உலகம் அழியும் நாள்: பத்மநாபசுவாமி கோயிலின் கடைசி அறையில் புதைந்துள்ள மர்மங்கள்
தேடு
 
தேடு
 

உங்களை மிரளச் செய்யும் இவ்வூரின் வரலாறு என்ன தெரியுமா?

Written by: Udhaya
Updated: Thursday, June 15, 2017, 10:50 [IST]
Share this on your social network:
   Facebook Twitter Google+ Pin it  Comments

உங்களை மிரளச் செய்யும் அழகு கொண்ட, இந்திய கிழக்கு கடற்கரையில் ஒய்யாரமாய் அமர்ந்திருக்கும் அந்த டென்மார்க் நாடு. அட இந்தியாவில் டென்மார்க்கா என ஆச்சர்யப்படுகிறீர்களா

அப்போ உங்களுக்காகத் தான் இந்த கட்டுரை. ஒருமுறை சென்று வாருங்களேன். வாழ்க்கையில் மறக்கவே மறக்கமாட்டீர்கள்.

என்ன போலாமா?

தரங்கம்பாடிடேனிஷ் கோட்டை

நாகப்பட்டினம் மாவட்டத்தில் "தரங்கம்பாடிடேனிஷ் கோட்டை" அமைந்துள்ளது. இது இந்தியாவின் வரலாற்று சிறப்பு மிக்க ஒன்று ஆகும். பாண்டிய மன்னன் குல சேகரன் ஒரு சிவபக்தன். இவன் தன் 38வது ஆட்சியாண்டில் கி.பி.1306ல் இவ்வூரை உருவாக்கி கோயில் ஒன்றையும் கட்டினான்.

 

PC: Joseph Jayanth

 

தரங்கம்பாடிடேனிஷ் கோட்டை

வேதத்தின் ஆறு அங்கங்களுக்கு மூலாதாரம் இறைவனே என்பதால் இந்த ஊருக்கு "சடங்கன்பாடி" என்று பெயர் வைத்தான். அன்றுமுதல் அப்படித்தான் அழைக்கப்பட்டுவந்தது.

Wandering Tamil

 

 

தரங்கம்பாடிடேனிஷ் கோட்டை

இறைவனுக்கு மணிவண்ணீசுவரமுடையார் என்று பெயரிட்டான். கடற்கரையை ஒட்டிய நகரம் என்பதாலும், இந்த நகரத்தை தோற்றுவித்தவன் "குலசேகரபாண்டியன்" என்பதாலும் இவ்வூருக்குக் குலசேகரன் பட்டினம் என்ற பெயர் வந்தது. இதுவே மக்களால் உச்சரிக்கப்பட்டு அழைக்கப்பட்டுவந்தது.


PC: Joseph Jayanth

 

தரங்கம்பாடிடேனிஷ் கோட்டை

கி.பி.1354ல் ஆண்ட வீர பாண்டியன் ஆட்சிக் காலத்திலும் இப்பெயர்களே வழங்கி வந்துள்ளன. அதன் பின்னர் தஞ்சையிலிருந்து கி.பி.1567ல் ஆட்சி செய்துவந்த அச்சுத்தப்ப நாயக்க மன்னர் இவ்வூரின் பெயரை மாற்றினார். இந்த ஊரின் கடற்கரையோரம் அமைந்துள்ள மாசிலாமணி நாதர் கோயில் பெயரைக் கொண்டு "மாசிலாமணீஸ்வரர்" என்று மாற்றியமைத்தார்.

Vijay S

 

 

தரங்கம்பாடிடேனிஷ் கோட்டை

கி.பி.1618ம் ஆண்டு டென்மார்க்கு அரசர் கிறிஸ்டின் இந்தியாவுக்கு "அவ்கிட் எனும் டென்மார்க் அரசின் கடற்படைத் தளபதியை வர்த்தகத்துக்காக தஞ்சை அனுப்பிவைத்தார்.


PC: Chenthil

 

தரங்கம்பாடிடேனிஷ் கோட்டை


அதன் பின்னர் தஞ்சைக்கும் டென்மார்க்கும் வணிக ஒப்பந்தம் கி.பி.1620ல் ஏற்பட்டது. பின்னர் ஆங்கிலேயர்களால் சடங்கன்பாடி என்ற பெயர்களை சரியாக உச்சரிக்க வராமற் போகவே, "தரங்கம்பாடி" என்று பெயர் மாறி என்றானது. தரங்கம் என்றால் அலை என்று பொருள். அலைகள் சூழ்ந்த நகரம் என்பதே தரங்கம்பாடி ஆகும்.

 

Vijay S

 

தரங்கம்பாடிடேனிஷ் கோட்டை


கி.பி.1620ல் தஞ்சவூர் "மன்னர் ரகுநாத நாயக்கர்" காலத்தில் அவ்கிட்டால் கட்டபட்டது தான் நாம் இப்போது பார்க்கும் "தரங்கம்பாடி கோட்டை ", கி.பி.17 ஆம் நூற்றாண்டில் இது ஒரு முக்கிய வணிக தளமாக அமைந்ததால் "டேனிஸ் போர்ட்" என்று பெயர் பெற்றது.


PC: Mukulfaiz

 

தரங்கம்பாடிடேனிஷ் கோட்டை

தரங்கம்பாடி கோட்டை மிகவும் அழகான கட்டிடம், மூலைகளில் கொத்தளங்கள் அழகாக அமைக்கப்பட்டுள்ளன.

Joseph Jayanth

 

 

தரங்கம்பாடிடேனிஷ் கோட்டை

செங்கல்லாலான இந்தக் கட்டிடத்தை இந்திய கொத்தனார்கள் தான் கட்டினார்கள்.

 

PC: Mukulfaiz

 

தரங்கம்பாடிடேனிஷ் கோட்டை

இவர்கள் ஐரோப்பிய கட்டு வேலைக்காரர்களை விட மிகவும் விரைவாகவும் தொழில் நுணுக்கம் சிறந்தவர்களாகவும் திகழ்ந்தனர். 1624ல் இக்கோட்டை டேனிஷ் கிழக்கிந்திய கம்பெனியாரால் டென்மார்க் அரசருக்கு விற்கப்பட்டது. .

Sankara Subramanian

 

 

தரங்கம்பாடிடேனிஷ் கோட்டை


1682ம் ஆண்டு ஜெர்மனி நாட்டில் பிறந்தவர் "பார்த்தலோமியோஸ் சீகன்பால்கு". இவர் டென்மார்க் நாட்டில் உள்ள திருச்சபை சார்பில், கிறிஸ்தவ மத பிரசாரம் செய்து வந்தார். தரங்கம்பாடி கோட்டை வர ஆசைப்பட்ட அவரை டென்மார்க் அரசர் கப்பலில் அனுப்பி வைத்தார்.

Wandering Tamil

 

தரங்கம்பாடிடேனிஷ் கோட்டை


1706ம் ஆண்டு ஜுலை 9ந் தேதி தரங்கம்பாடி மண்ணில் கால் பதித்தார். இவர் தமிழ் எழுத்துக்களை ஜெர்மனியில் செய்ய சொல்லி கொண்டு வர ஏற்பாடு செய்தார்.


Joseph Jayanth

 

தரங்கம்பாடிடேனிஷ் கோட்டை


"பொறையாறு" அருகே ஓர் இடத்தில் காகித பட்டறை நிறுவினார். மரக்கூழ் மூலம் காகிதம் செய்யும் தொழிற்சாலையை இங்குதான் தொடங்கினார். இன்றும் இந்தப் பகுதி "கடுதாசிப் பட்டறை" என்றே அழைக்கப்படுகிறது. இங்கு தான் 'புதிய ஏற்பாடு'1715ல் அச்சடிக்கபட்டது.

Joseph Jayanth

 

தரங்கம்பாடிடேனிஷ் கோட்டை


சீகன் பால் முயற்சியால் இந்தியாவில் முதன் முதலில் தமிழ் அச்சுகள் உருவானது சிறப்பு அம்சமாகும். 1719ம் ஆண்டு தரங்கம்பாடியிலே சீகன்பால் மறைந்தார்.

Joseph Jayanth

 

தரங்கம்பாடிடேனிஷ் கோட்டை


டேனிஷ் கிழக்கிந்திய கம்பெனியர் இவர்களுடைய தேவைக்கேற்ப,1791 வரை பல தடவை இக்கொட்டை திருத்தியமைத்தனர். பின்னர் 1845ல் டேனிஷ்காரர்கள் பிரிட்டீசாருக்கு "12 அரை" இலட்சம் ரூபாய்க்கு விற்றுவிட்டு தங்கள் நாடு சென்றுவிட்டனர். 1977ம் ஆண்டு முதல் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையால் பண்டைய கால சின்னமாக இக்கோட்டை பாதுகாத்து வருகிறது.

Sankara Subramanian

 

எங்கேயுள்ளது

 

நாகப்பட்டினம் மாவட்டத்தில் வங்கக் கடலோரம் ஒய்யாரமாய் அமைந்துள்ளது தரங்கம்பாடி.

 

எப்படி செல்லலாம்?

 

இதன் அருகில் திருச்சி, தஞ்சாவூர் ஆகிய நகரங்கள் உள்ளன. இங்கிருந்து ரயில் மற்றும் பேருந்து சேவைகள் தொடர்ந்து உள்ளன. திருச்சி விமான நிலையம் அருகில் உள்ளது.

 

சென்னையிலிருந்து எப்படி செல்லலாம்?


சென்னையிலிருந்து கிழக்கு கடற்கரைச் சாலை வழியாக இந்த இடத்துக்கு எளிதில் செல்லலாம்.

Read more about: travel, picnic
English summary

Do you know the real history of Tranquebar

Do you know the real history of Tranquebar
Please Wait while comments are loading...