Search
  • Follow NativePlanet
Share
» »உங்கள் ராசிக்கு எந்த கோவிலுக்கு போனா பாக்கியம் தெரியுமா?

உங்கள் ராசிக்கு எந்த கோவிலுக்கு போனா பாக்கியம் தெரியுமா?

உங்கள் ராசிக்கு ஏற்ற இந்த கோவில்களுக்கு நீங்கள் சென்றால் தடைகள் நீங்கி வாழ்வு வளம் பெறும்.

By Udhaya

தை பிறந்தால் வழி பிறக்கும் என்று சொல்வார்கள். உண்மைதான். தை பிறந்து விட்டது வழி பிறக்கும் வரை வீட்டு முற்றத்திலேயே இருக்கப்போகிறீர்களா. ஆண்டவனின் அணுக்கிரகம் நம்மை ஆட்கொள்ளும் நிலையில் நாமும் நம்மால் முடிந்தவற்றை செய்ய முயலும்போதுதான் வெற்றி கிடைக்கும்.

துவல வேண்டாம். தை முதலே இப்படி தொடங்கி விட்டதே என கவலைப் படாதீர்கள். இந்த மாதத்தில் ஒவ்வொரு ராசிக் காரர்களுக்கும் செல்ல வேண்டிய கோவில்கள் பற்றி இங்கு கொடுக்கப்பட்டுள்ளது.

மேஷம்

மேஷம்

மேஷ ராசிக்காரர்களே...... உங்களை செவ்வாய் ஆட்கொண்டுள்ளது என்பது உங்களுக்குத் தெரிந்திருக்கும். செவ்வாய் உங்கள் மீது தன் பார்வையை வீசுவது நல்லதுதான். அதன் பலத்தை மேலும் அதிகரிக்க அருகிலுள்ள சிவன் கோவிலுக்கு செல்லுங்கள். மிகுந்த நலம் பெறவேண்டுமானால் திருநெல்வேலி நெல்லையப்பர் கோவிலுக்கு செல்லவேண்டும்.

சுமார் 2000 ஆண்டுகளுக்கு முந்தைய பழமை வாய்ந்த தலமாக விளங்குகிறது.
சிவபெருமான் நடனமாடிய ஐந்து முக்கிய தலங்களில் நெல்லையப்பர் கோயில் திருத்தலமும் ஒன்று.

இக்கோவில் தேர் தமிழ்நாட்டின் மூன்றாவது மிகப்பெரிய தேர் என்ற பெருமைக்குரியது.

PC: Theni.M.Subramani

ரிஷிபம்

ரிஷிபம்

ரிஷிப ராசியை ஆளும் கிரகம் சுக்கிரன். காமாட்சியம்மனை வணங்குவதால் அதிர்ஷ்டம் கொட்டோ கொட்டென்று கொட்டப்போகிறது. மேலும் உங்கள் எதிர்மறை எண்ணம் விலகி, நேர்மறை எண்ணங்கள் அதிகரிக்கும்.

நீங்கள் செல்லவேண்டிய கோவில் காஞ்சி காமாட்சி கோவில்.

PC: pratheeps

மிதுனம்

மிதுனம்

புதன் கிரகம் ஆட்சி மேற்கொள்ளும் மிதுன ராசி காரர்களே... உங்கள் வாழ்வில் நலமும் வளமும் பெற நாராயண சுவாமியை வணங்கவேண்டும்.

நீங்கள் செல்லவேண்டிய கோவில், சங்கரன்கோவில். திருநெல்வேலி மாவட்டத்தில் இருக்கும் சங்கரன்கோயில் சங்கர நாராயணர் கோயில் இங்கு பிரசித்தி பெற்றது.108 சக்தி தலங்களில் ஒன்று.சங்கரன்கோயில் ஆடித்தவசுத் திருவிழா சிறப்பாக ஒவ்வொரு வருடமும் கொண்டாடப்படுகிறது.

PC: Charulathamani

கடகம்

கடகம்


கடக ராசியை ஆட்கொண்டிருப்பது சந்திரன். மிகவும் குளுமையான சந்திரன் உங்கள் மீது பார்வையிடுவதால் அம்மனை இந்த ராசிக்காரர்களை வணங்கினால் வாழ்வில் முன்னேற்றம் பெறலாம்.

வெக்காளி அம்மன் கோயிலுக்குச் செல்வதற்கு, திருச்சி மத்திய பேருந்து நிலையத்தில் இருந்து அல்லது மலைக்கோட்டையில் உள்ள சத்திரம் பேருந்து நிலையத்தில் இருந்து "உறையூர் வழியாகச் செல்லும்" பேருந்துகளில் ஏறி, நாச்சியார் கோயில் நிறுத்தத்தில் இறங்கிக் கொள்ள வேண்டும். பிறகு இங்கிருந்து சிறிது தூரம் (500 மீட்டர்கள்) மேற்கு நோக்கி நடந்தால் வெக்காளியம்மன் கோவிலுக்குச் செல்லலாம்.


PC: TRYPPN

சிம்மம்

சிம்மம்

சிம்ம ராசியை ஆளும் கிரகம் சூரியன். சூரியனின் வலிமையை அதிகரிப்பதற்கு சிம்ம ராசிக்காரர்கள் சிவபெருமானை வணங்க வேண்டும். எந்நேரமும் சிவனின் மந்திரங்களை உச்சரித்துக் கொண்டு இருந்தால், வாழ்க்கையில் நல்ல நிலையை அடையலாம்.

நீங்கள் செல்லவேண்டிய கோவில் திருவண்ணாமலை.

திருவண்ணாமலையிலுள்ள மலையானது 260 கோடி ஆண்டுகள் பழமையானது என டாக்டர் பீர்பால் சகானி என்ற விஞ்ஞானி தெரிவித்துள்ளார். [2] சைவர்களின் நம்பிக்கைப் படி இம்மலையானது கிருத யுகத்தில் நெருப்பு மலையாகவும், திரேதாயுகத்தில் மாணிக்க மலையாகவும், துவாபரயுகத்தில் தங்க மலையாகவும், தற்போது நடைபெறும் கலி யுகத்தில் கல் மலையாகவும் இருக்கிறது.

PC: Adam63

கன்னி

கன்னி


கன்னி ராசியை ஆளும் கிரகம் புதன் ஆகும். புதனின் சக்தியை கூட்டுவதற்கு, ஸ்ரீமன் நாராயணனை வணங்க வேண்டும். இதனால் அனைத்திலும் வெற்றிகள் மற்றும் வாழ்வில் அதிர்ஷ்டம் கொட்டும்.

நீங்கள் செல்லவேண்டிய கோவில் கன்னியாகுமரி சுசீந்திரம் தாணுமாலையன் கோவில்.

கன்னியாகுமரி மாவட்டம், சுசீந்திரம் எனும் ஊரில் அமைந்துள்ளது தாணுமாலயன் கோயில். சிவன், விஷ்ணு, பிரம்மா ஆகிய முப்பெருங்கடவுள்களும் ஒன்றின் மேல் ஒன்றாக அமைந்துள்ள இக்கோயில் தாணுமாலயன் கோயில் என அழைக்கப்படுகிறது.

PC: Karthikeyan.pandiyan

 துலாம்

துலாம்

மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில் என்பது வைகை ஆற்றின் கரையில் அமைந்துள்ள கோயில் நகரமான மதுரையின் மத்தியில் அமைந்துள்ள சிவாலயமாகும். இச்சிவாலயத்தின் மூலவர் சுந்தரேசுவரர் மற்றும் அம்பிகை மீனாட்சியம்மன். இக்கோயிலை மதுரை மீனாட்சியம்மன் கோயில் என்றும் அழைக்கின்றனர். இக்கோயிலே தமிழகத்தில் உள்ள 366 மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில்களின் மூலக் கோயிலாக உள்ளது. இத்தலத்தில் முதல் பூசை அம்பிகை மீனாட்சிக்கே செய்யப்படுகிறது.


PC: Jorge Royan

விருச்சிகம்

விருச்சிகம்


நடராசர் கோயில் அப்பர், சுந்தரர், சம்பந்தர், மாணிக்கவாசகர் ஆகிய சமயக் குரவர் நால்வராலும் தேவார பாடல் பெற்ற தலங்களில் ஒன்றாகும். இத்தலம் சிதம்பரம் தில்லை நடராஜர் கோயில் என்றும் சிதம்பரம் தில்லை கூத்தன் கோயில் என்றும் சிதம்பரம் கோயில் என்றும் அழைக்கப்படுகிறது. இத்தலம் சைவ இலக்கியங்களில் கோயில் என்ற பெயராலேயே அழைக்கப்பெறுகிறது. அத்துடன் பூலோக கைலாசம் என்றும் கைலாயம் என்றும் அறியப்பெறுகிறது. இத்தலம் தமிழ்நாட்டில் கடலூர் மாவட்டத்திலுள்ள சிதம்பரம் எனும் ஊரில் அமைந்துள்ளது.

PC: Ragavendran

தனுசு

தனுசு

தனுசு ராசியை ஆளும் கிரகம் குரு ஆகும். குருவின் பலத்தை அதிகரிக்க சிவனின் அவதாரமான தட்சிணாமூர்த்தியை வணங்க வேண்டும். எனவே பயனுள்ள விளைவுகளைப் பெற தனுசு ராசிக்காரர்கள் தட்சிணாமூர்த்தியை வணங்க வேண்டும்.

நீங்கள் செல்லவேண்டிய கோவில்

திருநெல்வேலி மாவட்டம் செங்கோட்டை வட்டம் புளியறை எனும் ஊரில் உள்ள சிவாலயத்தில் பிரதான நுழைவாயிலில் தட்சிணாமூர்த்தி மூலவரை சுற்றி வலம் வரும் வகையில் தனியாக அமைத்துள்ளது.


PC: wikipedia

மகரம்

மகரம்

குற்றாலநாதர் கோயில் பாடல் பெற்ற தலங்களில் ஒன்றாகும். சம்பந்தர் பாடல் பெற்ற இத்தலம் திருநெல்வேலி மாவட்டம் , குற்றாலத்தில் அமைந்துள்ளது. இத்தலத்தில் திருமால் வடிவிலிருந்த மூர்த்தியை அகத்தியர் சிவலிங்கமாக மாற்றினார் என்பது தொன்நம்பிக்கை.

PC: wikipedia

கும்பம்

கும்பம்


திருக்கச்சியேகம்பம் - எனப் பழைய சமய நூல்களில் குறிக்கப்படும் காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயில் பாடல் பெற்ற தலங்களுள் ஒன்றாகும். இந்தியாவின் தமிழகத்தில் காஞ்சிபுரம் நகரில் அமைந்துள்ளது. இது பஞ்சபூத தலங்களில் ஒன்றாகும். இத்தலத்தில் தலவிருட்சம் மாமரம் ஆகும்.

PC: Ssriram mt

மீனம்

மீனம்


மீன ராசியை ஆளும் கிரகம் குரு. எனவே மீன ராசிக்காரர்கள் தட்சிணாமூர்த்தியை அன்றாடம் வணங்கி வர, நல்ல பலன் கிடைக்கும்.

நீங்கள் செல்லவேண்டிய கோவில்

சிவகங்கை மாவட்டத்தில் பட்டமங்கலத்தில் அருள்மிகு தட்சிணாமூர்த்தி திருக்கோயில் உள்ளது.

PC: mountainamoeba

Read more about: பயணம் travel
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X