Search
  • Follow NativePlanet
Share
» »ஸ்டீவ் அறிவுரையால், மார்க் ஜுக்கர்பெர்க் காண விரும்பிய இந்திய கோவில் - அப்படி என்ன அதிசயம்?

ஸ்டீவ் அறிவுரையால், மார்க் ஜுக்கர்பெர்க் காண விரும்பிய இந்திய கோவில் - அப்படி என்ன அதிசயம்?

பேஸ்புக்கின் அபரிமிதமான வளர்ச்சிக்கு காரணம் இதே கோயில்தான் தெரியுமா?

மகாபாரதத்தின் பழமையான நகரங்கள் நிகழ்காலத்தில் எப்படி இருக்குனு தெரிஞ்சிக்கணுமா?மகாபாரதத்தின் பழமையான நகரங்கள் நிகழ்காலத்தில் எப்படி இருக்குனு தெரிஞ்சிக்கணுமா?

இந்திய பிரதமர் நரேந்திர மோடி, அமெரிக்கா சென்றிருந்த போது, முகநூல் பேஸ்புக் நிறுவனர் மார்க் ஜுக்கர்பெர்க் ஒரு விசயத்தை பகிர்ந்திருந்தார் என்று பிரபல நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டிருந்தது. அதாவது மறைந்த ஆப்பிள் நிறுவனத்தின் நிறுவனர் ஸ்டீவ் ஜாப்ஸ் தனக்கு ஒரு முக்கிய பரிந்துரையை செய்தார் என்றும், அதை தன் இந்திய பயணத்தின் போது கண்டிப்பாக செய்வேன் என்றும் கூறியிருந்தார்.

ஆப்பிள் நிறுவனர் ஸ்டீவ் ஜாப்ஸ், தன்னிடம் இந்தியா சென்றுவருமாறு கூறியதாகவும், அங்குள்ள முக்கியமான கோயில் ஒன்றுக்கு மறக்காமல் செல்லுமாறும் அறிவுறுத்தியதாகவும் மார்க் தெரிவித்துள்ளார்.

அப்படி என்ன ஸ்பெஷல்? அந்த கோயில் எங்க இருக்கு தெரியுமா? வாங்க

பிரிட்டிஷ் பொறியாளரையே குழப்பி விரட்டிய அந்த தொங்கும் தூண் எங்க இருக்கு தெரியுமா?பிரிட்டிஷ் பொறியாளரையே குழப்பி விரட்டிய அந்த தொங்கும் தூண் எங்க இருக்கு தெரியுமா?

எங்கே தெரியுமா?

எங்கே தெரியுமா?

உத்தரகண்ட் மாநிலம் நைனிட்டாலில் அமைந்துள்ள கெய்ஞ்சி தம் ஆசிரமம் தான் அது.

ஸ்டீவ் ஜாப்ஸின் இந்திய வருகை

ஸ்டீவ் ஜாப்ஸின் இந்திய வருகை

ஸ்டீவ் ஜாப்ஸ் 1970களில் இந்தியா வந்துள்ளார். அப்போது அவர் கெய்ஞ்சி தம் ஆசிரமத்துக்கும் சென்று வந்துள்ளார்.

எப்படி செல்லவேண்டும்

எப்படி செல்லவேண்டும்

விமானம் மூலமாக பான்ட்நகருக்கு வந்து, அங்கிருந்து கார் மூலம் நீம் கரோலி பாபா ஆசிரமத்துக்கு செல்லவேண்டும்

அமெரிக்க ஆளுமைகள் ஆசி பெற்ற இடம்

அமெரிக்க ஆளுமைகள் ஆசி பெற்ற இடம்


நீம் கரோலி பாபாவிடம் காலம் காலமாக பல அமெரிக்க ஆளுமைகள் ஆசி பெற்று சென்றுள்ளனர்.


இன்றும் பெண்களை நுழைய அனுமதிக்காத இந்திய கோயில்கள்

ஜாப்ஸுக்கு ஞானோதயம் பிறந்த இடம்

ஜாப்ஸுக்கு ஞானோதயம் பிறந்த இடம்

இந்த இடத்துக்கு வந்த பிறகுதான் ஜாப்ஸ் தனது ஆப்பிள் நிறுவனத்தை தொடங்கும் யோசனை பெற்றதாக அவரே கூறியுள்ளார்.

கெய்ஞ்சி கட்டாயம் பார்க்கவேண்டிய பகுதி

கெய்ஞ்சி கட்டாயம் பார்க்கவேண்டிய பகுதி

கெய்ஞ்சி பார்ப்பதற்கு மிகவும் அழகான, பிரம்மிக்கும் சூழல் நிறைந்த மலையடிவாரத்தில் அமைந்த ஆசிரமம் ஆகும். இதைக் காணவேண்டும் என்று ஸ்டீவ் ஜாப்ஸ் தனக்கு அறிவுறுத்தியதாக கூறியுள்ளார் மார்க்.

இந்த இடங்கள்ல மட்டும் திருமணம் செஞ்சீங்க! உங்கள அடிச்சிக்க ஆள் இல்லங்க!

மார்க்கின் இந்திய வருகை

மார்க்கின் இந்திய வருகை

இந்த அறிவுரையை ஏற்றுத்தான் மார்க் இந்தியா வந்து அந்த ஆசிரமத்துக்கு சென்று ஆசி பெற்றதாக, நரேந்திர மோடியுடனான சந்திப்பு நிகழ்ச்சியில் நெகிழ்ந்து கூறியுள்ளார்.

இந்தியாவின் 1000 ஆண்டுகள் பழமையான கோயில்கள் - 1

நைனிட்டாலிலிருந்து

நைனிட்டாலிலிருந்து

இது நைனிட்டாலிலிருந்து 38 கிமீ தொலைவில் அமைந்துள்ளது. இந்த பகுதி பற்றி மார்க் மிகவும் பெருமையாக பேசியுள்ளார்.

பரந்து விரிந்த அற்புத கோட்டை சிதிலமடைந்ததன் அதிர்ச்சி பின்னணி இதுதானா!

பேஸ்புக்கின் அபரிமிதமான வளர்ச்சி காரணம்

பேஸ்புக்கின் அபரிமிதமான வளர்ச்சி காரணம்

கடந்த பத்து வருடமாக பேஸ்புக் இவ்வளவு உயரம் வளர்ந்ததற்கு இந்த ஆசிரமம்தான் காரணம் என்றும் அவர் தெரிவித்ததாக அந்த அமெரிக்க செய்தி நிறுவனம் தகவல் வெளியிட்டுள்ளது.

பொற்கோயிலில் இருக்கும் மர்மங்களை பற்றி கேள்விப்பட்டிருக்கிறீர்களா?

கும்மான் மலைகள்

கும்மான் மலைகள்

கும்மான் மலைகளின் மீது அமைந்துள்ளது இந்த ஆசிரமம். இது 1964ம் ஆண்டு துவங்கப்பட்டது. ஒவ்வொரு நாளும் நூற்றுக்கணக்காக பக்தர்கள் இங்கு வருகை தருகின்றனர்.

அதிசயம்!.... தலைகீழாக விழும் கோபுர நிழல்!.. என்ன நடக்கிறது விருபாட்சரே!

பந்த்ரா விழா

பந்த்ரா விழா


ஒவ்வொரு வருடமும் ஜூன் 15ம் தேதி இங்கு நடக்கும் பந்த்ரா விழாவில் லட்சம் பேர் வருகைதருகின்றனர்.

நடை திறக்கும் நேரம்

நடை திறக்கும் நேரம்


காலை 7 மணிக்கு திறக்கப்படும் நடை மாலை 6 மணிக்கு சாற்றப்படும். குளிர்காலங்களில் 4-5 மாதங்கள் தொடர்ச்சியாக இந்த கோயில் மூடப்பட்டிருக்கும்.

தங்கும் வசதிகள்

தங்கும் வசதிகள்


இந்த ஆசிரமத்தில் தங்குவதற்கு தனியாக ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

ஆசிரமத்திற்கு உள்ளே தங்குவதாக இருந்தால், இந்த ஆசிரமத்தின் மேலாளருக்கு ஒரு கடிதம் எழுதி அனுமதி பெறவேண்டும்.

அல்லது வெளியில் தங்குவதென்றாலும் நிறைய விடுதிகள் 8 கிமீ சுற்றளவுக்குள்ளேயே வசதிக்கேற்ப வாடகையுடன் கிடைக்கின்றன.

எப்படி செல்லலாம்?

எப்படி செல்லலாம்?

நைனிட்டாலிலிருந்து அரை மணி நேரத்தில் நீம் கரோலி கெய்ஞ்சி தாம் ஆசிரமத்தை சென்றடையலாம்.

மாநில நெடுஞ்சாலை எண் 109ல் சென்றால் ஆசிரமத்தை அடைய முடியும்.

அருகிலுள்ள பிற சுற்றுலாத் தளங்கள்

அருகிலுள்ள பிற சுற்றுலாத் தளங்கள்

நைனிட்டால் ஏரி, கோரக்கல், பான்ட் விலங்கியல் பூங்கா, குகை பூங்கா, நைனா சிகரம், சட்டல் ஏரி, நைனா தேவி கோயில், பனி பார்க்கும் முனை, அனுமன் கோயில் என இதைச் சுற்றி நிறைய சுற்றுலாத் தளங்கள் கோயில்கள் உள்ளன.

ஸ்டீவ் ஜாப்ஸ், மார்க் ஜூக்கர்பெர்க் போல நீங்களும் வாழ்க்கையில் முன்னேற குறிக்கோளுடன் செயல்படுங்க.. இனிமேல் நீங்கள் தொட்டதெல்லாம் வெற்றிதான்.

Read more about: travel temple
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X