டப்பட்ட சிவ தலமாகும்.

ஏராளமான பேருந்துகள் மற்றும் டாக்ஸிகள், காஞ்சிபுரத்துக்கும், காஞ்சிபுரத்திலிருந்தும், நாள்தோறும் இயக்கப்படுவதால், பெரும்பாலான மக்கள், சாலை வழியாகவே காஞ்சிபுரத்துக்குச் செல்ல விரும்புகின்றனர். சென்னையிலிருந்து, பேருந்தில் சென்றால், சுமார், ஒன்று அல்லது இரண்டு மணி நேரத்தில் காஞ்சிபுரத்தை அடையலாம். டாக்ஸியில் போனால், இன்னும் விரைவாகச் செல்லலாம்; ஆனால் அதிக கட்டணம் வசூலிப்பர்.

காஞ்சிபுரம், தென்னிந்தியாவின் பிற நகரங்களுக்கு, இரயில் சேவைகளின் வலுவான கட்டமைப்பினால், நன்கு இணைக்கப்பட்டுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டத்தில், செங்கல்பட்டு-அரக்கோணம் தடத்தில் அமைந்துள்ள, செங்கல்பட்டு இரயில் நிலையம் உள்ளது. சென்னைக்கும், காஞ்சிபுரத்துக்கும் இடையில், ஒரு பாசஞ்சர் இரயில் தினமும் இயக்கப்படுகிறது. இதில் போனால், சென்னையிலிருந்து ஒன்று அல்லது இரண்டு மணி நேரத்தில் காஞ்சிபுரத்தை அடையலாம்.

 

 

திருவண்ணாமலை

 

சுற்றியுள்ள நகரங்களோடும், பட்டணங்களோடும் திருவண்ணாமலை நன்கு இணைக்கப்பட்டு இருக்கின்றது. தமிழகத்தின் பல்வேறு இடங்களில் இருந்து இந்த புனித நகரத்தை அடைய தமிழக அரசு எண்ணற்ற பேருந்துகளை இயக்கி வருகின்றது. அதோடு திருவிழா காலங்களில் பேருந்துகளின் எண்ணிக்கையையும் அரசாங்கம் அதிகரிக்கிறது. ஆயிரக்கணக்கான பக்தர்களின் தேவையை பூர்த்தி செய்ய சிறப்பு பேருந்துகளும் இயக்கப்படுகின்றன.

 

 

திருவண்ணாமலை

சென்னை, வேலூர், காஞ்சிபுரம் முதலிய அருகாமை நகரங்களிலிருந்து அடிக்கடி பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

திருவண்ணாமலை ரயில் நிலையம் நகர மையப்பகுதியில் இருந்து 1 கிலோமீட்டர் தொலைவில் இருக்கின்றது. மதுரை-திருப்பதி பாதையில் இந்த நகரம் இருப்பதால், மதுரைக்கும் திருவண்ணாமலைக்கும் இடையேயான ரயில் போக்குவரத்து சீராக உள்ளது. எனவே, மதுரையில் இருந்து தொடர்ச்சியாக திருவண்ணாமலைக்கு ரயில் சேவை கிடைக்கப்பெறுகின்றது.

 

சிதம்பரம்

 

சாலை மார்க்கமாகவும் சிதம்பரம் நகரம் மாநிலத்தின் மற்ற நகரங்களுடன் நல்ல முறையில் இணைக்கப்பட்டிருக்கிறது. சென்னையிலிருந்து பாண்டிச்சேரி செல்லும் கிழக்கு கடற்கரை சாலை வழியாக சிதம்பரத்தை அடையலாம். இப்படி பயணிக்கும்போது பாண்டிச்சேரி நகரத்தையும் சுற்றிப்பார்க்கும் வாய்ப்பு கிடைக்கும் என்பது மற்றொரு விசேஷம்.

 

சிதம்பரம்

தமிழ்நாட்டின் எல்லா முக்கிய நகரங்களிலிருந்தும் சிதம்பரம் நகருக்கு மாநில அரசுப்போக்குவரத்துக்கழகத்தின் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இவை தவிர சென்னையிலிருந்து சொகுசுப்பேருந்து சேவைகளும் கிடைக்கின்றன. திருச்சி, மதுரை, சேலம், கோயமுத்தூர், தஞ்சாவூர் போன்ற தமிழ்நாட்டின் முக்கிய நகரங்களிலிருந்து மிகஎளிதாக பேருந்துகள் மூலம் சிதம்பரம் நகருக்கு வரலாம்.

இராமேஸ்வரம்

 

இராமேஸ்வரம் சாலை வழியாக சென்னையுடன் நன்றாக இணைக்கப்பட்டுள்ளது. டாக்ஸிகள் மற்றும் பேருந்துகள் தொடர்ச்சியாக சென்னையிலிருந்து இராமேஸ்வரத்திற்கு இயக்கப்பட்டு வருகின்றன. நல்ல சொகுசான வோல்வோ பேருந்துகள் மற்றும் அரசு பேருந்துகள் என எதை வேண்டுமானாலும் நீங்கள் தேர்ந்தெடுத்து கொள்ளலாம். வோல்வோ பேருந்து கட்டணம் ரூ.500/- ஆகவும், மாநில அரசுப் பேருந்துகள் கட்டணம் ரூ.1000-1500/- ஆகவும் உள்ளன.

 

உலகையே ஆண்ட சோழ ராஜ்ஜியம் படிப்படியாக வீழ்ந்த இடங்கள் பற்றி தெரியுமா?

2020ல் உலகம் என்னவாகும் கைப்பட எழுதிய தலையாட்டி சித்தர்

ஏழுமலையானின் வியப்பூட்டும் மர்மங்கள் குறித்து தெரியுமா?(விடியோ)

நாசாவே வியக்கும் இந்த சிவன் கோவில் மர்மங்கள் உங்களுக்கு தெரியுமா?

பெரிய கோயில் கட்டப்பட்ட 7 ஆண்டுகளில் நடந்த மர்மங்கள் ?

Read more about: travel, temple
English summary

Do You Know the Mystery of 8 shiva temples - A visit

Do You Know the Mystery of 8 shiva temples - A visit
Please Wait while comments are loading...