உலகம் அழியும் நாள்: பத்மநாபசுவாமி கோயிலின் கடைசி அறையில் புதைந்துள்ள மர்மங்கள்
தேடு
 
தேடு
 

விந்தியமலைகளில் ஒளிந்துள்ள நம் பாரம்பரிய வரலாறு தெரியுமா?

Written by: Udhaya
Published: Friday, August 11, 2017, 13:13 [IST]
Share this on your social network:
   Facebook Twitter Google+ Pin it  Comments

புறநானூற்றுக் காலத்தில் வேங்கடம் என்பதும் வடவேங்கடம் என்பதும் பொதுவாக விந்தியமலையையே குறித்தது. தமிழின் பெருமை வடவேங்கடம் தென்குமரியாயிடை பரவியது என்பதும், அதன் பின்னர் சிலரது சூழ்ச்சியினால் ஆங்கிலேயர் காலத்தில்தான் தென்வேங்கடமான திருப்பதி தமிழகத்தின் வடவெல்லையென ஒருதலையாக முடிவு செய்யப்பட்டது. இது முற்றிலும் தவறு என்று கூறுகின்றனர் மொழி ஆராய்ச்சியாளர்கள்.

மதுரைக்காஞ்சி வரிகளில் வரும் விண்டு எனும் சொல் விந்திய மலையைக் குறிக்கும். விண்டுமலை என்பதே சமற்கிருதமாக்கப்பட்டு விந்தியமலை என்றாகியுள்ளது.

தற்போது இந்தியா என்றழைக்கப்படும் இந்த நிலப்பரப்பு முற்காலத்தில் பல தேசங்களாக இருந்தது. விந்தியமலைக்கு தெற்கு தேசங்கள், விந்தியமலைக்கு வடக்கு தேசங்கள் என பிரிக்கப்பட்டு இருந்தன இந்த தேசங்கள்.

விந்தியமலைக்கு தெற்கே உள்ள இடங்களனைத்தையும் ஆண்ட பெருமை தமிழனுக்கு உண்டு என்று கூறுவர்.

சுற்றுலாவுக்கும், விந்தியமலைக்கும் என்ன சம்பந்தம் என்கிறீர்களா? நம் பாரம்பரிய வரலாற்றை தெரிந்து கொள்வதுடன், விந்தியமலையை சுற்றிப் பார்த்துவிட்டு வருவோம் வாருங்கள்.

விந்தியமலை

 

மத்திய இந்தியாவான மத்திய பிரதேச மாநிலத்தில் ஓங்கி உயர்ந்து காணப்படுகிறது விந்திய மலைத் தொடர்.
இதன் நீளம் 970 கிமீ உயரம் 910 கிமீ ஆகும்.

இந்த மலைத்தொடரில் காணப்படும் மலைகள் மற்ற மலைகளை ஒப்பிடும்போது அளவில் சிறியதாகவும் மிக அழகாகவும் காணப்படுகிறது.

cool_spark

 

குஜராத்திலிருந்து


மேற்கில் குஜராத் மாநிலத்தில் ஆரம்பிக்கும் இந்த மலைத்தொடர், கங்கை நதி அருகே மிர்சாபூரில் முடிவடைகிறது.

Varun Shiv Kapur

 

நதிகள்


இம்மலையில் தோன்றி வடக்கு புறமாக பாயும் நதிகள் பார்வதி, பெட்வா, கென் ஆகியன. கங்கை நதியின் கிளை நதி இம்மலை வழியாக கிழக்கு நோக்கி பாய்கிறது.

Rbsrajput

 

சுற்றுலாத் தளங்கள்

 

இம்மலைப்பகுதிகளில் இருக்கும் சுற்றுலாத் தளங்களாவன சாஞ்சி மற்றும் கஜூராகோ கோயில். நர்மதா பள்ளத்தாக்கு, ஆரவல்லிமலைகள், ரந்தாம்பூர் தேசிய பூங்கா என பலவகையான சுற்றுலா அம்சங்கள் பொருந்திய மலைத்தொடர் இதுவாகும்.

Hariya1234

 

சஞ்சி

 

மத்தியப்பிரதேசத்தில் உள்ள ரெய்சன் மாவட்டத்தில் அமைந்திருக்கும் சிறிய கிராமம் சஞ்சி ஆகும். மிகச் சிறிய கிராமமாக இருந்தாலும், புத்த சமய நினைவிடங்கள் மற்றும் பண்பாடு ஆகியவற்றின் உறைவிடமாக சஞ்சி விளங்கி வருகிறது.

Nagarjun

 

சஞ்சியைச் சுற்றியுள்ள சுற்றுலாத் தலங்கள்

 

சஞ்சி பல பிரபலமான சுற்றுலாத் தலங்களைக் கொண்டிருக்கிறது. குறிப்பாக புத்த சமய விகாரா, சஞ்சி ஸ்துபியின் நானகு நுழை வாயில்கள், சஞ்சி அருங்காட்சியகம், மிகப் பெரிய கிண்ணம், குப்த ஆலயம், அசோகத் தூண் மற்றும் சஞ்சி ஸ்துபி போன்றவை சுற்றுலாப் பயணிகள் பார்க்க வேண்டிய மிக முக்கிய இடங்களாகும். ஆன்மீகத் தளங்களைத் தவிர்த்து சஞ்சியின் இயற்கை எழிலை சுற்றுலாப் பயணிகள் மிக அழகாக ரசிக்க முடியும்.

Tsui

 

சஞ்சிக்கு எவ்வாறு செல்வது?

 

சஞ்சிக்கு மிக அருமையான போக்குவரத்து வசதிகள் உள்ளன. சஞ்சிக்கு அருகில் உள்ள போபாலில் ராஜா போஜ் விமான நிலையம் அமைந்திருக்கிறது. இந்த விமான நிலையத்திற்கு டில்லி, மும்பை, ஜபல்பூர், இந்தூர் மற்றும் குவாலியர் போன்ற நகரங்களில் இருந்து விமானங்கள் இயக்கப்படுகின்றன.

Bernard Gagnon

 

கஜூராஹோ


மத்திய பிரதேச மாநிலத்தில் சத்தர்பூர் மாவட்டத்தில் கஜுராஹோ கோயில்கள் அமைந்திருக்கின்றன. 950ஆம் ஆண்டில் இருந்து 1050ஆம் ஆண்டுக்குள் சந்தேலா வம்ச அரசர்களால் கட்டப்பட்டிருக்கிறது.

Jeff Hart

 

நர்மதா படித்துறை

 

நர்மதா படித்துறை 18 ஆம் நூற்றாண்டில், ஹோல்கர் மாநிலத்தின் அப்போதைய ஆட்சியாளராக விளங்கிய மஹாராணி அஹில்யா பாய் ஹோல்கரால் கட்டப்பட்டுள்ளது. நர்மதா நதி இந்தியாவின் புண்ணிய தீர்த்தங்களுள் மிகவும் புனிதமானதாக நம்பப்படுகிறது.

Dchandresh

 

ஆரவல்லி மலைத்தொடர்

 

விந்தியமலையைத் தொடர்ந்து அமைந்துள்ளது இந்த ஆரவல்லி மலைத்தொடர். இதுவும் மிக அழகான கண்ணுக்கினிமையான பல சுற்றுலா அம்சங்கள் நிறைந்தது.

wiki

 

ரணதம்போர் தேசிய பூங்கா

 

ரணதம்போர் தேசிய காட்டுயிர் பூங்கா என்ற விசேஷ அந்தஸ்தைப் பெற்றுள்ள இது வட இந்தியாவிலுள்ள மிகப்பெரிய காட்டுயிர் வனச்சரகமாகும். இது ஒரு காலத்தில் ராஜவம்சத்தினரின் வேட்டைப்பகுதியாக இருந்துள்ளது. 1955ம் ஆண்டில் இது அதிகாரப்பூர்வ காட்டுச்சுற்றுலா வனச்சரகமாக அறிவிக்கப்பட்டது.

392 ச.கி.மீ பரப்பளவில் இந்த ‘காட்டுயிர் பூங்கா' பரந்து விரிந்துள்ளது. புலிகள் அதிகம் வசிக்கும் காட்டுப்பகுதியாக பிரசித்தி பெற்றுள்ள இந்த வனப்பகுதி இந்தியாவில் மிகச்சிறந்த காட்டுயிர்ப்பூங்காவாக புகழ் பெற்றுள்ளது.

THerrington

 

ரணதம்போர் கோட்டை

 


இந்த காட்டில் அமைந்துள்ள ஒரு கோட்டை இதுவாகும்.

Manojmeena

 

சிகரம்

 


இந்த மலையின் மிக உயர்ந்த சிகரம் எலிவேசன் அமர்கண்டக் ஆகும்.

R Singh

 

Read more about: travel, hills
English summary

Do you visit Vindhya range in India - a fabulous cultural tour

Do you visit Vindhya range in India - a fabulous cultural tour
Please Wait while comments are loading...