Search
  • Follow NativePlanet
Share
» »இரும்பை தங்கமாக்கும் அதிசய சித்தர்கள் வாழும் கொல்லிமலை மர்மங்கள் தெரியுமா?

இரும்பை தங்கமாக்கும் அதிசய சித்தர்கள் வாழும் கொல்லிமலை மர்மங்கள் தெரியுமா?

இரும்பை தங்கமாக்கும் அதிசய சித்தர்கள் வாழும் கொல்லிமலை மர்மங்கள் தெரியுமா?

தமிழகத்தின் மலைகள் ஆன்மீகம் மற்றும் சுற்றுலாவுக்கு பெயர் பெற்று விளங்குகின்றன.

அப்படிபட்ட மலைகளில் மருத்துவம், விஞ்ஞானம் கற்றுத் தேர்ந்த சித்தர்களும் வாழ்ந்து வருவதாக பெரும்பாலான மக்களால் நம்பப்படுகிறது.

கொல்லிமலையில் வாழும் சித்தர்கள் இரும்பை தங்கமாக்கும் வித்தை அறிந்தவர்கள். அதுமட்டுமல்லாது இன்னும் நிறைய மர்மங்களை தன்னகத்தே கொண்டுள்ளது இந்த கொல்லிமலை.

 மர்மங்கள் நிறைந்த மலைகள்

மர்மங்கள் நிறைந்த மலைகள்

தமிழகத்தில் மர்மங்கள் நிறைந்த மலைகளாக பார்க்கப்படுபவை கொல்லிமலை, பர்வதமலை, சதுரகிரிமலை ஆகியன.

இங்கு சித்தர்கள் பலர் வாழ்ந்து வருவதாக இன்றும் நம்பிக்கை நிலவுகிறது.

Kurumban

 அமானுஷ்யங்கள்

அமானுஷ்யங்கள்

இந்த மலைகளில் ஆன்மீகம் தவிர பல அமானுஷ்யங்களும் புதைந்து கிடக்கின்றன. இப்படி பட்ட ஒரு மலைக்கு சுற்றுலா செல்லலாம் என்ன நீங்கள் தயாரா?

 கொல்லி மலை

கொல்லி மலை

மேற்கூறிய மலைகளில் மிகவும் அச்சுறுத்தலான மலை என்றால் அது கொல்லிமலைதான். இதன் உயரம் அப்படி.

நாமக்கல் மாவட்டம்

நாமக்கல் மாவட்டம்

நாமக்கல் மாவட்டத்தில் அமைந்துள்ளது இந்த கொல்லி மலை. இது ஏறக்குறைய 1300 மீ உயரம் கொண்டது.

 கடையேழு வள்ளல்கள்

கடையேழு வள்ளல்கள்

இந்த பகுதியை கடையேழு வள்ளல்களில் ஒருவரான வல்வில் ஓரி என்பவர் ஆட்சி செய்துள்ளார். பிற்காலத்தில் பல அரசுகள் இங்கு அமைந்தன.

Selathan

 கொல்லிப் பாவை

கொல்லிப் பாவை

இங்கு அமைந்துள்ள மனித உருவில் அவதரித்த தெய்வமான கொல்லிப் பாவை கோயில்தான் இந்த மலைக்கு கொல்லி மலை என்று பெயர் வர காரணம் என்று கூறுகின்றனர்.

17 ஆயிரம் ஆண்டுகள்

17 ஆயிரம் ஆண்டுகள்

சுமார் 17 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே இவர் இங்குள்ள மலைத் தமிழர்களின் தெய்வமாக இருந்துவருகிறார்.

 சங்க இலக்கியங்கள்

சங்க இலக்கியங்கள்

இந்த மலையைப் பற்றியும், கொல்லிமலை அம்மனைப் பற்றியும் சங்க இலக்கியங்கள் பலவற்றில் குறிப்பாக அகநானாறு, சிலப்பதிகாரம் போன்றவற்றில் குறிப்பிடப்பட்டுள்ளது.

 குமரிக்கண்ட மர்மங்கள்

குமரிக்கண்ட மர்மங்கள்

இந்தியா உருவாவதற்கு முன்பே பல ஆயிரம் ஆண்டுகளாக குமரிக்கண்டம் இருந்தது நாம் அறிந்ததே. அதன் முழுமுதற் கடவுளாக இந்த அம்மன்தான் இருந்துள்ளார்.

கண்டம் முழுவதும் 9 கோயில்கள் இருந்துள்ளன. பல காரணங்களால் அவை அனைத்தும் அழிவுற்றன.

 எஞ்சியது இது மட்டுமே

எஞ்சியது இது மட்டுமே


இந்த ஒன்பது கோயில்களில் எஞ்சியது இதுமட்டுமே.

 கொல்லிப்பாவை

கொல்லிப்பாவை

கொல்லிப்பாவை என்பது சிலை அல்லது சிற்பம் அல்ல.. அது கையால் வரையப்பட்ட ஓவியம். அந்த ஓவியத்தை கடவுளாக வழிபடுகின்றனர் மக்கள்.

எட்டுக்கை அம்மன்

எட்டுக்கை அம்மன்

அந்த பகுதியில் வாழும் மக்கள் இந்த அம்மனை எட்டுக்கை அம்மன், எட்டுக்கை காளி என்றே அழைக்கின்றனர்.

சித்தர்கள் செய்யும் மர்மங்கள்

சித்தர்கள் செய்யும் மர்மங்கள்


இந்த மலையில் நிறைய சித்தர்கள் வாழ்வதாகவும், பவுர்ணமி காலங்களில் அவர்கள் பல கண்களுக்கு தெரிவதாகவும் கூறப்படுகிறது.

 அறப்பள்ளீஸ்வரர் கோயில்

அறப்பள்ளீஸ்வரர் கோயில்

கொல்லிமலை சுற்றுலாவில் முக்கியமான இடம் இது. சிவபெருமானின் தலமான இங்கு அவர் தனது மனைவியுடன் காட்சி தருகிறார்.

Karthickbala

https://en.wikipedia.org/wiki/Kolli_Hills#/media/File:Arapalli.jpg

 ராசராச சோழன்

ராசராச சோழன்

சோழ வம்சத்தின் மாபெரும் அரசராகிய ராசராச சோழன் இந்த கோயிலுக்கு அடிக்கடி வந்து வழிபட்டுள்ளார்.

 மீன் பள்ளி ஆறு

மீன் பள்ளி ஆறு

இந்த கோயிலின் அருகில் மீன்பள்ளி ஆறு உள்ளது. இங்கு இறைவன் மீன் வடிவில் இருப்பதாக நம்பப்படுகிறது.

 ஆகாயகங்கை

ஆகாயகங்கை

இதன் அருகிலேயே ஆகாய கங்கை எனும் நீர்வீழ்ச்சியும் அமைந்துள்ளது. இது கொல்லிமலையின் பல மூலிகைகளை கொண்டு வருகிறது.

Lavenderguy

https://en.wikipedia.org/wiki/Kolli_Hills#/media/File:SKY_GANGES.JPG

சித்தர்களை காணவேண்டுமா

சித்தர்களை காணவேண்டுமா


இந்த அருவியிலிருந்து சற்று தள்ளி, கோரக்கர், காளங்கிநாதர் எனும் சித்தர்களின் குகைகள் உள்ளன. இங்கு நீங்கள் சித்தர்களை காணலாம்.

 முருகன் கோயில்

முருகன் கோயில்

அருணகிரி நாதரால் பாடப்பெற்ற முருகன் கோயில் ஒன்றும் இங்கு அமைந்துள்ளது. எங்கேயும் காணமுடியாத அளவு இங்கு முருகன் வேட்டுவர் தோற்றத்தில் உள்ளார்.

மாசி பெரியண்ண சாமி

மாசி பெரியண்ண சாமி


இங்குள்ள காவல்தெய்வம் மாசி பெரியண்ண சாமி. மிகவும் சக்திவாய்ந்த இந்த கோயிலில் பில்லி, சூனியம் ஆகியவை எடு்க்கப்படும் என்கிறார்கள்.

இரும்பை தங்கமாக்கும் ரகசியம்

இரும்பை தங்கமாக்கும் ரகசியம்

இந்த மலைக்கு வருகை தரும் பலர், நூறு ஆண்டுகள் வாழ மூலிகைகளையும், இரும்பை தங்கமாக்கும் ரகசியமறிந்த சித்தர்களையும் தேடி வருகிறார்கள்.

 எப்படி செல்வது?

எப்படி செல்வது?

சென்னையிலிருந்து 369 கிமீ தூரத்தில் அமைந்துள்ளது இந்த கொல்லிமலை.

பேருந்து வசதிகள் பல்வேறு நகரங்களிலிருந்தும் உள்ளன.

Read more about: travel temple mystery
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X