Search
  • Follow NativePlanet
Share
» »சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் லிங்கா படத்தில் வரும் இடங்களுக்கு ஒரு சுற்றுலா

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் லிங்கா படத்தில் வரும் இடங்களுக்கு ஒரு சுற்றுலா

'லிங்கா' சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் நடிப்பில் வெளியாகி உலகம் முழுக்க சக்கை போடு போட்டுக்கொண்டிருக்கிறது. வெளியான அத்தனை இடங்களிலும் வசூல் சாதனை, அனைத்து தரப்பு மக்களின் ஏகோபித்த ஆதரவுடன் திரை அரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கும் இந்தப்படத்தில் காட்டப்படும் சில இடங்கள் நமக்கு பிரம்மிப்பை ஏற்படுத்துகின்றன. படம் பார்க்கும் போதே இந்த இடங்கள் எல்லாம் எங்கே இருக்கின்றன, இந்த மாதிரி இடங்கள் எல்லாம் உண்மையிலேயே இருகின்றனவா என்று நாம் வியக்கும் அளவிற்கு இதுவரை நாம் அதிகம் கண்டிராத இடங்களில் படப்பிடிப்பு நடந்திருக்கிறது.

முழுவதுமாக கர்னாடக மாநிலத்தில் படம் பிடிக்கப்பட்ட இந்த படத்தில் வரும் சில பிரமிப்பூட்டும் கர்நாடகாவில் நிச்சயம் பார்க்க வேண்டிய இடங்களுக்கு ஒரு சுற்றுலா செல்லலாமா நண்பர்களே?.

இன்றைய தின சிறப்பு சலுகை : 50% வரை ஹோட்டல் கட்டணங்களில் தள்ளுபடி பெற்றிடுங்கள்

லிங்கனமக்கி அணை:

லிங்கனமக்கி அணை:

'லிங்கா' என இப்படத்திற்கு பெயர் வைக்க உண்மையான காரணம் இப்படம் முழுவதும் 'லிங்கனமக்கி' அணையை மையமாக கொண்டு எடுக்கப்பட்டதே ஆகும்.

லிங்கனமக்கி அணை:

லிங்கனமக்கி அணை:

பெங்களுருவில் இருந்து 400 கி.மீ தொலைவில் ஷிமோகா மாவட்டத்தில் அமைந்திருக்கிறது இந்த அணை. கர்நாடகா மாநிலத்தில் முக்கியமான அணைகளில் ஒன்றான இதன் மேல் சுற்றுலாப்பயணிகள் சென்று பார்க்க அனுமதிக்கப்படுவதில்லை என்பது ஒரு குறை. இந்த அணையில் இருந்து வெறும் 6 கி.மீ தொலைவில் இருக்கும் ஜோக் அருவிக்கு வந்துவிட்டு அப்படியே பசுமையான சூழலில் இருக்கும் இதனையும் பார்த்து ரசிக்கலாம்.

Photo:ಜಿ.ಎಸ್. ಜಯಕೃಷ್ಣ ತಲವಾಟ

லிங்கனமக்கி அணை:

லிங்கனமக்கி அணை:

லிங்கா படத்தின் பல முக்கிய காட்சிகள் மற்றும் கிளைமாக்ஸ் இந்த அணையில் தான் படம் பிடிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

ஜோக் அருவி:

ஜோக் அருவி:


சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அணையை கட்டுவதற்கான திட்டங்களை வகுப்பது போன்ற காட்சிகள் இந்த ஜோக் அருவிக்கு பக்கத்தில் தான் படம் பிடிக்கப்பட்டன. லிங்கனமக்கி அணையில் இருந்து வெறும் 6 கி.மீ தொலைவில் தான் இந்த அருவி அமைந்திருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Photo:Darshan Simha

ஜோக் அருவி:

ஜோக் அருவி:

ஷிமோகா மற்றும் உத்தர கன்னடா மாநிலங்களின் எல்லையில் அமைந்திருக்கும் இந்த அருவியானது சாராவதி ஆற்றின் போக்கில் 830 அடி உயரத்தில் இருந்து கொட்டுகிறது.

Photo:Shuba

ஜோக் அருவி:

ஜோக் அருவி:

இந்த அருவியை சுற்றியுள்ள பகுதி எப்போதும் பசுமை நிறைந்து காணப்படுகிறது. இந்த அருவியில் குளிக்க முடியாது என்றாலும் கர்நாடக மாநில சுற்றுலாத்துறையால் இந்த அருவியின் கீழ்ப்பகுதி வரை சென்று அருவியின் பிரவாகத்தை அதற்க்கு எதிர்பக்கத்தில் இருந்து பார்க்க வசதி செய்யப்பட்டுள்ளது. இயற்கையின் பிரமாண்டமான அழகை ரசிக்க விரும்புகிறவர்கள் நிச்சயம் இங்கு சென்று வர வேண்டும்.

Photo:Shuba

மைசூர் அரண்மனை:

மைசூர் அரண்மனை:

நாம்மில் பலரும் இங்கே நிச்சயம் சென்றிருப்போம் என்றாலும் லிங்கா படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினியை இந்த அரண்மனையில் ராஜாவாக பார்த்த பிறகு இந்த இடத்தின் மீதான கண்ணோட்டமே சற்று மாறி இருக்கிறது என்பது தான் உண்மை.

மைசூர் அரண்மனை:

மைசூர் அரண்மனை:

மைசூர் நகரத்தின் மத்தியில் அமைந்திருக்கும் இந்த அரண்மனையில் மைசூர் அரண்மனையில் வாழ்ந்த அரசர்களுடைய ஓவியங்கள் மற்றும் புகைப்படங்கள், அவர்கள் பயன்படுத்திய பொருட்கள் போன்றவை காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.

மைசூர் அரண்மனையின் உட்புற தோற்றம்

Photo:Steve Browne & John Verkl

மைசூர் அரண்மனை:

மைசூர் அரண்மனை:

ஒவ்வொரு ஞாயிற்று கிழமைகளிலும் பொது விடுமுறை நாட்களிலும் மாலை 7 மணி முதல் 7:45 மணி வரை வண்ண விளக்குகளால் தங்க நிறத்தில் ஒளிர்கிறது. இதுவரை இங்கு சென்றதில்லை என்றால் நிச்சயம் ஒரு நாள் சென்றுவாருங்கள். இந்திய ராஜ வாழ்க்கையை பற்றி அறிந்து கொள்ளசிறந்தவாய்ப்பாக அந்த பயணம் அமையும்.

Photo:Ashwin Kumar

ராமோஜி பிலிம் சிட்டி:

ராமோஜி பிலிம் சிட்டி:

திரைப்படங்கள் பார்ப்பதிலோ அல்லது திரைப்படத்துறையில் பணியாற்றவோ உங்களுக்கு ஆர்வம் இருந்தால் நீங்கள் நிச்சயம் சென்றிருக்க வேண்டிய இடம் ஹைதராபாத் நகருக்கு அருகில் அன்ஜ்புரில் அமைந்திருக்கும் ராமோஜி பிலிம் சிட்டிக்கு தான்.

Photo:Shillika

ராமோஜி பிலிம் சிட்டி:

ராமோஜி பிலிம் சிட்டி:

லிங்கா படத்தில் முதல் பாதியில் வரும் பெரும்பாலான காட்சிகள் இங்கே தான் படமாக்கப்பட்டிருக்கிறது. ஒரு இயக்குனர் கதை, திரைக்கதையுடன் இதனுள் நுழைந்தால் படத்தை முடித்து விட்டு வெளியே வரலாம் என்னும் அளவிற்கு திரைப்படம் எடுப்பதற்கான அத்தனை வசதிகளும் இதனுள் இருக்கின்றன.

ராமோஜி பிலிம் சிட்டி:

ராமோஜி பிலிம் சிட்டி:

இதனுள் சாகச விளையாட்டுகள், ஷாப்பிங் செய்யும் இடங்கள், குழந்தைகளுக்கான விளையாட்டு பூங்கா மற்றும் பிரபலமான இடங்களின் மாதிரி இடங்கள் என முழுமையான ஒரு கனவுலகமாக திகழ்கிறது இந்த ராமோஜி பிலிம் சிட்டி.

Photo:Cephas 405

உத்திரகோசமங்கை கோயில், ராமநாதபுரம்:

உத்திரகோசமங்கை கோயில், ராமநாதபுரம்:

உலகில் விலைமதிக்க முடியாத சில பொருட்களில் மரகதமும் ஒன்று. லிங்கா படத்தில் ராஜா லிங்கேஸ்வரன் கட்டிய கோயிலில் தன்னிடம் இருந்த மரகத லிங்கத்தை ஸ்தாபித்திருப்பதாக கதை நகரும். உண்மையில் அப்படிப்பட்ட மரகத சிலைகள் இந்தியாவில் வெகு சில கோயில்களில் மட்டுமே உள்ளன.

உத்திரகோசமங்கை கோயில், ராமநாதபுரம்:

உத்திரகோசமங்கை கோயில், ராமநாதபுரம்:

அப்படி மரகத சிலை இருக்கும் ஒரு கோயில் தான் ராமநாதபுரம் மாவட்டத்தில் இருக்கும் உத்திரகோசமங்கை கோயிலில் ஆறு அடி உயரத்தில் மரகதத்தினால் ஆன நடராஜர் சிலை உள்ளது. உலகத்தில் இது போன்ற ஒன்றை இங்கு மட்டுமே காண முடியும். பச்சை நிறத்தில் ஜொலிக்கும் இந்த மரகத நடராஜர் சிலையை வாழ்க்கையில் ஒருமுறையாவது சென்று பார்த்து வாருங்கள்.

Photo:Simply CVR

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X