Search
  • Follow NativePlanet
Share
» »13 வகையான குயில்களை பாத்திருக்கீங்களா? இல்லைன்னா இங்க ஒருமுறை போயிட்டு வாங்க!!

13 வகையான குயில்களை பாத்திருக்கீங்களா? இல்லைன்னா இங்க ஒருமுறை போயிட்டு வாங்க!!

13 வகையான குயில்களை பாத்திருக்கீங்களா? இல்லைன்னா இங்க ஒருமுறை போயிட்டு வாங்க!!

By Balakarthik Balasubramanian

இமய மலை அடிவாரத்தில் காணப்படும் பாதுகாக்கப்பட்ட ஒரு பகுதி தான் இந்த ஈகிள்நெஸ்ட் வனவிலங்கு சரணாலயம். அத்துடன், இது அருணாச்சல பிரதேசத்திலுள்ள மேற்கு காமெங்க் மாவட்டத்தில் காணப்படுகிறது. இந்த சரணாலயம், வடகிழக்கு பகுதியில் காணப்படும் செஸ்ஸா ஆர்க்கிட் சரணாலயத்துடனும், பாகுய் புலிகள் பாதுகாப்பு இடத்துடனும் இணைந்தே காணப்படுகிறது. அதோடு மட்டுமல்லாமல், கிழக்கு பகுதியில் காமெங்க் நதியும் குறுக்கே ஓடியபடி தெரிகிறது. அசாதாரண அழகால் கவரும் விதவிதமான பறவைகளின் எண்ணிக்கை அதிகம் இங்கே காணப்படுவதால் இந்த ஈகிள்நெஸ்ட் சரணாலயத்தை...பிரதான பறவையியல் தளமாக அனைவரும் போற்றுகின்றனர்.

13 வகையான குயில்களை பாத்திருக்கீங்களா? இல்லைன்னா இங்க ஒருமுறை போயிட்டு வாங்க!!

Umeshsrinivasan

இந்திய இராணுவத்தின் ரெட் ஈகிள் பிரிவினால் 1950ஆம் ஆண்டு இந்த சரணாலயத்துக்கு இப்பெயர் வந்ததாக சொல்லப்படுகிறது. செங்குத்தான முகடுகளும், சோம்பல் நீரோடைகளும், துடிப்பான நீர்வீழ்ச்சிகளும் என இந்த பகுதி காணப்பட, கிழக்கு இமாலயத்தின் சரணாலயம்... இந்தியாவின் சொந்தமான ஷாங்கரி லா ஆகும் என்று கூறுகின்றனர். புகுன் பழங்குடியினரால் இந்த சரணாலயம் பராமரிக்கப்பட்டுவர, இந்த சமூகம், சுற்றுசூழல் சுற்றுலா பயணிகளுக்கு மிளிரும் எடுத்துக்காட்டாகவும் விளங்குகிறது.

வெவ்வேறு உயரத்தில், அதாவது 500 மீட்டரில் தொடங்கி 3000 மீட்டர் வரைக்கும் இதன் உயரம் செல்கிறது. வெவ்வேறு விதமான பறவைகள் செழிப்புடன் இங்கே காணப்பட...பல மாடி இடம் ஒன்றும் தென்படுகிறது. மேலும், ஒவ்வொரு மாடியும், வெவ்வேறு விதமான ஈர்ப்பினையும் கொண்டிருக்கிறது.

13 வகையான குயில்களை பாத்திருக்கீங்களா? இல்லைன்னா இங்க ஒருமுறை போயிட்டு வாங்க!!

Umeshsrinivasan

இருப்பிடமும், விதங்களும்:

மத்தியில் அடர்ந்த காடும், அழகான தோற்றமும் தென்பட... இங்கே நிறைய பறவைகளை நம்மால் பார்க்க முடிகிறது. சில பறவைகள் நம்மை பார்த்து பயத்துடன் பதுங்க, சில பறவைகள் 'இவன் என்ன செய்வான்...' என்பதுபோல் ஏளனமான தைரிய பார்வையையும் நம் முன் பாய்ச்சுகிறது. சில பறவைகள் வர்ண ஜாலம் கொண்டு மனதை மயக்க, சில பறவைகள் சோர்வான நிறங்களை கொண்டும் நம்மை சுண்டி இழுக்கிறது. துடுக்கான பறவைகளும், அங்கும் இங்கும் பறந்து திரிந்து நம் மனதை தூக்கிகொண்டு தூர செல்கிறது.

இவற்றுள் பல பறவைகள், நாம் நாட்டின் வேறு எந்த மூலைக்கு சென்றாலும் பார்க்க இயலாது என்பது குறிப்பிடத்தக்கது.

13 வகையான குயில்களை பாத்திருக்கீங்களா? இல்லைன்னா இங்க ஒருமுறை போயிட்டு வாங்க!!

Umeshsrinivasan

பதின்மூன்று வகையான குயில்கள் இங்கிருக்க, லாஃபிங்க் (சிரிக்கும்) த்ரஸ் எனப்படும் பறவை இனமும், இரண்டு டசன்களுக்கு மேல் பாப்பிள் வகை பறவையும், எட்டு வகையான மரங்கொத்தியும் என நிறையவே நம்மால் இங்கே கண்டுபிடிக்க முடிகிறது. அத்துடன்...இருபத்து நான்கு வகையான பாடும்பறவை, ஐந்து வகையான சூரிய பறவை, ஆற்றல் மிக்க அணிவகுப்புகளுடன் பறவை பிடிப்பான்கள் என எண்ணற்ற இரகசியங்களால் மனதை நெருட செய்ய பறவைகள் பெரிதும் துணை புரிகிறது.

இவற்றை கண்டு பெருமூச்செறிந்து நாம் திரும்ப, மார்பு நட்டு முடிசூடிய பாடும்பறவையை நம்மால் பார்க்க முடிகிறது. கீற்று போன்ற மார்பு கொண்ட பார்விங்க் என்னும் பறவையும் நம் கண்களை கவர, புல்வெட்டா அல்லது யூகினா என்னும் பறவையின் அழகில் மயங்கி, கொண்டு சென்ற கேமரா உதவியுடன் காட்சிகளை பதிவு செய்து., அந்த அழகை பார்க்க, அது நம் இரவு தூக்கத்தை திருடி செல்கிறது. அடிப்படையற்ற, பச்சை நிற வால் கொண்ட சூரிய பறவையும் இங்கே முதன்மையானதாக விளங்க, அழகான சிபியா பறவை நம் மனதை அதன் பெயரால் கவர்கிறது.

ஒளிர்விற்கு காரணம்:

தங்க நிறம் மார்பகம் கொண்ட இந்த புல்வெட்டாஸ் பறவை, இந்த ஒளிர்வு என்னும் சொல்லை உச்சரிக்கும் அழகை காட்சிகளால் நம் கருவிழிகளுக்கு சமர்ப்பிக்கிறது. அதோடு வளைகுடா மரங்கொத்தி மற்றும் மார்பு நட்டு முடிசூடிய சிரிக்கும் பறவை என அழகியல் உணர்வை பாரபட்சமின்றி உங்களுக்கு விருந்தாய் சமர்ப்பிக்கிறது.
மேலும், புகழ்பெற்ற முரட்டுதனமான தலையை கொண்ட ரூபஸ் பறவையும், கட்டுக்கடங்காத ஆற்றலை நமக்கு தந்து ஆரவாரத்தில் துள்ளி குதிக்க வைக்கிறது. மேலும் இது தடையற்ற புகழை இந்த இமாலயத்துக்கு தரவும் துடிக்கிறது. இந்த கலப்பு மந்தைகள் ஒன்றாக சேர்ந்து ஆரவாரம் செய்ய, பூச்சிகளை போல் மொய்க்க தொடங்குகிறது. இவை அனைத்தும் ஒன்றாக சேர்ந்து தனக்கான இரைகளையும் தேடி உணவு மேஜையின் முன்பு கூடுகிறது.

13 வகையான குயில்களை பாத்திருக்கீங்களா? இல்லைன்னா இங்க ஒருமுறை போயிட்டு வாங்க!!

Umeshsrinivasan

ஈகிள்நெஸ்ட் வழிகளுக்கு அருகில், மாக்னோலியா மற்றும் ரோடோடென்ரான் மரங்கள் மத்தியில் நிரம்பி அழகிய காட்சியால் கண்களை கவர்கிறது. பச்சை நிற தடித்த பின்புறம் கொண்ட பறவைகளும், திருமதி கோல்ட் சூரியப் பறவையும் விதிவிலக்கான பறவைகளாக அமைந்து நம் மனதை அமைதியடைய செய்கிறது. இவை பார்ப்பதற்கு தன்னார்வத்தை தூண்டுவதாகவும் அமைகிறது. மேலும், புள்ளியிட்ட நட்டுக்கட்டை பறவையும், சிவப்பு நிற மார்பகம் கொண்ட மரங்கொத்தி பறவையும்.,நம் மனதில் நினைவை சுமந்து ஏக்கத்தை, இவ்விடத்தை விட்டு எழுந்து செல்லும்போது தருகிறது.

அதிர்ஷ்டத்தின் ஆதரவு:

அதிர்ஷ்டம் என்பது பிசாசுகளுக்கு தைரியம் என்னும் சொல்லால் ஆதரவு தர, மலைகளில் அதிர்ஷ்டம் என்பது கடின உழைப்பாளிக்கே கரிசனம் காட்டுகிறது. அவர்களுடைய விடாமுயற்சி, எச்சரிக்கை உணர்வுகள்... என பார்ப்பவருக்கு பரை சாற்ற துடிக்கும் கீற்றுகோடை மார்பு கொண்ட வளைந்த பட்டாக்கத்தி வடிவம் கொண்ட வாயாடி பறவை, மார்பு நட்டு தலை கொண்ட டெஸியா பறவை, பைஜிம் வ்ரென் வாயாடி பறவை ஆகியவையாக இருக்கிறது.

13 வகையான குயில்களை பாத்திருக்கீங்களா? இல்லைன்னா இங்க ஒருமுறை போயிட்டு வாங்க!!

soumyajit nandy

அப்பறவைகள் தன்னை மறைத்துகொண்டு தவளை பார்வை பார்க்க, அது நமக்கு ஆஸ்கார் வாங்கிய மகிழ்ச்சியை தந்து மனதை ததும்ப செய்கிறது. அதோடு மட்டுமல்லாமல், அந்த காட்சியை காணும் நம் கண்கள் சோர்விலிருந்து விடுபட்டு புத்துணர்ச்சியுடன் காணப்படுகிறது. இந்த பயணத்தின் வாயிலாக, பறந்து திரிந்து மனதை மகிழ்விக்கும் பறவைகளின் அழகாலும், புதர்செடிகளாலும், காணும் மரங்களாலும் மனமானது சந்தோஷத்தில் கரைந்து புதுவித அனுபவத்தை தரும் என்பதில் ஆச்சரியம் வேண்டாமே. பறவைகளின் கூக்குரல், ஈர்ப்பினால் பறவை காய்ச்சலை (அழகிய ஈர்ப்பு) மனதில் ஏற்படுத்த, ஈகிள்நெஸ்ட் வசிப்பிடத்திற்கு சென்று சிற்றுண்டியையும் உண்டு நாம் மகிழலாம்.

Read more about: travel forest
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X