உலகம் அழியும் நாள்: பத்மநாபசுவாமி கோயிலின் கடைசி அறையில் புதைந்துள்ள மர்மங்கள்
தேடு
 
தேடு
 

உலகிலேயே மிகப்பெரிய உணவருந்தும் அறை எங்குள்ளது தெரியுமா?

Written by: Udhaya
Published: Tuesday, May 16, 2017, 18:00 [IST]
Share this on your social network:
   Facebook Twitter Google+ Pin it  Comments

சுற்றுலா என்பது மனதுடன் உடலையும் புத்துணர்ச்சியாக்க நாம் விரும்பும் பகுதிகளுக்கு நம்மை விரும்பும் நபர்களுடன் செல்வது தானே. சுற்றுலா செல்வது பிடிக்காது என்று யாராவது சொல்லி கேள்விப்பட்டிருப்போமா?

ஒரு நாள் அலுவலகத்தில் 8 மணி நேரம் தொடர்ந்து வேலை செய்யமுடியுமா என்ன? இடைவேளைகள் பிரித்து நண்பர்களுடன் காஃபி, டீ சாப்பிட வெளியில் சென்றுவிடுகிறோம் அல்லது அலுவலக உணவு விடுதிக்கு செல்வோம். வெறும் ஒரு நாளுக்கே இவ்வளவு சலிப்பு என்றால், வருடம் முழுவதும் ஓயாமல் , விடுமுறையில்லாம் நடத்தும் வாழ்க்கைக்கு எவ்வளவு புத்துணர்ச்சி தேவை.

நீங்கள் உங்கள் வேலையில் சிறந்தவர் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. சிலவேளைகளில் உங்கள் கவனம் சிதறியோ அல்லது வேறு சிக்கல்களாலோ உங்கள் பணி பாதிக்கப்பட்டால்? உங்கள் தலையே வெடித்துவிடும்அல்லவா.
எப்போதெல்லாம் அசதி, அலுப்பு தட்டுகிறதோ அப்போதெல்லாம் உங்களுக்கு ஒரு ஓய்வு தேவை. ஓய்வு என்பது வெறுமனே அல்லாமல் புத்துணர்ச்சியுடன் கூடிய ஓய்வாக இருந்தால் எவ்வளவு நலம். அதுவும் உங்கள் குடும்பத்துடன் செல்லும்போது மனம் விட்டு பேச, வாழ்க்கையின் அடுத்த படிக்கு செல்வது பற்றி சிந்திக்க என அனைத்து விசயங்களுக்கும் சுற்றுலா உதவும்.

ஒருவேளை நீங்கள் ஹைதராபாத் சுற்றுலா சென்றீர்களென்றால், மறக்காமல் இந்த இடத்துக்கு போய்ட்டு வாங்க...... இதுதான் உலகிலேயே மிகப்பெரிய உணவு அருந்தும் அறையை கொண்ட அரண்மனை.

பாலாக்ணுமா அரண்மனை

 

பாலாக்ணுமா அரண்மனை ஹைதராபாத்திலுள்ள மிக அழகான இடங்களில் ஒன்றாகும். காண அரிதான கண்கவர் காட்சிகளுடன் மனதை மயக்கும் அட்டகாசமான ஒரு மாளிகை.

Bernard Gagnon

 

பெயர்க்காரணம்

 

பாலாக்ணுமா என்பதற்கு "வானத்தைப் போல" அல்லது "வானத்தின் மறுஉருவம்" என்று உருது மொழியில் பொருள்படும்.

Ankur P

 

எவ்வளவு பெரியது தெரியுமா?


32 ஏக்கர் பரப்பளவினைக் கொண்ட இந்த அரண்மனை, ஹைதரபாத்திலுள்ள சார்மினாரில் இருந்து ஐந்து கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது.

Ankur P

 

கட்டியவர் யார்?

 

இதனைக் கட்டியவர் நவாப் விகர்-உல்-உமர் ஆவார். இவர் ஆறாவது நிசாமின் மாமா ஆவார். ஒரு ஆங்கில கட்டிட வல்லுநரால் இந்த அரண்மனை கட்டப்பட்டது. இதற்கான அடிக்கல் சர் விகர் அவர்களால் 1884 ஆம் ஆண்டு, மார்ச் 3 ஆம் நாள் நடப்பட்டது.

Ankur P

 

முழுக்க முழுக்க மார்பிள் கற்கள்

 

கோல் பங்களா மற்றும் ஸனனா மஹால் முழுவதும் மார்பிள் கற்களால் செய்யப்பட்டவை. இதன் மொத்த பரப்பளவு, 93,971 சதுர மீட்டர்.

Tijl Vercaemer

 

தேளின் வடிவம்


இந்த அரண்மனை ஒரு தேளின் வடிவத்தினைப் போல வடிவமைக்கப்பட்டுள்ளது. அதன் இரண்டு கொடுக்குகள் போல வடக்குப்புறம் நீண்டுள்ளது. அரண்மனையின் நடுப்பகுதி முக்கிய கட்டிடம் மற்றும் சமையலறை, கோல் பங்களா, ஸனனா மஹால் மற்றும் அந்தப்புரத்தினைக் கொண்டுள்ளது.

நிறம் மாறும் அறைகள்

 

ஒரு சீரிய பயணியான நவாப்பின் தாக்கங்கள் இந்த கட்டிடங்களில் காட்டப்பட்டுள்ளன. ஃபாலாக்ணுமா பேலஸ் இத்தாலியன் மற்றும் டியூடர் கட்டிடக்கலையுடன் கூடிய அரிய கட்டிடம் ஆகும். இதன் கண்ணாடி ஜன்னல்கள் வெவ்வேறு நிறங்களை அறைகளுக்கு வழங்கக்கூடியது.

Tijl Vercaemer

 

களத்தில் இறங்கிய தாஜ்

 

2000 ஆம் ஆண்டில் தாஜ் ஹோட்டல், அரண்மனையினைச் சீரமைக்கும் பணிகளை மேற்கொள்ளத் தொடங்கியது. புதுப்பிக்கப்பட்ட ஹோட்டலாக நவம்பர் 2010 ல் திறக்கப்பட்டது. இங்குள்ள ஓவியங்கள், சிலைகள், தளபாடங்கள், புத்தகங்கள், கையெழுத்துப் பிரதிகள், மரப்பொருட்கள் என அனைத்தும் சீரமைக்கப்பட்டிருந்தன. உலகிலேயே மிகப்பெரிய உணவருந்தும் அறையாக 101 இருக்கைகளைக் கொண்ட உணவருந்தும் அறை இங்குள்ளது.

Tijl Vercaemer

இந்த அரண்மனைக்கு அருகில் உள்ள கண்கவர் இடங்கள்:

 

மக்கா மஸ்ஜித் - சுமார் 4 கிலோ மீட்டர்
நேரு விலங்கியல் பூங்கா - சுமார் 4 கிலோ மீட்டர்
இவை தவிர அங்கு தங்கியிருக்கும் போது, சார்மினார், தரமடி பரதாரி மற்றும் சாலர் ஜங்க் அருங்காட்சியகம் போன்றவற்றிற்கு எளிதில் சென்றுவர இயலும்.

 

அருகிலுள்ள போக்குவரத்து வசதிகள்:

 

செகந்திரபாத் ரயில் நிலையத்திலிருந்து தொலைவு - சுமார் 15 கிலோ மீட்டர்

ராஜீவ் காந்தி சர்வதேச விமான நிலையம் - சுமார் 17 கிலோ மீட்டர்

 

Read more about: travel, palace
English summary

Do you Know this palace having worlds largest dining hall in tamil

Do you Know this palace having worlds largest dining hall in tamil
Please Wait while comments are loading...