உலகம் அழியும் நாள்: பத்மநாபசுவாமி கோயிலின் கடைசி அறையில் புதைந்துள்ள மர்மங்கள்
தேடு
 
தேடு
 

வெறும் 3111 ரூபாய்க்கு வெளிநாட்டவருக்கு விலைபோன ஊரின் கதை தெரியுமா?

Written by: Udhaya
Published: Wednesday, January 18, 2017, 18:00 [IST]
Share this on your social network:
   Facebook Twitter Google+ Pin it  Comments


என்னதான் வணிகம் செய்ய வந்தாலும், தரங்கம்பாடியவே நல்ல முறையில் பராமரித்து அழகாக மாற்றிவிட்டனர் டென்மார்க் காரர்கள். சரி தரங்கம்பாடி பற்றிய ஒரு தொகுப்பைப் பார்க்கலாமா?

கிபி 1600-களில் ரகுநாத நாயக்க மன்னர் தரங்கம்பாடியை 3111 ரூபாய் வருடாந்திர குத்தகைக்கு வணிக நோக்கிற்காக டென்மார்க்குக்கு கொடுத்துள்ளார். அந்த ஆணைக்கான தங்க ஓலைச்சுவடி இன்னும் டென்மார்க் அரசுப் பெட்டகத்தில் பாதுகாக்கப்பட்டு வருகிறது.

தரங்கம்பாடிக்கு வந்த டேனீஷ்காரர்கள், அங்குள்ள மக்களிடமிருந்து பல தமிழ் ஓலைச் சுவடிகளை வாங்கியுள்ளார்கள். அங்கு வந்த பாதிரிமார்கள், தமிழ் கற்று அன்றைய வாழ்க்கை முறை பற்றியும் கிறித்துவ வேதாமகம் பற்றியும் ஓலைச்சுவடிகள் தங்கள் கைப்பட எழுதியுள்ளார்கள். அவைகளுள் பாதிரியார் சீகன்பால் எழுதிய ஓலைச் சுவடிகள் முக்கியமானதாகும். இவை அனைத்தும் டென்மார்க்கில் பாதுகாக்கப்பட்டு வருகின்றன.

டேனீஸ் கோட்டை

 

டேனிஷ் கேப்டன் ஓவ் க்ஜெட்டே என்பவரால் 400 ஆண்டுகளுக்கும் முன்னரே கட்டப்பட்ட இந்த கோட்டை, பல்வேறு காலகட்டங்களில் மீண்டும் கட்டப்பட்டும் மற்றும் புனரமைக்கப்பட்டும் வந்திருக்கிறது.

சுமார் 150 ஆண்டுகளுக்கு இந்நிலப்பகுதியை ஆண்டு வந்த டேனிஷ் அரசாங்கத்தின் ஆளுநர் மற்றும் பிற முக்கிய அலுவலர்களின் அரசு தலைநகரமாக இக்கோட்டை இயங்கி வந்துள்ளது.

PC: Joseph Jayanth

 

டேனீஸ் தேவாலயம்

 

ஐரோப்பிய காலனியாதிக்கத்தின் தொடக்க காலத்தைச் சேர்ந்த தொல்பொருட்களடங்கிய பொக்கிஷங்களை பாதுகாத்து வைத்திருக்கும் கோட்டையாக இன்னமும் இந்த டேனிஷ் கோட்டை இருக்கிறது.

இந்த கோட்டையில் பல்வேறு நாடுகளின் கட்டிடக்கலை அம்சங்கள் இருந்தாலும், பெரிய அளவில் மாற்றியமைக்கப்படாமல் இருக்கும் டேனிஷ் கட்டிடக்கலையை எளிதில் அடையாளம் கண்டு கொள்ள முடியும்.

PC: chenthil

 

தரங்கம்பாடி கடற்கரை

தரங்கம்பாடி கடற்கரை

PC: Sankara Subramanian

 

அன்னை தெரசா கான்வென்ட்

அன்னை தெரசா கான்வென்ட்

PC: Joseph Jayanth

 

சிறப்பு

 

தமிழின் முதல் பைபிள் அச்சடிக்கப்பட்ட இடம் எனும் பெருமைக்குரியது தரங்கம்பாடி.

PC: wikipedia

 

எப்போது செல்லலாம்

 

தரங்கம்பாடிக்கு பயணிக்க நேரம், காலம் என்று சிறப்பாக எதுவுமில்லை. உங்களுக்கு தோணும்போது பயணிக்கலாம். மழை,வெயில்,குளிர் என எந்த காலத்திலும் தரங்கம்பாடி மிக அழகுதான்.

PC: Joelsuganth

 

எப்படி செல்வது

சாப்பிட


தரங்கம்பாடியில் சாப்பாட்டு வகைகளுக்கு பஞ்சம் இல்லை. கடல் உணவுகள் அதிகமாக கிடைக்கும்.

வகைவகையான மீன்கள், நண்டுகள் முதலியன சிறப்பான ருசியான உணவாகும்.

PC: Charles Haynes

 

அருகிலுள்ள வேறு சில இடங்கள்

 

பூம்புகார், திருக்கடையூர், காரைக்கால், நாகப்பட்டினம் கடற்கரை

PC: Kasiarunachalam

 

Read more about: பயணம், travel
English summary

Do you know the place of Denmark in Tamilnadu

Let take a trip to Denmark of Tamilnadu
Please Wait while comments are loading...