Search
  • Follow NativePlanet
Share
» »7 சகோதிகரிக்களுக்கான 7 கோலாகலமான திருவிழா எங்க நடக்குதுன்னு உங்களுக்கு தெரியுமா?

7 சகோதிகரிக்களுக்கான 7 கோலாகலமான திருவிழா எங்க நடக்குதுன்னு உங்களுக்கு தெரியுமா?

7 சகோதிகரிக்களுக்கான 7 கோலாகலமான திருவிழா எங்க நடக்குதுன்னு உங்களுக்கு தெரியுமா?

By Bala Karthik

வடகிழக்கு இந்தியத் திருவிழாக்களால் மிகுதியான கலாச்சாரம் வெளிப்படுகிறது. இங்கே கொண்டாடப்படும் திருவிழாக்கள் அனைத்தும் விவசாயம், மத அல்லது புதுவருட பிறப்பினை சார்ந்து இருக்கிறது. இங்கே எண்ணற்ற திருவிழாக்கள் கொண்டாடப்பட, அதற்கான நாட்களும் நீள்கிறது. இந்த திருவிழாக்களில் நாட்டுப்புற நடனம் மற்றும் இசையும் அடங்கும்.

இந்த திருவிழாக்கள் மக்களுக்கும், பல்வேறு பழங்குடியினருக்கும், பலவித வாய்ப்புகளை தர...அவர்களுடைய நட்பின் ஒருமைப்பாட்டையும், புதுப்பிக்க இந்த விழாக்கள் உதவுகிறது. இங்கே கிடைக்கும் வாய்க்கு ருசியான உணவுகளும், அழகிய சிகைஅலங்கார பொருட்களும், மனதோடு இணைந்த இசையுமென காணப்பட, சூடான விருந்தோம்பல் மற்றும் ஆற்றல் நிறைந்த சூழ் நிலையுமென பல காரணங்களால் இந்த ஏழு சகோதரி விழாக்கள் கோலாகலம் பூண்டு காணப்படுகிறது.

 கார்ச்சி பூஜா, திரிபுரா:

கார்ச்சி பூஜா, திரிபுரா:

திரிபுராவில் கொண்டாடப்படும் மிக முக்கியமான திருவிழாக்களுள் ஒன்றாக கார்ச்சி பூஜா அமைகிறது. ஒரு நிலையில் இந்த பூஜா விழாவானது அரசு ஆதாய வழக்கங்கள் கொண்ட குடும்பத்தால் கொண்டாடப்பட்டது. இருப்பினும், காலத்தின் மாற்றத்தால், இந்த விழாவானது மாநிலத்தின் அனைத்து குடும்பங்களாலும் கொண்டாடப்பட தொடங்கியது. இந்த விழாவானது பத்து நாட்கள் நடக்க, 14 தெய்வ சிலைகளை வணங்குவதோடு, விலங்குகளையும் காணிக்கையாக தரப்படுகிறது.

இந்த விழாவானது ஒவ்வொரு வருடமும் ஜூலை மாதத்தில் கொண்டாடப்பட, பழைய அகர்ட்டலாவில், 14 சிலைகள் கொண்ட ஆலயமும் காணப்படுகிறது.

Sharada Prasad CS

 அந்தூரியம் திருவிழா, மிஷோரம்:

அந்தூரியம் திருவிழா, மிஷோரம்:

இந்த திருவிழாவானது மூன்று நாட்கள் கொண்டாடப்பட, மிஷோரம் மாநிலத்தின் சுற்றுலாத் துறையின் மூலமாக மேம்படுத்தப்பட்டுள்ளது. இந்த திருவிழாவானது பல்வேறு கலாச்சார செயல்களை காட்சிபடுத்த, அவற்றுள் கைவினைப்பொருட்கள், விளையாட்டுக்கள், என பலவும் அடங்கும்.

இந்த திருவிழாவில் வில்வித்தை, துப்பாக்கி சுடுதல் போட்டி, என இணைந்தும் பாரம்பரிய உடைகளுடன் அரங்கேறுகிறது.

இந்த திருவிழாவானது கம்பீரமிக்க ரீயக் மலைப்பகுதியின் பின்புலத்தில் நடைபெற, ஒரு மனதுடன் புத்துணர்ச்சியை இது தந்து, உடல் மற்றும் ஆத்மாவையும் வெகுவாக கவர்கிறது.

Public.Resource.Org

 நோங்க்ரெம் நடன திருவிழா, மேகாலயா:

நோங்க்ரெம் நடன திருவிழா, மேகாலயா:


இந்த திருவிழா, ஐந்து நாட்கள் கொண்டாடப்படும் அறுவடை திருவிழாவாக அமைய, காஷி பழங்குடியினரால் இது கொண்டாடப்படுகிறது. மேகாலயாவில் நடைபெறும் இந்த மதசார்புடைய திருவிழாவில் பெரும் உற்சாகமும், தீவிரமும் காஷி பழங்குடியினரிடம் காணும்.

ஒவ்வொரு வருடமும் நவம்பர் மாதம் கொண்டாடப்படும் இந்த திருவிழா, காஷி பழங்குடியினரால் ஆடு தியாகம் செய்யப்பட அச்சம்பவம் உள்ளூர் தேவியான (கடவுள்) ப்லை சின்சருக்கு நன்றி சொல்வதாகவும் சொல்லப்படுகிறது.


Vishma thapa

 மஜுலி திருவிழா, அசாம்:

மஜுலி திருவிழா, அசாம்:

கரமூரில் இந்த மஜுலி திருவிழா கொண்டாடப்பட, இவ்விடம் அசாமின் லூஜித் ஆற்றங்கரையில் அமைந்திருப்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த நான்கு நாட்கள் திருவிழாவில் நவ-வைஷ்ணவி கலாச்சாரம் அப்பகுதியில் சிறப்பம்சமாக காண, அசாம் மாநிலத்திலும் அது காணப்படுகிறது.

ஒரு மாபெரும் கண்காட்சியானது இங்கே நடத்தப்பட, பாரம்பரிய மட்பாண்டங்கள், பழங்குடியினரின் ஆடைகள், மற்றும் கைவினைப்பொருட்களும் என பல வித பொருட்களும் இங்கே விற்கப்பட, அவை மூங்கில் மற்றும் கரும்பினால் தயாரித்தவை என்பதும் குறிப்பிடத்தக்கது.

Hiranmoy Boruah

 லோஷார் திருவிழா, அருணாச்சல பிரதேசம்:

லோஷார் திருவிழா, அருணாச்சல பிரதேசம்:

தவாங்கின் புத்த சமயத்தினரால் கொண்டாடப்படும் திருவிழாக்களுள் ஒன்றாக இதுவும் இருக்க, புது வருடத்தின் கொண்டாட்டமாகவும் இந்த லோஷார் அமைவதோடு, பேய் பிசாசுகள் தங்களை அண்டவிடாமல் காக்க இந்த விழாவானது புதுவருடம் பிறக்கும் போது கொண்டாடப்படுவதாகவும் தெரியவருகிறது.

முதல் நாள் இந்த விழாவானது கொண்டாடப்பட, அதுவும் லுனசோலார் திபெத்தியன் நாட்காட்டிபடி...ஒரு குறிப்பிட்ட நாளில் பிப்ரவரி அல்லது மார்ச் மாதத்தில் கொண்டாடப்படுவதாக கிரிகோரியன் நாட்காட்டிபடி தெரியவருகிறது.

PoojaRathod

 செய்ரோபா, மணிப்பூர்:

செய்ரோபா, மணிப்பூர்:

இதனை ஷாஜிபு செய்ரோபா என்றழைக்கப்பட, மணிப்பூர் மாநிலத்தின் புது வருடத்தின்போது இது கொண்டாடப்படுகிறது. இந்த செய்ரோச்சிங்க் சிகரத்தின் மலைப்பயணம், விழாவில் ஒரு அங்கமாக இருக்க, வாழ்க்கையில் ஓர் உயரத்தில் நாம் சென்றதோர் உணர்வினை தந்து மகிழ்ச்சியில் நம்மை தள்ளுகிறது. இந்த திருவிழாவானது வருடந்தோரும் ஏப்ரல் மாதத்தில் இந்த பகுதியில் கொண்டாடப்படுகிறது.

Chakumar

 மோட்சு மோங்க், நாகாலாந்து:

மோட்சு மோங்க், நாகாலாந்து:

அவு பழங்குடியினரால் கொண்டாடப்படும் ஒருவிழாவாக மோட்சு மோங்க் காணப்பட, விதைப்பு பருவத்தின் முடிவில் கொண்டாடப்படுகிறது. மோக்கோக்சங்க் மாவட்டத்தில் மூன்று நாட்கள் கொண்டாடப்படும் இந்த திருவிழா, கிணறுகளை சுத்தம் செய்தல், பீர் குடித்தல் போன்ற சிறப்பம்சங்களையும் கொண்டுள்ளது.

ஆண்களால் பாரம்பரிய போர் நடனம் அரங்கேறிட, அவு கிராமத்தை புகழ்ந்து பெண்களும் பாட்டு பாடி மகிழ்கின்றனர். மிகுதியான நாகா கலாச்சாரத்தின் சிறந்த எடுத்துக்காட்டாய் இந்த திருவிழா காணப்பட, இந்த விழாவானது மே மாதத்தில் 1 முதல் 3 தேதிகளில் ஒவ்வொரு வருடமும் கொண்டாடப்படுகிறது.

Yves Picq

Read more about: travel
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X