Search
  • Follow NativePlanet
Share
» »தில்லியிலுள்ள பத்தேபூரி மஸ்ஜித் – போயிருக்கீங்களா? இதப் படிச்சா போய் பாக்க ஆசைப் படுவீங்க!!

தில்லியிலுள்ள பத்தேபூரி மஸ்ஜித் – போயிருக்கீங்களா? இதப் படிச்சா போய் பாக்க ஆசைப் படுவீங்க!!

தில்லியிலுள்ள பத்தேபூரி மஸ்ஜித் – போயிருக்கீங்களா? இதப் படிச்சா போய் பாக்க ஆசைப் படுவீங்க!!

By Balakarthik Balasubramanian

தில்லியிலுள்ள ஜமா மஸ்ஜித் பற்றி தாங்கள் கேள்விப்பட்டதுண்டா? அப்படி என்றால்...அங்கே இருக்கும் மற்றுமொரு மசூதியான பத்தேரி மஸ்ஜித்தை தெரியுமா உங்களுக்கு? அட ஆமாம்ங்க...செங்கோட்டைக்கு அருகில் தான் இந்த மஸ்ஜித் தளம் காணப்படுகிறது. என்ன??? எந்த இடத்தில் இருக்கிறது என கேட்கிறீர்களா? இந்த தளம், செங்கோட்டையின் வலது புறத்தில் அமைந்து காட்சிகளை கர்வமின்றி பெருமையுடன் சமர்ப்பித்து கொண்டிருக்கிறது.

இந்தியாவின் இதயமா நீ? என்று நாம் வியப்புடன் நோக்கும் ஒரு நகரம் தான்... தில்லி நகரம் என்பது உங்களுக்கு தெரியுமா? என்ன? தெரியாதா? அப்படி என்றால்...அதன் இதயத்துடிப்பை இனிய காட்சிகளால் இம்சை செய்து இந்த தில்லி நகரம் காதல் வயப்பட்ட ஒரு அழகிய வரலாற்று தளமான சாந்தினி சௌக்கில் காணப்படும் பத்தேபூரி மஸ்ஜித் என்பதனையும் நீங்கள் சேர்த்து தெரிந்துகொள்ளுங்களேன்.

பத்தேபூரி மஸ்ஜித்

பத்தேபூரி மஸ்ஜித்

செங்கோட்டை என்றதொரு வார்த்தையை நாம் அனைவரும் குடியரசு தினம் மற்றும் சுதந்திர தினங்களில் கேள்விபடாமல் இருந்தது கிடையாது. அப்படி இருக்க...முகலாய சக்தியை எதிர்கொள்ளும் ஒரு இடமாகவும் இது இருந்தது என சொன்னால் உங்களால் நம்பமுடிகிறதா? ‘அதற்கு நான் தான் சாட்சி' என்கிறது இந்த பத்தேபூரி மசூதி...இருப்பினும் அந்த மஸ்ஜித் உள்ளே பல தடயங்களை வரலாற்று சுவடுகளாய் தாங்கிகொண்டு சத்தமில்லாமல் கப் சிப் என அமைதியாக இருக்கிறது என்றால் நீங்களே பார்த்துகொள்ளுங்களேன்.

இது எப்போதிலிருந்து? என்று தெரிந்துகொள்ள துடிக்கும் ஆர்வம்...உங்கள் மனதில் இருப்பது எனக்கு தெரிகிறது. ஆம்...இந்த மௌன ராகம் இன்று நேற்று தொடங்கியது அல்ல...முகலாய அரசர்களின் ஆட்சியில் தொடங்கிய இந்த அழகிய மௌனம் பிரிட்டிஷ் ஆட்சியினை கடந்து, இன்று வரை ரகசியமாக பாதுகாக்கபடுகிறது என்றால்...நீங்கள் இதன் பெருமையை பற்றி கொஞ்சம் சிந்தித்து பாருங்களேன்.


commons.wikimedia.org

பத்தேபூரி மஸ்ஜித்

பத்தேபூரி மஸ்ஜித்

இந்த பத்தேபூரி மஸ்ஜித் 1650ஆம் ஆண்டு பத்தேபூரி பேகம் என்பவரால் கட்டப்பட்டதாகும். இந்த பெண் யாரென்ற கேள்விக்கு ஒற்றை வரியில் விடை சொல்ல வேண்டுமென்றால்...அது வேறு யாருமல்ல...ஷாஜஹானின் மனைவிகளுள் ஒருவர் தான் இந்த பத்தேரி பேகமாகும். பெருமளவில் சிவப்பு மணற்கல்லை கொண்டு கட்டப்பட்ட இந்த மஸ்ஜித், ஒற்றை குவிமாடத்தால் முடிசூட்டப்பட்டதாக வரலாற்றின் மூலம் நமக்கு தெரிய வருகிறது. முகலாய கட்டிடக்கலைகளின் முன் உதாரணமாக விளங்கும் இந்த மஸ்ஜித்...

வரலாற்றின் பெருமைகளை அமைதியாக தாங்கிகொண்டு எந்த ஒரு ஆரவாரமுமின்றி சிறப்பாக உயர்ந்து நிற்கிறது. இருப்பினும் ஆங்கிலேயர் காலத்தின் போது சோதனைகளுக்கு உட்படுத்தப்பட்ட இந்த மஸ்ஜித், இன்றும் பாரம்பரியத்தின் பெருமையை உணர்த்திகொண்டு சுற்றுலா பயணிகளின் பேராதரவை பெற்று புகழிடமாக சிறந்து விளங்குகிறது.

commons.wikimedia.org

பத்தேபூரி மஸ்ஜித்

பத்தேபூரி மஸ்ஜித்


உயர்ந்த தூபிகளை கொண்டு புடைசூழும் இந்த இடம்...பாரம்பரியத்தின் வடிவமைப்பினை விழிகளுக்கு பரிசாக்கி வந்து செல்வோரை வியப்பில் ஆழ்த்துகிறது. இங்கே காணும் வழிப்பாட்டு அறையின் அமைப்பு...ஏழு வளைவு திறப்புகளை கொண்டுள்ளது. இந்த ஏழு திறப்புகளில் மத்தியில் காணப்படும் ஒன்று மட்டும் பெரிதாகவும் தென்பட்டு, நம் மனதில் கட்டிடக்கலைகளை பற்றிய ஆச்சரியத்தினை உண்டாக்குகிறது.

இந்த மஸ்ஜித்தை நாம் காண ஏதுவான மாதங்கள்:

இஸ்லாமியர்களின் கொண்டாட்டங்கள் என்றுமே மஸ்ஜித்தில் அமைதியான முறையிலும்...அன்பினை பறிமாறிக்கொள்ளும் அழகிய உணர்வுடனும் அரங்கேற...சந்தர்ப்பங்களினை பொறுத்து இந்த மஸ்ஜித்திற்கு சென்று நாம் மகிழ்வது உகந்ததோர் யோசனையாகும். இந்த சமயங்களில் இவர்கள் கடவுள் மீது கொள்ளும் மகத்தான நம்பிக்கைகளுக்கு, நம்மால் வார்த்தைகளை உருவாக்கவே முடியாது என்பது தான் உண்மை. ஆம், அவர்கள் வழிபடும் அழகில் இங்கு வந்து செல்வோர்கள் மயங்க...இடத்தின் பெருமையை உணர்ந்து சற்று ஏக்கத்துடன் கட்டிடத்தை எட்டி பார்க்கிறார்கள் என்றே சொல்ல வேண்டும்.

commons.wikimedia.org

பத்தேபூரி மஸ்ஜித்

பத்தேபூரி மஸ்ஜித்

கதவுகள் மற்றும் கல்லறைகள் பற்றியதோர் அழகிய பதிவு:

இந்த மஸ்ஜித்தில் மூன்று கதவுகள் இருக்க...அவற்றுள் ஒன்று, சாந்தினி சௌக்கின் செங்கோட்டை முன்புறத்தில் அமைந்து நம் மனதினை காட்சிகளால் வருடுகிறது. மற்ற இரண்டு கதவுகளும் வடக்கு மற்றும் தெற்கு புறத்தில் அமைந்திருக்க... வடக்கு எல்லையின் முடிவில் காரி போலி காணப்படுகிறது. அதேபோல் தெற்கு பகுதியில் காத்ரா பர்யானும் காணப்பட... மத்திய முற்றத்தில் சிவப்பு கற்களால் கட்டப்பட்டுள்ளது.

அதேபோல்...மஸ்ஜித்தின் முற்றத்தில் காணப்படும் ஒரு பெரிய தொட்டி பளுங்கு கற்களை கொண்டு கட்டப்பட்டுள்ளது. அந்த தொட்டியினை இறைவனின் அபிஷேகத்திற்காக பயன்படுத்தப்பட...மஸ்ஜித்தின் உள்ளே காணப்படும் மேடை...பளுங்கு கற்களால் அழகாக வடிவமைக்கப்பட்டிருக்க, நான்கு படிகளை அழகாக கொண்டுள்ளது. அத்துடன் சிவப்பு கற்களைகொண்ட தூண், அணிவகுத்து மேலும் கட்டிடத்திற்கு அழகு சேர்க்க...மஸ்ஜித்தின் இருபுறங்களிலும் இந்த தூண்கள் காட்சியினை கம்பீரமாக வழங்கிகொண்டு நிற்கிறது.

commons.wikimedia.org

பத்தேபூரி மஸ்ஜித்

பத்தேபூரி மஸ்ஜித்

அதேபோல் முற்றத்தில்...இஸ்லாமிய அறிஞர்களின் ஏறத்தாழ 20 கல்லறைகள் காணப்பட்டு அவர்கள் யார்? என்றதொரு சிந்தனையை நம் மனதில் விதைக்கிறது. ஆம் அவர்கள் யார்? என்னும் கேள்விக்கான விடை நமக்கு கிடைக்க...நாம் ஆச்சரியத்துடன் அந்த கல்லறைகளை நோக்கியபடி நிற்கிறோம். ஹஷ்ரத் நானு ஷா, முப்தி முகமது, மாஷர் உல்லாஹ் ஷா, மௌலானா முகமது, என பல அறிஞர்களின் கல்லறை அவை என்பது நமக்கு தெரிய வருகிறது. இந்த மசூதியின் அமைப்பு...ஒற்றை மட்டும் இரட்டை அடுக்கு மாடி குடியிருப்புகளாக காணப்பட...நம் மனம் அந்த இடத்திலே வரலாற்று சுவடுகளின் ஏட்டினை கண்டு ஏங்கி தான் தவிக்கிறது.

commons.wikimedia.org

பத்தேபூரி மஸ்ஜித்

பத்தேபூரி மஸ்ஜித்

மஸ்ஜித்தை பற்றிய வரலாறு உங்களுக்காக:

வரலாற்றினை பொருத்தமட்டில்...தில்லியிலுள்ள இந்த மஸ்ஜித் தான், 1857 ஆம் ஆண்டு கண்ட சிப்பாய் கழகத்தின் இந்திய படையின் தங்குமிடமாக இருந்தது. அத்துடன் சிப்பாய் கழகம் நடைபெற்ற பொழுது...ஆங்கிலேயர்களால் இந்த மசூதியில் சில இடங்களை... இந்து வியாபாரியான, லாலா சன்னா மால் என்பவருக்கு விற்கப்பட்டதாகவும் நம்பப்படுகிறது. அதன்பிறகு இஸ்லாமியர்களின் கரங்களில் 1877ஆம் ஆண்டு இந்த மஸ்ஜித் கிடைக்க...அவர்கள் புனித யாத்திரை தளமாக இதனை சிறப்பித்து வந்தனர் என்பதும் நமக்கு தெரியவருகிறது. ஆம், முகலாய ஆட்சி நாட்களின்போது... இந்த மஸ்ஜித்தில் அழகான நீரூற்றுகள் அமைக்கப்பட்டு, ஒரு பெரிய தொட்டியும் நிறுவப்பட்டதாக சொல்லப்படுகிறது. ஆனால், அதன் பிறகு வந்த ஆங்கிலேய படைகள் 1857ஆம் ஆண்டு நடைபெற்ற கழகத்தில் இந்த தொட்டிகளையும் நீரூற்றுகளையும் சிதைத்ததாகவும் வரலாற்றின் மூலம் நாம் உணர்கிறோம்.

commons.wikimedia.org

பத்தேபூரி மஸ்ஜித்

பத்தேபூரி மஸ்ஜித்

அதன் பிறகு...1873ஆம் ஆண்டு, அரசாங்கம், லாலா சன்னா மால்லிடம் இருந்து இந்த மஸ்ஜித்தை வாங்கி...ஒரு இலட்சத்து இருபதாயிரம் ரூபாய்க்கு இஸ்லாமியர்களிடம் விற்க தயாரானதாகவும் வரலாறு... பெருமையுடன் கதையை நம் முன் வைக்கிறது. ஆனாலும்...இதனை லாலா ஒப்புக்கொள்ளவில்லையாம். எது எப்படியோ...1876ஆம் ஆண்டு ஆங்கிலேய இராணி ஒருவர் இந்தியாவை சுற்றிப்பார்க்க வந்திருக்கிறார். ஆம், அவர் தான் தில்லி நீதிமன்றத்தில் இந்த வழக்கினை எடுத்து சென்று, இந்த மஸ்ஜித்தை இஸ்லாமியர்களுக்கே முறைப்படி பெற்று தந்திருக்கிறார் என்பது அவர்களுடைய போராட்டத்தின் சிறப்பினை நமக்கு உணர்த்துகிறது.

commons.wikimedia.org

பத்தேபூரி மஸ்ஜித்

பத்தேபூரி மஸ்ஜித்


இந்த மஸ்ஜித்தின் முக்கிய தளம்...மூன்றரை அடி உயர்மேடையை கொண்டு கட்டப்பட்டிருக்க... வெள்ளை பழுங்கு கீற்றுகள் மற்றும் குவிமாடம் முக்கிய நுழைவாயிலில் அமைக்கப்பட்டு நம்மை ஆச்சரியத்தை நோக்கி அழைத்து செல்கிறது. ஒரு முக்கிய குவிமாடம் இமாலய அமைப்புடன் காணப்பட...ஒரு குறிப்பிட்ட தூரத்தில் சாந்து பூசப்பட்டு இருக்கிறது. அது ஒரு பளிங்குக் குவிமாடம் போல இருக்க...ஆனால் உண்மையிலே எழுமிச்சை சாம்பல் கொண்டு அது கட்டப்பட்டதாகும்.
இந்த மஸ்ஜித்தில் இரண்டு மைதானங்கள் காணப்பட...ஒவ்வொன்றும் 80அடி உயரத்துடன் அமைந்துள்ளது. இதுவும் எழுமிச்சை சாம்பலை கொண்டே கட்டப்பட்டது என்பது நம்மை வியப்பில் ஆழ்த்துகிறது. மேலும் இந்த மஸ்ஜித், பாரம்பரியத்தின் வடிவமைப்பினை கொண்டு சிறப்புடன் நிற்க...தூண்களால் எழுப்பப்பட்ட பிரார்த்தனை கூடம் பல வளைவுகளையும் பத்திகளையும் கொண்டுள்ளது.


commons.wikimedia.org

பத்தேபூரி மஸ்ஜித்

பத்தேபூரி மஸ்ஜித்


இப்பொழுது என்ன சொல்கிறீர் இந்த மஸ்ஜித்தை பற்றி? என்ன? தில்லிக்கு கண்டிப்பாக சென்றால்...இந்த பாத்திபூரி மஸ்ஜித்தை காணாமல் வரமாட்டீர்களா? நான் தான் சொன்னேனே...இதன் அழகு உங்களை ஈர்க்குமென்று...சரி மீண்டும் வேறு பயணத்துடன் உங்களை சந்திக்கிறேன்...சரியா...

commons.wikimedia.org

Read more about: delhi travel temple
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X